Wednesday 16 September 2009

நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் இருந்து பாக்கிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார,மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா?

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் பயிற்சி எடுக்க உத்தேசித்துள்ள நாடுகள் எதற்காக பயிற்சி எடுக்க திட்மிட்டுள்ளன. இன அழிப்பு நடவடிக்கைக்கா? அல்லது சிறந்த இராணுவ நிபுணத்துவத்திற்கா?

எதுவாக இருந்தாலும் இதற்கு பிரபல்யம் மிக்கவர்களில் கருணாவும் ஒருவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிலாவத்துறையில் ஆரம்பித்த வடமுனை போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? என்பதை ஆராயமல், ஸ்ரீலங்கா படைகளிடம் பயிற்சி பெறவுள்ள இத் திட்டம் தவறானது என்றே கருத இடமுண்டு.

போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.

ஏற்கனவே ஊடுருவியிருந்த(ஒப்பந்த காலத்திலோ அதற்கு முன்னரோ) படையினர் தகவல்களை துல்லியமாக வழங்கியிருந்ததினால் விமானத் தாக்குதல்கள் சில வெற்றியளிப்பவையாக இருந்தது. மேலும் வீதியோர கிளைமோர் தாக்குதல்களையும் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்டதினால் மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து இருந்தது. ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவது மிகக் கடினமான ஒரு விடயமல்ல.

ஏற்கனவே மடுவை அண்டிய காடுகள் ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொருட்கள் எடுத்து வரும் செயற்பாடுகள், இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்கள் தப்பிச் செல்லுதல் போன்றன இடம் பெற்று வந்தன. இந்த காடுகளை அண்டிய எல்லைகளில் புலிகளின் காவலரண்கள் இருக்கவில்லை.

யானைகள் மற்றும் காட்டு மிருகங்கள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இவை காணப்பட்டன.இராணுவத்தைப் போல் நடு காட்டில் முழு நீளத்திற்கும் கம்பி வேலி அடித்து காவலரன் அமைத்து இரவு பகல் கடமையில் ஈடுபடக் கூடிய வசதி புலிகளிடம் இருக்கவில்லை.

ஆகவே தான் 1996 ஆம் ஆண்டு குறிப்பிட்ட காடுகளை அண்டிய பகுதியில் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தை சென்ற உலங்குவானூர்தி தொழிநுட்ப கோளாறு காரணமாக தரை இறங்கியதும் பின்னர் அந்தப்பகுதி வாசி ஒருவர் மனிதாபிமானமாக நேர்மையாக நடந்துகொண்டதினால் அமைச்சர் கால் நடையாக இராணுவ பகுதியை சென்றடைந்தமையும்,அமைச்சரால் அந்த தமிழ்மகனுக்கு எதிர்கால நல்வாழ்வு பற்றி நன்றியாக கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாமையும் ஞாபகம் இருக்கக் கூடிய கதைகள்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் புலிகளின் பகுதிக்குள் படையினர் ஊடுருவது தொடர்பகாக ஆராயப்பட்டு அதற்கென ‘ஆழ ஊடுருவும் படையணி” பொரளையில் கொல்லப்பட்ட மேஜர் நத்தலிப் தலைமையில் அமைக்கப்படது.

இவை எல்லாம் கோட்டபாயவுக்கோ அல்லது சரத் பென்சேகாவுக்கோ உதித்த புத்திகள் அல்ல.

மேலும்

சமாதான கால பகுதியில் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்குவது போல பாசங்கு செய்து புலிகளின் அமைப்புக்குள் ஊடுருவிய ரணில் அரசு விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை தாக்கி அழித்ததுடன் முக்கிய தாக்குதல் தளபதியான கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தமை போன்ற உறுதியான அடிப்படை வெற்றிகளின் விளைவுகளும், இந்தியா சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தொழில்நுட்பவியல் உதவிகளும் ஒன்று குவிந்தமை புலிகளின் இராணுவ கட்டமைப்பை சிதைக்க உதவியது.


இதற்கு மேல் கடந்த சுமார்


3வருடத்திற்குள் பதவியேற்ற சரத் பென்சேகாவின் இராணுவத் தலைமையோ, பாதுகாப்பு செயலாளரின் உத்திகளோ அல்லது ஜனாதிபதியின் திறமையான திட்டமிடல்களோ புலிகளின் இராணுவ பலத்தை சிதைத்தது என்று கருத முடியாது.

முப்பது வருட போரின் இறுதி நான்கு வருடங்களில் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்பட்டமையானது மக்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் விடுதலை உணர்வும் பாதிக்கப்பட்டதுடன், போராட்ட நிலையிலிருந்தும் ஒதுங்கினர்.

அதிலும் மாவிலாறில் போர் ஆரம்பித்து முதற் கொண்டு பல்வேறு அமைப்புக்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பல எச்சரிக்கைகளும் கவலைகளும் வெளியிடப்பட்ட போதும் அவை கணக்கில் எடுக்கப்டாமல் இடைவிடாத போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இதனிடையே கருணாவின் பிரிவு முதற் கொண்டு தொடர் தோல்விச் செய்திகளை தமிழ் மக்களையும், ஈழ விடுதலை உணர்வாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் தொடர் பிரசாரங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டு வந்தது.

இதற்கு சாதகமாக கருணாவின் முழு கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு பகுதியை முதலில் கைப்பற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வெற்றிச் செய்தியை அறிவித்து, அது தொடர்பான காட்சிகளை அடிக்கடி தேசிய தொலைக்காட்சிகளில் காண்பித்து, நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை இராணுவ மயமாக்கியதுடன், இன்னுமொரு பகுதியினரை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியது.

இறுதிக்கட்ட போர் மாவிலாற்றில் ஆரம்பமாகியது முதல் முள்ளியவாய்க்கால் வரை கண்மூடித் தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மற்றும் காட்டு விலங்குகள் பலவும் உயிரிழந்தன.

கண்மூடித்தனமான இத்தாக்குதல்களை குறைந்த ஆளனியுடன், குறைந்தளவு இராணுவ தளபாடங்களுடன், சுமார் 3 வருடங்கள் விடுதலைப் புலிகள் சமாளித்துள்ளார்கள் என்பது தான் முக்கிய விடயம்.


அள்ளிவீசியெறிந்த குண்டுகளின் புறத்தல், கட்டவிழ்க்கப்பட்ட பட்டிகளைப் போல் கவச வாகன சகிதம் வருகை தந்தவர்களை தடுத்து நிறுத்தி பல உக்கிர தாக்குதல்களையும் புலிகள் மேற்கொணடனர்.

மேலும்

இதற்கென புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளும் தடுப்பு மண் அணைகளும் பல இராணுவ நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இறுதி வரை மனோதிடத்துடன் போராடிய புலிகளுக்கு பல நாடுகளாலும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட தொழிநுட்ப உதவிகள் பெரும் சாவலாக அமைந்தது.
ஒவ்வொரு உறுப்பினரினதும் அசைவினை மிகத் துள்ளியமாக அவதானிக்கக் கூடிய கருவிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் வாகனத்தின் இலக்கத் தகடுகளைக்கூட அவதானிக்கக் கூடிய தொழில்நுட்பம் அரசிற்கு பிற நாடுகள் வழங்கியிருந்தன..

மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்த மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகளும், மருத்துவ நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டமை புலிகளையும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது.

இப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்த இப் போராட்டத்தில் மீட்புப்பணிகளை இறுதிவரையும் புலிகள் மேற்கொண்ட வண்ணமே இருந்தனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்ட இந்த போரில் இராணுவத்தரப்பு மேற்கொண்ட உத்தி இடைவிடாத தாக்குதல் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல். அதாவது ‘தேனியை கொட்டுடன் கொழுத்தி தேன் எடுக்கும்” முறை போன்றே இப்போர் நடந்து முடிந்துள்ளது..
o இதில் பிற நாடுகள் கற்றுக் கொள்வதற்கு என்ன உள்ளது?

o இன அழிப்பு எப்படி என்றா?

o அல்லது தாம் வழங்கிய ஆயுதங்களின் பயன்பாடு எவ்வாறிருந்தது என்பதின் மதிப்பீட்டிற்கா?

o அல்லது ஸ்ரீங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு வசதியாக ‘பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அரசு” என்ற கௌரவத்தை கொடுப்பதற்காகவா?
இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள கதையானது நிச்சயமாக ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை உலகம் மறப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே நோக்க இடமுண்டு.

இவ் இறுதிக் கட்ட போர் ஆரம்பித்த நாள் முதற் கொண்டு புலிகள் மீது அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டை அரசு சுமத்தியதுடன், புலிகள் தாக்கியதினால் தான் தாம் தாக்கியதாகவும் கூறிவந்தது.

இந்தக் காலப் பகுதியில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அடக்கப்பட்ட நிலையில், பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் அரச அறிக்கைகள் முதன்மை இடத்தை பிடித்திருந்தமையும் அரசாங்கத்திற்கு போர் பிரசாரத்திற்கு சிறந்த வசதியை ஏற்படுத்தியிருந்தது..

மேலும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளும் ஊடகங்களுடன் உடனுக்கு உடன் தொடர்பு கொள்ளாமை அல்லது தொடர்பு கொள்ள வசதி கிடைக்காமையானது அரசிற்கு மேலும் சாதக நிலைமையை உருவாக்கியிருந்தது.

அதாவது அரசிற்கு கிடைத்த அல்லது தனது அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த சகல வளங்களையும் போருக்கு என அரசு முதன்மைப்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக உள்ளுர், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிய வேண்டி இருந்ததுடன், சில தொண்டர்கள் கொல்லப்படவும், நாட்டைவிட்டு வெளியேறவும், சிலரின் பயணஅனுமதிகள் ரத்துசெய்யப்படவும் நேரிட்டது.

இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சகல தரப்பினரையும் அடுக்கு முறைக்குட்படுத்தியே இந்தப் போரில் அரசு வென்றது.

இன்னொரு கிட்லர் பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது. நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?

சுவிசிலிருந்து குஜென்

இன்போ தமிழ்

அச்சுறுத்தும் சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழரின் பதில் என்ன?


கைதும் கடத்தலும்- தமிழர் நாம் அனுமதிப்பதா ?

சர்வ தேச விதி முறைகளை மீறும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்பாளரும் சர்வ தேச ராஜ தந்திரப் பேச்சாளருமான திரு.செல்வராசா பத்மநாதன் தெற்காசிய நாடொன்றிலிருந்த இலங்கை அரசினால் பலவந்தமாகக் கடத்தப் பட்டு விசாரணையில் உள்ளார்.

அவரிடம் ராஜீவ் காந்தியின் கொலை பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் குரலும் எழுந்துள்ளது. இதிலிருந்து அவரது கடத்தலுக்கும் விசாரணைக்கும் இந்தியாவின் பங்களிப்பு நேரடியாகவோ மறை முகமாகவோ கணிசமான அளவு இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளமை அதிகமாகவே தென்படுகிறது.

முன்னர் இந்திய அரச அறிக்கைகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அல்லாது இராணுவத் தீர்வு இருக்க முடியாது எனக் கூறிக் கொண்டே போருக்குத் துணை போனது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே புலிகள் இயக்கத்தடன் நடந்த அமைதிப் பேச்சுகளை முறிக்கவும் இலங்கை அரசுகளை இராணுவ தீர்வு நோக்கி நகர்த்தவும் போரில் தானும் வலிந்து பங்கெடுக்கவும் தவறவில்லை.

இன்னமும் இந்தியா அத்தகைய நிலைப்பாட்டினையே கே.பி. கைது உட்பட தமிழர் விடையத்திலும் தொடர்ந்து செயல்படுகிறது என அனுமானிப்பதில் தவறு இருக்காது.

இலங்கை அரசு இதே போன்ற கடத்தலைச் செய்ய முடியாத நிலையில் அந்நிய தேசங்களில் கொலைகளைக் கூட நடத்தித் தனது தமிழினத்தின் மீதான அடக்கு முறைக்கு வழி சமைக்க வல்ல வசதியும் வாய்ப்பும் கொண்டுள்ளது. இத்தருணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸ் நகரில் கொல்லப் பட்ட நாதன் கஜன். ஆகியோரின் சாவுகளை எமது நினைவில் கொள்வது பயனாக இருக்கும்.

இப்போது இலங்கை அரசு குறிவைத்திருப்பது உருத்திர குமாரன் எனக் கூறிக் கொண்டாலும் அதன் உண்மையான தாற்பரியம் நாடு கடந்த தமிழிழ அரசுப் பிரகடனமும் அதனால் இலங்கை இந்திய அரசுகளின் திட்டங்களில் ஏற்படப் போகும் சிக்கல்களுமே.

இலங்கை அரசைப் பொறுத்தவரை பிரபாகரனும் புலிகள் அமைப்பும் அழிந்து விட்டதால் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்ட ஒன்றாக அகில உலகமும் ஏற்க வேண்டும் என்பதாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசு என ஒன்று உயிர் பெற்று விட்டால் அது மேலும் ஒரு பலமான செயற்பாடாகி புலம் பெயர் தமிழரின் சர்வதேச விவாதப் பொருளாகிவிடும். என்ற அச்சம்.

இராணுவ மற்றும் ஆட்சி அதிகார அடக்கு முறைகளால் உள்நாட்டு அரசியல சக்திகளின் கழுத்தை நெரித்தே தமிழர் பிரச்சனைக்குச் சமாதி கட்டிவிட இலங்கை அரசு நினைக்கிறது. அதன் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் இந்திய அரசுக்கு இலங்கை அரசின் ஆசைகளை நிறை வேற்றுவதே தலையாய கடனாக இருக்கிறது.

நடந்து முடிந்த போரிலும் அதன் பின்னர் ஐ.நா. விவாதம், மக்கள் மீள் குடியேற்றம், போர்க் குற்ற விசாரணைகள் போன்ற விடையங்களில் இலங்கையின் தேவைகளே இந்தியாவின் தேவைகளாக உள்ளன. பல முறை அமெரிக்கா எமது விடையங்களில் தயக்கம் காட்டக் காரணமாக இருப்பதும் இந்தியாவின் கரமே.

இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் ஒரே ஒரு ஆதாரமாக இருப்பது நாடு கடந்த தமிழீழ அரசும் அதனை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுமே. இந்தக் காரணத்துக்காகவேனும் கே.பி.விடையத்தில் அதிக அளவு அக்கரையும் எதிர்ப்பும் காட்ட வேண்டியவர்களாகப் புலம் பெயர் தமிழர் இருக்கின்றனர்.

இத்தகைய வரலாற்றுக் கடமையைப் புலம் பெயர் தமிழினம் செய்யாது தவறு விடும் காரணம் என்ன ?

இந்தத் தவற்றுக்கு யார் பொறுப்பு ?

இலங்கை இந்திய அரசுகளின் அத்து மீறல்களால் உருத்திர குமாரனுக்கோ அல்லது நாடு கடந்த தமிழீழச் செயற்பாட்டளர் எவருக்குமோ பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையே உள்ளது.

எனவே புலம் பெயர் ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு உலக அரசுகளிடம் பாதுகாப்பு உத்தரவாதம் கேட்க வேணடும். அத்தகைய உத்தரவாதத்தை உலக அரசுகள் எமக்கு வழங்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு ஜனநாயக உரிமைகளைப் பேணும் புலம் பெயர் அரசுகளுக்கும் இருக்கிறது.

அடுத்த பெரு வெள்ளம் எம்மை நோக்கி வரும் முன்பாக நாம் உலக அரசுகள் மூலம் எமது குரலையும் ஆட்சேபனைகளையும் அந்தந்த நாடுகளில் உரக்க எழுப்புவோமா?

நிலவரம்
வி.எதிர்மன சிங்கம்

புலிகள் புத்துயிர் பெறும் வாய்ப்பு அதிகம்; ஆயுதங்கள் பெறும் சாத்தியமும் உண்டு: எம்.கே.நாராயணன்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறும் ஒருங்கிணையக் கூடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் அவர்கள் ஆயுதங்களைப் பெறுவதற்கும் நிறையச் சாத்தியம் உண்டு. இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்கிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.


புதுடில்லியில் நேற்று முன்தினம் நடை பெற்ற மாநிலங்களின் பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு நிதியை வழங்கி வந்தவர்கள் உலகெங் கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள். விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற்று மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல் வழிகள் இன்னும் யாராலும் தொடப்படாமல் அப்படியே உள்ளன. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மனக்குறையுடன் இருக்கக்கூடிய சிலர், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதக் குழு மீண்டும் ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் உதவி செய்வதற்காக ஒருங்கிணையக்கூடும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு பணத்தைக் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய உதவியைப் பயன்படுத்தி புலிகள் மீண்டும் புத்துயிர் பெற முயற்சிக்கலாம்.

விடுதலைப் புலிகளின் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் பாதிப்படையாமல் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் ஆயுதங்களைத் தூக்குவதற்கு உதவலாம்.
இதுகுறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், எதனையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதாவது இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நாராயணன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கேரள மாநிலம் கோவளம் கடற்கரையோர நட்சத்திர விடுதி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடிப் பேசி இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்ததைத் தொடர்ந்து நாரயணனின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

கேரள கடல் வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளால் தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்: விளக்கக் கோவை வெளியீடு


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர்.
வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு - தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக - கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற் குழு தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் விதமாக – அதனை உருவாக்குவதற்கான செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி - பதில் வடிவத்திலான முதற்கட்ட விளக்கக் கோவையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களால் வெளியடப்பட்டுள்ள குறிப்பும், விளக்கக் கோவையும் கீழே தரப்பட்டுள்ளது:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: சில விளக்கக் குறிப்புக்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்ட்டுள்ளதனையும் அதனை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனையும் தாங்கள் அறிவீர்கள்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான தேவைகளை வெளிப்படுத்தி திட்ட முன்னறிவிப்பினை 16.06.2009 அன்று ஊடகங்களுக்கான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.

இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்தை வினா - விடை வடிவிலான விளக்கக் குறிப்பாகத் தற்போது வெளிப்படுத்துகிறோம்.

இது முதற்கட்ட விளக்கக்கோவையே. திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், விளக்கங்களை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம்.

இந்த விளக்கக்கோவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணை புரியும் என நம்புகிறோம்.

இந்த விளக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விடயங்களே.

இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேவையான மாற்றங்களை செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இந்தத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

திரு விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இது ஒரு புதுமையான எண்ணக்கரு.

தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.

சிறிலங்கா அரசு சட்டரீதியான தடைகளுக்கு ஊடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகவும் படுகொலைகளுக்கு ஊடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது.

இந்நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள ஜனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதிஉயர் மக்கள் பீடமாக இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.

தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குபெறுவது நடைமுறைச் சாத்தியம் இன்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த அரசு தாயகத்தில் இருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.

2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது?
ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே தங்கியுள்ளது.

இதனை சிறப்பாக அடைவதற்கும் அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது.

இலங்கைத் தீவுக்குள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்து எடுக்கப்பட்டு - இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும் அதன் அடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது.

இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன.

அத்துடன், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரல் எழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.

தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒருவகையில் அரசியல் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், இராஜதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டங்களிலும் பிரகடனம் செய்து வருகின்றனர்.

இவற்றினை எல்லாம் எதிர்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்று எடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவில் இருந்து வெளியேறி வாழ்கின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.

3. நாடு கடந்த அரசாங்கத்திற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் இடையில் (Government in Exile) வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா?
இந்த இரண்டு அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த இரு அரசாங்கங்களும் கோட்பாட்டு ரீதியில் வேறானவை.

புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடிவரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவர்.

புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம். புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புகலிட அரசாங்கம் பொதுவாக தனது ஆளுகைக்கு உரிய விடயங்களாக தமது தாயகத்து விடயங்களை மட்டுமே கொண்டிருக்கும்.

நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறையாகும். அதன் கோட்பாட்டு அடிப்படை கடந்த இரு தசாப்தங்களாக சமூக அறிஞர்களின் கூடுதல் கவனத்தினை ஈர்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நாடு கடந்த வாழ்க்கை முறையுடனும் (Transnational life) நாடு கடந்த அரசியலுடனும் (Transnational Politics) தொடர்புபடுகிறது.

புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக்கொள்ளும்போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைப் பேணிவருகின்றனர்.

இவர்களது வாழ்க்கை முறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வினை இவர்கள் அமைத்துக் கொண்டபோதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு அம்சங்களைத் தீர்மானிப்பதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முக்கிய பங்கினை வகிக்கிறது.

ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையும் இவ்வாறுதான் உள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், நாடு கடந்து தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் தமது வாழ்வினை தாயகத்தில் அமைத்துள்ள ஒரு சூழலில் அந்த மக்களும் ஈழத் தமிழரின் நாடு கடந்த சமூக வெளியின் அங்கமாவே உள்ளனர்.

மேலும், ஈழத் தமிழரின் அரசியல் இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்போது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூக நலன்மிக்கதும் ஜனநாயக அடிப்படைகளில் கட்டி எழுப்பப்படுவதும் ஆகும்.

தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்று எடுப்பதற்காக அமைக்கப்படுகிறது.

தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கைகளை மட்டும் அன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்த நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும்.

மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இந்த அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொது அமைப்புக்கள் இந்த அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இந்த அரசாங்கம் திரட்டும்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் இராஜதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடும்.

4. நாடு கடந்த அரசாங்கம் உருவாகிவிட்டதா? இல்லை எனின் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப்போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?
நாடு நடந்த அரசாங்கம் இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான உருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு நடந்த அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படும்.

விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு உருவாக்க செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும்.

தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இந்த அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களினதும் அரசாங்கத்தினதும் ஆதரவினை இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் செயற்பாடுகளிலும் இந்த செயற்குழு ஈடுபடும். ஆலோசனைக் குழுவும் முஸ்லிம், இந்திய கல்விமான்களையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும்.

ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத் தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் தமிழர் மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களின் துணையுடன் நன்மதிப்புப் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் துணையுடன் அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய சுயாதீனமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல்களை நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்புடுவர்.

தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தம்மை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி சட்ட சிறப்புக் குழுவினரின் உதவியுடன் மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான யாப்பினை தயாரிப்பார்கள்.

5. நாடு கடந்த அரசாங்கத்துக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்? நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?

நாடு கடந்த அரசியல் என்பது ஒரே நேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கமுடியும்.

அதாவது, ஒருவர் ஒரே நேரத்தில் பிரித்தானியராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல.

இது ஈழத் தமிழர்களுக்கு வலுச் சேர்க்கின்ற விடயமாகவே கொள்ளப்படவேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடு கடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற ஐரிஷ் மக்கள், வட அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவினை வழங்கினார்கள்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்த நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன.

இத்தாலிய நாடாளுமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடம் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

கெயிட்டியில் புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக ஒரு தனித் தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்திற்கு சான்று பகல்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களின் நாடு கடந்த அரசுக்கான முயற்சியினையும் நோக்கவேண்டும்.

இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு பிரதேங்களினை தமது பாரம்பரியத் தாயகமாக கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினதும் தொடர்ச்சியான தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாக தாயகத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டனர்.

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும் இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்ட இன வன்செயல்களும் காரணமாக ஒருபகுதி மக்கள் வட கிழக்குக்கு வெளியே வாழ வழி தேடி குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மற்றுமொரு தொகுதியினர் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வன்செயல்களில் இருந்த தங்களின் உயிரினைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தீவிற்கு வெளியே அகதிகளாக புலம்பெயர்ந்து குடிபெயர்ந்தனர்.
எஞ்சியிருந்தோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளூரில் அகதிகளாகவும், பொருளியல் வலுவற்ற அநாதைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும், சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத் தமிழர்களில் ஏறத்தாழ 90 வீதமானோர் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் குடியரசு அரசியல் அமைப்பின் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தேசத்தினுள் சீவிக்கமுடியாது தமது சொந்த விருப்பத்திற்கு மாறாக வெளியேறியவர்கள்.

எனவே தாயக விடுதலை தொடர்பாக ஆகக்கூடிய அக்கறையுடன் போராடுவதற்கும் தாங்கள் தாயகத்தினை விட்டு வெளியேற்றப்படக் காரணமான காரணிகளினை உடைத்து எறிந்து செயற்படுவதற்கும் இவர்கள் உரித்துடையவர்கள்.

தாயகத்தில் ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினை வென்று எடுப்பதற்கான பணிகளினை முன்னெடுப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.

6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்கே அமையும்? அத்தகைய அரசாங்கத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஓர் புதிய அரசியல் முயற்சியாகும்.

இலங்கைத் தீவுக்கு வெளியே புலம்பெயர்க்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களில் ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளின் குடியுரிமைகளினைப் பெற்றும் பெறாமலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் எல்லைகளினையும் தாண்டியதாக தங்களுக்குள் ஒரு ஈழத் தமிழ்த் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதும் தங்களது தாயகத்தின் அரசியல் விடுதலைக்கான வேட்கை கொண்டவர்களாக செயற்படுவதும் தொடர்ச்சியாக தாய்த் தேசத்தில் வாழும் உறவுகளுடனும் சமூகங்களுடனும் இறுக்கமான தொடர்பாடல்களினை பேணுவதும் இங்கு முக்கியமானது.

அமைக்கப்பட இருக்கும் தமிழீழ அரசாங்கம் ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு தேசத்தின் நிலப்பரப்பினை தளமாக கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற பாரம்பரிய அரசு செயற்பாடுகளினால் தனது இறையாண்மையினை நிலைநாட்ட முற்படுவதாகவோ இருக்கமாட்டாது.

ஆகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி செயற்படுத்த ஒரு நிலப்பரப்போ தேசமோ அவசியம் அற்றது.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளம் என்கின்ற தளத்தின் மீது தாயகத்தின் தன்னாட்சி உரிமைக்காக போராடும் குறிக்கோளினால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டி எழுப்பப்பட்டதாக இந்த அரசு இருக்கும்.

தாயகத்தில் வாழும் மக்களினது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருளாதார பண்பாட்டு செழுமை ஆகியவற்றினை தனது முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும்.

மேலும், புலம்பெயர் தேசங்களில் குடியேறிய ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் தேசங்களின் சட்டமுறைமைகளுக்கு இசைவாக தங்களினை ஒரு பலம் பொருந்திய சமூகமாக கட்டி எழுப்பவதற்கும் அதன் ஊடாக அந்தத் தேசங்களில் அவர்களால் அடையப்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மேனிலையினை தாயக விடுதலைக்கான உந்துசக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இந்த அரசு முன்னெடுக்கும்.

உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினை தமது வாழ்வாகக்கொண்ட எம்மவர்களின் சமூக பொருளாதார செழுமைக்கான ஆதரவுத்தளமாகவும் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஈழத் தமிழரின் தாயக விடுதலைக்காக ஒருங்கிணைக்கும் அடித்தளமாகவும் இந்த அரசு செயற்படும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினை தனது ஆட்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களினை நிறைவேற்றுவதற்கான செயலணிகளினையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களினையும் பொருத்தமான முறையில் பல்வேறு தேசங்களில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு உருவாக்கிச் செயற்படுத்தும்.

7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்குமா? அவைகளின் அங்கீகாரம் இன்றி இந்த செயல் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?
முன்னரே குறிப்பிட்டது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு புதிய முயற்சியே ஆகும்.

இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது தேசத்துக்கு வெளியே புகலிட அரசாங்கங்களினை உருவாக்கி செயற்படுத்தி இருந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் உள்நாடுகளில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக தலைவர்கள் நாட்டுக்கு வெளியே தங்களது அரசாங்கங்களினை நகர்த்தி செயற்படுத்தியதும் பின்பு சுமூகமான சூழ்நிலையில் அந்த அரசுகளினை தேசத்தினுள் கொண்டு சென்று தொடர்ந்ததும் உண்டு.

அத்தகைய நிலைமைகளில் ஒரு தேசத்தின் ஆதரவும் அங்கீகாரமும் அத்தகைய புகலிட அரசாங்கங்களின் இருப்புக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கும் அவசியமானது.

முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு அத்தகைய தன்மைகளுக்கு உட்பட்டதல்ல. புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு பலமான புலம்பெயர் சமூகம் அவசியமானதாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் பலமான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு.

அதேவேளையில் ஆயுதப் போராட்டத்துக்குப் புறம்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான அவசியத்தினை வலியுறுத்தும் அனைத்துலகங்களினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான அறைகூவல்கள் மிக சாதகமான காரணிகளாகவும் உந்துசக்திகளாகவும் உள்ளன.

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய எண்ணக்கருவினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வேலைத்திட்டமாக கொள்ள முடியுமா?
ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்களினையும் அணுகுமுறை மாற்றங்களினையும் தாண்டி வந்துள்ளது.

இந்தக் காலகட்டத்திற்குள் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைத்துவங்களும் மாற்றம் பெற்றன.

இது வரலாற்றின் இயங்கியல் தன்மை ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலைமையினையும் காணவேண்டியுள்ளது.

1980-களின் பின்னரைப் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சிறிலங்காவினதும் அதன் நேச சக்திகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாதிக்கத்தினால் பலவீனமாக்கப்பட்டது. இங்கு பலவீனமாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டம் அல்ல.

'செப்ரம்பர் 11' என குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கருத்துருவாக்கத்தினை மிக வெற்றிகரமாக கையாண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு போரினை ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நிகழ்த்தி முடித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக்கடமை தமிழ் மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பங்களிப்பினை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்வைத்தார்.

இன்றைய சூழலில் மேல் எழும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்குள் அனைத்துலகங்களின் நலன்சார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக - பொருத்தமான புதிய அணுகுமுறைகளினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டி உள்ளது. இது அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தினால் பரந்த தளத்தில் கட்டி எழுப்பி முன்னெடுக்கப்படவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனை தமிழ்ச்சமூகத்திடம் கையளித்ததன் மூலம் வரலாற்றின் இயங்கியல் போக்கில் தமக்குரிய கடமையினைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஒரு தனித்துவமானதும் பொதுமைத்தன்மை கொண்டதும் ஈழத் தமிழர்கள் யாவரினையும் ஒன்றிணைத்து உள்ளீர்க்கக் கூடியதுமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்.

இது மேல் இருந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்காது. முற்றாக கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கும்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் சிறப்பாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் ஜனநாயகச் செயன்முறை ஊடாக பல தேசங்களிலும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினைக் கொண்டு செயற்படுத்தப்படும்.

இந்த அரசாங்கம் செயற்படவுள்ள முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

9. சிறிலங்காவின் அரசும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் இதனை எவ்வாறு நோக்குவார்கள்?
சிறிலங்கா அரசும் அதன் இனவெறி ஆட்சியாளர்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' வேலைத்திட்டத்தினை மிகவும் அச்ச உணர்வுடனும் ஆபத்தானதாகவுமே பார்க்கின்றனர்.

ஏனெனில் சிறிலங்கா அரசு தற்போது தாயகத் தமிழர்களின் மேலும் தாயகத்தின் மீதும் கொண்டுள்ள மேலாண்மை உண்மையான வெற்றியும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. தாங்கள் கட்டி எழுப்பிய இராணுவ மேலாதிக்கத்தினால் அவர்கள் பெற்றுக்கொண்டது வலுச்சமனிலை மேலாதிக்கம் மட்டுமே. அதுவும் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே சாத்தியமானது.

அத்துடன், ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே அவர்களின் இராணுவ மேலாதிக்கத்தினால் பதிலளிக்க முடியும்.

இத்தகைய நிலைமையில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக அனைத்துலக தளத்தில் கட்டி எழுப்பப்படுவதனை சிறிலங்கா ஆட்சியாளர்கள் தங்களால் எதிர்கொள்ள முடியாத விடயமாகவே அச்சத்துடன் பார்க்கின்றனர்.

எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றிகொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.

இன்று சிறிலங்காவும் அதன் துனை சக்திகளும் தங்களின் வளர்ச்சியின் எல்லைக்குப் போய்விட்டனர். கடந்த கால அணுகுமுறைகளினை மீளவும் மீளவும் செயற்படுத்துவதனைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.

சிறிலங்கா தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.

முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடு ஈழத் தமிழர்களினால் திறக்கப்படும் புதிய ஆடுகளமாகும். இதன் விதிகளினை சிறிலங்காவால் தீர்மானிக்கமுடியாது. அதன் இராணுவ மேலாதிக்கமும் ஆள்புலக் கட்டுப்பாடும் இங்கு செல்லுபடி அற்றது. முடிந்தால் சில உதிரியான தனிமனித அச்சுறுத்தல்களினை மட்டுமே சிறிலங்காவின் ஆட்சியாளர்களினாலும் அதன் துணைச் சக்திகளினாலும் ஏற்படுத்தமுடியும்.

10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்போது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அமைப்புக்களினைப் போன்ற ஒன்றுதானா? அல்லது தனித்துவம் கொண்டதா? அவ்வாறு தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு தற்போது இயங்குகின்ற நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளினைப் பேணும்?
நடைமுறையில் பல்வேறு சமூக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அவை செயற்பாட்டளவிலும் பங்கேற்பாளர்களினைப் பொறுத்தும் தமக்குள் ஒத்த தன்மைகளினையும் தனித்தன்மைகளினையும் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துவத்தினையும் செயற்படு ஆற்றலினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

எனினும் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான சவால்களினை எதிர்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவசியமானது.

முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஈழத் தமிழ்மக்கள் சார்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் மக்கள் ஆணைபெற்ற அதிஉயர் அரசியல் பீடமாக அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்படும்.

புலம்பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக நடைமுறை ஊடாக மக்கள் நேரடியாக தமது வாக்குகளினைப் பிரயோகித்து பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வர்.

அந்தப் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட்டு எதிர்கால செயற்பாடுகளுக்கான சட்டகத்தினை உருவாக்குவர்.

அவ்வாறு அவர்கள் செயற்படும்போதும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானமும் 1977 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் அதற்கு வழங்கிய மக்கள் ஆணையும் 1985 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய திம்புக் கோட்பாடுகளும் அடிப்படை நெறிப்படுத்தல் நியமங்களாக அமையும்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான பிரதிநிதிகளினை நேரடியாக தெரிவு செய்வதன் மூலம் தான் மக்கள் ஆணையினை பெற்றுள்ளதனை உலகுக்கு பிரகடனப்படுத்தும் அதேவேளை ஒவ்வோர் தேசங்களிலும் செயற்படும் மக்கள் சார்ந்த கட்டமைப்புக்களினை தன்னுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தனது செயற்றிட்டங்களினை கையாள்வதற்கான வலையமைப்பினையும் பங்காளி உரித்தாண்மையினையும் கட்டி எழுப்பும்.

இவ்வாறு மக்கள் ஆணை கொண்ட, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல் பீடமாகத் தன்னை நிலைநிறுத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களைத் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களினை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.

இந்தக் கலந்துரையால்களுக்கு ஊடாக பொருத்தமான இணைவு வடிவம் கண்டறியப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

11. நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் அரசியல், சமூகம், பொருண்மியம், பாதுகாப்பு, புனர்வாழ்வு - புனரமைப்பு - மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் எத்தகைய சாதக பாதகவிளைவுகளினை ஏற்படுத்தும்?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதன்மையான குறிக்கோளாக ஈழத் தமிழரின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை கொண்டிருக்கும் அதேவேளையில் இரட்டை முனைகளினைக்கொண்ட அணுகுமுறையினை முன்னெடுக்கும்.

ஒன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல். மற்றையது புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக்கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்.

இங்கு குறிப்பிட்ட நோக்கங்களினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத் தீவிற்குள் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் உள்ளூர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமையினைத் தக்கவைப்பதற்காகவுமான பொருத்தமான மாற்று ஒழுங்குகளினையும் உப நிறுவனங்களினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும், அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களினை பொருத்தமான முறையில் உள்வாங்கும்.

தேவையான நிலைமைகளில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தி தாயகத்தின் நல்லாட்சி, மீள்குடியேற்றம், அபிவிருத்தியும் முதலீடும், நிறுவனமயமாக்கம், மனிதவள மேம்பாடு, சூழல் நல்லாட்சி என்பவை தொடர்பாக விவாதித்து அவர்களின் பங்களிப்பினை தமிழ் மக்களின் முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும்.

இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கு பொருத்தமான உள்ளீடுகளினை வழங்குவதன் ஊடாக அவர்களினை வலுவூட்டி அவர்களின் செயற்பாடுகளினை முன்நோக்கி நகர்த்தும்.

12. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய தலைமைத்துவத்தினை வழங்கும்? நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவைதானா? அவர்கள் தற்போது அடைந்துள்ள சமூக பொருளாதார மேனிலை போதாதா? மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.

எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு தேசத்தில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு குறிப்பாக விடுதலைக்காக போராடும் இனத்திற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.

அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதார புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தனது சுய ஆற்றல்களினாலேயே மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இந்த சமூகம் தனது வளர்ச்சியினை ஒரு வரையறைக்குள் முடக்கிக்கொண்டுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.

கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் வீதத்தினை கொண்டிருந்தாலும் இந்த சமூகம் உயர் தீர்மானம் எடுக்கும் கட்டளைப் பீடங்களில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிகமிக குறைவாகவே உள்ளது.

அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலினைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம் தொழிற்பாடு மூலதன உருவாக்கத்தில் மிகப்பலவீனமாகவே காணப்படுகின்றது.

தொழில் வினையாற்றலில் சிறப்பு தன்மைகளினைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில் வாய்ப்புக்களினை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே அவதானிக்கப்படுகின்றது.

இன வன்செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட உயிர் ஆபத்துக்களினையும் அபாயங்களினையும் துணிகரமாக எதிர்கொண்டு தம்மை தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள், திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர்.

போரின்போது இழக்கப்பட்ட வாய்ப்புக்களினை மீளவும் விரைவாக கட்டி எழுப்புவதற்கு உரிய வங்கிகள், மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றினைக் கூட சொந்தமாக கட்டி எழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தின் கீழான கட்டமைப்புக்களிலே தங்கி வாழும் சமூகமாக உள்ளனர். இவைகள் யாவும் மாற்றப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களின் மேனிலை என்பது அனைத்துலகத்தின் சகல பரப்புக்களிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வாழும் தேசங்களின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவான மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத் தமிழர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும்.

தேசங்களின் தீர்மானம் எடுக்கும் உயர்கட்டளைப் பீடங்களின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஈழத் தமிழர்களின் அறிவாற்றலும் நிபுணத்துவமும் விரிவுபடுத்தப்படவேண்டும். அனைத்துலக நிறுவனங்களின் உயர்பீடங்களில் ஈழத் தமிழர்களின் ஆளுமை பிரதிபலிக்கவேண்டும். அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பயணம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் விரைவுபடுத்தப்பட்டதாகவும் அமையும்.

இதற்கு தேவையான மூலோபாய - தந்திரோபாய ரீதியான தலைமைத்துவத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.

13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசாங்கத்தின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டனவா? உத்தேசிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயகத்தின் மனிதநேய நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா?
'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற செயல் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாகும். அதேவேளையில் அதுபற்றிய போதிய கலந்துரையாடல்களினையும் விவாதங்களினையும் மக்கள் மத்தியிலும் பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மத்தியிலும் உருவாக்காமல் இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பது இந்த முயற்சியின் அடிப்படைகளினையே மறுப்பதாக அமையும்.

தேசத்தில் நிலவும் மனிதநேய அவலங்கள் தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைக்கான புலம்பெயர் சமூகத்தின் அதி உயர்பீடத்தினை உருவாக்குவதில் நியாயமான கால அவகாசம் கொண்டிருப்பது மிக முக்கியமானது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விவாதங்களாகவே அமைந்துள்ளன.

இந்த விவாதங்கள் ஊடாக ஓரளவுக்கு சிறப்பான முடிவுகளினை உருவாக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைத்துள்ளன.

இந்த ஆலோசனைகள் யாவற்றையும் கவனத்தில் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான உருவாக்க குழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.

முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலுவைப் படிமுறை கீழே தரப்படுகிறது.
1 ஆம் நிலை: கருத்துருவாக்கம்.

2 ஆம் நிலை: நிபுணத்துவ ஆலோசனைக் குழுவினை அமைத்தல்.

3 ஆம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களினை உருவாக்குதலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாக தெரிவு செய்தலும்.

4 ஆம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படை வடிவத்தினை வரையறை செய்தலும் பிரதிநிதிகளினை தெரிவு செய்வதற்கான தேர்தல் செயன்முறையினை வடிவமைத்து முன்னெடுத்தலும்.

5 ஆம் நிலை: தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையினை கூட்டுதலும் யாப்பினை உருவாக்கி அங்கீகரித்தலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டளைப் பீடத்தினை அங்குரார்ப்பணம் செய்தலும்.

6 ஆம் நிலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் தற்போது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் தொடர்கின்றன.

14. நாடு கடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?

தமிழர் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேர்தல்களை ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பதற்கு தற்போது திட்டமிடப்படுகிறது.

இது குறித்த மேலதிக தகவல்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு இணைவது?

இந்தக் குழுவில் இணைய விரும்புவர்கள் 18 வயதினை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.
இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஓவ்வொரு நாடுகளுக்கும் குழுக்களுக்கு தலைமை தாங்குபவர் பெயரினையும் அவரது தொடர்பு விபரங்களையும் விரைவில் அறியத் தருவோம்.

அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனை விட எமது மின்னஞ்சல் முகவரியுடன் மூலமும் தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம்.

எமது மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

Tuesday 15 September 2009

புலிகளின் பாசிஸம் பற்றி மேளம் அடிக்கும் சிங்கள பாசிஸ்க்கள்

புலிகளின் 20 விழுக்காட்டை, நூறு விழுக்காடாய் ஊதிப்பெருக்கி பழியை புலிகள் மீது சுமத்துகிற வன்மம் இங்குள்ள சிலருக்குள் ஆணிவேர் போட்டுள்ளது.

இலங்கை இராசபக்சேக்களும் இந்திய மன்மோகன்களும் இந்தப் பழியிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

இலங்கை அரச பயங்கரவாதம், இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து எதைப் பேசி, எவ்வழியில் நடக்கிறார்களோ அதையே பேசுவது, அதே வழிநடப்பது என்பதைச் செய்கிறார்கள் இந்த மகானுபாவர்கள். இதற்கான ஆதாரம்- இவர்கள் எதைப் பேசுகிறார்கள் என்பதை விட, எதைப் பேசாமல் விடுகிறார்கள் என்பதில் அடங்கி உள்ளது.
புலிகளின் பாசிஸம் பற்றி மேளம் அடிப்பவர்கள், புலிகளுக்கும் முந்தி - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த சிங்களப் பாசிசம் பற்றி மௌனம் காப்பார்கள்.

இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பக்கங்களை விட, ஒளித்துவைக்கும் பக்கங்கள் அநாகரிகமானவை. இவை இவர்களை யாரென வெளிச்சப்படுத்துபவை.
இருபத்தேழாயிரம் பேர் விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம். ஆள் காட்டிகளின் துணையோடு முகாம்களிலிருந்து அகற்றப்பட்டதும், ஆம் அவர்கள் புலிகளே தான் என்ற குதூகலம் அரசுக்கு.

இராணுவத்தால முகாம்களிலிருந்து அகற்றப்பட்டு, தனி சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 27ஆயிரம் பேர் பற்றி இவர்கள் பேசியதில்லை.
8 - வயது முதல் 14 வயது வரையுடையோர் நமக்குச் சிறுவர்கள்; இலங்கை இனவெறிக்கு அவர்கள் இளைஞர்கள். பெற்றோர்களிடமிருந்து, சேக்காளிகளிடமிருந்து விசாரணைக்காக பிரிக்கப்பட்ட 14ஆயிரம் சிறுவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்?

எல்லோரும் கேட்டாயிற்று. இவர்கள் மட்டும் கேட்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட போராளித் தலைவர்கள் - பெயர் வெளியுலகுக்குத் தெரியவந்தது; ஒருவர், இருவராய், குழுக் குழுவாய் அழித்தொழிப்பு செய்ததும் உலகத்துக்குத் தெரியவந்தது. உலகமட்டம் வரை தெரிந்த சேதி - இவர்களுடைய கண்னோட்டத்தில் ஒரு கண்டன சம்பவமாகக்கூட பதிவாகவில்லை. கேட்டால் புலிகள் செய்யவில்லையா என எதிர்க்கேள்வி எழுப்பத் தயார். பதிலாய், அரசபயங்கரவாதம் பழி எடுக்கிறது என்பார்கள்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அ.மார்க்ஸ் அவர்களே?

வதைமுகாம்களில் சாகிறவர்களை, அவரவர் ஊர்களில், நிலத்தில், வீடுகளில் போய் சாகவிடுங்கள் என்று கேட்டதுண்டா? கொன்று போட்டவனின் கரங்களுக்கு பூமாலை சுற்றுவது மட்டுமே செய்கிறவர்களை எந்த மனித உரிமைப் போராளி ரகத்தில் சேர்ப்பது?

இந்தக் கட்டுரை எழுதுகிற நேரத்தில் தினமணி நாளிதழில் (9.9.2009)
“இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்குக் காரணம்” - எனும் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் - 19.8%

இலங்கை அரசு - 21.33%

இந்திய அரசு - 58.69%

- மக்களின் கருத்துக்கள் முடிவுகளாய் வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்படும் பலமனித உரிமை அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து ‘வன்னி வதைமுகாம் தமிழர் விடுதலைக்கான இயக்கம்’ என்றொரு அமைப்பை சென்னையில் உருவாக்கியுள்ளன. மூன்று தீர்மானங்கள் அடிப்படையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. தமிழகத்தில் பரப்புரை செய்து, எழுச்சியை உருவாக்கி அழுத்தம் தருவது.

2. இந்தியாவில் பிற மாநிலமனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு - இந்திய அளவில் விழிப்பை உருவாக்குதல்.

3. இராசபக்சேக்களை போர்க் குற்றவாளிகள் என விசாரித்து தண்டிக்க - ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்வது.

என மூன்று நடைமுறைகளை மேற்கொள்ளும் நேரத்தில், இலங்கையில் இதே முனைப்போடு செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களை அழைத்து இங்கே பேச வைப்பது, அவர்களை நம்முடன் இணைந்து செயல்பட வைப்பது. இந்த குரலில் ஒன்றில் கூட உங்கள் குரல் காணப்படவில்லையே அ.மார்க்ஸ் அவர்களே!

நீங்கள் எப்போதுமே தன்னடையாளத்தை முன்நிறுத்தி தனித்து செயற்படும் நபர். இவர்களோடு இணைய முடியவில்லை என்றால் அவர்கள் எழுப்பும் இந்தக் குரல்களில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள் எடுத்துக் கொண்ண்டிருக்க வேண்டும். தன்னடையாளத்தை எப்போதுமே பிரதானப்படுத்தி வருகிற நீங்கள் தனியாக மனித உரிமைத் தளத்தை உருவாக்கி உடுக்கடித்திருக்கலாமே! தனித்து செயற்படும் உங்களுடன் இணைந்து செயற்பட்டதால் நாம் அறிந்தவை இவை. இம்மாதிரி அனுபவத் தொகுப்பின் அடிப்படையில் பாவப்பட்ட வன்னிமுகாம் மனிதர்களை மீட்க குரல் கொடுத்திருக்கலாம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனலின் முன்னாள் இயக்குனரும் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் மனித உரிமைத் தளத்தில் செயல்படுகிற ஒருவர். மனித உரிமைத் தளத்திலேயே நடந்து, இனப்படு கொலைக்கு தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்”

(தலித் முரசு ஜூலை 2009 - பேராசிரியர் பாய்ல் நேர்காணல்)

மனித உரிமைத் தளத்தில் நீங்கள் ஒரு நேர்மையான பயணியாக இருந்திருந்தால், பிரான்சிஸ் பாய்ல் வந்தடைந்த அந்தப் புள்ளியில் வந்து சேர்ந்திருப்பீர்கள். நீங்களோ விடுதலைப் புலிகளின் மீதான வன்மத்தை ஒரு இனத்தின் விடுதலைப் போருக்கு எதிராக மாற்றியுள்ளீர்கள்.

நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து மேடை தயார் செய்கிறீர்கள். ஷோபா சக்திகளுடன், சுகன்களுடன் கூட்டாய் சேர்த்துக் கொண்டு விடுதலைப்போராட்டத்திற்கு எதிராய் விதைதூவச் செய்கிறீர்கள்.

“அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றிப் பேசுவதின் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்தி விடக் கூடும்.” என கவிஞர் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல் பணியாற்றும் இந்த இலங்கையர்களை தமிழகம் அழைத்துவந்தீர்கள்.

“இந்தக் காயம், இந்த வீழ்ச்சி - புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது” - மனுஷ்யபுத்திரன் போல ஆவேசம் கொள்ள முடியாத நீங்கள் எதிர் நிலையில் நின்று கொண்டாடுகிறவர்களுக்கு தளம் உண்டாக்கித் தருவீர்கள்.

வீரச் சாவுகளுக்கு எதிர் நிலையில் நின்று மரணத்தைக் கொண்டாடும் மனம் பாசிஸ்டுகளுக்கு மட்டுமே வாய்க்கும். ஒரு இலட்சம் மனிதர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட நிகழ்வு - ஒரு இனத்தின் இரத்தசாட்சியமாக உணரப்படாமல், துயரங்களின் சாம்பலில் கும்மியடித்துக் கொண்டாடும் மனத் துணிவு இனவெறியர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்குக் கிட்டும்?

II

கடந்த ஆறேழு மாதங்களாக ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் பரவலாய் ஏற்பட்ட எந்த எழுச்சிகளிலும் அ.மார்க்ஸின் முகம் இல்லை.

இனப்படுகொலை முற்றுப் பெற்று, ஈழப்பிரதேசம் அவலத்தின் உச்சத்தில் நிற்கிறபோதும் இவருடைய குரல் இல்லை.

ஆனால்

மரணவாசனை உலக நாசியைப் புடைக்கச் செய்யும் சூழலிலும், விடுதலைப் புலிகள் மீதான அ.மார்க்ஸின் வன்மம் தீர்ந்த பாடில்லை.

இவருக்கும், இவரைப் போல் குரல் தரும் ஷோபாசக்தி, சுகன், சுசீந்திரன், புதிதாய் இணைந்து கொண்ட ஆதவன் தீட்சண்யா வகையறாக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது.

பாசிசம் இவர்களை உள்வாங்கி அங்கீகரித்துக் கொண்டதின் இன்னொரு பக்கம்தான், சிங்களப் பாசிசத்தை நேரடியாய் கண்டிக்காத, அதற்கென அணிதிரளாமல் இருக்கிற இவர்களின் செயல்.

லசங்த விக்கிரமதுங்கே - என்ற உலகறிந்த ஊடகவியலாளர் படுகொலை, யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பதை உலகறியும். தன் கொலைக்கு முன் அவர் எழுதிவைத்துச் சென்ற மரண சாசனத்தையும் உலகறியும். அந்தக் கொலையைக் கூட புலிகள் செய்திருப்பதாக சந்தேகப்படுகிறார் சுகன்.

‘வாழ்க நீ எம்மான்’ என கருணா அம்மானுக்கு வாழ்த்துப் பா இசைக்கிறார்.

லண்டன் புகழ் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் ஜெர்மனியின் சுசீந்திரன் வரை பங்கேற்ற திருவனந்தபுரத்தில் ஒரு திங்கள் முன்பு நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இலங்கை அரசாங்கச் செலவு 60 இலட்சம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த புலம்பெயர் அறிவு ஜீவிகளை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய அழைக்கிறது. வரிந்து கட்டிக்கொண்டு இவர்கள் முதலில் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள்.

தமிழ்த் தேசியம், இஸ்லாமியத் தேசியம் எல்லாவற்றுக்குமான அச்சுறுத்தலாக சிங்களத் தேசியம் மாறியுள்ளது அது தேசியத்திலிருந்து பாசிசமாக உருக்கொண்டுள்ளது. நாமெல்லாம் இலங்கையர்கள் என்னும் மஹிந்தராசபக்சேயின் அழைப்பு - பிற இனங்களை மயிருக்குச் சமமாக கருதும் குரல்தான்.

இலங்கையர் எனும் ஒற்றை அடையாளம் போதுமென்றால் மதம் சார்ந்த குழும அடையாளத்துக்கு, வட்டார அடையாளத்துக்கு (மலையகம்), தலித் அடையாளத்துக்கு எந்த வித அவசியமும் இல்லை.

தமிழ்த் தேசியம் பேசியவர்களைக் கொன்றொழித்த சிங்கள தேசியம், பிற அடையாளங்களையும் கொன்றொழிக்கும். பிற தேசியங்களை இலங்கையில் ஒரு புள்ளி கூட இல்லாமல் அழிப்பதற்குரியவன் யார்?

இன்றைய மஹிந்தாதான்.

இவனை விட உயரம் கூடியவர்களாக எதிர்கால மஹிந்தாக்கள் வருவார்கள். மக்களை சனநாயகத்துக்கு எதிரானவர்களாய் பயங்கரவாதியாய் கருதும் உலக அரசுகள், தமிழ் மக்களையே பயங்கரவாதிகளாய்க் காணுகிற இலங்கைக்கு துணையாகின.

அனைத்துத் தேசியங்களையும் அடக்கும் சிங்களத் தேசியத்தைக் கண்டிக்கும் அவசியத்தைக் கருதாமல் பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் புலிகள் என்று பேச வைப்பது தனக்கிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தக் கையாளுகிற உத்தியாக மட்டுமே மிஞ்சும்.
சிராஜ் மசூரின் கணிப்பில் விடுதலைப்புலிகள் மட்டுமே ஆயுதக் குழுக்களாம். இலங்கையிலிருந்து இங்கு வந்து, இலங்கையின் தூதுவராய் எதை வேண்டுமானாலும் பேசலாம்; கேள்விகேட்க நாதியில்லை எனத் துணிந்து விட்டார் போல.

புதுவிசை இதழில் (2009 - ஜூலை-செப்டம்பர்) இலங்கையில் ‘இஸ்லாமிய ஜிகாத் ஆபத்து என்று பாலசந்திரன் போன்றோர் எழுதுகிறார்களே என்ற கேள்விக்கு “புலிகளுக்கு பிந்திய சூழலை ‘இஸ்லாமிய ஜிகாத்’ என்ற போலிக் கண்டுபிடிப்பின் மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன...

தனது மனஅரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

இல்லாத ஒன்றைக் கட்டமைப்பது அல்ல இருக்கிற ஒன்றைத்தான் பாலசந்திரன் போன்றோர் எடுத்து வைக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராய் அவர்களை ஒழிக்கவும் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அரட்டி ஒடுக்கவும் இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிகாத் அமைப்பினர் ஆயுததாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியில் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியாகி விட்டது.

இன்று ஜிகாத் அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரசபயங்கரவாதத்துக்கே பெரும் சிக்கலாகியுள்ளது. ஜிகாத் அமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அது முடிந்துவிட்டது (புலிகள் அழிப்பு) இனி ஜிகாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாக செயல்படாமல், ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது.

இத்தனைக்குப் பிறகும், யதார்த்தத்தை மறைக்கிற. அறிவுஜீவிப் பணியை சிராஜ் மசூர் தன்தோள் மேல் எடுத்துப் போட்டுக் கொள்கிறார்.

“போர் உக்கிரமாக நடைபெற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை” என்று ஆயுதக் குழுக்கள் நீடிப்பதற்கான நியாயத்தை முன்வைக்கிறபோது, இதற்குமுன் ஒரு பொய்யை முன்னுரைத்தார் என்பது வெளிப்பட்டுப் போகிறது. இதையேதான் நாங்களும் பேசுகிறோம். ஒடுக்குமுறை எல்லை கடந்து விட்டபோது, ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்வினைகள் அழகானவையாக இருக்க முடியாது என இதையே தான் நாங்களும் முன்வைக்கிறோம்.

நாங்கள் மட்டுமே இதைப் பேசவில்லை. இந்தியாவிலுள்ள தாரிக் அலி போன்ற இடது சாரிகள், தீர்க்கமாய் இதைப் பரிந்துரைக்கிறார்கள். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது” என்கிறார் தாரிக் அலி.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்கள், ஈராக்கியர் நடத்தும் கார்க் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த வாசகம் பொருந்துமானால் விடுதலைப் புலிகளின் எதிர்வினைக்கு ஏன் பொருந்தாது?

III

அ.மார்க்ஸின் புதுவிசை (ஜூலை - செப்டம்பர் - 2009) கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, சில விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாய்க்கு வந்தபடி பேசுவது போலவே கைக்கு வந்தபடி எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் அது. புதுவிசை இதழ் சனநாயகத்தின் மிகப் பெரிய திறந்த வெளி என கருதப்படுவதால், புதுவிசையின் சனநாயக வெளியைச் சோதிப்பதற்காக இக்கட்டுரையை புதுவிசைக்கும் அனுப்பியுள்ளேன்.

புதுவிசையில் அ.மார்க்ஸ் எழுதுகிறார்: தமிழ் அறிவு ஜீவிகள் மத்தியில் மரண அமைதி நிலவுகிறதாம்; அதையும் வேறொருவர் சொல்லி வருத்தப்பட்டாராம். பொய் பேசுகையில் மற்றொருவரை துணைக்கழைத்துக் கொள்வது அ.மார்க்ஸின் வழக்கம். தனது குடும்ப அட்டையைத் அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக கன்னியாகுமரியிலிருந்து ஒரு எழுத்தாளர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாராம். எழுத்தாள நண்பர் பெயரைத் துணிவாய்க் குறிப்பிட வேண்டியது தானே? தான் முன்வைக்க வருகிற கருத்துக்கு இட்டுக்கட்டல்களை முன்வைப்பது அ.மார்க்ஸின் சிந்தனைக் கலாச்சாரத்தின் ஒரு கூறு.

அலட்சியப்படுத்தப்பட்ட சில பிரச்னைகளை முன்னிறுத்திப் போராடும் மக்கள் - குறிப்பான போராட்ட வடிவமாக ரேஷன் அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கின்றனர். அவர்களது ஒற்றுமையை எடுத்துரைக்கும் புதுமையான, யுக்தியான போராட்ட முறை இது. தான் சொல்லவருவதற்கு வலுச் சேர்க்க அதையும் கொச்சைப்படுத்துகிறார்.

எழுத்தாளர்களின் ஆறுமாதகால பருவ நிலையை கணிக்கிற வானிலை அதிகாரியாக தன்னைத் தீர்மானித்துக் கொண்டார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிக் கணிப்பது - இவருக்கு அல்வா சாப்படுவது போல. கணிப்பு அல்ல, விமர்சனமும் அல்ல, அவதூறுகளின் மட்டத்துக்கே அது மிஞ்சும்.

அ.மார்க்ஸின் பெரும்பாலான ஒதுக்குதல்கள், அரவணைப்புகள் பிரச்னையின் தாரதம்மியத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. தனி மனிதர்கள் மீதான அவருடைய வெளிப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் மீது எழுபவை. பிறரோடு கொள்ளும் உறவையும் இந்த வகையிலேயே அமைத்துக் கொள்வார். நேற்றிருந்தார் இன்றில்லை, இன்றிருப்பார் நாளை இல்லை - இவருடைய அறிவு ஜீவிப் பயணிப்பில்.

புதுவிசை கட்டுரையில், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மீது தனக்குப் பெரிய மரியாதை கிடையாது எனத் தெரிவிக்கிறார். இவர் எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமது பணியை முன்னெடுக்கவில்லை. தமக்கு ஒரு சமுகக் கடமையுள்ளது எனத் தீர்மானித்து போரை நிறுத்து என ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டத்தையும் பின்னர் தொடர்ச்சியான பணிகளையும் மேற்கொண்டனர். போர் என்ற பெயரில் நிறைவேறிய இனப்படுகொலையைக் கண்டித்து இருமாதங்கள் முன்பு பேரணி நடத்தினர். அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும்.


ஈழப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுடைய இவரால் அவர்களுடன் இணைய முடியவில்லை. ஈழப் போராட்டம் பற்றி, ஈழவிடுதலைப் போராளிகள் பற்றி இவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது தான் அதற்கு ஆதரவானவர்கள் மீதும் எந்த மரியாதையும் கிடையாது என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.

நக்கீரன், ஜீ.வி, ரிப்போர்ட்டர் போன்ற வாரஇதழ்கள் வியாபாரப் போட்டியில் கடந்த ஆறுமாதங்களாக புலிகளைப் பற்றிய செய்திகளை - ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிட்டன என்கிறார் அ.மார்க்ஸ். வார இதழ்களுக்கிடையேயான வியாபாரப் போட்டியை நாங்கள் அறிவோம். நக்கீரன் - வெளிப்படையாக புலிகளை வைத்து - வியாபாரம் பண்ணுவதையும் அறிவோம். அதனுடைய ஒற்றைத் தனத்தோடு எல்லா இதழ்களையும் சமனப்படுத்தி விடக்கூடாது.

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், புலி ஆதரவு மாவோயிசம் பேசும் இளைஞர்கள் நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பதில்லை என்கிறார். தமிழ் நாட்டின் நாளிதழ்கள் மட்டுமல்ல இந்திய நாளிதழ்களும் இராசபக்சேயிசம் பேசின; பரப்பின.

இலங்கை அரசும் இந்திய ஏகாதிபத்திய அரசும் என்ன கொடுக்கிறரர்களோ அந்தச் செய்திகளை அப்படியே ‘ஈயடிச்சாங் காப்பி’ பண்னின. எந்த நாளிதழ்களைத் தேடிப் படிக்கச் சொல்கிறார்?
தினமலரையா?


தினமணியையா?

தி ஹிந்துவா,


இன்டியன் எக்ஸ்பிரஸ்ஸா?


ஈழப்பிரச்னை பற்றி துளி அக்கறையும் காட்டாத இந்திய நாளிதழ்களில் எதைத் தேடி இளைஞர்களை வாசிக்கச் சொல்கிறார்?

அதே பொழுதில் வார இதழ்கள் ஓரளவு சுயத்தன்மையுடன் அவர்களே தேடி, விசாரித்து எடுத்த ஈழச் செய்திகளைத் தந்தனர். அதனாலேயே கடந்த ஐந்தாறு மாதங்களில் அவைகளின் விற்பனை பெருகின. களப்பிர தேசத்திலிருந்து தமிழகத்தை ஏதோ ஒருவகையில் வந்து சேரும் சிலரையும் பலரையும் சந்தித்து செய்திகள் சேகரித்து, அலசி, பெருமுயற்சிக்குப் பின் வெளியிட்ட வார இதழ்ககளின் இந்த நடைமுறைக்கும், இலங்கை இந்தியா நாடுகளின் ஊதுகுழல்களாகச் செயற்பட்ட நாளிதழ்களின் நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாகக் காணமுடியும்.

வாரஇதழ்கள் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவாகவும் அந்த மக்கள் பக்கம் இருந்தன என்பதும் இயல்பானது. அ

தன் காரணமாகவே அ.மார்க்ஸுக்கு ஏற்படுகிற ஆத்திரமும் இயல்பானது. இலங்கைப் பாசிசத்தின் தூண்களாய் செயற்பட்ட இந்திய நாளிதழ்களை தேடிப் படியுங்கள் என்று அவர் சொல்வது ஒன்றை உறுதிப்படுத்துகிறது.

அவருடைய இந்தப் பார்வை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. “நீர் ஒரு விடுதலை எதிர்ப்பாளர்”

அவர் குற்றம் சுமத்துகிற தமிழ்த் தேசியர்கள், புலிகளின் முகவர்கள் இதையே வேறொரு மொழியில் சொல்வார்கள். “நீரொரு தமிழினப் பகைவர்”

இதன் பொருள் வேறொன்றுமில்லை. மக்களின் எதிரி என்பதே.

கிறித்துவப் பாதிரிமார்கள், போதகர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத்தமிர்களுக்கு ஆதரவாக இருமாதங்களுக்கு முன் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தியபோது தொடங்கிவைக்க இவரை அழைத்தார்களாம். அழைத்திருக்கக் கூடாது; அழைத்தார்கள். இவரும் போயிருக்கக் கூடாது, போனார்.

ஏனெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் அது. ஈழத்தமிழருக்கு ஆதரவாய் போரை நிறுத்து என்ற முழக்கம் விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவானது தானே என்று அவர்களும் நினைத்துப் பார்க்கவில்லை, இவரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கிறபோது மட்டுமே எந்த மேடையையும் பயன்படுத்திக் கொள்வது என்ற சந்தர்ப்பவாதம் இல்லாமல் போகும்.

முதிய வயதில் முதல்வர் கருணநிதி ஓய்வு பெறுவது நல்லது என்ற கருத்தை பரிக்ஷா ஞாநி முன்வைத்தார். இன்ஸ்டன்ட் காப்பி என்பது போல் ஞாநியை சாடுவதற்காகவே உடனே ஒரு புதிய அமைப்பை உருவாக்கி அதன் பேரில் வாணிமகாலில் ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்தார்கள்.

அதில் ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), இமயம், அ.மார்க்ஸ் போன்றோர் பங்கேற்றார்கள். என்னையும் பங்கேற்குமாறு தொலைபேசியில் கேட்டார்கள். ‘ஞாநி எழுதிய அந்தக் குறிப்பிட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் கலந்து கொள்ள இயலாது’ என மறுத்தேன். அ.மார்க்ஸ் கலந்த கொள்கின்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டபோது, “என்ன இருந்தாலும் ஞாநிக்குள் ஒரு பார்ப்பன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கலைஞரைப் பற்றி விமரிசிக்கிறபோது எதிர்வினையாற்றுகிற இவர்கள் பெரியாரை காமுகன், பெண் விடுதலைக்கு எதிரானவர் என்று பழிசுமத்திய போது எங்கே போய் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பப் போகிறேன்” என்றார்.

அவ்வாறு பேசியதாகவும் நான் கேள்விப்பட்டேன். கலைஞரைத் தாக்கி எழுதியதைக் கண்டிப்பது மட்டுமே ஏற்பாட்டாளர்களின் நோக்கம். இதை தாண்டி வேறொரு பிரச்னையை அங்கு பேசுவது விவாதிப்பது அவர்களின் நோக்கம் அல்ல. அதனால் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவும் இல்லை. இதிலிருந்து கூட்ட ஏற்பாட்டாளர்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவதை விட, எந்த அரங்கையும் பயன்படுத்தி தனது அறிவாளி மேன்மையை நிறுவுகிறவர் இவர் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

புலிகள் எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் உறுதியாய் நின்றிருந்தால் கூட கிறித்துவ பாதிரியார்கள், கன்னியர் நடத்திய ஈழ ஆதரவு கூட்டத்துக்கு அ.மார்க்ஸ் போயிருக்கக் கூடாது.

அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சரசுவதி பேசிய பேச்சில் சென்னையில் நந்தம்பாக்கத்தில் பாதுகாப்புத் துறை மருத்துவனையில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தான் கூறும் செய்திகள் ஆதாரபூர்வமானவை என வலியுறுத்தியதாகவும் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் வரும் கேள்வி தான் மிகப்பெரிய முரண் நகைச்சுவை.

“பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை?” என்று அ.மார்க்ஸ் எழுப்புகிற கேள்விதான் அது. என்ன அபத்தம்! பெரியார் தி.க.வினர் ஈழ ஆதரவுப் போராட்டங்களை மட்டுமே நடத்தவில்லை. இந்திய அரசுக்கு எதிராக – விமான நிலையத்தை முற்றுகையிடுதல், மத்திய அரசின் வருமான வரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டுதல், ஆயுதங்களுடன் வந்த இராணுவ லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தல் என அவர்கள் தொடர்ந்து போராடித்தான் வருகின்றனர். அ.மார்க்ஸ் போல் அறிக்கை விட்டு காணாமல் போகிறவர்கள் அல்ல.

அ.மார்க்ஸ் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்மை அறியும் குழு அமைப்பார். விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். மனித உரிமைத்தளத்தில் அதன்பின் மூச்சுக் காட்ட மாட்டார். ஏப்ரல் 2008-ல், கருத்துரிமைக்கான மனித உரிமைகளின் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் அமைப்பாளர் அ.மார்க்ஸ்.

“மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்க்கும் விதமாக இனி கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் அதற்கு போலீஸ் அனுமதி வாங்கமாட்டோம். என்ன செய்கிறது இந்த அரசு என்பதையும் பார்த்து விடுகிறோம்” என்று அரசுக்கு அறைகூவல் விடுத்தார். பாராட்டுக்குரியது. ஆனால் அரசு தொடர்ந்து கருத்துரிமைப் பறிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பின் எத்தனை நிகழ்வுகளை அ.மார்க்ஸ் அனுமதியில்லாமல் நடத்தினார்? உண்மையில் தமிழ்தேசிய உணர்வாளர்கள் தான் அனுமதியின்றியும், தடையை மீறியும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அ.மார்க்ஸ் உருவாக்கிய எத்னையோ அமைப்புக்கள் எந்த செயற்பாடுகளும் அற்று முடங்கிக் கிடக்கின்றன. அமைப்பு உருவாக்கியதாக அறிக்கை வரும். அதன் பின் அனாதையாய் அந்த அமைப்பு விடப்படும். அறிக்கை விடுதல் - அதன் பின் செயலற்ற தன்மை - இது தான் அ.மார்க்ஸ். எந்தப் போராட்ட களத்திலும் தெண்பட மாட்டார். அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பது ஒரு செயல் தன்மையாக ஆகிவிடுமல்லவா? இவர் மட்டுமல்ல, இவருடைய சீடர்கள் எனப்படும் ஷோபா சக்தி போன்ற ஆட்களும் அறிக்கை திலகங்கள் என்று பெயரெடுத்தவர்கள் தாம். இவர்கள்தான் தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் பெரியார் தி.க. மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது சேற்றை வாரியிறைக்க முற்படுகிறார்கள்.

அ.மார்க்ஸின் கற்றல் நேர்மை, சிந்திப்பு நேர்மை, செயல்பாட்டு நேர்மை ஆகியவை குறித்த கேள்விகள் முக்கியமானவை. கற்றதும் பெற்றதுமான கருத்து எந்தச் சூழலுக்கு சொல்லப்பட்டதோ அதில் இருந்து பிரித்து வேறொன்றிற்குப் பொருத்தி விடுவதை ஒரு புதிய கண்டுபிடிப்புப் போல செய்வது அதன் பயன்பாட்டு நேர்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. புதிதாக கற்றுப் பெற்ற ஒன்றை உடனே தன் சுயசிந்தனையிலிருந்து பெற்றது போல் இறக்கி வைத்து விடுவது சிலருக்கு கைவந்த கலை. எந்த விசயத்திலும் தானே அத்தாரிட்டி என்ற அறிவின் கர்வம் உச்சமாக வெளிப்படும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் நடைபெற்ற அரங்கில் ருசியாவில் நிலவிய சர்வாதிகாரத்திற்கு வித்திட்டவர் லெனின் என்று பேசினார். அந்த இடத்திலேயே அவருடைய கருத்துக்கு எதிர் வினையாற்றியிருக்க முடியும். நிகழ்ச்சியின் தன்மை குறித்தும், அரங்க நாகரிகம் கருதியும் அமைதி காத்தோம் - அதற்கு முன்னான தருக்கம் எதுவுமின்றி, திடு, திப்பென்று ஒன்றை கையெறி குண்டாய் வீசி விட்டு போய்கொண்டிருக்கிற ஆத்மா அவர். அதன் பின்னான உரையாடல், விவாதம், விளக்கம் எதற்குமே இடமில்லை.

உலகமயமாதல் இன்றைய காலத்தின் அவசியம்; அந்த ஜோதியில் கலப்பதற்கு அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என வக்காலத்து வாங்குவார். தலித்துகள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பார். தலித்துகளின் வாழ்வு நிலை பூமிக்கு அடியில் இருக்கிற போது, ஆரம்பக் கல்வி கூட வாய்க்கப் பெறாமல் அவலம் நிலவுகிற போது தலித்தோ அடித்தட்டு மக்களோ ஆங்கிலத்தை கைப்பற்றுவது எங்ஙனம் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதற்கான எந்தப் பதிலும் அவருடைய விவாதத்தில் இருக்காது.

இறுதியாக ஒன்றைச் சொல்லி வைப்போம். சிதிலங்களில் இருந்து மேலெழுந்து வருவது பற்றி சமூக விஞ்ஞானி சிந்திப்பான். அவ்வாறு இல்லாமல் மாட்டுப்புண்னைக் கொத்திக் கொண்டேயிருக்கும் காக்கை போல் இருப்பவன் குதர்க்க விஞ்ஞானி.

“மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக் கோட்பாடுகள், உரிமைச் சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளன. இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்யக் கோருகிறது. அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.”

ஈழம் - விடுதலைக்கான இறுதிக் கணக்கீடு - என்ற கட்டுரையில் சிதிலங்களில் இருந்து மேலெழும் பார்வையில் பிரபா எழுதிய அறிவாந்திரமான சிந்திப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுதான் புதிய சிந்தனையின் அடையாளம். வாய் புளித்ததோ கைபுளித்ததோ என்று விமர்சனம் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்குரிய சிந்தனைகளை முன்வைப்பது மட்டுமே சமூகவிஞ்ஞானம்.

- சூரியதீபன்- ( jpirakasam@gmail.com )

அகதிகளை முகாம்களிலிருந்து விடுவிக்க வலியுறுத்த ஐ.நா.செயலரின் பிரதிநிதி பாஸ்கோ இன்று இலங்கை பயணம்


இலங்கையில் தமிழ் அகதிகளை முகாம்களில் இருந்து விரைந்து விடுவிப்பதனை நேரில் வலியுறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் உயர்மட்டப் பிரதிநிதியான லியன் பாஸ்கோ இன்று கொழும்பு பயணமாகிறார்.

ஐக்கியநாடுகள் சபையின் உயர் மட்ட அரசியல் அதிகாரியான லியன் பாஸ்கோ மற்றும் மூவருடன் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கொழும்பு புறப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அகதிகளின் மீள் குடியேற்றத்தை விரைவு படுத்துவது, மனித உரிமைகள் துஷ்பிரயோகம், அரசியல் தீர்வு காணுதல் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.

அவை தொடர்பாக விரிவாகப் பேசுவதற்கு, தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமது உயர் அரசியல் விவகார அதிகாரியான லியன் பாஸ்கோவை அனுப்பும் விருப்பத்தை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக் கெண்டார்.

செயலாளர் நாயகம் இலங்கை சென்று திரும்பிய பின்னர் இலங்கையின் செயற்பாடுகள் மந்த கதியில் அமைந்திருந்தது கண்டு நாம் கவலையுற்றோம். மிகக் குறிப்பாக போர்ப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த அகதி மக்களின் நிலை குறித்து கரிசனை கொண்டுள்ளோம்.

அவர்களை முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிப்பது, குறிப்பாக அவர்களின் சொந்த இடங்களுக்கு (வீடுகளுக்கு) செல்ல அனுமதிப்பது குறித்து அக்கறையாக உள்ளோம்.

மனித உரிமை விடயங்கள் குறித்தும் நிறையப் பேசவேண்டி உள்ளது. (மனித உரிமைகளை பேணுவது அரசாங்கத் தினது பொறுப்பு மட்டும் அல்ல என்பதே எனது கருத்து) என்று பாஸ்கு கொழும்பு புறப்படுமுன்னர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் யுனிசெவ்வின் உயர்அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் நாட்டை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட உத்தரவு குறித்தும் ஐ.நா. வட்டாரங்கள் பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக "ரொய்ட்டர்" செய்தியாளர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான லியன் பாஸ்கோ முன்னர் இந்தோனேஷியாவின் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நவநீதம்பிள்ளை சொல்வதை மறுக்கிறார் சமரசிங்க


இலங்கையில் மோதலால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நிராகரித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் 12 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போது இதனை நிராகரித்த அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நவநீதம்பிள்ளை தெரிவித்த கரிசனைகளை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். என்றாலும் முகாம்களின் தன்மை பற்றி அவர் சொன்னவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இலங்கையில் மனிதாபிமானப் பணிகளைத் திரிபுபடுத்தி பிழையாகச் சித்தரிப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி ஒன்று இடம்பெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் போலியான வீடியோ ஒன்று ("சனல்4") பல சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

அதனால் எமக்கு ஆரம்பத்தில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. பான் கீ மூன் கூட இது குறித்துக் கவலை வெளியிட்டார்.

தற்போது நாங்கள் இந்த வீடியோ குறித்து நான்கு விசாரணைகளை விஞ்ஞான ரீதியாகச் செய்து அது பொய்யானது என நிரூபித்துள்ளோம்.

நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியானதும் மீள்குடியேற்றப் பணிகளைப் பூர்த்தி செய்யலாம்.

இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் சிலர் ஊடுருவி உள்ளமை குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

அடுத்ததாக, இலங்கை செய்தியாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்தின் கைது, தடுப்புக் காவல், நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு ஆகியன பற்றி அதிகம் பேசப்பட்டு விட்டது.

இந்த விடயம் தொடர்பாக என்னைப் பொறுத்த மட்டில் முக்கியமானது என்னவென்றால், உரிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதுடன், சட்டத்திற்கு அமைய ஏறத்தாழ 18 மாதங்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

வழக்கின் தாற்பரியம், இது சம்பந்தமான சட்டவிளக்கங்கள் ஆகியன பற்றிய முடிவு முற்றுமுழுதாக நீதிமன்றத்தைப் பொறுத்தது.

ஒரு நிறைவேற்று அதிகார உறுப்பினர் என்ற வகையிலும், மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையிலும் எனது முதல் கவனம், சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அவதானிப்பதாகும்.

இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு அவரது சட்டவாதிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
இந்த நபருக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்


ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்த போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது. உடனடியாக கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர்.

சில தொலைக்காட்சிகளின் வீடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ நாடா அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Monday 14 September 2009

தமிழன் வளர்த்த இந்த நாய்க்கு கூட இந்த காங்கிரஸ் கட்சியை பிடிக்கவில்லை!

தமிழன் வளர்த்த இந்த நாய்க்கு கூட இந்த காங்கிரஸ் கட்சியை பிடிக்கவில்லை!

ஏன் இந்த நாய்க்கு இருக்கும் கோபம் கூட என் தமிழ் மக்களுக்கு இல்லை!!!

33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே ஏன்?

உங்களுடன் எனக்குள் உதித்த சில சிந்தனைகளைப் பகிர்வதற்காக வந்துள்ளேன். தற்போது எம்முள் எழுந்துள்ள ஜனநாயக சிந்தனைக்கு நாம் புலம்பெயர் நாட்டில் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நான் ஒருவரையும் திடீரென்று ஒரு நேர்கோட்டில் வாருங்கள் என்று கட்டளையிடவில்லை. நடந்த பிழைகளையோ நீங்கள் அடைந்த துன்பங்களையோ மறக்கும்படியும் கூறவில்லை. ஆனால்


ஏன் இவை நடந்தன?


இவை நடந்ததற்கு யார் காரணம்?

இவற்றை இனி எவ்வாறு நடக்காமல் பார்ப்பது?


போன்றவற்றிற்கு விடை காணவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதை முதலில் கூறவிரும்புகின்றேன். இதை ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் இதை அறியாமல் இருந்தால் மேலும் மேலும் நாம் அழிந்துவிடுவோம் என்பதையே கூறவிளைகிறேன்.

இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும், 1956 இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது அதிருப்தியை பலவழிகளில் காட்ட முயன்று, அகிம்சைப் போராட்டங்கள் நடத்த முயன்றபோது அவர்கள் தாக்கப்பட்டார்கள். பின்பு தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களைத் திரட்டி போராட்டங்கள் ஆரம்பித்தனர். இவ்வாறு போராட்டங்களை ஆரம்பித்து வைத்த அரசியல்வாதிகள் அவ்விளைஞர்களை முன்னின்று வழிநடத்தாமல் இரட்டைவேடம் பூண்டார்கள். பின்பு ”சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று நகைத்தார்கள். அதன்பின்பு ஆயுதத்தால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.


அதனைத்தொடர்ந்து பல இயக்கங்கள் உருவானது. அவர்களுக்குள் போட்டிகள் ஏற்பட்டு ஒரு தெருச்சண்டியனையும் பிச்சைக்காரனையும் சிறுகளவு எடுத்தவனையும் சுட்டு மரணதண்டனை கொடுத்துவிட்டு 32 இயக்கங்களுக்குள் யார் செய்தார்கள் என்று தெரியாமல் பிணத்தைச் சுற்றிநின்று நாம் வேடிக்கை பார்த்தோம். இவ்வாறு எல்லைகளை நோக்கி நீட்டியிருக்க வேண்டிய துப்பாக்கிகள் எமக்குள் நீட்டப்பட்டதற்கு யார் காரணம், யாருடைய அறியாமை காரணம் என்பதே எனது கேள்வி?

இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தவன் 61 ஆண்டாக ” தன்னைக் கடிக்கின்ற கொசுகூட தமிழ்க்கொசு என்று நினைத்தே அடிக்கின்றான்.


ஆனால் எம்மில் சிலர் இந்தக் கொசு அது இல்லை. அதோ இருக்கிறது தமிழ்கொசு என்று காட்டிக்கொடுக்கின்றான். சிங்களவனுக்குள்ளும் எல்லாப் போட்டிகளும் இருக்கின்றது.

ஆனால்

தமிழர்களை அழிப்பதில் யார் கூடஅழிப்பது என்ற போட்டியையே அவன் வைத்திருக்கின்றான் என்பதை நாம் உணர்கின்றோமில்லை.


இப்படிப்பட்ட உதாணங்களை எழுதி உங்களுக்கு இலங்கைப் பிரச்சனை என்ன என்று தெரியாதவர்களாக்க நான் எண்ணவில்லை.


இருப்பினும் 33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே! ஏன்?

இதுவே எனது கேள்வி இதற்கு மீண்டும் சிலர்மேல் பழிபோட்டுவிட்டு ஆபிரிக்க நாடுகளை நோக்கியும் நாம் புலம்பெயர நினைக்கப் போகின்றோமா என்பதே எனது ஆதங்கம்.

ஏனெனில் ஒரு சில சம்பவங்கள் என்னை வேதனையடைய வைத்துவிட்டன. உதாரணமாக

3 மாதம் தெருக்களை மறித்து சில பெரிய நாடுகளின் மத்தியில் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம்,

ஒன்றரை இலட்சம் பேர் பலி எங்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை.

ஆனால் அடுத்த சில மாதங்களில்

அதே நாடுகளில் தெருக்களை மறித்து கோயில் ஊர்வலங்கள், பெரிய அளவிலான கேளிக்கைக் கொண்டாட்டங்கள்.

இவைதான் எம்மை இக்கதிக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எம்மத்தியிலும் செல்லாக்காசு ஆக்கிய விடையங்கள்.


இவற்றை உணராமல் விடுவோமாயின் விரைவில் உலகில் ஒரு மதிப்பற்ற இனமாக மாறிவிடுவோம் என்பதே எனது வேதனை. ஒரு வீட்டில் இழப்பு ஏற்பட்டால் அவ்வீட்டார் ஒரு வருடத்திற்கு உண்ணாநிலை இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக வெள்ளையடித்து விழாக் கொண்டாடுவதில்லை என்பதையே நான் கூற விளைகின்றேன்.

சற்று சிந்தியுங்கள்!


ஐந்தறிவு படைத்த யானை தனது குட்டி காட்டில் இறந்துவிட்டால் 30 – 35 நாட்களுக்குள் மறக்காமல் அந்த இடத்திற்கு வந்து அதன்காரணத்தை யோசிக்குமாம்.


ஒரு சிறிய குருவிகூட தனது கூட்டை யாரும் பிரித்துவிட்டால் 3 நாட்களுக்கு அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி வந்து அதை ஆராயுமாம்.

ஆனால்

நாங்களோ 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் ஒரே நாளில் கொல்லப்பட்டிருந்தும் ஏதும் தெரியாதது போல் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக வெளிநாட்டில் இருந்து பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் திருமணவிழாவிற்கும் செத்தவீட்டிற்கும் என்று சென்று வருகிறோம்.


கேட்டால் அங்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறோம். ஆனால் எல்லாப் பிழைகளையும் ஒரு தலைமையிலே மட்டும் போட்டுவிட்டு, பிழை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறோம். இப்படியான ஒரு போக்கையே நான் உங்களை யோசிக்கச் சொல்கிறேன்.

முட்கம்பிக்குள் இருக்கும் 3 இலட்சம் மக்களையும் கட்டுநாயக்கா விமானநிலையமூடாக வெளிநாடு ஒன்றிற்கு வர விடுவார்களாயின் நான் இதை உங்களிடம் கேட்கமாட்டேன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறினார்கள். எல்லா விதத்திலும் தமிழர்களைத் தரப்படுத்தி ஒதுக்கினார்கள். ஒற்றுமையாய் தம்முடன் இரு என்றார்கள். பின்பு தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்குக்கூட எம்மையே அடித்துத் துரத்தி உங்கள் இடம் வடக்கு, கிழக்கு அங்கு செல்லுங்கள் என்றார்கள். பின்பு அங்கும் வந்து அடித்தார்கள். நாம் திருப்பி அடிக்க முற்பட்டபோது, எம்மை ஆயுதத்தால் அழிக்க முடியாமற்போக, உங்களை உங்களாலேயே வெல்கிறோம் பார் என்று எம்மில் சிலரை வாங்கி, தற்காலிகமாக எம்மை வென்று நிற்கின்றார்கள். அத்துடன் நின்றுவிடாமல் இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையே என்று அவர்களே சொல்லி நகைக்கின்றார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மீண்டும் எமக்கு ஜனநாயகத்தைப் போதிக்க தமது நட்பு நாடுகளுடன் சேர்ந்து வகுப்பு எடுக்க முற்படுகின்றார்கள்.

இவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதே எனது கேள்வி. நாம் ஒன்றிணைந்து ஒரு வழி சென்று, மேற்கண்ட தவறுகள் இனிமேல் நடக்காமல் எம்மையும் பாதுகாத்து எம் இனத்தையும் பாதுகாக்க ஒற்றுமைப்படுவோம்! அதற்கான வழிமுறைகளை ஆரம்பிப்பவர்களை அடையாளங்கண்டு, அனுசரணை வழங்குவோம்! சிந்தித்துச் செயலாற்றுவோம்!

அன்பார்ந்த தமிழ் பேசும் தமிழீழ மக்களே எமக்கு ஒரு விடிவு தேவை என்பதை எல்லோரும் உணர்கின்றோம். அதற்கு அடித்தளம் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவதே. அதை தனியே ஒரு அமைப்பு ஆரம்பித்து செயற்படுத்த முடியாது. அதில் மீண்டும் பிழைகள் வரச் சந்தர்ப்பமுண்டு.


ஆகவே நாம் நமக்குள் இணைந்து அதை ஒரு அமைப்பாக மாற்றி, அல்லற்படும் அந்த 3 இலட்சம் மக்களையும் மீட்டெடுத்து, விலை போகா ஜனநாயக வழியில் மீண்டும் நாம் இணைவோம் என்று எனது விருப்பத்தை உங்களிடம் கூறி, எனக்கு முதலாம் வகுப்புப் படிப்பித்த வாத்தியார், முதலாம் வகுப்பிற்கு தொடர்ந்தும் படிப்பிக்க, நான் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறிப் படித்தமாதிரி. நான் கூறிய சில துளியை வைத்து, நீங்கள் இன்னும் திறம்பட சிந்தித்துச் செயலாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

நிமல்

பசி: குறும்படம்

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

சிறையிலடைக்கப்பட்ட திச நாயகமும், வன்னி மக்களும்!!!

மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது.

தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது.

ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள்.

இந்த மறுபார்வைக்குள் பன்முகப் பார்வை, ஜனநாயகச் சொல்லாடல்கள், ஒடுக்கும் பிராந்திய வல்லாதிக்கத்தினை நோக்கிய சரணடைவு, பேசித் தீர்க்கலாமென்கிற பழைய இற்றுப்போன் புராணங்கள் என்பன அடங்கியிருக்கின்றன.

சிறீலங்காவின் படைக்கட்டமைப்போடு மட்டும் விடுதலைப்புலிகள் போராடினார்கள் என்பது போன்று இருக்கிறது இந்த குருட்டுத்தன விரிவுரையாளர்களின் பார்வை.

"வென்றால் சரித்திரம், தோற்றால் தரித்திரம்' என்பதல்ல மக்கள் போராட்டத்தின் சித்தாந்தம். மறு ஆய்வு, மீள்பரிசோதனை, சுயவிமர்சனம் என்பவை ஆரோக்கியமான அரசியல் தளமொன்றினை உருவாக்குமென்பது நிஜமானது.

ஆனாலும், வதை முகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கும் போராட்டத்தை விட, "தமிழினி' என்ன செய்கிறார். "கே பிக்கும் கி.பிக்கும்'' என்ன உறவு. பத்மநாதனிற்கு எதிராகச் சதி செய்வோர் பெயர்ப்பட்டியல் என்பவற்றில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயற்பாடுகள் தேவைதானா? வென்பதையிட்டு மக்கள் கவலை கொள்கிறார்கள்.

எரிகிற வீடு அணையுமுன்பாக, பிடுங்கிச் செல்ல வேண்டுமென்று சிலர் அவசரப்படுகிறார்கள்.

இவை தவிர, பழையனவற்றைத் தோண்டி எடுத்து புதிய விவகாரங்களை உருவாக்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சகல இன மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மகிந்தரும் அழைப்பு விடுக்கிறார்.

வதைமுகாமில் இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் அல்லல்படும்போது, யாழ் நகரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தத் தேர்தல் நடாத்தியவரல்லவா இந்த பெருந்தேசிய இன சனாதிபதி.

ஆதலால் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உடலங்களைத் தோண்டி எடுக்க, முயற்சிக்க வேண்டாமென மகிந்தர் கூறுவது போலுள்ளது. அதைவிட, இன்னுமொரு முக்கிய அமைச்சர், முகாம் மக்களை அடைத்து வைத்திருப்பதற்காகக் கூறும் வியாக்கியானங்களையும் கேளுங்கள்.

அதாவது வதை முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்தால், தென்னிலங்கையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அற்றுப்போய் விடுமாம். தமது பாதுகாப்பிற்கான உத்தரவாதம், தமிழ் மக்களை சிறையில் அடைப்பதால் உறுதிப்படுத்தப்படுகின்றதென சிங்களம் கூறும் விளக்கங்களை, சர்வதேசமும் ஏற்றுக் கொள்கிறதா?

ஊடகவியலாளர்களை கடத்துவதும், பின்னர் படுகொலை செய்து வீதியோரத்தில் வீசுவதும், இத்தகைய பாதுகாப்பு நியாயப்படுத்தலிற்கு உட்பட்டவைபோல் தெரிகிறது.

பத்தி எழுத்தாளர் திசநாயகம் அவர்களுக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதன் ஊடாக, சிங்களத்தின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதென, பெளத்த சிங்களப் பேரினவாதச் சக்திகள் ஆறுதலடைகின்றன.

ஆயினும், உலகெங்கும் இருந்து கிளம்பும் எதிர்ப்பலைகளையிட்டு சிங்களம் அதிர்ச்சியடையவில்லை. மகாவம்சக் கண்ணாடிக்கென்றொரு ஊடக சுதந்திரவரையறை உண்டு. இன ஒடுக்குமுறை குறித்து எழுதப்படும் எழுத்துக்களை, இக் கண்ணாடி, ஊடுருவிச் செல்ல அனுமதிக்காது.

எழுத்துச் சமராடிய திச நாயகத்தின் மாற்றுச் சிந்தனைகள், பேரினவாத ஊடக கட்டமைப்பிற்குள் உள் வாங்கப்படக்கூடிய கருத்துக்கள் அல்ல என்பதில், சிங்களம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகவே, தமது போக்கிற்கு ஒத்திசைவாக இயங்க மறுக்கும் ஊடகத்தாரை, சிறையில் அடைப்பதைத்தவிர, வேறு மார்க்கம் மகிந்த சிந்தனையாளர்களுக்கு இருக்க முடியாது.

இந்த ஆண்டிற்கான சர்வதேச சுதந்திர ஊடகவியலாளர் என்கிற விருதினை திச நாயகத்திற்கு வழங்குவதோடு, உலக ஊடக அமைப்புக்களின் கடமையும் நிறைவு பெறுகிறது. அவரின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்து஼br />?ாறு அறிக்கை விடுவதோடு அமெரிக்காவின் ஜனநாயகக் கடமையும் முற்றுப்பெறும்.

சிங்களத்தின் சிறையில் மட்டுமல்ல, இடைத்தங்கல் முகாமில்கூட, தமிழ் மக்களின் உயிருக்கு உத்திரவாதமில்லையயன்பதை, எத்தனை காலத்திற்கு இந்த மேற்குலக ஜனநாயக ஜாம்பவான்கள் கூறிக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

83ஆம் ஆண்டு தமிழின அழிப்பில், நிர்வாணமாக, தனது இரு கைகளாலும் தலையைத் தாங்கி, அவமானமடைந்து குந்தியிருந்த அந்த தமிழ் இளைஞனின் புகைப்படம், உலகின் மனச்சாட்சியை உலுக்கியது.

அதைவிடக் கொடுமையான வக்கிரத்தின் உச்சப் படிநிலையை, அண்மையில் வெளியான, நாசிப் படுகொலைகள் போன்று அமைந்த கோரக் காட்சிகள், உலக மக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது.

30 இலட்சம் வியட்னாம் மக்களை, கம்யூனிசத்தின் பெயரால் கொன்றொழித்த உலக நாயகனிற்கும், இந்தக் காணொளி அதிர்ச்சியளித்ததாம். இனியாவது, வன்னிப்படுகொலைகளுக்கு, சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணையயான்று முன்னெடுக்கப்படவேண்டுமென இவர்களால் உறுதிபடக்கூற முடியுமா? சந்தேகந்தான்.

இந்தியா என்கிற பிராந்திய ஜனநாயக வல்லாதிக்கம், அதனையும் தடுத்து நிறுத்தப்படாத பாடுபடுமென்பதை நாம் புரிந்துகொள்வோம். ஆகவே சிங்களப் பேரினவாதச் செயற்பாட்டிற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளும், கருத்துக்களுமே மக்களுக்கு இப்போது தேவை.

பிராந்திய வல்லரசுகள் தமது சந்தைப் போட்டிக்காகவும், கேந்திர ஆதிக்கத்திற்காகவும், ஒடுக்குமுறையாளனாகிய சிங்களத்தோடு உறவாடி, தமிழின அழிப்பிற்குத் தொடர்ந்தும் துணை போவார்கள்.

தற்போது உலகப் பொருளாதாரச் சீரழிவு உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரளயம், ஒடுக்குதலிற்கு உள்ளாக்கப்படும் மக்களின் போராட்டங்களை, இயங்குநிலைக்கு முன் தள்ளிச் செல்கிறது.

அந்த முற்போக்கான வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தினை அதனோடு இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்காகப் பேசுபவர்கள், அறிக்கை விடுபவர்கள் எல்லோரும் எமக்காகப் போராட முன்வருவார்கள் என்கிற கற்பிதம் தவறானது.

ஒடுக்கப்படும் மக்களே அதனை உணர்ந்து கொள்வார்கள். அவர்களுடன் இணைந்து போராடுவதே விடுதலையைச் சாத்தியமாக்கும்.

-இதயச்சந்திரன்.

ஈழமுரசு (11.09.09)

பிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்?

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.

இந்நிலையில், முப்பதாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் அரசியல் வாழ்வுக்கும் அவர்களது அபிலாஷைகளுக்கும் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு எத்தகைய நிலையில் இன்று தமது ஆயுதப்போராட்டத்தை மௌனித்திருக்கிறது? அது எவ்வாறான பொறுப்பை யாருக்கு வழங்கிச் சென்றிருக்கிறது என்பது தொடர்பான ஆழமான பார்வை அவசியமாகிறது.

சர்வதேசம் என்று தம்மைக் கூறி தம்மை உலக மக்களின் மனசாட்சியாகவும் நிரந்தர நீதிவான்களாகவும் காண்பித்துக்கொள்ளும் பன்னாட்டுச் சமூகம், ஈழப்போராட்டம் தனது உச்சத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வருட இறுதியில் நடந்துகொண்ட விதம், அனைவரும் அறிந்த ஆய்வுக்கு உட்படுத்தத் தேவையற்ற விடயம்.

ஒவ்வொரு நாடும் வன்னியில் இடம்பெற்ற பாரிய மனிதப்பேரவலத்துக்கு அறிக்கைகளில் அழுது வடித்ததே தவிர, செயல் ரீதியாக எதுவுமே செய்யத் துணியாத - செய்ய முடியாத - தன்நேச பின்னணி கொண்ட அரசியல் சிக்கலுக்குள் அந்நாடுகள் சிக்கிக்கிடந்தன.
மனச்சாட்சி உடைய சிறிய நாடு முதல் வல்லரசு வரை வரிசையில் நின்றவைகளில் ஒரு பகுதியினர் இந்தியாவை மீறி ஈழப்பிரச்சினையில் தலையிட்டு, விரிந்துகிடக்கும் அந்நாட்டின் வியாபாரச் சந்தைக்கு தம்மை வில்லனாக வரித்துக்கொள்ள விரும்பவில்லை. அதேவேளை, ஈழப்பிரச்சினையை நிரந்தரமாக பகைத்துக்கொள்வதன் மூலமும் சிறிலங்காவை ஆதரித்துக்கொள்வதன் மூலமும் தமக்குக் கிடைக்க கூடிய சகல ஆதாயங்களையும் உருவிக்கொள்வதில் இன்னோர் அணி நாடுகள் கவனமாகச் செயற்பட்டன.

தமது புகோள அரசியல் நலன் சார்ந்த பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிநிரலுடன் ஈழப்பிரச்சினையைக் கையாளத்தொடங்கிய சர்வதேசத்தின் நோக்கங்கள், சிந்தனைகள் எப்போதுமே ஈழத்தமிழர் பிரச்சினையை நேரடியாகச் சந்திப்பதாக இருந்ததில்லை. தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறோம் என்று வந்த நாடுகள் அனைத்துமே, “விபத்தில் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று முனகியவனுக்கு புரியாணி வாங்கி தருகிறோம்” - என்று அருகே போய்நின்று ஆசை வார்த்தை காண்பிப்பதுபோல, முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, தாம் வாரிச்சுருட்டுவதற்கு அங்கு என்ன கிடக்கிறது என்பதில் அவதானமாய் இருந்தனவே தவிர, தமிழர் பிரச்சினையின் உண்மையான வடிவத்தை உள்வாங்கிக்கொள்ள அவை தயாராக இருந்ததில்லை.

இதேவேளை, இந்தச் சர்வதேச சமூகம் தமக்குள் அடிக்கடி போட்டுக்கொண்ட அரசியல் கணக்குத்தான், ஈழத்தமிழர் பிரச்சினையையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் பயன்படுத்தி, தமது ஆதாயங்களை எவ்வளவுக்குப் பேரம் பேசிக்கொள்ளலாம் என்பது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கப்பிடியை நாடி பிடித்துப்பார்த்து, அதற்கு ஈழத்தமிழர் பிரச்சினையைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலேயே சர்வதேசம் ஆரம்பம் முதல் ஒரேகுறியாக இருந்தது. இந்தத் திட்டத்தின் இன்னொரு வடிவத்தை ஈழப்போரின் இறுதிக்கட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த வருட இறுதியில் சர்வதேசம் இன்னொரு தடவை அரங்கேற்றிப் பார்த்தது.

தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்.
அதாவது, இவ்வளவு காலமும் தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திவந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு பயங்கரமான போரைக் கட்டவிழ்த்துவிட்டபோது, விடுதலைப்புலிகளை இந்தத் தடவையும் பிரதான விளையாட்டுப் பொருளாக மாற்றி, தமது திட்டத்தின் இன்னோர் அம்பை எய்தது. சிங்களப்படைகளின் கொடூரம் தமிழர் தாயகத்தின் எட்டுத்திக்கும் எம ராச்சியம் நடத்திக்கொண்டிருந்தபோது, பிரபாகரனையும் அவரது படைகளையும் சிங்கள இராணுவத்திடம் சர்வதேசம் சரணடையக் கோரியது. அது நடக்காது போனதால், பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையுமாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் இறுதிக்காலப்பகுதியில் நோர்வேயின் ஊடாக தூது அனுப்பிப் பார்த்தது. பின்னர், முன்றாம் தரப்பிடம் சரணடையக்கோரும் படிமுறையையும் கேட்டுப்பார்த்தது. அதாவது, விடுதலைபுலிகளை தற்போதைக்கு அடக்கிவைத்திருந்துவிட்டு தமது தேவைகள் ஏற்படும்போது மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவிற்குள் அவர்களை ஏவி விட்டு, தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்று தமது இராஜதந்திர காய்களை நகர்த்தி பார்த்தது. (எழுபதுகளில் ஜே.வி.பி.க்கு எதிராக சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி கொலைப்படலத்தை அரங்கேற்றியபோது, இதேநோக்கத்துடன்தான் அதன் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவைக் காப்பாற்றி லண்டனுக்கு அனுப்பிவைத்த இந்தியா, சிறிலங்கா பிற்கால கட்டத்தில் தன்னுடன் முரண்டுபிடிக்க ஆரம்பித்தபோது, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சிறிலங்காவிற்குள் அவரை அனுப்பிவைத்தது.)

ஒட்டுமொத்தத்தில், தமது அரசியல் விளையாட்டுகளுக்கும் ஆளை ஆள் மறைமுகமாக மடக்குவதற்கும் பலம்வாய்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயன்படுத்தி ஆண்டாண்டு காலத்துக்கும் அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்பது சர்வதேசத்தின் தீராத கனவாகியிருந்தது. அவ்வாறு தாம் மேற்கொண்டுவரும்போது, தமது இந்த நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, விடுதலைப்புலிகளை காரணம் காண்பித்தே, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு போவது சர்வதேசத்தின் இன்னொரு மனக்கணக்காக இருந்துவந்தது.

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளிவைத்தாற்போல், தமிழ்மக்களின் பிரச்சினையைத் தொடர்ந்தும் பகடைக்காயாக வைத்து தமது நலன்களை முன்னெடுத்துவந்த சர்வதேசத்தின் மிகப்பெரிய திட்டத்தை உடைத்து, இராஜதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் சிறிலங்காவுடன் பேணிவந்த உலக ஒழுங்கைச் சிதைத்து, தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், சர்வதேசத்தை பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.
விடுதலைப்புலிகளை முன்வைத்து தமது நீண்ட நிகழச்சிநிரலை அரங்கேற்றலாம் என்ற கனவுடன் பயணித்த சர்வதேசம், இந்த முடிவை எதிர்பார்க்கவேயில்லை. பன்னாட்டுச் சமூகம் இன்று திகைத்துப்போய் நிற்கிறது. விடுதலைப்புலிகளின் முடிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவேயில்லை. மாற்றுத்திட்டத்தைத் தேடிக்கண்டுபிடிப்பதற்குக் கூட இன்று வழியின்றித் திண்டாடிக்கொண்டிருக்கிறது சர்வதேசம். இன்றையநிலையில், தமிழ்மக்களின் விடிவுக்கு நிச்சயம் பதில் கூறவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் விடுதலைப்புலிகளால் தள்ளபட்டிருக்கிறது என்பதும் இதிலிருந்து சர்வதேசம் தப்பவேமுடியாது என்பதும்தான் உண்மை.

நாளை நோர்வேயோ இன்னொரு நாடோ, இனியொரு நாட்டில் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அனுசரணை வழங்கப்போவதாக போய்நின்றால் -

“தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் செய்த அரசு கைகளில் இரத்தக்கறையுடன் இன்றும் சுதந்திரமாக உலகவலம் வந்துகொண்டிருக்கிறது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்” - என்று முகத்தில் காறி உமிழ்ந்தால், அதற்கு “ஆபத்பாந்தவர்களான” இந்த அனுரசரணையாளர்களிடம் என்ன பதில் இருக்கப்போகிறது?

ஆகவே, இன்றைய நிலையில், தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் ஒற்றைச்சொற்களின் ஊடாக ஈழத்தமிழர் விவகாரத்திற்குள் ஒளித்து ஓடி விளையாடித்திரிந்த சர்வதேசத்தின் நோக்கங்களும் திட்டங்களும் தோலுரித்துக்காட்டப்பட்டு அதற்கு தற்போது மிப்பெரிய பணி விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கொடுத்த மருந்தைத் தானே உட்கொள்ளவேண்டிய திரிசங்குநிலைக்குள் பன்னாட்டு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. எதற்குமே தொலைநோக்குத் திட்டத்துடன் சிந்திக்கத் தொடங்கும் உலக அரசியல் வட்டத்தில், பன்னாட்டுச் சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்காவிடின், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் அதற்கு மிகத்தெளிவாகத் தெரியும்.

அதாவது, தமிழ்மக்களுக்கான புதிய காவலாளிகளாக சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA