Friday 11 September 2009

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! - வெளியீடு

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒரு எழுச்சி நிலவுவதாகவும், இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் எழுச்சியை விடவும் வலிமையான எழுச்சியை மக்கள் மத்தியில் காண்பதாகவும் அவர்கள் கூறி வந்ததையும் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை.

இந்த வெற்றியை கருணாநிதியால் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டு அழிந்தாலும், தனது வாரிசுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்த கிழட்டு நரி கருணாநிதி, பரிதாபத்துக்குரிய ஏழைத் தமிழர்களை 200, 300க்கு விலைக்கு வாங்கிவிட்டார். தமிழ் இனத்துக்குத் தான் ஏற்கெனவே செய்த துரோகம் போதாதென்று மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் மக்களையே விலைக்கு வாங்கியிருக்கிறார் கருணாநிதி எனும் கொடூரன்.

இருப்பினும், தமது தோல்விக்குப் பணபலம், கள்ள ஓட்டு என்பன போன்ற காரணங்களைக் கூறும் அருகதை ஜெயலலிதா, பா.ம.க., ம.தி.மு.க. போலி கம்யூனிஸ்டுகள் போன்றோருக்குக் கிடையாது. இவர்கள் அனைவரும் தம் சக்திக்கேற்ப இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் செய்பவர்கள்தான். மேலும், இவையெல்லாம் இல்லாத தேர்தல் எப்போதும் இருந்ததில்லை. இவை தேர்தல் எனும் ஆட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட முறைகேடுகளாக மாற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்ட ஈழ ஆதரவாளர்களை இத்தகைய சமாதானங்கள் திருப்தி அடைய வைக்கின்றன என்றால், இதை ஒரு வசதியான சுயமோசடி என்றுதான் சொல்ல @வண்டும்.

ஈழ ஆதரவாளர்களின் தீவிரப் பிரச்சாரம், வலிமையான கூட்டணி, ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் மக்களின் மனோபாவம் என்பன போன்ற காரணிகளையெல்லாம் தாண்டி காங்கிரசு தி.மு.க. கூட்டணிக்குத் தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், தமிழக மக்களின் இன உணர்வை எப்படி மதிப்பிடுவது? ஒரு ரூபாய் அரிசி, வண்ணத் தொலைக்காட்சி, பணம், சாதி, நலத்திட்டங்கள் போன்ற எந்தக் காரணத்துக்காக தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று கொண்டாலும், அதிலிருந்து கிடைக்கும் விடை ஒன்றுதான் தமிழனுக்கு இன உணர்வில்லை, சொரணையில்லை. இந்த விடை புதியதல்ல. தமிழுணர்வாளர்கள் எனப்படுவோர் தமிழக மக்கள் மீது தேவைப்படும் போதெல்லாம் வைக்கும் குற்றச்சாட்டுதான் இது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றிருந்தால், "தமிழன் ஏமாளியல்ல என்பதை நிரூபித்து விட்டான்" என்பன போன்ற வீரவசனங்களை நாம் கேட்க நேர்ந்திருக்கும்.

ஆனால் உண்மை இந்த இரண்டு முனைகளிலிருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவையும் ராமதாசையும் தாங்கள் நம்பியதைப் போலவே தமிழர்களும் நம்பவில்லை என்ற காரணத்துக்காக அவர்களை சொரணையற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தனி ஈழப் பிரகடனத்தை வெளியிட்ட ஜெயலலிதா, போரை நிறுத்துவதற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்கும், அறிக்கை விடுவதற்கு மேல் இனி வேறு ஏதாவது செய்யப்போகிறாரா என்ற கேள்விக்கு ஈழ ஆதரவாளர்கள் விடை சொல்ல வேண்டும்.

போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சொர்க்கவாசல் திறந்து தரிசனம் எப்போது கிடைக்கும் என்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கே தெரியாதபோது அவர்களை நம்பியிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து அமெரிக்கத் தூதரகத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டார் நெடுமாறன். உலக மக்களின் எதிரியும் ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்துவரும் ஆக்கிரமிப்பாளனுமான அமெரிக்க வல்லரசின் அதிபர் ஒபாமாவுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்கு! ஒபாமாவால் ஒப்புக்கு விடப்பட்ட ஒரு அறிக்கைக்கு இத்தகைய அடிமைத்தனமான மரியாதை!

கருணாநிதி, சோனியா, அத்வானி, ஜெயலலிதா... கடைசியாக ஒபாமா! இந்திய மேலாதிக்கத்தையோ, அமெரிக்க வல்லரசையோ அம்பலப்படுத்தாமல், அவர்களை எதிர்த்துப் போராடாமல், அவர்களுடைய தயவில் விமோசனம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள், மக்கள் மீது நம்பிக்கை வைக்காததில் வியப்பில்லை.

பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் தாங்கள் நம்பியது மட்டுமின்றி, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி, ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி முதலான பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றி விட முடியும் என்று கணக்கு போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது.

இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரசின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால், அந்த வெற்றியை ‘ஈழ ஆதரவு அலை’ என்று வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.

தாங்கள் அளித்த வாக்குகள் தந்த அதிகாரத்தையும், தாங்கள் வழங்கிய வரிப்பணத்தையும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது, அது குறித்த உணர்வின்றி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய உண்மை. இந்த உண்மை தெரிந்திருந்தும் அதனை ஈழ ஆதரவாளர்கள் அங்கீகரிக்கவில்லை. தமிழகமே பொங்கி எழுந்து நிற்பதாகப் புனைத்துரைத்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்தப் புனைவை உண்மையாக்கிவிடலாமென முனைந்தார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

ஈழப் பிரச்சினையின்பால் அனுதாபம் கொண்டிருந்த மக்களும்கூட ஜெயலலிதா அணியினர் மீது கடுகளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. ‘இலட்சக்கணக்கில் கூட்டம் கூட்டி, மாநாடு நடத்தும் இந்தக் கட்சிகளுக்கு ஈழப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தமது போராட்டம் மூலம் கருணாநிதி அரசை நிலைகுலைய வைத்திருக்க முடியும். பிணத்தைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதைத் தவிர இவர்களுக்கு வேறு நோக்கமில்லை’ என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். மக்களிடம் இருந்த இந்தத் தெளிவுகூட, மார்க்சிய லெனினியவாதிகள் என்றும் பெரியாரிஸ்டுகள் என்றும் கூறிக் கொண்டோரிடம் இல்லை என்பதே உண்மை.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றி விடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயன்றார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

சாகச வழிபாடும் சரி, இத்தகைய சந்தர்ப்பவாத வழிமுறைகளும் சரி, அவை மக்களுடைய அரசியல் பங்கேற்பையும், முன்முயற்சியையும் மறுப்பதுடன் அவர்களை வெறும் பகடைக்காய்களாகவே கருதுகின்றன. சூதாட்டத்தின் தோல்விக்குப் பகடைக்காய்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?

இந்தத் தேர்தலில் பல வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக் கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.

ஆனையிறவில் பெளத்த மடாலயம், கிளிநொச்சியில் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்பட்டு படையினர் நினைவாலயங்கள்: சம்பந்தன்


"ஆனையிறவு நுழைவாயிலில் பெளத்த மடாலயம் கட்டப்படுவதாக அறிகின்றோம். கிளிநொச்சியில் படையினருக்கான நினைவாயலங்கள் கட்டப்படுகினறன. இதனால் பொதுமக்களின் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் கலாசாரம் அழிக்கப்படுகின்றது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை நேற்று தெரிவித்த சம்பந்தன், "இதுதான் தமிழ் மக்களின் விடுதலையா? இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்வதற்காகவா விடுதலைப் புலிகளை அழித்தீர்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

"எமது மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். துருப்புக்களின் இருப்பு எமது மக்களுக்குப் பெரும் தொல்லையாக உள்ளது. துருப்புக்களின் இருப்புக் காரணமாக நாம் அடிமைகள் போல இருக்கின்றோம். கெளரவத்துடன் வாழ்வதற்கான உரிமை எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களின் உரிமைகளை உங்களால் மறுக்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.

சம்பந்தன் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

"வவுனியா முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும். எங்கிருந்து அந்த மக்கள் வந்தார்களோ அந்த இடங்களிலேயே அவர்களை மீளக்குடிமயர்த்த வேண்டும். இது விடயத்தில் இந்த அரசுக்கும் ஐ.நா. மற்றும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கின்றது.

மக்களை மீளக்குடியேற்ற 180 நாள் வேலைத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று 100 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் மந்த கதியிலேயே முன்னேற்றம் இருக்கின்றது. அகதிகள் விடயத்தில் அரசின் நடவடிக்கைகளையிட்டு எம்மால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

பருவமழை தொடங்க முன்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அனர்த்தம் இடம்பெறும். மீள்குடியேற்றத்துக்கு அரசு கண்ணிவெடிகளைக் காரணமாகக் கூறுகின்றது. கண்ணிவெடிகள் இல்லாத இடங்கள் தொடர்பான விபரங்களை நாம் அரச தலைவரிடம் கொடுத்துள்ளோம்.

தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது முஸ்லிம்களும் மீளக்குடிமயர்த்தப்பட வேண்டும் எனவும் அரச தலைவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

போர் முடிவடைந்துவிட்டதால் துணைப் படைக் குழுக்களிடம் இருந்து உடனடியாக ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களை முற்றாகச் செயல் இழக்கச் செய்ய வேண்டும். வடக்கு - கிழக்கில் இருந்து இவர்கள் களையப்பட்டால் மட்டுமே எம்மால் சுதந்தரமாகச் செயற்பட முடியும்.

படையினரின் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும். படைக் குவிப்பு நிறுத்தப்பட வேண்டும். வடக்கு - கிழக்கில் இருந்து படைகளுக்கோ காவல்துறைக்கோ ஆட்சேர்ப்பு இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அதனை பொதுமக்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே பார்ப்போம்."

இவ்வாறு சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்

புலிகளை வெற்றிகொள்ள கையாளப்பட்ட உபாயங்கள் என்ன?: ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள வெளிநாட்டு படைத்துறை அதிகாரிகள்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெறுவதற்கு சிறிலங்காப் படை எவ்வாறான உபாயங்களைக் கையாண்டது என்பதையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த படைத்துறை அதிகாரிகள் பலர் தற்போது கொழும்பு வந்திருப்பதாக சிறிலங்காவின் ஆங்கில நாளேடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா அரசு முறியடித்து நான்கு மாதங்கள் சென்றுள்ள நிலையில், இந்தப் போரில் சிறிலங்காப் படையினர் புதிய உபாயங்களைக் கடைப்பிடித்திருப்பதாகக் கருதும் உலக நாடுகள் பலவும் அந்த உபாயங்களை அறிந்துகொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சக்தி வாய்ந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்காப் படையினர் கையாண்டிருக்கக்கூடிய புதிய உபாயங்கள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் காட்டுவதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பசிபிக் நாடுகளின் படைத்துறை தளபதிகளின் மாநாடு இரு வாரங்களுக்கு முன்னர் ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட பலம் வாய்ந்த நாடுகளின் படைத்துறை தளபதிகள் பலரும் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படை எவ்வாறு வெற்றிகொள்ள முடிந்தது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓகஸ்ட் மாதம் 24 ஆம் ஆம் நாள் தொடக்கம் 28 ஆம் நாள் வரையில் ரோக்கியோவில் நடைபெற்ற இந்த மாநாட்டை அமெரிக்காவும், ஜப்பானும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த நாடுகளின் படைத்துறை தளபதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தரைப்படைத் தளபதி ஜகத் ஜயசூரிய, மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் 13 நாடுகளைச் சேர்ந்த படைத்துறை தளபதிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுக்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்புக்களின்போது புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படை எவ்வாறு முன்னெடுத்தது என்பதை அறிவதிலேயே அவர்கள் அக்கறை காட்டினார்கள்.

இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தமது படைத்துறையின் உயர் மட்டக்குழுக்களை சிறிலங்காவுக்கு அனுப்பிவைப்பதற்கு இந்த படைத்துறை தளபதிகள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடனான போரை தனியாக ஆராய்வதற்கும் அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள்.

சிறிலங்காப் படை கையாண்ட உபாயங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுப்பதற்கும் சில நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்த சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், இருந்த போதிலும் இந்தத் தகவல்களைப் பணத்துக்கு 'விற்பனை' செய்வதற்கு தாம் விரும்பவில்லை எனவும், இந்த அனுபவங்களை இலவசமாகப் பகிர்ந்துகொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே பல நாடுகளைச் சேர்ந்த டசன் கணக்கான படை அதிகாரிகள் சிறிலங்காப் படையினரின் உபாயங்கள் தொடர்பாகக் கற்பதற்காக கொழும்பு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படைத்துறை உபாயக் கல்வி நிலையம் ஒன்றை சிறிலங்காப் படை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அங்கு இடம்பெற்ற வன்முறையற்ற போராட்டம் தொடர்பாக விளக்கும் வகையில் கல்வி நிலையம் ஒன்றை அமைத்திருக்கின்றது. வெளிநாடுகளைச் சேர்ந்த அரசுகளும் தனிப்பட்டவர்களும் இங்கு கல்வி கற்க முடியும். அதற்காக கட்டணம் ஒன்றும் அறவிடப்படுகின்றது.

அதேபோல சிறிலங்கா அரசும் தமது படைத்துறை உபாயங்கள் தொடர்பான கற்கைகளுக்கான கல்வி நிலையம் ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என பலரும் ஆலோசனைகளை வழங்கிவருகின்ற போதிலும் சிறிலங்கா அரசு அது தொடர்பான தீர்மானம் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

போர்க் குற்றம் புரிந்த நாடு சிறிலங்கா: அடையாளப்படுத்தியது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்

சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை எதுவும் செய்யவில்லை.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துலக வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில், எந்தெந்த நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துள்ளன, எந்த நாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன (மஞ்சள் புள்ளிகள்), சட்ட நடவடிக்கைகள் எந்தெந்த நாடுகளில் நடைபெற்று வருகின்றன (4 சிவப்பு புள்ளிகள், ஆபிரிக்க நாடுகளில்), எந்தெந்த நாடுகளில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன (பச்சைப் புள்ளிகள்) போன்ற விவரங்கள் நிறங்கள் மூலம் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அந்த வரைபடத்தில் சிறிலங்கா பச்சைப் புள்ளியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சிம்பாப்பே மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளும் பச்சைப் புள்ளிகளால் காட்டப்பட்டுள்ளன. இதனுடைய அர்த்தம் என்னவெனில் இந்த மூன்று நாடுகளிலும் அரசாங்கங்கள் உட்பட தரப்புகளால் போர்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்பதாகும் என இன்னர் சிற்றி பிறஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் ஆபிரிக்காவில் உள்ள தோல்வியடைந்த தலைவர்களுக்கு எதிராக மட்டுமே விசாரணைகள் நடத்தப்படுகின்றன எனவும் அது தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பினபோது, அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ வைத்திருந்த ஆவணங்களுடன் இந்த வரைபடமும் வைக்கப்பட்டிருந்தது என இன்னர் சிற்றி பிறஸ் தெரிவித்தது.

கோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும் - அ.மார்க்சின் பொய்யும்

ஈழப்போராட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வட கிழக்குப் பகுதியில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சூழலில் தமிழ் சிறு பத்திரிக்கைகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளை கடும் விமர்சனம் செய்து ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.


இந்த கட்டுரையாளர்கள் தங்களை மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகவாதிகள் என இக்கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டும் வருகின்றனர். விடுதலைப்புலிகளை விமர்சனம் செய்வதில் கட்டுரையாளர்களின் அரசியல், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுத்து விட முடியாது.

ஆனால்,

இக்கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளில், போரில் ஈடுபடாத ஈழத்தமிழ் மக்கள் வதை முகாம்களில் துன்பப்படுவதையோ, இம்மக்களை பட்டினியிட்டும் நோய் மூலமும், குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழல்களை மறுத்தும் இராஜபக்சே அரசு தமிழ் இன அழித்தொழிப்பு மேற்கொள்வதைப் பற்றியோ, அரச வன்முறை குறித்தோ சிறுவிவாதத்தைக்கூட எழுப்புவதில்லை.


ஈழத்தமிழர்களின் இன்றைய துயரங்களுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தனி மனிதனின் வன்மமே காரணம் எனும் தொனியில் எழுதப்படும் பல ‘அறிவு ஜீவிகளின்’ கட்டுரைகள் ‘தேசிய இன விடுதலைப் போராட்டம் தவறானது’ என்ற புள்ளியில் முடிவடைகின்றன.

ஜூன்-செப்டம்பர்-2009 புதுவிசை இதழில் அ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் பொத்தம் பொதுவாக - கோவை நீலாம்பூரில் நடந்த இராணுவ வாகன தடுப்பு ஆர்ப்பாட்ட செய்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் - 02.05.2009-ம் தேதி இலங்கை இராணுவத்திற்கு உதவ இந்திய இராணுவ வண்டிகள் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவ வாகனங்கள் தடுக்கப்பட்ட நிகழ்வினைக் குறிப்பிட்டு - பின் “தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்து விட்டது” என நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது சிறைப்பட்டோர் வாக்குமூலம் அளிப்பது வேதனை காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் இந்நிகழ்வில் பங்கெடுத்தவர்களின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித் தன்மை இவற்றை அவர் நையாண்டி செய்வதாகவே கருதத் தோன்றுகிறது. உண்மையில் இவ்வாறு போகின்ற போக்கில் ஏளனம் செய்யும் முன் தான் குறிப்பிடும் செய்தி உண்மையானதா என அ.மார்க்ஸ் சரிபார்க்கத் தவறி விட்டார்.

தமிழக மக்கள் மத்தியில் ஈழ மக்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமான சனநாயகக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதன் தாக்கத்தால் தான் தமிழக அரசு தனது சட்டமன்றத்தில் இரண்டுமுறை இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசோ தொடர்ந்து இராணுவ தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வந்தது. ஈரோடு, கோவை வழியாக இராணுவ டாங்கிகள் கொச்சிக்கு அனுப்பப்பட்டு கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதாக புகைப்படத்துடன் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசோ, மத்திய அரசோ மறுக்கவில்லை. மேலும், இன்றுவரை இந்திய அரசு இராணுவ உதவி செய்ததை இலங்கை நன்றியுடன் நினைவு கூர்கின்றது. நமது நாட்டு இராணுவ அமைச்சரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தக் கால கட்டத்தில் தான் 02.05.2009-ம் தேதி சேலம், கோவை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்தபோது, தன்னெழுச்சியாக இந்திய அரசின் தமிழர் விரோத மனப்பான்மையினை எதிர்க்கும் ஒரு அடையாள சனநாயகப்போராட்டமாக – அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்யவே கோவை நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே குடும்பம், குடும்பமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் இராணுவ வாகனத்திலிருந்த சில பெட்டிகளை சாலையில் தூக்கி வீசி எறிந்தனர். வாகன முகப்புக் கண்ணாடி மற்றும் விளக்கு உடைக்கப்பட்டது. ஒரு இராணுவ வாகனத்திலிருந்த கட்டில் மற்றும் மரச்சாமான் எரிக்கப்பட்டது. இது உடனடியாக அங்கிருந்த அமைப்பாளர்களான கு.ராமகிருஷ்ணன் போன்றோர்களால் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பின் கூட்டம் கலைந்து போய்விட்டது.

ஆனால், அதன் பின்பு, வெகுநேரம் கழித்து இராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் இரும்பு பைப்களுடன் வந்தார்கள். சம்பவ இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கினர். ஒரு பத்திரிக்கையாளருக்கு கை எலும்பு முறிந்து போனது. காவல்துறை தலையிட்டு பொது மக்களின் மீதான தாக்குதலைத் தடுத்தது. அதன் பின்பு, பெரியார் தி.க.செயலர் கு.இராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பெரியார் தி.க.வினர், மறுமலர்ச்சி தி.மு.க.வினர் என பலர் கைது செய்யப்பட்டனர்.

அன்று இரவு 1 மணியளவில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த பொன்.சந்திரன் வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அவரின் மனைவியை விசாரிக்க வேண்டும் என்றனர். இரவில் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல என்று சட்ட விதிகளை சுட்டிக்காட்டி வாதிட்டபோதும், அவர்கள் பொன்.சந்திரன் மற்றும் அவரின் மனைவி தனலட்சுமியைக் கைது செய்தனர்.

பின் முதல் தகவல் அறிக்கையில் மற்றும் பலர் என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு காவல்துறை ஈழ ஆதரவு பேசிய பலரை தேடியது. நீலாம்பூரில் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் வேடிக்கை பார்த்த பிரபாகரன் என்ற ஒரு இளைஞரை அந்த பெயருக்காகவே கைது செய்தனர். அவர் மனைவி தன் கணவர் இந்நிகழ்வில் தொடர்பற்ற அப்பாவி என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்து வந்தார்.

ஈழ ஆதரவுக் கூட்டம் நடத்தியவர்கள் அதற்காக குரல் கொடுத்த பலர் தாங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்படலாம் என பயந்து தலைமறைவாயினர். அடக்குமுறை அதிகரித்தது. இரவுகளில் பெரும் கொள்ளையனைத் தேடுவது போல இவர்களின் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டன.

இவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த காவல்துறை முயன்றது. ஒரு நண்பரின் மகள் பள்ளி மாணவி (இளவர்). அவரைக் கைது செய்ய ரேசன் கார்டை சரிபார்ப்பது போல உளவுப்பிரிவு காவல்துறை அவரின் வீட்டில் வேவு பார்தத்து. இதனையடுத்து பள்ளியில் படிக்கும் சிறுமியை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அவர் தனது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தார். அவர் மூன்று மாதம் கழித்து திரும்பி வரும்போது காவல்துறை வீட்டு உரிமையாளரை மிரட்டி அவரின் வீட்டை வேறு ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்திருந்தது என்பது மற்றுமொரு சோகம்.

வேலைக்குப் போக முடியாது; குடும்ப பொருளாதாரத்தை எதிர்நோக்க முடியாத காரணங்களினால் சிலரின் குடும்பங்கள் பெரும் உறவுச் சிக்கல்களை எதிர்கொண்டன. காவல்துறை மனரீதியாக பெரும் அச்சுறுத்தல்களை இவர்களுக்குக் கொடுத்தது. இந்த நிகழ்வினை ஒட்டி கைதானவர்கள் மீது தேச துரோகப்பிரிவு வழக்கு சேர்க்கப்பட்டது. பலர் அடக்குமுறையின் துயர் தாங்காது தாங்களாகவே காவல்துறையில் சரண் அடைந்தார்கள். கோவை குண்டு வெடிப்புக்குப் பின் காவல்துறை கோவையில் நடத்திய பெரிய மனித வேட்டையாக இது இருந்தது.

முதலில் கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த பொன்.சந்திரன், தனலட்சுமி ஆகியோருக்கு நானும், பி.யூ.சி.எல் தலைவர் வி.சுரேஷ், அபுபக்கர், இரா.முருகவேள் ஆகியோரும் ஆஜரானோம். மற்றவர்களுக்கு வழக்குரைஞர் ப.பா.மோகன் வாதாடினார். எங்கள் சார்பாக வி.சுரேஷ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார்.

எங்கள் வாதத்தில் எங்கும் நாங்கள் தவறான குறுஞ்செய்திகளைப் பார்த்துப் போனதாக குறிப்பிடவில்லை. உண்மையில் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்றம் இயற்றிய ‘போர் உதவியை இலங்கைக்கு செய்யக்கூடாது’ என்ற தீர்மானத்திற்கும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் ஜெனிவா மாநாட்டு வரைவுக்கும் எதிராக இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதையும், சொந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அதிகார வர்க்கம் செயல்படுவதையும் சுட்டிக் காட்டினோம்.


இந்திய பாராளுமன்றம் 1960-ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு வரைவு சட்டம் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டணைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன் வைத்தோம். எங்களின் பிணை மனுக்களை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்திலும் இந்த அரசியல் வாதங்களே முன் வைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னார். இந்த உறுதிமொழிப் பத்திரத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை என மறுத்தோம். ஆனாலும், நீதிமன்றம் வலியுறுத்தியதற்கு இணங்க மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் எங்கேயும் தவறான குறுஞ்செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டதாக குறிப்பிடவில்லை. நாங்கள், எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, ‘தவறான செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டது’ என அ.மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, பெரியார் தி.க.வோ, மதிமுகவோ கொடுக்கவில்லை. அரச வன்முறை தலைவிரித்தாடும் போது தனது சிறு எதிர்ப்பின் மூலம் அதனை கேள்விக்குள்ளாக்குவதை சிவில் வீரம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மதிக்கின்றனர். இத்தகைய சிவில் வீரத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக கோவை இரானுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அ.மார்க்ஸ் காணாமல் போனது விந்தையானது.


உலகில் போருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் நெடிய போராட்டத்தின் ஒரு தொடர்ச்சிதான் இந்த நிகழ்வும் ஆகும். இந்நிகழ்வை ஒட்டி கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு தாக்கல் செய்த தேச பாதுகாப்பு வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், யாரையும் இனி இவ்வழக்கில் கைது செய்து சிறைப்படுத்தத் தேவையில்லை என கு.இராமகிருஷ்ணன் (பெ.தி.க) பிணை மனுவின்போது கூறி “மற்றும் பலர்” என்ற அடிப்படையில் நினைத்தவர்களை எல்லாம் கைது செய்து சிறைப்படுத்தலாம் என்ற காவல்துறை அடக்குமுறைக்கும் தற்போது நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிகழ்வில் இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகவில்லை என மறுத்து கட்டுரை எழுதும் அ.மார்க்சிடம் அதற்கான வலுவான ஆதரவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு பேசும் பொய்யை உண்மை என நம்பும் மனநிலை ஏற்புடையதல்ல. மத்திய அரசை எதிர்க்கும் நாம் நமது ஊரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். இதனை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றோம். அதைப்போன்றுதான் இந்திய இராணுவத்திற்கு எதிராக கோவையில் ஈழ ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டமாகும். மக்கள் போராடத் தயாராக இருந்ததின் வெளிப்பாடே குறுஞ்செய்தி மூலம் அவர்கள் திரண்ட நிகழ்வு. எவர் கொடுத்த போதும் மக்களின் உணர்வுக்கு எதிரான செய்திகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன.


அடக்குமுறையை எதிர்கொண்டவர்களின் பாதிப்புக்களை - உண்மைகளை மனசாட்சியோடு உள்வாங்கியிருந்தாலே போகின்ற போக்கில் நையாண்டி செய்யும் குரூரம் நிகழ்ந்திருக்காது.

- ச.பாலமுருகன்,

பொதுச் செயலாளர்,

மக்கள் சிவில் உரிமைக்கழகம்,

தமிழ்நாடு மற்றும் புதுவை.

புலம்பெயர் நாடுகளில் எமது தோல்வியை தடுப்போம்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான்.

இனியாவது ஒரே அணியில் எல்லாரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!
இன்றைய இறுக்கமான கால கட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் அதிகாரப்போட்டி, அதை வெளிப்படுத்தும் விதம், என்பன எம் தமிழ் ஊடகங்கள் ஊடகாவே திரிக்கப்பட்டு வியாபார ரீதியில் அவை விற்பனைத்திரியாக்கப்பட்டுள்ளது என்பதை சகல தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் பொறுப்பும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும்.

சின்ன குடில் எனினும் நெறி தவறாது வாழ வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பு. அது புலம்பெயர்ந்து வந்து விட்டாலும் இன்னும் அவர்களின் குருதியில் இணைந்திருக்கும் என்று நம்புகின்றேன். வாழ்வாதாரத்தை மட்டும் தேடும் நிலையில் இன்று தாயக மக்கள் அடக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அது பற்றி அக்கறை இன்றி தமிழ் ஊடகங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை!

கே.பியை காட்டிக்கொடுத்தது யார்?

அவர் தானாகவே இணைந்தாரா?

என்று எத்தனையோ கேள்விகளை கேட்டு தமிழ் பத்திரிகைகள் தமிழ் மக்களை குழப்பி தமது வியாபாரத்தை பெருக்க முயற்ச்சிக்கின்றன.

ஒரு குறிப்பட்ட ஒரு காலப்பகுதியில் வந்த செய்திகள் குறிப்பிட்டு சொல்ல கூடிய தமிழ்த் தேசிய வாதிகள் மீதான சேறுபூசல்களாகவும், அதே நேரம் சிலரின் தகவல்கள் ஒரு சிலரால் திரிக்கப்பட்டு தமது காழ்ப்புணர்வு நிகழ்ச்சி நிரல் அரங்ககேற்றப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை!

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் ஜேர்மன், பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளில் வேகமான பரப்பட்ட செய்திகளும், சில மிரட்டல்களும் இவற்றை சொல்லி நின்றன என்றால். கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளில் எதைப்பற்றியும் அக்கறையில்லாத தன்மையில் மக்களும் அவர்களை வழிநடத்தும் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன.

வன்னியில் மே மாதம் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சதாரண மக்களாகிய எம்மை பாதித்துள்ளதே தவிர வேறு எந்த அமைப்பு சார் நபர்களையும் பாதிப்படைய வைக்கவில்லை என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

ஏன் எனில் அவர்களது செய்ற்ப்பாடுகளில் முகாமில் இருக்கும் மக்கள் பற்றியதோ, தமிழீழ விடுதலை பற்றியதாகவோ இல்லை என்பதே!

காலத்தின் பெயரிலும், அந்த காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களுமாகவே இவர்கள் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் ஆக்க பூர்வமற்ற செயற்ப்பாடுகளை செய்த படி காலத்தையும் அடுத்தவன் கருணையையும் எதிர்பார்ப்பது எவ்வளவு அறிவிலித்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வெகுசன ஊடகங்கள் என்ற ரீதியில் பல பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும், தம்மை அரசியல் ரீதியில் நிலைநிறுத்த காலம் பார்த்துக்கொண்டிருந்தவை போல செயற்ப்படுவது தமிழினத்தின் வரலாற்றுக்கே இழுக்காகும். நடந்து முடிந்த கொடிய போரில் தம்மால் முடிந்தவற்றை செய்த போராளிகளுக்கும் அந்த மண்ணுக்காய் உயிர்கொடுத்த மாவீரர்களுக்கும் இந்த ஊடகங்கள் செய்யும் இரண்டகமாகும்.

இந்த இரண்டகத்தை செய்யும் தமிழர்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா,?

சிங்களவர்களுடன் சகவாசம் வைக்கலாம் வியாபாரம் செய்யலாம் என்று இன்றும் மேலதிக ஒப்பந்தங்களில் கையேழுத்திடும் தமிழர்கள் எப்படி அழைக்கப்படவேண்டியவர்கள்?

தேசியத்தின் பால் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தார்களோ அதை நோக்கி மக்களை நகர்த்த முடியாமல் தாமும் நகர முடியாமல் திண்டாடும் இவர்கள் எந்த அடிப்படையில் தேசிய வாதிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

சண்டையில் தோல்விக்கு பின் ஆய்வுகளுக்கோ, பகிரங்க மேடைகளுக்கோ வரப்பயந்து ஒழித்து வாழும் நபர்கள் எல்லாம் எந்த அடிப்படையில் இதுநாள் வரையில் செயற்ப்பட்டனர்?

வாய்கிழியப் பேசிய தமிழீழம் என்னவாயிற்று?

வீதி வீதியாய் மக்களை இறக்கி போராட்டம் நடாத்திய மக்கள் சமூகம் எங்கே?

மாணவர் அமைப்புக்கள் எங்கே?

குழம்பிக்கிடக்கும் எங்கள் மக்கள் முன் நாம் செய்ய வேண்டிய பாரிய பணி ஒன்று காத்திருக்கின்றது. அது மக்களிடம் போய் போராட்டம் நடாத்த பணம் கேட்பதல்ல. பணம் கேட்க சென்றவர்கள் இன்று பரப்புரைக்கு செல்ல வேண்டிய காலம் இது. வீடு வீடாக சென்று விடுதலைக்கு உரம் சேர்ப்பதற்க்காய் எம்மால் பணம் சேர்க்க முடியும் எனில், ஏன் ஒவ்வோர் தமிழர் வீடுகளுக்கும் சென்று, எமது இன்றைய நிலையை பற்றிய விளக்கத்தை கொடுக்க கூடாது?

இப்போது வெளிநாட்டவர்களைவிட அதிக குழப்பத்தில் இருப்பது நமது தமிழ் மக்களே! அவர்களது குழப்பங்களும் நாங்களே காரணமாகிவிட்டோம்.

ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்க மக்களுக்குள் இன்னோர் கதை புனையப்பட்டுக்கொண்டிருக்க சிங்கள அரசு இன்னோர் கதையை செல்ல எந்த பக்கம் செல்வதை மக்கள் நம்புவது?

தமிழ் மக்களுக்குள் எது நம்பகமான ஊடகம்!

இவற்றை தெளிவு படுத்த வேண்டிய கடமை யாரினது?

வெறுமனே போராட்டத்துக்கு பணம் சேர்க்க மட்டும் வீடு வீடாக சென்ற நாம் இன்று எம் செயற்ப்பாடுகளை மாற்றுவோம். எம் மக்களுக்கு நிலமையை உண்மையை தெளிவு படுத்துவோம். அதற்க்கான காலமே இது.

மாற்றங்களை நோக்கிய நகர்வில் நாமும் பங்கேற்போம் எமது மக்களையும் பங்கேற்க வைப்போம். தமிழீழ புற நிலை அரசு பற்றி அறிவு 10 சத வீத மக்களுக்கு கூட இல்லை. அப்படியிருக்கையில் அப்படியான செயற்ப்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கப்ப போவது.. விளக்கப் போவது யார்?

முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் அந்தந்த நாட்டுப்பிரதிநிதிகளே!


நாம் வானொலிக்குள்ளும் பத்திரிகைக்குள்ளும் சண்டையிடுதல் இனியும் கேவலம்!

இனியும் மக்களுக்குள் பிரிவினையை விதைத்து செயற்ப்படுதல் முட்டாள்த்தனம். இன்னும் இன்னும் வேகமாக நாம் செயற்ப்படவேண்டும். தன்னை நாட்டைக்காக்க எதையும் அர்பணிக்க தயார் என்று சரத் பொன்சேகா

நம் நாட்டை பிடித்த படியே அவன் அறை கூவல் விடுகின்றான். ஆனால் கேவலம் எம்மால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு பரப்புரை நடவடிக்கையை கூட எமது மக்களுக்குள் செய்ய முடியாத படி முடங்கி கிடக்கின்றோம்.


புலம்பெயர் நாடுகளில் துரித கதியில் சிங்கள ஆட்சியாளர்களின் பரப்புரையாளர்கள் பலரை தம்வசப்படுத்தி விட்டனர். ஆதற்க்கு காரணம் முகாம்களில் உள்ள எம் மக்களுக்கு நாம் எம்மால் முடிந்த உதவியை கூட செய்யாமல் அசட்டையாக உள்ளமையே!

துன் உறவு பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்க்கு நிவாரணம் பெறுவதையே எந்த ஒரு உறவும் விரும்புவான். அதற்க்கான எந்த நடவடிக்கையையும் செய்யாமல் நாம் இருப்பதே எமக்கு புலம்பெயர் நாடுகளில் கிடைக்க போகும் தோல்விக்கு முதற்காரணியாக அமையும்.


நாட்டில் ஆயுதப்போரின் தோல்வியை தடுக்க முடியாத கையாலாகத்தனத்துடன் சேர்ந்து கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள், நிச்சயம் இந்த சேர்வு நிலை தொடரும் பட்சத்தில் புலம்பெயர் கட்டமைப்புக்களிலும் தோல்வியை தழுவுவது தவிர்க முடியாததாகும்.
எனவே உறவுகளே விழித்தெழுங்கள்.. நீங்கள் தெளிந்திருங்கள்..!
தமிழர் செய்திக்காக…
கோகுலன்

கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்
சிங்களவன் கொட்டமடக்க எம் தலைவர் பெயர் சொல்லி புறப்படுவோம்.
பிரபாகரன் தன் இளைய போராளிகளுக்குச் சொன்ன செய்தி

கடந்த மாவீரர்தின உரையில் ஒலித்த எம் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!!! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி அவலங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய பொழுது புலம்பெயர் தேசங்களில் உறக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பியவாறு புலிக் கொடிகளோடு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். உலகம் வியக்கும் வகையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் ‘நாங்கள் புலிகள்’ என்று அறிக்கையிட்டார்கள். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தினார்கள்.

அந்தத் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் இனப் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பியது. இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐ.நா.வில் முன் வைத்தது.

உலகின் அசைவியக்கத்தில் உடனடியாகவே பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதற்கான எவ்வளவோ புறக் காரணங்கள் குறுக்கே நந்தி போல் நின்று தடுத்து விடும். தமிழீழ மக்களது விதியும் இந்தியா உருவத்தில் வந்து பேரழிவுகளை நிகழ்த்துகின்றது. இந்தியா என்ற பெரும் சந்தையை எமக்காக இழப்பதற்கு எந்த நாடும் விரும்பவில்லை. அதனால், ஈழத் தமிழர்கள் மீதான உலகின் கரிசனைகளும் இந்தியத் தலையீட்டால் பலவீனப்பட்டுப் போயுள்ளது.

பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் எதிர்த் துருவங்களாக கூர்மை பெற்று வரும் சீன - இந்திய ஆதிக்க சக்திகளை சிங்கள தேசம் தமிழீழ மக்களுக்கெதிரான இன அழிப்பு யுத்தத்திற்கு நன்றாகவே பயன்படுத்தியுள்ளது. சீனாவின் முத்துமாலை வியூகத்தை உடைக்க முடியாத இந்திய அரசு, சிங்கள தேசத்தைக் குளிர்மைப் படுத்துவதன் மூலம் சீனாவின் கரங்களுக்குள் முற்றாக அடங்கிப் போவதைத் தடுக்க விரும்புகிறது.

இயல்பாகவே, தமிழகத்துத் தமிழர்களையே ஏளனத்துடன் கையாளும் இந்திய அரசு ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கியது. ஆக மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களின் விளைவுகள் பாரிய பலன்களை அடையாமல் போனதற்கும் இந்தியாவே காரணமாக இருந்துள்ளது.

இருப்பினும், புலம்பெயர் தேசங்களில் நாம் மேற்கொண்ட போராட்டங்கள் அந்த நாடுகளின் அனுதாபங்களை ஈழத் தமிழர்கள்பால் ஈர்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ‘காலம் தாழ்த்திய இந்தப் போராட்டங்களை இருபது வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொண்டிருக்க வேண்டும்’ என எம் மீது அக்கறை கொண்ட மேற்குலக சக்திகளே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

காலம் கடந்தாவது நாம் விழித்துக் கொண்டோம் என்ற நம்பிக்கை தற்போது சிதைவடைந்து போவதாகவே அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. தற்போது, புலம்பெயர் தேசங்களில் தமிழீழத் தேசாபிமானிகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மிகக் குறைந்த அளவு மக்களே கலந்து கொள்கின்றனர். இது அவர்களது மனத் தெளிவின்மையையே உணர்த்துகின்றது.

நாங்கள் எங்களது மக்களைக் காப்பாற்ற இவ்வளவு தொடர் போராட்டங்களை நடாத்தியும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாகக் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களது ஆயுத பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டு விட்டதே என்ற வேதனை. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், இரண்டு இலட்சத்திற்கும் மேலான மக்களும் தமது இன்னுயிரை ஈந்தும் அவர்களது தாயகக் கனவு கனவாகவே தொக்கி நிற்கிறதே என்ற ஆற்றாமை.

பல்வேறு நாடுகளின் துணையோடு சிங்கள அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய வன்னி மண்ணில் வாழ்ந்த மக்கள் சிங்கள வதை முகாம்களில் சிக்கி மடிகிறார்களே என்ற ஏக்கம். இத்தனைக்கும் மேலாக தமிழ்த் தேசியத் தலைவர் பற்றியும், தளபதிகள் பற்றியும் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு பட்ட செய்திகள் என்று எமது மக்கள் மனங்களைப் பல வழிகளிலும் சிதைத்து விட்டுள்ளது.

ஆனாலும், கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்!’ என்ற அவரது இந்த வேண்டுகோள் தீர்க்கதரிசனமானது. பல தசாப்தங்களைக் கடந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ள எமது தேசியத் தலைவர் எமது தாயக விடுதலைப் போராட்டத்தை எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்.

அது போதும் நாங்கள் அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க. இதில் சந்தேகமோ, சோர்வோ கொள்வதற்கு எந்தக் காரணமும் கிடையாது. தமிழீழ விடுதலை நோக்கிய எமது பயணம் தேசியத் தலைவர் அவர்களால் தீர்க்கமான முறையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பாதையில் நம்பிக்கையுடன் பயணிப்பது மட்டுமே எமது பணியாக இருக்க வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு கைத்துப்பாக்கியுடன் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் இயந்திரத் துப்பாக்கிகளுடனும் பீரங்கி வண்டிகளுடனும் சிங்கள இராணுவம் பூதாகரமாகவே இருந்தது. எதிரியின் பலவீனங்கள் அத்தனையையும் தமது பலமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் அத்தனை வெற்றிகளையும் எமக்காகப் பெற்றுத் தந்தார்கள்.

இப்போதும் எதிரிகள் பூதாகரமாகப் பெருக்கமடைந்திருந்தாலும் அவர்களது பலவீனங்களும் பன்மடங்காக அதிகரித்தே உள்ளன. அவற்றினூடாகப் பயணம் செய்து எமது இலக்கை நாம் அடைய முடியும்.

சிங்கள தேசத்தின் கொடூரங்களை நாங்கள் வாழும் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் அம்பலப் படுத்துவதனூடாக சிங்கள தேசத்திற்குப் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதி உதவிகளைத் தடுத்து நிறுத்தலாம். சிங்கள தேசத்து கொடுங்கோல் அரசியலாளர்கள் இந்த நாடுகளுக்கு வருவதையும், உதவிகள் கோருவதையும் கூட எம்மால் தடுக்க முடியும்.

இவ்வளவு சக்தி பொருந்திய போராட்டங்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வதனூடாக எமது தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை நாம் நம்ப வேண்டும். எமது நம்பிக்கைகளை எமது சக மனிதர்களுக்கும் விதைப்பதனூடாக நாம் ஒரு சர்வதேச அழுத்தங்களை சிங்கள அரசு மீது ஏற்படுத்த முடியும்.

புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா?

ஈழத்தமிழர் விஷயத்தில் ராகுல்காந்தி கூறுவதெல்லாம் தவறு: வைகோ

இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.



சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,



அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி அரசியல் பேசியது கண்டிக்கத்தக்கது. நதிகளை இணைப்பது என்ற கருத்து நேரு காலத்தில் உருவானது. நதிகளை இணைக்க இந்திரா காந்தி முயற்சி மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்திட்டத்தில் நதிகள் இணைப்பு இடம் பெற்றது. வரலாறு தெரியாமல் பேசுகிறார் ராகுல்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என்றார்.

சென்னையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக நேற்று ராகுல்காந்தி அளித்த பேட்டி விவரம் வருமாறு:


கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுபோல், இலங்கையில் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும் கவலை தருவதாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு உரிய நியாயத்தை வழங்கவில்லை என்ற நம்பிக்கை தமிழகத்தில் பரவலாக உள்ளதே?


பதில்: எங்கள் குடும்பத்தை பொருத்தவரை, தமிழக மக்கள் மீது எப்போதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். இலங்கைக்கு மூத்த தலைவர்களை அனுப்பி, இலங்கை தமிழ் மக்கள் நிலை தொடர்பாக இலங்கை அரசுக்கு, மத்திய அரசு ஏற்கனவே நெருக்கடி கொடுத்துள்ளது. பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (எம்.கே.நாராயணன்) ஆகியோரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இலங்கை தமிழர்களுக்கு தரப்படவேண்டிய உரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இதற்கு மாறாக அங்கு வேறு ஏதேனும் நிகழ்ந்தால், இந்திய அரசும், பிரதமரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.


கேள்வி: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக, மத்திய அரசுக்கு எந்தவிதமான நெருக்குதலை தாங்கள் கொடுப்பீர்கள்?


பதில்: தனிப்பட்ட முறையில், மத்திய அரசுக்கு நான் எந்தவிதமான நெருக்கடியை தரமுடியாது. நான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது கருத்தை மட்டுமே சொல்ல முடியும். நான் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது.


கேள்வி: நேற்றுகூட 4 பேரை நிர்வாணமாக்கி கொன்றிருக்கிறார்களே?


பதில்: இலங்கை அரசுக்கு, இந்திய அரசு, தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது.


கேள்வி: ஆனால், பலன் ஒன்றும் ஏற்படவில்லையே. பிரபாகரனின் மரணத்துக்கு பிறகும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரசும், மத்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை என்றுதான் அவர் கேட்கிறார்.


பதில்: மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று அவர் சொல்கிறார். அது தவறு. மத்திய அரசும், இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது. இந்திய அரசின் சார்பில் 2 மூத்த அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். நானே கூட தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரிடம் இது பற்றி பேசியுள்ளேன்.


கேள்வி: ஆனால், ஐ.நா. சபையில், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டபோது, இலங்கைக்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது ஏன்?


பதில்: இலங்கை தமிழர்களின் உரிமை பற்றியதே இப்பிரச்சினை. இது புதிய பிரச்சினை அல்ல. இப்பிரச்சினை கடந்த பல ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எனது குடும்பத்தார் இப்பிரச்சினையில் தங்களை நீண்டகாலமாகவே தீவிரமான வகையில் தங்கள் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். எனது பாட்டி, எனது தந்தை ஆகியோர் இப்பிரச்சினையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மீதும் எங்களது குடும்பத்துக்கு மிகுந்த அக்கறை இருந்து வந்திருக்கிறது. இது இப்போதும், எப்போதும் தொடரும். தமிழ் மக்களின் நலனை காக்க தேவையான எந்தவித நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம். இதில் கேள்விக்கே இடமில்லை.


இப்பிரச்சினையில், இலங்கை அரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியமோ, அவ்வளவு நெருக்கடியை இந்திய அரசும் கொடுத்து வருகிறது.


கேள்வி: இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


பதில்: இந்த கேள்வியை நீங்கள் பிரதமரிடத்திலும், வெளியுறவுத்துறை மந்திரியிடமும் கேட்கவேண்டும்.


கேள்வி: இதில், உங்களது நிலைப்பாடு என்ன?


பதில்: இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் தரப்படவேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.


கேள்வி: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் 25 ஆயிரம் இலங்கை தமிழர்கள், மோசமான நிலையில் இருந்து வருகிறார்கள். அதற்காக குரல் எழுப்பப்படவில்லையே? (இதற்கு தங்கபாலு பதில் அளித்தார்)


தங்கபாலு பதில்: இது மாநில அரசின் பிரச்சினை. நாங்கள் தலையிட முடியாது. மாநில அரசு அவர்களால் முடிந்தவரை சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


கேள்வி: வேலூர் சிறையில் இருக்கும் நளினியை நீங்கள் சந்தித்தீர்கள் என கூறப்படுகிறதே. நீங்கள் நளினியை நேற்று பார்த்தீர்களா? மூன்றாவது பிரமுகர் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதா?


பதில்: இது ஊடகங்களின் கற்பனை. நான் சந்திக்கவில்லை. எந்த தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை. நளினியை சந்திக்கும் திட்டமே கிடையாது.


கேள்வி: நேரு, இந்திரா குடும்பத்தினருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது பகைமையோ, பழிவாங்கும் நோக்கமோ இருந்தது இல்லை. நேற்று கூட இலங்கையில், 4 தமிழர்களை கொன்றுவிட்டார்கள். இது குறித்து காங்கிரசோ, மத்திய அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?''


பதில்: இந்திய அரசு, இலங்கையில் நடைபெறும் பிரச்சினை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். இந்திய அரசு, 2 மூத்த அமைச்சர்களை அனுப்பி உரிய நடவடிக்கையை எடுத்தது தங்களுக்கு தெரியுமா?''

நடிகர் விஜய் காங்கிரஸ் கொள்கைகளை விரும்புகிறார்: ராகுல் காந்தி


காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நடிகர் விஜய் விரும்புகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் மூன்றாம் நாளான இன்று, கிருஷ்ணகிரி, சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனியார் விமான தளத்துக்கு ராகுல் வருகிறார்.

சேலம்,கோவையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறார்.

இச்சந்திப்பில், ’’நடிகர் விஜய் காங்கிரஸின் கொள்கைகளை விரும்புகிறார்’’என்று தெரிவித்தார்.

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்


உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.

குறித்த நபரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட யுனிசெவ் பேச்சாளருக்கு உதவ அவுஸ்திரேலியா முன் வருகை


இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டருக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.


அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவுஸ்திரேலிய பிரஜையான ஜேம்ஸ் எல்டரை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிவிடுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் உதவி தமக்கு தேவையில்லை என்று எல்டர் கூறுவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார். இதிலிருந்து, எல்டர் அவரது கடமையையே செய்கிறார் என்று தெளிவாகின்றதென ஸ்மித் மேலும் தெரிவித்தார்.

எனினும், எல்டர் சொன்னவற்றை எல்லாம் அல்லது அவர் செய்தவற்றை எல்லாம் தமக்கு தெரியாதெனக் கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர் அவர் சொன்னதாக தாம் அறிந்தவற்றிலிருந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கருத்தையே அவரும் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கான பூரண வசதிகள் சர்வதேச நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும் என்று குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கையில் பெரும் பணியாற்றிவரும் யுனிசெவ்வுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இது பொருந்தும் என்று கூறினார்

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA