Saturday 12 September 2009

சரணடைந்த புலிகளைத் தடுத்துவைத்துள்ள முகாமிற்கு ச.செ.சங்கம் சென்று பார்வையிட சிறிலங்கா அரசு தடை


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் புலிகளை தடுத்துவைத்துள்ள முகாமிற்குச் செல்ல தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

ஜ.நா சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் தற்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக் கூறப்படும் சுமார் 10,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்துவைக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இவர்களை மிக அரிதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பார்வையிட்டு வந்ததாகவும், இருப்பினும் தற்போது இது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வடக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பல கிளைகள் மூடப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் வடக்கில் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கில் இயங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. இந் நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போர்க்கைதிகளான விடுதலைப் புலிகளை, ஜெனீவா போர்கைதிகள் சட்டமூலத்திற்கமைய நடத்தப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் அங்கிருந்து அகற்றப்பட்டால், சரணடைந்த புலிகளின் நிலை என்ன ஆகும் என பெரும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது

பாலிற்கு பாலகன் வேண்டி அழுதிட! பாற்கடல் ஈவார்களா தமிழ் நாட்டு தமிழர்கள்?

அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் நீண்டகாலமாக தமது ஆட்சியினை இழந்த நிலயில் இருக்கின்றது அதவது 1964 ம் ஆண்டிற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியினால் முழுமையான ஆட்சியினை தமிழ் நாட்டில் ஏற்படுத்த முடியவில்லை அதே வேளை இந்த கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை தவிர ஆட்சியில் இருந்த அனைத்து தமிழக தலைவர்களாலும் ஈழத்தமிழர்களிற்கு எதனையும் ஆக்கபூர்வமாக செய்யமுடியவில்லை என்பது துயரம் நிறைந்த வரலாறு.

எனினும் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தமிழ் நாட்டில் ஆழும் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும்தனித்தும் சில அமைச்சு பதவிகளை தமிழ் நாடு தலைவர்களுக்கு வழங்கி தமது கொள்கைகளை நிறைவேற்றவும் தவறவில்லை. தற்போதய சூழலில் வட இந்தியாவில் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியா தனது பொருளாதார, பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை தென் இந்தியாவிலேயே பன்முகப்படுத்தி வருவதால் தென் இந்தியாவில், மத்திய அரசினை ஆழும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கணிசமாக இருக்கவேண்டும் என்பது திண்ணம். இந்த அடிப்படையிலேயே கங்கிரஸ் கட்சி தமது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் காங்கிரஸ் கட்சியினை வலுப்படுத்தும் நோக்கில் தமது திட்டங்களை பலப்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

தவிர தற்போது இருக்கும் கூட்டணிகளோடு நீண்டகாலம் இருந்தால் அவர்களை பலப்படுத்துவதே தவிர தாம் தலை தூக்க முடியாது என்பது இன்னொரு காரணம்.எனவே தான் புதிய கூட்டணிக்கான தனது தேடுதல்களை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. புதிய செல்வாக்கான நடிகர்களை உள்வாங்குவது,வளர்ந்துவரும் கட்சிகளை வளைத்து போடுவது என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திரு ராகுல் காந்தியின் தமிழக வருகை



மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக திரு ராகுல் காந்தியின் தமிழக வருகையும் அமைந்திருக்கலாம். திரு ராகுல் காந்தியின் வருகையின் போது மிகப்பெரும் பாதுகாப்பிற்கு மத்தியிலும் சட்ட கல்லூரி மாணவர்கள்,மதுரை பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் தமது கடும் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். இதில் துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது. ராகுலின் முதல்வரவிலேயே ஒரு தமிழ் யுவதி பலியாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகய எதிர்ப்புக்கள், மற்றும் மிகப்பெரும் பாதுகாப்புக்கள் ஆகியவற்றிக்கு காரணம் முக்கியமாக ஈழ தமிழர் பிரச்சினையே. வரலாற்று ரீதியாக காங்கிரஸ் கட்சி தமிழீழ தமிழர்களிற்குசெய்ததெல்லாம் வரலாற்று துரோகமும், அனர்த்தங்களும், பளிவாங்கல்களும், அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடுகளுமே தவிர வேரெந்த நல்வினை செயற்பாடுகளையும் செய்யவில்லை. எடுத்துகாட்டாக காலம் சென்ற ராஜிவ் காந்தியின் செயற்பாடுகளையும், தற்போது திருமதி சோனியா வின் செயற்பாடுகளையும் குறிப்பிடலாம்.

காங்கிரஸ் இன் தமிழ் நாட்டு அரசியலிலும் சரி, ஏன் மத்திய அரசாட்சியிலும் சரி தமிழீழ தமிழர்களின் செல்வாக்கு பெரும் தலையிடி அல்லது கனமான ஆதிக்கத்தினை செலுத்திவருகின்றது என்பது யாவரும் அறிந்ததே குறிப்பாக தென் இந்திய பாதுகாப்பு மற்றும் போகோள அரசியலில் தமிழீழ தமிழர்களின் செல்வாக்கு விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டதாக கூறினாலும் கூட தணிய போவதில்லை என்பதே காலம் சுட்டி நிற்கின்றது.

காங்கிரஸ் இன் திட்டப்படி விடுதலைப்புலிகள் அளிக்கப்பட்டால் தமக்கு சாதகமான எதனையும் செய்வதுடன் தமிழ் நாட்டு அரசியலிலும் கணிசமான செல்வாக்கினை செலுத்தமுடியும் என்பதன் திட்டத்தில் தான் ஈன இரக்கம் இன்றி தமிழீழ தமிழர்களை சிறிலங்கா அரசு கொன்று குவிக்கும் போது இந்திய அரசும் அதற்கு சேர்ந்து உதவி செய்தது.

தமிழீழ தமிழர்களிற்கு வரலாற்று காணாத ஈனத்தனத்தை செய்த காங்கிரஸ் இன் சூழ்ச்சி திட்டங்களை தமிழீழ தமிழர்கள் மட்டும் அல்ல தமிழ் நாட்டு தமிழர்களும் இலகுவில் மறக்க மாட்டார்கள் ஆனால் தமிழக தலைவர்களின் தன்னலம் கொண்ட அரசியல் செயற்பாடுகளும் சட்டங்களும் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் என்பது உண்மை. எனவே தான் காங்கிரஸ் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் முகமாக தனது பளய கள்ளை புதிய மொந்தையில் கொடுத்து தமிழீழ தமிழர்களினதும் தமிழ் நாட்டு தமிழர்களதும் உணர்வுகளை வெறுப்புக்களை மாற்ற ”ராகுல்” என்ற புதிய மொந்தையினை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

"ராகுல்" என்ற புதிய மொந்தை

ராகுலின் வரவும் அவரின் வாக்குறுதிகள், பத்திரிகை பேட்டிகள் மூலம் தெரிவது என்னவெனில் காங்கிரஸ் கட்சி ராகுல் இனை வைத்து தென் இந்திய அரங்கில் இருக்கும் காங்கிரஸ் தொடர்பான வெறுப்புக்களை போக்கி ஓர் புதிய சூழலை உருவாக்குவதே ஆகும். என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் ராகுலின் அறியாதனமோ அல்லது அரசியல் கற்று கொண்ட முறையோ அன்றி அவ்வாறுதான் கதைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலோ தெரியவில்லை. எல்லா காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு ஆழும் கட்சி தலைவர்கள் வழமையாக சொல்லும் கருத்தினையே அவரும் சொல்லி இருக்கின்றார். அதாவது காங்கிரஸ் கட்சியானது தமிழக, தமிழீழ மக்களின் உணர்வுகளை மதிக்காது எவ்வாறு செய்யவேண்டிய அநியாயங்கள் அனைத்தையும் செய்து கொண்டு அதனை பூசி மெழுகி மூடி மறைத்து நியாயப்படுத்த முனைந்தனரோ அதே போலதான் ராகுல் அவர்களும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தமிழ் நாட்டு சுற்றுலாவினை முடித்துகொண்ட பின் செவ்வி ஒன்றில் "தாம் இலங்கை தமிழர்களிற்கு எதுவானாலும் செய்யவோம்" என்றும் தமது கட்சி தமிழர்களை காப்பாற்ற தனாலான அனைத்தினையும் செய்தது என்றும். தமிழர்களிற்கு எதிராக நாம் எதனையும் செய்யவில்லை என்றும் அவ்வாறான கருத்தெல்லாம் பொய் என்றும் கூறியுள்ளார். தவிர தமிழ் நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களிற்கு உள்ளாவது தொடர்பில் தான் நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.
இதே சிறிலங்கா கடற்படைதான் ராகுல் அவர்களின் தந்தைக்கு பிடரியில் அடித்து மானபங்கப்படுத்தியது மட்டுமன்றி கொலைசெய்யவும் முயற்சி செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அது தவிர ஈழத்தமிழர் பிரச்சினைய்ல் மீழ முடியாத சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டது. இதற்கு இந்திய அரசு எந்தவித பதில் நடவடிக்கையும் இன்றி மாறாக தமிழீழ தமிழர்களையே தண்டித்தமையும் வரலாறு. எனவே ராகுல் புதிதாக என்ன செய்யபோகின்றார் என்பது வேறு விடயம்

ஆனால் ராகுல் அவர்களின் கருத்து தமிழர் தரப்பினை பொறுத்தவரை முழு பூசணிக்காயினை சோற்றில் புதைத்தது போன்ற இந்த வகையான அணுகுமுறைகள் தமிழர்கள் மனதில் மேலும் வேதனை தரும் என்பதில் ஐயமில்லை தவிர இவ்வாறான நயவஞ்சக பேச்சினை கண்டு தமிழர்கள் யாரும் எமாந்து விடப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் யாவரும் இல்லாத சூழலில் தாம் செய்த அனியாங்களை தட்டி கேட்கவோ அல்லது நியாத்தினை மக்களுக்கு ஆணித்தரமாக சொல்லி தமிழீழ தமிழர்களி உறுதியோடு வழி நடத்தும் தலைமையினை களத்தில் இருந்து அகற்றிய பின்பு தாம் எதனையும் செய்து செத்த செத்துக்கொண்டிருக்கின்ற தமிழர்கள் மீது இனி சவாரி செய்யலாம் என காங்கிரஸ் தலைமையும் ஏன் ராகுல் அவர்களும் ,போதாக்குறைக்கு அரசியல் சாணக்கியம் என்று கொலைஞர்களின் காலில் விழப்போகும் வீழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழீழ, தமிழக தலைவர்கள் , புலம் பெயர் தமிழர்களில் சிலர் ஆகிய யாராக இருந்தாலும் சரி அவர்கள் நினைவில் வைக்கவேண்டியது தமிழ் ஈழ, தமிழக மக்களின் உணர்வுகள் தற்காலிகமாக சுவாலை விட்டு எரியவில்லை என்பதே அத்துடன் விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்காபடவில்லை என்பதே.

எனவே ராகுல் காந்தி புதிதாக வந்து எதனை சொன்னாலும் அவை அனைத்தும் தமிழீழ மக்களின் கசப்பினை போக்கி அவர்களின் கனவினை நனவாக்கும் விடயமாக இருந்தால் தமிழகமும் தமிழீழ தமிழர்களும் சிலவேளை இரங்கலாம். தவிர மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்தால் தமிழகம் அதற்கான பதிலடியை கொடுக்கவேண்டும். கொடுக்குமா?
- ராகுல் அவர்களின் தமிழ் நாட்டு சுற்றுபயணம்

நன்றி : ஈழநாதம்
TNC

த.தே.கூ. உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் புகார்


கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, தற்போது அரசாங்கத் தரப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஜனாதிபதியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி புகார் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தாங்கள் சுட்டிக் காட்டியதாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதைத் தடுப்பதற்கான ஒரு அச்சுறுத்தல் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

போர்க்குற்றங்கள், குறித்து விசாரணைகளை தொடங்குமாறு ஒபாமாவின் அரசாங்கத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு

இலங்கையின் வன்னி யுத்தத்தில் அரங்கேறிய போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை தொடங்குமாறு பராக் ஒமாவின் அரசாங்கத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
வன்னி யுத்தத்தில் இலங்கை அரசுப் படைகள் அரங்கேற்றிய மனிதப் படுகொலைகள் தொடர்பான காணொளி ஆவணங்கள் பன்னாட்டு ஊடக மட்டங்களில் வெளிவரத் தொடங்கியுள்ள பின்புலத்தில், இவ்வாறான அழைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் போர்க்குற்றவியல் பிரிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனற் குழு விடுத்திருப்பதாக பிரித்தானியாவின் சனல் - 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் படுகொலைகள் தொடர்பான நிழற்பட ஆதாரங்களை அமெரிக்க அரசு ஆராய்ந்து வருவதாகவும், இது இலங்கைக்கான அமெரிக்காவின் படைவழி உதவிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், சனல் - 4 தொலைக்காட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவின் மறைமுகத் திட்டம்

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து தமிழினத்தைப் பகடைக்காயாக்கி அதனை தமது அரசியல் ஆதாயத்துக்கு செம்மையாக பயன்படுத்துவது சிங்கள தேசத்தின் புதிய முயற்சியில்லை. தமிழினத்தினுள் உள்ள சில கோடரிக்காம்புகளை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய சந்திரிகா அம்மையாருக்கு கதிர்காமர் போலவும் ரணிலுக்கு கருணா போலவும் மகிந்தவுக்கு பிள்ளையான் போலவும் எல்லாக்காலங்களிலுமே அரசுக்குச் சாமரம் வீசும் டக்ளஸ் தேவானந்தா போலவும் தமிழர்களின் கசப்பான வரலாறு நீண்டுகொண்டே செல்லும்.

அந்த வரிசையில் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் துண்டாடும் இரகசியத் திட்டத்துடன் களத்திலிறங்கியுள்ள மகிந்த அரசு சத்தம் சந்தடியில்லாமல் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக கட்சிவட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

அதாவது,


விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டி மகிழ்ச்சியடையும் மகிந்த அரசுக்கு, சிறிலங்காவில் - சிங்கள தேசத்தின் செவிகளுக்கு ஒவ்வாத - தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் பலமான அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.


போர் முடிவடைந்த சூழ்நிலையில், தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான பார்வை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலலுள்ள உள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

ஆகவே, இப்போதைக்கு கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக முறுகல்பட்டுக்கொண்டால், அது தமக்கு மேலும் சிக்கலை கொண்டுவரும் என்பது மகிந்த அரசுக்கு உள்ளுர தெரிந்துள்ள விடயம்.

ஆகவே, இரகசிய சதி மூலம், கூட்டமைப்பினுள் இறுக்கமாக இருந்துவரும் அந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடவும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முறுகலை ஏற்படுத்தி, தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்துவரும் கூட்டமைப்பின் அத்திவாரத்தினை அடியோடு அழித்துவிடவும் மகிந்த அரசு படிப்படியாக தனது காய்களை நகர்த்திவருவதாகவும் தெரியவருகிறது.

இதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பியின் உதவியுடன் காரியங்கள் நடந்துவருவதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்சியைப் பிளக்கும் மகிந்தவின் வேலைத்திட்டத்துக்கு இலக்காகியிருப்பது ரெலோ எனப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள அமைப்பாகும்.

ஒரே தலைவர் என்ற நிலையை ஒழித்து, தமிழீழ விடுதலை இயக்கத்தினை (ரெலோ) வழிநடத்துவதற்கு என 12 பேர் கொண்ட நடவடிக்கைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் -

ஏற்கனவே கட்சியின் மத்திய குழுவில் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், எஸ்.ஏ.தவநாதன், எஸ்.ரூபராஜ், பொதுச் செயலாளர் பிரசன்ன இந்திரகுமார், விநோ நோகராகலிங்கம் ஆகியோருடன் சேர்த்து என்.சிறீகாந்தா, எஸ்.நிமலராஜ், விந்தன் கனகரட்ணம் மற்றும் இரு புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டு புதிய நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தியின் பின்னணியிலேயே இந்தச் சதித்திட்டத்தின் ஆணிவேர் ஒழிந்திருப்பதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது, மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் பணியாற்றிவந்த ரெலோ தொண்டர்கள் பலர் அடைக்கலநாதன் எம்.பி. சரியாக கவனிப்பதில்லை என்றும் கட்சிக்காக உழைக்கும் தமது தேவைகளை அவர் பூர்த்திசெய்வதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்து அக்கட்சியிலிருந்து பிரிந்து செயற்படதொடங்கினர்.

அக்காலப்பகுதியில், வவுனியாவிலிருந்த ரெலோவின் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த உதயன் என்பவர் வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து தனது சகாக்களுக்கு நிதி ரீதியாக சிறு உதவிகளைச் செய்துவந்தார். அடைக்கலநாதன் குழுவினரை விடுத்து தாம் தனியாக இயங்கவேண்டும் என்பதையும் அடிக்கடி அவர் கூறிவந்தார். இதேவேளை, ஈ.பி.டி.பி.யுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட உதயன், தமது சகாக்களின் நிலைமையைக் கூறி அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

இந்தத் தருணத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம், வவுனியாவிலிருந்த ரெலோ அதிருப்தியாளர்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்கி முழுமையாகவே அவர்களை கொள்கை ரீதியில் பிரித்துவிடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.


இந்த உதவிகளுக்கு நன்றிக்கடனாக ஈ.பி.டி.பியுடன் இணைந்துகொள்வதாக ரெலோ அதிருப்தியாளர்கள் குழு கோரிக்கை விடுத்தபோதும், விடுதலைப்புலிகளின் கொள்கைகளை ஏற்று அவர்களுடன் பணிபுரிந்த ரெலோவிலிருந்து வெளியேறிய இவர்களை நம்பலாமா?

இவர்களை தனது கட்சிக்குள் இணைத்து, கடைசியில் வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாகிவிடாதா?
என்ற சந்தேகத்தில் அந்த விண்ணப்பத்தை ஈ.பி.டி.பி. நிராகரித்தவிட்டது.

அவர்களைப் பிரித்து எடுக்கவேண்டும், ஆனால் அதற்காக அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாகவிருந்தது.

அரசின் திட்டத்தை இவர்களை வைத்து எவ்வாறு பந்தாடலாம் என்று போட்ட திட்டத்தின் எதிரொலிதான், வவுனியா ரொலோ முகாமில் சிறிது காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற திடீர் காவல்துறை தேடுதல் நாடகம்.

அதாவது, வவுனியாவில் ரொலோ குழுவினர் பொதுமக்களுக்கான தொலைக்காட்சி இணைப்பை வழங்கும் சேவையை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்தத் தொலைக்காட்சி இணைப்பு வழங்குபவர்கள் ஊடாக ரொலோ முகாமினுள் ஆயுதங்கள் ஒரு தொகுதியை உள்ளே வைத்துவிட்ட ரெலோ அதிருப்தியாளர்கள் - ஈ.பி.டி.பியினர், காவல்துறையிடம் தொடர்புகொண்டு, ரொலோ முகாமில் ஆயுதங்கள் உள்ளதாக தகவலையும் வழங்கினர். இதனை அடுத்து, முகாமை சோதனையிட்ட காவல்துறையினர், ஆயுதங்களை மீட்டுச் சென்றதுடன் அங்கிருந்த சிலரைக் கைதுசெய்து சென்று விசாரணை செய்தனர்.

மொத்தத்தில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனை இந்தப் பொறிக்குள் சிக்கவைத்து அவரைச் சிறைக்குள் தள்ளுவதுதான் இரகசிய திட்டம். இதன்படி, தற்போது இந்த விடயத்துக்கு கை, கால் வைத்து, தற்போது இந்தியாவிலிருக்கும் செல்வம் அடைக்கலநாதன் நாடு திரும்பியவுடன் கைது செய்வதற்கான, பாரிய திட்டத்துடன் சிறிலங்கா காவல்துறையினர் காத்திருப்பதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து இயங்குவதன் மூலம் அரசின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கும் ரெலோ அதிருப்தியாளர்கள் குழுவின் தற்போதைய தலைவர் உதயன், வவுனியா நகரசபைக்கான தேர்தலில் அரசு சின்னத்தில் போட்டியிட்டு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டார்.

தமது அணியை அரசியல் ரீதியாகத் தூக்கி நிறுத்துவதற்கு முயற்சித்த ரெலோ அதிருப்தியாளர்கள் குழுவின் அடுத்த நடவடிக்கையாகவே, தற்போது கட்சியின் மத்தியகுழுவைக் கூட்டி புதிய அங்கத்தவர்கள் சிலரை நியமிக்கும் வேலை நடைபெற்று முடிந்திருக்கிறது.

எது எப்படி நடைபெறுகிறதோ, ஊர் கூடி அடிபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல தருணம் பார்த்து அரசு எய்த அம்பு கூட்டமைப்பைக் குறிவைத்துக் குடைய ஆரம்பித்திருக்கிறது.

தாயகத்தின் தளம்பாத குரலாக தேசியத்தின் ஆன்ம பலத்தை இன்னமும் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தச் சலசலப்புகளுக்கு அஞ்சாது தனது பணியை முன்னெடுக்கும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் அடித்துக்கூறியுள்ளன.

முகிலன்

இளையோரே , புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள்.


முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள்.


இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை.


பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.
ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.


வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை.


போர் இல்லாதவிடத்து தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.


கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அர்ப்பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை கொடுத்து சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.

ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?

அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும்.

உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!


தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் பதவி பசியால் வாடி வதங்கி அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!

எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!

அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது.


இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும். அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்!



இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள்.


பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள்.


நீங்களும் உயிர்த்தெழுங்கள்.

முரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.

கனடாவிலிருந்து ஆதவன்

வன்னித்தென்றல் -

தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து ...!


இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்

வன்னி அகதிகளைப் பராமரிப்பதற்கு தொடர்ந்து நிதி வழங்க முடியாது: ஐ.நா. பிரதிநிதி எச்சரிக்கை

இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசு தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவி வழங்குவதை ஐ.நா.சபையினால் தொடர முடியாது என்று இலங்கைக்கான ஐ. நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

முகாம்களிலே தங்கியிருப்பவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் இன்னமும் தொடருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இந்த முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பச் செல்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. தலைமைச் செயலரிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை அவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று நீல் பூனே தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்கள் என்று அரசாங்கம் கூறும் பத்தாயிரம் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படாதது குறித்தும் ஐ.நா. பிரதிநிதி தனது விமர்சனத்தை வெளியிட்டார்.

தவிர இலங்கையைச் சேர்ந்த ஐ.நா.வின் இரு பணியாளர்கள், கடந்த ஜூன் மாதம் முதல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து நியூயோர்க்கில் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் கடுமையான விசனத்தை தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளால் அவர்கள் தவறான முறையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி.

யுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது.


இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி.,

இன்று மூன்று இலட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல முடியாது. சுதந்திரமாக நடமாட முடியாது.

இம்மக்கள் தாம் தொடர்புபடாத யுத்தத்திற்காக இன்று தண்டனை அனுபவிக்கின்றனர். இம் முகாம்களில் பெற்றோரை இழந்த உறவினர்கள், ஆதரவில்லாத 850 சிறுவர், சிறுமியர் உள்ளனர். கோர யுத்தத்தால் இப்பிள்ளைகள் அநாதைகளாகியுள்ளன.

அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூமோனியாவால் பலர் உயிரிழந்துள்ளனர். 200 பேருக்கு ஒரேயொரு மலசலகூடம் தான் உள்ளது.

70,000 சிறுவர், சிறுமியர் முகாம்களில் உள்ளனர். அப்பிள்ளைகள் சுதந்திரமாக ஓடித் திரியவோ விளையாடவோ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி மக்கள் வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.எனவே இம்மக்களை வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு இம் மக்கள் ஒடுக்கப்படுவார்களானால் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் தலைதூக்கும்.

நடந்து முடிந்த யுத்தம் பிரபாகரனின் உருவாக்கம் அல்ல. வரலாற்றை பிரபாகரன் நிர்மாணிக்கவில்லை, வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும்.

அதிகாரத்தை பரவலாக்குவதால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. மாறாக ஒரு சில தமிழ் அரசாங்க சார்பானவர்களே நன்மையடைவார்களென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

.என்.என்., அல் ஜசீரா, பி.பி.சி. ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: அமைச்சர் மஹிந்த அமரவீர

சனல் 4 தொலைக்காட்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சீ.என்.என்., பி.பி. சி. மற்றும் அல் ஜசீரா ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுள்ளமை இன்று வெளியாகி இருக்கின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று சபையில் தெவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட ""சனல் 4'' தொலைக்காட்சி விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில், ""சனல் 4'' வீடியோ காட்சி தொடர்பிலான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்திருக்கும் அந்தத் தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகள் உண்மையற்றதும் போலித் தயாரிப்புகளால் ஆனதுமாகும்.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரை தடுப்பதற்கும் அதன் மூலம் பிரபாகரனை பாதுகாப்பதற்கும் சர்வதேசம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

தற்போது பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதியான போலித் தயாரிப்புகளை வெளிப்படுத்தி அரசுக்கு களங்கத்தை விளைவிக்க முற்பட்டிருக்கின்றது. இது உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபித்துக் காட்டிய பின்னரும் அதன் பொறுப்பை குறித்த நிறுவனம் ஏற்க மறுக்கின்றது.

குறித்த வீடியோ காட்சி ""சனல் 4'' நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாலேயே ஒளிபரப்பியதாக அந்த நிறுவனம் கூறுகின்றது. ஆனால், அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்ற தகவலை வெளியிட மறுக்கின்றது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியில் சுடப்படுபவர் சிங்களத்தில் பேசுகின்ற அதேவேளை துப்பாக்கிதாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் தமிழில் பேசுகிறார். இது போன்ற பல்வேறு குழப்பங்கள் அதில் அடங்கியுள்ளன. இந்தக் காட்சி பொய்யென நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அந் நிறுவனத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

""சனல் 4'' இன் முயற்சியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முப்படைத் தளபதிகளும் யுத்தக் குற்றவாளிகள் என்று சித்தரிப்பதற்கானதாகும் என்றார்.

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் பிணையில் விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை இன்று இலங்கை நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2.5 மில்லியன் சொந்தப்பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை இருவரும் நாட்டில் இருந்து வெளியேறக்கூடாது என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் படையினரிடம் சரணடைந்தனர்.

இதன் பின்னர் அவர்கள் கொழும்பு பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் தயா மாஸ்டர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மரணமானதாக கூறப்பட்ட போது அவரை அடையாளம் காட்டுவதற்காக வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA