Tuesday 8 September 2009

The biggest prison camp in the world

Press Release: Wellington Tamil Society

8th September 2009
Wellington Tamil Society Media Release

The biggest prison camp in the world

At 12:15pm on 9th September Wellington Tamil Society will be marching from Te Aro Park (on Manners St) to Parliament steps to highlight the need to open up the biggest prison camp in the world, where hundreds of thousands of Tamil civilians are forcibly held in northern Sri Lanka. Dr Jackie Blue (National), Grant Robertson (Labour) and Keith Locke (Green) will meet with Wellington Tamil Society on Parliament steps to hear concerns and give their views.


In an op-ed piece in the New York Times, Robert Templer, the Asia program director of the International Crisis Group, said “An estimated 300,000 Tamil civilians remain essentially prisoners in internment camps run by a Sinhalese-dominated government.” According to Amnesty International 300,000 people displaced by the fighting in Sri Lanka are held by the government in de facto detention camps. They cannot leave the camps, where conditions are "appalling" according to UN Secretary General Ban Ki Moon.

Call on the Sri Lankan government to immediately allow the displaced civilians freedom of movement: those who wish to leave the camps should be free to do so.

Urge them to place the camps under civilian, not military, management and to allow aid agencies, journalists and human rights observers full, unhindered access to the camps to carry out their functions and prevent possible abuses.

Human Rights Watch has called on the Sri Lankan government to let people leave and move in with friends and family, saying it would instantly ease overcrowding and deteriorating conditions made worse by the start of the rainy season.

"The government has detained people in these camps and is threatening their health and even their lives by keeping them there during the rainy season floods," said Brad Adams, the group's Asia director. "This is illegal, dangerous, and inhumane." There is an urgent need to highlight the detention of the civilians, as the Sri Lankan government is trying to suppress their plight. As reported in the UK Guardian: a senior official at the United Nations humanitarian agency, Unicef, has been given two weeks to leave Sri Lanka after expressing concerns about the plight of Tamils.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்


வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் குறைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியின் தரப்பில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முகாம்களில் உள்ள அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1990 ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்கு மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபணமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் சில விடயங்களை விரைவாகவும் சில விடயங்களை படிப்படியாகவும் செய்வதாகவும் ஜனாதிபதியின் தரப்பு உறுதி வழங்கியதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக விரைவில் ஜனாதிபதி நடவடிக்கை செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையின் பிரதிபலன்கள் நடைமுறைப்படுத்தப்படும் போதே பார்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற இரண்டரை மணித்தியால பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர், வன்னி அகதி முகாம்களுக்கு பொறுப்பான படையதிகாரி உட்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழதேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, இமாம், சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தங்கேஸ்வரி, துரைரட்ணசிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்

மதுரையில் ராகுலுக்கு எதிர்ப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு மதுரை சட்டக்கல்லூர் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்து கைதான சம்பவம் தமிழக காங்கிரஸ் கட்சியினரையும், மத்திய, மாநில போலீசாரையும், அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இளைஞர்காங்கிரஸ்பிரிவிற்கு உறுப்பினர் சேர்க்கைபணியை வேகப்படுத்தவும் ராகுல் காந்தி தமிழகம் முழுவதும் 3 சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று நாகர்கோவில் வந்துள்ள ராகுல் அங்கிருந்து பாளையங்கோடை வழியாக மதுரை வருகிறார். ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுக்க 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் குறிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையில் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தத்தொடங்கியுள்ளனர்.

இன்று காலையில் நீதிமன்றம் முன்பு திரண்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் ராகுல்காந்தியின் வருகைக்கு எதிராகவும், இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் நிலையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாரும் எதிர்பாராத நிலையில் சட்டக்கல்லூர் மாணவர்கள் மேற்கொண்ட இந்த போராட்டத்தின் காரணமான தமிழக போலீசாரும் மத்திய சிறப்புப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள முதல் நாளே இப்படி ஒரு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள மதுரை மாணவர் போராட்டம் போல் வேறு எங்கு நடைபெறவுள்ளதா என்றும் உளவுத்துறை மூலம் போலீசார் கண்காணித்துவருகின்றனர்.

தமிழகத்தில் 3 நாள் தங்கி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் ராகுல்காந்திக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய நலனும் ஒரு புள்ளியில் சந்திக்குமா?

இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு பிளவடைந்து போகாமல் இருப்பதற்கும் தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாஷை, இடையூறாக இருப்பது போன்றதொரு கருத்து நிலை உலவ விடப்பட்டுள்ளது. இந்திய நலனிற்கு இசைவானதொரு அரசியல் நியாயத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்வைத்து, அதனடிப்படையில் ஓர் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அனுசரணையும் ஆசீர்வாதமும் அப்போராட்டத்திற்கு முழுமையாகக் கிடைக்குமென்று சில புதிய சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியா உடையாமல் இருப்பதற்கு ஈழத் தமிழினத்தின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டுமென்பதை விட, தாயகக் கோட்பாட்டையும், தன்னாட்சிக் கோரிக்கையினையும் தவிர்த்து, மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டால் போதுமென்பதே, இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்பமாகவிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக அத்தகைய தீர்வொன்றினையே 1987 இல் இந்தியா திணிக்க முற்பட்டது.



இந்நிலையில் நாடு கடந்த அரசொன்றினை உருவாக்கும் அரசியல் போராட்டப் பாதையின் எந்தப் புள்ளியிலும் மாகாண சபைத் தீர்வினை முன்வைக்கும் இந்திய நலன்கள் சந்திக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதாகவே அமையும். ஜனாதிபதி வழங்கும் அரசியல் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் தெரிவித்த கருத்தினை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து விடுமென்று கவலை கொள்பவர்கள், நாகலாந்து, அசாம் மாநிலங்களின் நடைபெறும் பிரிவினைப் போராட்டங்கள் குறித்துப் பேசுவதில்லை. சாருமஜிம்தார் உருவாக்கிய நக்சலைட் இயக்கம், ஆயுதப் புரட்சியின் ஊடாக சோசலிச இந்தியாவை உருவாக்கப் போராடுகிறதே தவிர, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


ஆகவே, அசாம், நாகலாந்து பிரிவினைப் போராட்டங்களிற்கும் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் முடிச்சுப் போட முடியாது. இந்தியா உடைந்து போகுமானால் அதை ஈழத் தமிழர்களால் தடுக்க முடியாது. அங்கு விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்குமிடையே பகை முரண்பாடாக மாற்றமடையும் அரசியல் களமே அதனைத் தீர்மானிக்கும். இவைதவிர, தமிழர் தாயகக் கோட்பாட்டு அரசியல் வடக்கு,கிழக்கில் நிலைநாட்டப்பட்டால் தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்கிற வாதம் அபத்தமானது.

பிரிந்து செல்வதற்கான போராட்ட சூழல் உருவாகாமல், தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்று கூறுவது, சமூக இயங்கியல் போக்கிற்கு எதிரானது. அடுத்ததாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக் குறித்த கேள்வியொன்று எழுப்பப்படுகிறது. இதில் தென்பகுதியைத் தவிர, இந்தியாவின் ஏனைய பகுதிகள் யாவற்றிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு பலகாலமாகி விட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மாரில் அமைந்துள்ள துறைமுகங்களினூடாக முத்துமாலை தொடுத்து, இந்தியாவைச் சுற்றி வியூகம் அமைத்துள்ள சீனா, அம்பாந்தோட்டையிலும் கால்பதித்து தெற்காசியாவில் தனது பிடியை இறுக்கியுள்ளது. இதில் சீனாவின் கடல் வணிகநலன்கள் உறுதிப்படுத்தப்படுவது, இந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்கிற விவாதத்தில் தமிழ் மக்களின் அரசியல் நியாயம் எத்தகைய பாதிப்பினை உருவாக்க முடியுமென்பதை ஆராய வேண்டும்.

அமெரிக்காவின் உலகளாவிய ஏகபோக பொருண்மியக் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவின் பின்னர், ஆசியாவில் எழுந்து வரும் வல்லரசாளர்களின் நிமிர்வு, நிச்சயம் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். புதிய உலகக் கோட்பாட்டின் மாறுதல்களும், சீனா இந்தியாவின் சிதைவுறாத பொருண்மிய எழுச்சியும், தமிழர் அரசியலில் பெரும் தாக்கத்தினைச் செலுத்துமென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய பகுதிகளைவிட, தென்னிந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் கடல் வணிகப் பாதைகளே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருண்மியத்திற்கும் ஆதாரம் மிக்க மையங்களாக இருக்கின்றன.

இங்குதான் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையச் சூழல் சக்தியாக, இலங்கை என்கிற தேசம் இந்தியாவால் உணரப்படுகின்றது. தற்போது முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், கடல் வணிகப் பாதையின் நீளத்தைக் குறைக்கலாம். ஆனால், இப்பிராந்தியத்தில் மையம் கொள்ளும் பிராந்தியப் போட்டியாளர்களும் அக்கடல் பகுதிகளில் நடமாடும் அல்லது தரித்து நிற்கும் அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்களாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். நேபாளம், மியன்மார் உட்பட பல இடங்களில் வாய்ப்பான தருணங்களைத் தவறவிட்ட இந்தியா, இப்போதுதான் மாலைதீவில் தளம் அமைக்க ஓடிச் செல்கிறது.

ஆனாலும் "மாறோ' தீவில் சீனாவின் கடற் கண்காணிப்பு மையம் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டது. அதேவேளை, சீனாவின் முதலீட்டுப் பலத்தோடு இந்தியாவால் போட்டியிட முடியாதென்கிற உண்மையினையும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய ஓருலக நாயகன் பதவியை நோக்கி, வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் சீனாவுக்கு தென்னிலங்கையை ஒட்டிய கடற் பாதை, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற விடயம் இந்தியாவுக்குத் தெரியும். இங்குதான், ஈழத் தமிழர்களின் அரசியல் நியாயத்திற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை அரசினைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்று இந்தியா எடுத்த நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ளலாம்.

போரும், சமாதானமும், உலகப் பொருளாதாரச் சீரழிவினால் புறந்தள்ளப்பட்டு விட்டன. பொருளாதாரச் சரிவிலிருந்து நிமிர்வதும் இவ்வழியில் தாக்குப் பிடித்து ஸ்திரத்தன்மை பேணும் நாடுகளை பிளவுபடுத்துவதும் மோத விடுவதும் தற்போதைய இராஜதந்திர செயற்பாடுகளாக அமைந்து விட்டன. இதில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே நிகழும் ஆதிக்கப் போட்டியில் வீழ்ந்து கிடக்கும் முன்னாள் உலக நாயகரின் பங்கு கணிசமான அளவில் பிரயோகிக்கப்படுகின்றது.

8 ரில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையில் சிக்குண்டுள்ள அமெரிக்கா, ஜப்பானின் ஆட்சி மாற்றத்தால் சற்று தடுமாறிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று பல நாடுகளை அச்சுறுத்தி, தமது மேலாண்மையை நிலைநாட்ட முயன்ற அமெரிக்கா, தனது உலகளாவிய போரினை இன்று ஆப்கானிஸ்தானுக்குள் முடக்கியுள்ளது.

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் சீன முதலீட்டை எதிர்பார்க்கும் நாடுகளே தற்போது அதிகளவில் உள்ளன. இலங்கை அரசும் இப்பட்டியலில் உள்ளடங்கும். வடக்கு கிழக்கைவிட, முழு இலங்கையுமே இந்தியாவின் பிராந்திய ரீதியிலான பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையுமென்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள்.

இதனடிப்படையிலேயே ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நிலைப்பாட்டினை இந்தியா முன்னெடுத்து, இலங்கை அரசிற்கு தனது பூரண ஆதரவினை வழங்கியது.


ஆகவே, இந்திய எதிராளிகளின் ஆதிக்கம் இலங்கையில் உச்சம் பெறும் வரை, இந்திய நலனும், தமிழினத்தின் அரசியல் அபிலாஷையும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பேயில்லை.

- சி.இதயச்சந்திரன்

நன்றி: வீரகேசரி (06.09.2009)

தமிழ் நாட்டு தமிழரிடம் ஈழத் தமிழரின் குமுறல்!

எமது அன்பு சகோதரங்களே! தமிழ் நாட்டின் தமிழர்களே! உங்கள் தொப்பிள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் மரண ஓலம் கேட்க வில்லையோ ?

நாங்கள் இலங்கைத்தீவில் தமிழர்களாக பிறந்த ஒரே காரணத்தால் இலங்கையில் பெரும்பாண்மை இனமான சிங்களவர்களினால் அடக்கி அடிமைகளாக்கபட்டு எமது பெண்களும், எமதருமைக்குழந்தைகளும், ஈன இரக்கமின்றி சிங்களத்தின் கொடூர பற்களினால் குதறி எறியபடுகின்றனர். ஈழத்தமிழர்களாகிய எமக்கு உயிர் உத்தரவாதம் ஏதுமின்றி சொல்லொன்னா துயரங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்க படுகின்றோம்.

எங்களின் இதய தேசமான எமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்பட்டு
எமது நிலங்களும், சொத்துக்களும், சிங்களவர்களினால் சூரையாட படுகின்றன.

இலங்கைத்தீவின் தன்மானத்தமிழர்களாகிய நாம், எமக்காக பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து எறிய, முப்பத்தைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக யாருடைய உதவியும் இன்றி, தமிழ் இனத்தின் உரிமை காக்க, வீரம் நிறைந்த எமது தமிழ் வீர மறவர்களோடும், நீதி தவறாத, சாணக்கியமும், வீரமும் நிறைந்த மகத்தான தமிழன், எமது பெருமதிப்பிற்குரிய தேசியத்தலைவரோடும், தமிழீழ மக்களின் ஈடு செய்திட முடியாத அர்ப்பனிப்போடு இரத்தத்தால் எழுதிய வீர விடுதலை வரலாறு படைத்தோம், இவ் உலகத்தில் தமிழர்களாகிய நாம் தலை நிமிர்ந்து நின்றோம்.

எம் தாய்த் தமிழ்நாடே, எமது ஆறு கோடி தமிழ் உறவே, பூ கோளம் எங்களை பிரித்தாலும், தமிழால், கலை-கலாச்சாரத்தினால், பண்பாடுகளினால் இன உணர்வால் நாம் ஒன்றுபட்டவர்கள். உங்களுக்காகவே பாரத தேசத்தை, எம் அன்னை தேசமாக பார்தோம். ஆனால் பாரத தேசம் உட்பட இருபதுக்கு மேற்பட்ட மனிதநேயம் அற்ற நாடுகள், இலங்கைத் தீவீல் பெருபாண்மை இனமான சிங்களவர்களுடன் இனணந்து, தமிழ் இனத்தின் பாரிய வளர்ச்சிகளை கண்டு அஞ்சி, பொறாமை கொண்டு எமது நீதியான நியாயபூர்வமான போராட்டத்தை சிதைத்ததுடன், அதை கொச்சைப்படுத்தி லட்சக்கணக்கான எம் தமிழ் உறவுகளை சாட்சியங்கள் ஏதும் இன்றி இனப்படுகொலை செய்ததுடன்,மிகப்பெரியதோர் மனித அவலத்தை உருவாக்கி தமிழர்களாகிய எமக்கு அநீதி அளித்தனர்.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய எமது தொப்பிள் கொடி உறவுகளான உங்களையே, பாரத மத்திய அரசின் சதியாலும், சூழ்ச்சியாலும், பல கோடி ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு தமிழ் இனமானத்தை விற்ற தமிழ் நாட்டின் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் திமுகவின் துரோகத்தனத்தாலும். எம் தாய் தமிழக உறவுகளான உங்களையே பகடைக்காய்களாக பயண்படுத்தி தமிழர்களாகிய எமது தலைவிதியை தலை கீழாக மாற்றி, தலைகுனிய வைத்ததுதான். சுருக்கமாக சொல்வதென்றால், எமது விரல்களைக்கொண்டே எமது கண்களை குத்தியதுதான்.

தமிழ் நாட்டின், தமிழ் இன உணர்வு அற்ற செயற்பாட்டினால்,

• தமிழ் இனத்தின் மானம் காக்கும் மறத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் தடை.

• பரிதவித்து வரும் பாவப்பட்ட தமிழருக்கு, அகதிமுகாம் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகள்.

• தமிழ் இனத்திற்காக உயிர்கொடுத்துப் போராடும் தமிழகத்தின் எமது தொப்பிள் கொடி உறவுகள் மீது, தமிழ௧க்காவல்த்துறையின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகள்.

• பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக் கொண்டு, சிங்ளவன் கொடுக்கின்ற தகவல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழர்கள் படும் துயரங்கள், அநர்த்தங்கள் ,அவர்களுடை நியாய பூர்வமான போராட்டத்தை, எழுதவோ எடுத்துக்காட்டவோ தவறிய தமிழ்நாட்டின் தமிழ்த் தொலைகாட்சிகள் தமிழ்ப் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள்.

• தனி ஈழம் அமைந்துவிடும், தனித் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்று ௭ண்ணி, தமிழ் இனத்தை அழிக்க, அமைதிகாக்கும் படையென்ற போர்வையில் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை குடித்து, பாரிய ராணுவ நடவடிக்கைகளையும், பாரிய ராணுவ உதவிகளையும், சிங்கள அரசுக்கு வழங்கி, தமிழர்களை அடிமைகளாக்கிய பாரத நாட்டின் காங்கிரஸ் கட்டமைப்புக்கு, வாக்களித்து ஆட்சி பீடத்துக்கு அனுப்பிய, தமிழ் இனத்திற்கு துரோகம் விலைவித்த ஈனம் அற்ற தமிழர்கள்.

• லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க மறுக்கும் இரக்கமற்ற தமிழகத்தின் தமிழ் மக்கள்.

தமிழகமே, தாய் நிலமே, எம் சனமே, எம் இனமே, நாம் உறைந்த சாக்கடை போல் அசைவற்று இருந்தோமேயானால் தமிழ் இனம் நாறும், தமிழர் மானம் போகும், பொங்கி எழுங்கள் புத்துயிர் பெறுங்கள்,தமிழர்களாகிய நாம் ஒன்றுபடுவோம். சீக்கியனும், சிங்களவனும், ஆள்வதற்கா, தமிழர்களாய் நாம் பிற்ந்தோம் ?

தமிழர்கள் வாழ்வை இருள் ஆக்கி, தனக்காகவும் தன் குடும்பத்துக்காகும் அரசியல் நடத்தும் சுயநலவாதி கருணா(நாய்)நிதி, தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபகேடு. பச்சிளம் குழந்தைகள் பரிதவித்து சாவதைப் பார்த்தும், மனம் இரங்காத கொடும் அரக்கன் நயவஞ்சகன், தமிழ் இனத்தின் மாபெரும் துரோகியை தமிழர் ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்.

தமிழ் மறவர்களே,

உங்கள் திரு உடலையும் உயிரையும் தமிழுக்காய், தமிழர்க்காய், தீயியோடு சங்கமிப்பதை விட்டு விட்டு, எவனெல்லாம், தமிழினத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறானோ, தமிழர்களுக்கெதிராக தலை தூக்குகிறானோ அவன் தலையை துண்டியுங்கள். அதுவே தமிழ் அன்னைக்கு தமிழர்களாகிய நாம் செய்யும் பால் அபிஷேகம்.

தமிழகமே, பெருமதிப்பிற்குரிய புரட்சி தலைவர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சி காலத்துக்கு பிறகு வந்த ஆட்சியாளர் யாவரும் மாபெரும் சுயநலவாதிகளும் , தமிழ் இனபற்று அற்றவர்களே.

• தமிழர்களே, பொதுநலம் கொண்ட பச்சைத் தமிழன், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழும் தமிழன், தமிழர்களை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தமிழன், தமிழர்களின் வாழ்வை, வாழ்விடங்களை, கட்டியெழுப்பத் துடிக்கும் தமிழன், உலகத் தமிழனை அன்போடு ஆதரிக்கும் பண்புள்ள தமிழனை, தமீழகத்தில் இனம் கண்டு ஆட்சிப் பீடத்துக்கு அனுப்புங்கள்.

பாரத தேசம், உலக தமிழ் இனத்துக்கு, மனிதாபிமானம் அற்ற முறையில் செய்த துரோகத்திற்கு தமிழ் நாட்டின் தமிழர்கள் தனிதமிழ் நாடு அமைவதற்கான வாக்கெடுப்பொன்றை மேற்கொண்டு பிரிவினை போரை ஆரம்பித்தல் வேண்டும்.

உலகத்தமிழரின் அடிமை விலங்கை உடைத்து, இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களுக்கான புதிய வரலாறுடன் தமிழர் தேசங்கள் அமைப்போம்.


இந்த தமிழர் புரட்சியை தமிழர்களாகிய நாம் செய்யத் தவறும் பட்சத்தில், ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் தமிழ் இனத்தின் மானம் காக்க பிறந்தாலும்,


ஆயிரம் ஆயிரம் முத்துகுமார்கள் தமிழர்களின் நல் வாழ்வுக்காய் மடிந்தாலும் தமிழர்களாகிய நாம் இவ் உலத்தில் நிரந்தர அடிமைகளே !

தன் பெயரில் நாடு உள்ளதென்று பெருமிதம் அடையும் அடிமைகள் நாடே தமிழ்நாடு.

பரிதவிக்கும் தமிழர்கள்

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA