Wednesday 9 September 2009

யுனிசெவ் பேச்சாளரை 21 ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: இலங்கையின் இறுதி உத்தரவு - பான் கீ மூன் கண்டனம்


ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உயர் அதிகாரியும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளருமான ஜேம்ஸ் எல்டர் வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இலங்கையின் இறுதி முடிவு, பான் கீ மூன் கண்டனம்
இலங்கையின் இறுதிமுடிவு இதுதான் என இலங்கை தனக்கு அறிவித்துள்ளது என்று யுனிசெவ் அமைப்பின் தென்னாசி யாவிற்கான பேச்சாளர் சர கிறோவ், "சி.என்.என்" செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் இந்த அறிவிப்பால் யுனிசெவ் அமைப்பு ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது என்று அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் பெமெமன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டரால் வெளியிடப்பட்ட அறிக்கை புலிகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது.

ஜேம்ஸ் எலல்டர் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை என அவர் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசெப் பேச்சாளரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கம் முடிவு. பான் கீ மூன் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

செயலாளர் பான் கீ மூன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே எல்டர் வெளியேற்றப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து பான் கீ மூன் விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமே பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஜேம்ஸ் எல்டரின் விடயத்தில் குறைக்கான முடியாது என்பதே பான் கீ மூனின் கருத்தாகும்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பாரிய சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் தம்முடன் இணங்கிக்கொண்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்தும் பான் கீ மூன் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA