Tuesday 18 August 2009

வைகோ, ராமதாஸ் கைதாவார்களா?


தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படு வோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து 20ந் தேதி சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடனம் வெளியிட உள்ள பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.



இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.


அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேற்று கூட அமைந்தகரையில் நடத்திய பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் முழுவதும் புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும், பேனர்களையும் வைத்திருந்தது. ஆனால் திடீரென அவற்றை போலீசார் அப்புறப்படுத் தினார்கள்.


இந்த நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


"தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி களில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை மய்ப்ஹஜ்ச்ன்ப் ஆஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் (டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய்) ஆஸ்ரீற் 1967படி தண்டனைக்குரிய குற்றங்களாகும்.


எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்து பவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 20ந் தேதி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பிரகடன வெளியீட்டு பொதுக்கூட்டம் அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளி யிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆவர். எனவே இந்த பொதுக்கூட்டத்திலும் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படங்களுடன் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அவர்கள் மீது தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை காரணம் காட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பற்றி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறும் போது, "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும், 20ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்' என்று தெரிவித்தனர்.

நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்: திருமாவளவன்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதும், அடக்குமுறைக்கு ஆளானோர் ஆயுதம் ஏந்துவதும் தவிர்க்க முடியாதது. விளம்பரங்களை அழித்தாலும் எங்கள் உணர்வுகளைத் தடுக்க முடியாது. இன விடுதலை மற்றும் ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடுவதே விடுதலைச் சிறுத்தைகளின் இரட்டைக் கடமைகள் ஆகும்.

எழும் தமிழ் ஈழம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது. எங்களால் திமுக அரசுக்கு எவ்வித இடையூறும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால், எங்களது கொள்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

இறையாண்மைக்கு கட்டுப்பட்டவர்களாக நாங்கள் இருப்போம். ஆனால், தமிழினத்துக்கு எதிரான துரோகத்தை எதிர்ப்போம். தமிழகத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்.

ஈழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ் ஈழம் மட்டுமே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இலங்கையில் 3 லட்சம் தமிழ் மக்கள் முள் வேலிக்குள் அகதிகளாக குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிக்கின்றனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

பிரபாகரன் மீண்டும் ஈழ விடுதலைப் போரை ஏற்று நடத்துவார். அவர் உயிரிழந்தது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை ராஜபக்ஷ அறிவிக்காதது ஏன்? இந்திய அரசுக்கு பிரபாகரனின் இறப்புச் சான்று இதுவரை அளிக்கப்படவில்லையே ஏன்?. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் தொடர்ந்து போராடும் பொறுப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் மீண்டும் திரும்பி வந்து தலைமை தாங்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும். ஈழம் வெல்லும். அதை சரித்திரம் சொல்லும்.

பாமக மீது குற்றச்சாட்டு: தைலாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முன்பு, பாமக இல்லாத அணி வெற்றி பெற முடியாது என்றனர். ஆனால், இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்றார் தொல். திருமாவளவன்.
இதில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போலீஸாரின் கெடுபிடிகளுக்குப் பின்னரும், இந்த மாநாடு நடைபெற்ற திரு.வி.க. பூங்கா சுற்றுப் பகுதிகளில் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி ஆகியோரது உருவத்துடன் திருமாவளவன் படமும் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பிரபாகரன் படங்கள், வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "விடுதலைத் தீப்பொறிகள்', "தலை நிமிர்வு', "உயிராயுதம்' ஆகிய சிடிக்கள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டன.

பா.ராகவன் எழுதிய "பிரபாகரன்- வாழ்வும், மரணமும்' என்ற நூல் ரூ. 100 விலைக்கு விற்கப்பட்டன.

Tamil Nadu government erases the word 'Eezham'

Tamil Nadu Police was seen pasting white papers on the word 'Eezham' and the picture of LTTE leader V. Pirapaharan, figured in the banners and posters of Viduthalai Chiruthaigal Kadchi (VCK) organised uprising in Chennai attended by more than 100,000 people Monday. The VCK's annual uprising day, conducted on the birthday of its leader Thol Thirumavalavan, has chosen the theme 'Ezhum Thamizh Eezham' for this year. The phrase can either mean the 'rising Tamil Eelam' or 'Tamil Eelam will rise'. The word 'Eezham' is the earliest reference to today's island of Sri Lanka, found in Tamil literature and inscriptions of pre-Christian centuries.


On the eve of the meeting, within a couple of hours, more than 2000 large digital banners publicizing the public meeting were pulled down by the police in and around Chennai city alone. The police, who pasted white papers on the word 'Eelam', which appeared in the name of the conference, spared only a tiny fraction of the banners.

The state police also pasted white paper to cover pictures of Mr. Pirapaharan wherever it appeared in the digital banners.

According to news reports, these banners had been placed throughout Tamil Nadu more than ten days ago. The sudden police action of pulling down these digital banners on Monday left the VCK embittered. The VCK cadres staged spontaneous protests.

Wall writings (graffiti) giving details of the event, which had been painted several months ago, were also defaced by the civic staff in Chennai on the orders of the city police who supervised this cleaning operation.

Launching a tirade against the Government of Sri Lanka for its systematic genocide of Tamils, Mr. Thirumavalavan, who is also an Indian Member of Parliament vowed to cast his party, the VCK (Liberation Panthers), as the "unarmed Tamil Tigers" and to keep the fire of Tamil Eelam struggle alive in Tamil Nadu.

Thirumavalavan argued that although his party was bound by the Indian Constitution, the Tamil people in India could not remain mute spectators to the genocide of their brethren in Sri Lanka.

Referring to the police action, Thirumavalavan said that such an assault on the freedom of expression was highly condemnable. He also observed that any force in the world could only erase words and images from walls, and use their might to pull down banners, but they can never remove these emotions and feelings of liberation and homeland which people carry in their minds, nor can these powers stop our uprising.

Alleging that fifty thousand Tamil people, including young children and women, were killed in Sri Lanka since the beginning of 2009, he also detailed the sufferings that the Tamils were presently undergoing in the barbed wire camps in Vavuniyaa.

The VCK leader also read out a resolution stating that an independent state of Tamil Eelam was the only solution to ensure the long-term safety and protection of the Eelam Tamils.

Another resolutions passed in this conference requested the US and Indian governments to remove the Liberation Tigers of Tamil Eelam from the list of terrorist organizations and called upon them to recognize the LTTE as freedom movement.

Thirmavalavan expressed suspicions on the truth behind Sri Lanka's unverifiable claims about LTTE leader V. Pirapaharan.

The conference also passed a resolution condemning the "arrest" of Selvarasa Pathmanathan. The resolution demanded that the Government of Sri Lanka should announce whether Mr. Pathmanathan was arrested or kidnapped, and called upon the United Nations to safeguard him from any threat to his life.

Moreover, according to sources in Tamil Nadu, rumours of Thirumavalavan's arrest caused some anxious moments for his cadres, and this was used by the police as a pretext to prevent thousands of people from reaching the Chennai to take part in this public meeting. The railway police had also resorted to a lathi-charge on VCK cadres in Madurai Sunday night and prevented them from boarding trains to come to the state capital to participate.

Thirumavalavan said that while his party would take every effort to ensure that the DMK Government would not be put to hardship, any question of compromise in aim or ideology was impossible and that his support for Tamil Eelam was unwavering.

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்


கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.

கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.

எவ்வாறு கைது நடந்தது:

கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது.

கைது செய்தது யார் ?



ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.

இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?

மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு இலங்கை புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்ம ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று இலங்கை அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக இலங்கை அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக இலங்கை இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை இலங்கைக்கு அழைத்துவர ஏற்றது என இலங்கை அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் இலங்கை கொண்டு சென்றனர்.

சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.


இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:

இலங்கை இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.

எது எவ்வாறு இருப்பினும் கே.பியை இலங்கை நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த இலங்கை அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.

எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா


எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்ற முடியாதென கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா தலதா மாளிகைக்குச் சென்று வழீபட்டதுடன் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

இதன்போது பீடாதிபதிகள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எவர் எதைச் சொன்னாலும் கண்டபடி அகதி முகாம்களிலிருந்து மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்திவிட முடியாது. மக்கள் அங்கு வழமையான அமைதி நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அங்கு அங்குலத்திற்கு அங்குலம் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர். அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அனைத்தும் சீர்செய்யப்பட்ட பின்னரே அகதி முகாம்களிலுள்ள மக்கள் உரிய வகையில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களெனத் தெரிவித்தார்.

வெளிநாடுகளும் பல தரப்பினர்களும் எதனைக் கூறினாலும் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே அம்மக்கள் பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டுமென பெளத்த பீடாதிபதிகளும் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் போராடலாம்?:ரொபட் பிளக்


இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் அது மீண்டும் தமிழீழ புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் ரொபட் பிளக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் ஆயிரக்காணக்கான மக்களை விரைவில் மீள் குடியமர்ந்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி அளித்துவருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் அரசியல் இணக்கம் ஒன்று காணப்படாமைக் குறித்து மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கைக்குள் உள்ள தமிழர்களுடன் மாத்திரம் அல்லாது, இலங்கைக்கு வெளியில் உள்ள தமிழர்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு மேற்கொள்ளும் சதி முயற்சிக்கு, சர்வதேசம்; ஆதரவு, தமிழர்களின் பொறுமைக்கு ஓர் எல்லையுண்டு: பருத்தியன்


ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதை விட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப் பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது.
இவை தற்செயலாகவோ அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த கே.பி அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவமும் மிகத்தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.

கடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்து விட்டிருக்கின்றது. இவ்வளவு இழப்புக்களின் பின்னரும் தமது பொறுமையினை கடைப்பிடித்துவரும் தமிழர் தரப்பின் நியாயப்பாட்டினை சர்வதேசம் உணர்ந்துகொள்ளத் தவறி வருகின்றது.

ஆயுதங்களை கைவிட்டு அரசியல் இராஐதந்திர ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க முனைந்த தமிழினத்தின் தலைமையை அழித்தொழிப்பதற்கு சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதி முயற்சிகளுக்கு சர்வதேசம் வழங்கிய, வழங்கிவரும் ஆதரவுகளையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தியும், மிகுந்த கோபமும் அடைந்திருக்கின்றனர்.

சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் மிகத் தெளிவு பெற்றிருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஏனெனில், அவ்விடயத்தினை அவர்கள் தந்திரமாக கையாளும் முறைலிருந்து அவர்களின் தெளிவுத்தன்மையை புரிந்துகொள்ள முடிகின்றது.

இலங்கை இனப்பிரச்சனையில் தமிழர்களின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டுள்ள போதிலும், தத்தமது நாடுகள் சார்ந்த, தனிப்பட்ட செயற்பாடுகள் சார்ந்த, பிராந்திய வல்லாதிக்கம், பழிவாங்கல் நடவடிக்கைகள்,வர்த்தகப் போட்டிகள், கொள்கை வகுப்புகள் என பெயர் குறிப்பிடப்படும் சுயநல நோக்கங்களை முன்னிட்டு அவர்களின் எதிர்மறையான முன்னகர்வுகள் அமைகின்றன.

சிங்கள அரசும் அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தினைக் கையாண்டு வருகின்றது. ஆனால் இவையெல்லாம் சிங்கள அரசின் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் ஒரு இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்த சர்வதேசம் உணராமல் இருப்பதானது, இந்த உலகத்தில் "மனிதநேயம்" என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு தமிழனையும் கொண்டு செல்கின்றது.

இவ்வாறான நிலை தொடருமானால் அதன் விளைவுகளாக தமிழர்களின் பொறுமை சீர்குலைக்கப்படுவதுடன், அரசியல் ரீதியான அகிம்சைவழிப் போராட்டம் மீதுள்ள நம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிடும் என்பதுவே எதிர்கால யதார்த்தம்.

இழப்புக்களும், துரோகங்களும் தமிழினத்திற்கு புதியதொன்றுமில்லை. தியாகங்களினூடு வளர்ந்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் இவ்வாறான இழப்புக்கள், துரோகங்களைக் கண்டு துவண்டுவிடப் போவதுமில்லை. ஆயினும், சர்வதேசத்தின் இவ்வாறான எதேச்சைத்தனமான போக்கிற்கும், சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதிவேலைகள் மற்றும் விஷமப் பிரச்சாரங்களிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் தமிழர்கள் முன் காத்திருக்கின்றது.

இது எவ்வாறு சாத்தியப்படும்?

01] சுயநலங்களைத் துறந்து, கருத்து வேற்றுமைகளை மறந்து உலகம் பூராவுமுள்ள தமிழர்கள் அனைவரும் "நாம் தமிழர்" என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்றிணையவேண்டும்.

02] விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டும்,நெறிப்படுத்தும் தலைமையை, கே.பி அவர்களின் கைதிலிருந்து பெற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறான ஒரு தவறு மீண்டும் நிகழ்ந்து விடாதபடி மிகவும் செயற்திறன் மிக்கதாகவும் அனைத்து மக்களினதும் ஏகோபித்த ஆதரவு பெற்றதானதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

03] "எமது விடுதலைப் போராட்ட உணர்வினை எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்பதனை சர்வதேசத்திற்கு தெட்டத் தெளிவாக வலியுறுத்தி உணர்த்தவேண்டும். அதற்கான வழிமுறைகளாக எமது எதிர்கால போராட்டங்கள் காத்திரமானதாகவும் காட்டமானதாகவும் அமையவேண்டும்.

04] இலங்கை அரசின் சதிவேலைகளை முறியடிக்கும் வகையிலான கட்டமைப்புக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கப்படல் வேண்டும்.

05] உலகம் பூராவுமுள்ள வேற்றினத்து ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் இயன்றவரைக்கும் எதிர்கால போராட்டங்களில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுவதுடன் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தவும் தமிழர்களின் நிலைப்பாடுகள் குறித்த கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவும் வேண்டும்.

06] தமிழ் ஊடகங்களின் பங்களிப்புகள் முற்றுமுழுவதுமாக பெறப்படுவதுடன் இயன்றளவுக்கு வேற்றுமொழி ஊடகங்களின் ஆதரவையும்,பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவற்றின் மூலம் தமிழர்களின் அவலங்களும், போராட்டத்தின் நியாயப்பாடுகளும் சர்வதேசத்திற்கு வெளிக்கொணரப்படல் வேண்டும்.

07] தமிழர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே தம்மால் இயன்ற பங்களிப்பினை ஏதாவது வகையிலேனும் செய்வதற்கு முன்வர வேண்டும். ஒதுங்கி நிற்கும் மனப்பான்மையைக் களைந்து நானும் ஒரு "விடுதலைப் போராளி" என்ற போராட்ட உணர்வுடன் இனவிடுதலைக்காக உழைக்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

இவ்வாறான காத்திரமான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிங்கள அரசினதும், சர்வதேசத்தினதும் எதேச்சைத்தனமான நடவடிக்கைகளையும், சிங்கள அரசின் எல்லைகடந்த அத்துமீறல்களையும்,சதிவேலைகளையும் முறியடிக்கலாம்.

தற்போது தமிழர்களின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையான விடயமே. ஆனால், ஏன் பின்னடைவைச் சந்தித்தது? அதற்கான காரணங்கள் எவை? என ஆராய்ந்து பார்ப்போமானால், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளும், சர்வதேச நாடுகள் பலவற்றின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நேரடியான மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளும் பின்னடைவுக்கான காரணங்களில் முக்கிய பங்கு வகிப்பதனை தெரிந்துகொள்ள முடியும்.

போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பெரும் தடைக்கற்களாக இவையே இருந்து வந்துள்ளன. இன்றும் இவையே பெரும் தடையாக இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவம், அடைபட்டுக் கிடக்கும் வன்னி மக்களின் அவலம் என அனைத்தினையும் மூடி மறைத்து, இப்போது கே.பி அவர்களின் கைது மூலம் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தினை நசுக்கும் சதி முயற்சியையும் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது சிங்கள அரசு.

இவற்றை சர்வதேசம் கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. சர்வதேசத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் அனைத்துலக நாடுகள் மீதிருந்த நம்பிக்கையை முற்றாக இழந்த நிலையில் கடுஞ்சினத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர் தமிழர்கள்.

பொறுமையின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழினம் தனது போராட்ட வழிமுறையினை மாற்றியமைக்க முற்படலாம். கே.பி அவர்களின் கைதின் பிற்பாடு அம்மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளன. இனி அமையப்போகும் தமிழர் தலைமையும், தமிழர்களின் பொறுமையின் எல்லையும்தான் எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் போராட்ட வடிவங்களை நிர்ணயிக்கப் போகின்றன.

ஆனாலும் சில சமயங்களில் பொறுமையாக பொறுத்திருப்பது, எதிர்காலத்தில் சாதகமான அல்லது பாதகமான விளைவுகளைத் தரலாம். ஆகவே, உலக நியதி மாற்றங்களை அவதானித்து தமிழர் பிரச்சனையில் இரு வேறுபட்ட கோட்பாடுகளுடன் மாறிவரும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் நகர்வுகளை கருத்தில் கொண்டு தமிழர்களினது போராட்ட நகர்வுகளும் அமைவது அவசியமாகின்றது.

தமிழர் விடயத்தில் ஓரளவு ஆதரவுக் கொள்கையினை கடைப்பிடித்து வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா,கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் நடுநிலைமையில் நிற்கும் நாடுகளையும் நமது பக்கம் மாற்றி அவற்றின் முற்றுமுழுதான ஆதரவினைப் பெறுவதும், எதிராக செயற்படும் நாடுகளின் எதிரான நிலைப்பாட்டை மாற்றி அவர்களினதும் ஆதரவினை பெற்றுக் கொள்ளுவதும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்ட முன்னகர்வுகளின் குறியாக அமைதல் வேண்டும்.

தமிழர்களின் பொறுமையென்பது அவர்களது பொறுமைக்கும், இராஐதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சைவழிப் போராட்டத்திற்கும் மதிப்பளித்து அவர்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியதுமாக சர்வதேசம் எவ்வாறு செயற்படும்? என்ற விடயத்திலேயே தங்கியுள்ளது. மாறாக அவர்கள் காக்கும் பொறுமையை அவர்களின் பலவீனம் எனக் கருதி அவர்களின் போராட்டங்களை மேலும் நசுக்க சிங்களமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து சர்வதேசமும் முயலுமானால் அதன் விளைவுகளை சிங்களத்தோடு சேர்ந்து சர்வதேசமும் அனுபவிக்க நேரிடும்.

இனிமேல் அமையப்போகும் தமிழர் தலைமையைப் பொறுத்தவரையில்..அவர்கள் தமிழர்களை நெறிப்படுத்துபவர்களாகவும், ஒருங்கிணைப்பவர்களாகவும், போராட்டத்தினை நமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய வழிநடத்துபவர்களாகவும் மாத்திரமே அமையவேண்டும் என்பது பெரும்பாலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஏனெனில், ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் தமது "தலைவர்" என்ற உன்னத ஸ்தானத்தினை தேசியத் தலைவர் அதிமேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள். எப்பொழுதுமே ஈழத்தமிழினத்தின் தலைவர் அவர்தான் என்ற அனைத்துத் தமிழர்களின் விருப்பத்தினையும் மதித்து தமது போராட்டத்தினை முன்னெடுக்க இனிவரும் தலைமையை ஏற்பவர்கள் முன்வருவார்களானால் உலகத்தமிழர்கள் அனைவரினதும் பூரண ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இதன்மூலம் நமது தாயக விடுதலைப் போராட்டப் பாதையில் கருத்து வேற்றுமைகளின்றி ஓரணியாக உறுதியுடன் பயணிக்க முடியும். எதிரிகளின் சவால்களை முறியடிக்கவும் இயலும்.

சிங்களம் அப்பாவித் தமிழர்கள் மீதான தனது அடக்குமுறைகளை அடக்கும் வரைக்கும், சர்வதேசம் தனது இரட்டை வேடத்தினைக் கலைத்து ஈழத் தமிழர்களுக்கான நீதியினை கொடுக்கும் வரைக்கும் தாயக விடுதலைக்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை எவ்வகையிலும் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது.

தமிழர்களின் போராட்டம் உருவானதற்கான அடிப்படைக் காரணங்களையும் , அவர்களது நியாயத்தன்மையையும் புரிந்துகொண்டு தமிழருக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் இறுதியாக வன்னி அவலம் வரைக்கும் ஏற்பட்ட துயர வடுக்களோடு சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை தமிழருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் "தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"



- பருத்தியன்

தனித் தமிழீழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்- விடுதலைசிறுத்தைகள் கட்சி


தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 48 வது பிறந்த நாளையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள், எழும் தமிழ் ஈழம்' இன விடுதலை அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 48 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழர் எழுச்சி நாள், எழும் தமிழ் ஈழம்' இன விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்,

இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமரச் செய்ய விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை அனைத்து நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்த வேண்டும்.

தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்க, இந்திய அரசுகள் விடுதலை புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து விலக்கி அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன்,

எழும் தமிழ் ஈழம் என்ற பெயரில் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்துகிறோம். விளம்பர தட்டிகளைத் தான் காவல்துறையினர் கிழிக்க முடியும். எங்கள் எழுச்சியை அழிக்க முடியாது. நாம் இந்த இயக்கத்தை கட்டுப்பாடாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்மை சீண்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை நடத்த விடாமல் சீர்குலைத்துவிட வேண்டும் என்று கருதி பேனர்களை கிழித்து எறிந்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எழும் தமிழ் ஈழம் என்பதில் என்ன தவறு இருக்கிறது.

தி.மு.க. அரசுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்று தெளிவாக இருக்கிறோம். அதில் இருந்து மாற மாட்டோம். இந்திய அரசு தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று பாராளுமன்றத்தில் பேசினேன். நாம் எடுத்துக் கொண்ட நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். தமிழ் ஈழம் கோரிக்கை நின்றுவிடவில்லை, தோற்றுவிடவில்லை. அந்த கோரிக்கை இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு தான் இந்த மாநாடு.

ஓராண்டுகளாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடிய கட்சி விடுதலை சிறுத்தைகள். உலகத் தமிழர்களுக்கு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயாராக இருப்போம். பிரபாகரன் இல்லை என்று ராஜபக்சே சொல்கிறார். ஒரு இயக்கத்தை அழித்து விட்டதாக சொல்கிறார். பிரபாகரன் இல்லை என்றால் இலங்கை பாராளுமன்றத்திலே சொல்ல வேண்டியது தானே? இறப்பு சான்றிதழ் இந்தியா கேட்கிறதே, தர வேண்டியது தானே? அவர் இருக்கிறார், மீண்டும் வருவார், மீண்டும் ஈழ விடுதலை போர் நடக்கும். இந்த உணர்வை தமிழகத்திலே அடைகாப்பது தான் திருமாவளவனின் கடமை.

இறையாண்மைக்கு கட்டுப்படுவோம், அதற்காக ஈழத் தமிழர்களை அழிக்கிற துரோகத்தை தோலுரிக்காமல் இருக்க முடியாது. அந்த துரோக செயலை நாம் இருக்கிற இந்தியா செய்திருக்கிறது. ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதும், சாதி ஒழிப்புக்காக போராடுவதும் தான் நமது முக்கிய நோக்கமும், இந்த மாநாட்டின் முக்கிய செய்தியுமாகும்.

உருத்திரகுமாரனை நாடுகடத்த கோரும் இலங்கை;கோதபாய அறிவிப்பு


நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.

ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.

ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.

சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர்.

இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.

இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்; உலக தமிழர் அமைப்புகளுக்கு உருத்திரகுமாரன் வேண்டுகோள்


ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

"உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.

இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA