Tuesday 1 September 2009

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.

ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.

கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.

ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.

சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.

ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர்தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத்தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.

திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் "பயங்கரவாதம்" என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் "பயங்கரவாதிகள்" இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் "விடுதலைப் போராளிகள்" என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.

உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க... சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு. இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும். இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!

உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.

ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.

உறவுகளே! உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதையும் நாம் தவற விடுவோமானால் "நான் தமிழன்" என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.

இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும். உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!

துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!

உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !

இறுதிவரை... போராடுவோம்!

தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும்வரைக்கும்... இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும்வரைக்கும்... நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!

இறுதியில்.... வெற்றி எமக்கே!

- பருத்தியன் -

இரண்டாவது குற்றவாளி மன்மோகன்சிங்;மூன்றாவது குற்றவாளி ராஜபக்சே-நெடுமாறன் பேச்சு


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசியபோது,

மன்னார் வளைகுடா படுகையில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்து விட்டது இலங்கை. இந்திய தென்பகுதியில் பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை, இப்போது சீனாவுக்கு எல்லா ராணுவத் தொழிற்சாலைக்கும் அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு பேராபத்து.

பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் பிரபாகரன் நன்றாக பத்திரமாக இருக்கிறார். உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிட வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபட்ச. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்களை குற்றவாளிகளாக நிரூபிக்காமல் விடமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

நன்றி நக்கீரன்.

தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது


தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்


≡ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.

._._._._._._._._.

நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.

ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.

பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.

இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.

அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.

இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.

மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.

இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும்.

இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.

இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.

முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.

இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் - தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.

கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியத��
�ல்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.

சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்

அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.

இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.

இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.

NanRi:theesam.net

திஸநாயகத்துக்கு 2009 ம் ஆண்டின் சர்வதேச விருது: சர்வதேச ஊடக அமைப்பு


கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு 2009ஆம் ஆண்டின் சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருது வழங்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்கின்ற சர்வதேச ஊடக அமைப்பு இந்த விருதை வழங்குகின்றது.

இவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறித்த அறிவித்தல் இம்மாதம் குறித்த ஊடக அமைப்பினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இது அவரின் ஊடகப் பணிக்குக் கிடைக்கப் பெறுகின்ற மிகப் பெரிய கௌரவமாகும் என்றும் அந்த ஊடக அமைப்பு அறிவித்துள்ளது.

இதேநேரம் ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை இலங்கையில் நீதியும், நீதி நிர்வாகமும் இறந்துவிட்டன என்பதையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சனல்4 ஒளிபரப்பிய காட்சி உண்மை ஆனால் சுட்டவர்கள் இராணுவத்தில் இருந்து ஓடியவர்களாக இருக்கலாம் - இராணுவ பேச்சாளர்


சனல் 4 ஒளிபரப்பிய காட்சியினை தமது இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் மிக நுட்பமாக பரிசோதித்ததாகவும் அந்த காட்சியில் இராணுவ வீரர்கள் தமிழ் இளைஞர்களை சுடும்போது சுட்டுக்கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் சிங்கள இராணுவத்தின் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் சீருடையில் இராணுவ பதவி நிலை பட்டி இருக்கவில்லை என்றும் அத்துடன் இராணுவத்தினரின் தலைமுடி வடிவம் தப்பிஓடிய இராணுவத்தினரின் தலை முடி வடிவத்தினை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அந்த சிங்கள கொலைவெறி காணொளி இல் வரும் காட்சிகளை மறைமுகமாக ஒத்து கொள்ளும் இராணுவம் அதனை உத்தியோக பூர்வ இராணுவம் செய்யவில்லை தப்பியோடிய இராணுவம் தான் செய்தது என கூறமுற்படுவதுடன் பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கவும் முயற்சி செய்கின்றனர்.

ஒரு கதைக்கு அவ்வாறு தப்பி ஓடிய இராணுவத்தினர் என சொன்னாலும் அவர்கள் சீருடை மற்றும் துப்பாக்கிகளுடன் ஏன் வன்னியில் இருக்கவேண்டும். வன்னி ஓர் இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருப்பதால் அங்கு சிங்கள படைதலைமையின் அனுமதி இன்றி எவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் அங்கு இருக்க வேண்டும்?

அடுத்ததாக சிறிலங்கா இராணுவம் பட்டியில்லா சீருடைகளையும் அணிந்திருப்பது வழமை. போர்காலங்களில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த அல்லது கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சீருடைகளில் பட்டிகளல்லா சீருடைகளும் தென்பட்டவைக்கான ஆதாரங்கள் அப்போது இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ இலட்சியப்போருக்கு நாம் கொடுத்த விலை எம் கண்ணீரே!

தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராகதான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது. முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை, இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம்.



இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக பட்ச வேலைத்திட்டமாக அகதி முகாம்களில் இருக்கும் மக்களை மீட்டாலே போதும் என்ற நிலைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து விட்டனர். என்றால் இது மிகையாகாது. போராட்டஙகள் கவனயீர்ப்புக்கள், சாலை மறியல்கள், துண்டுப்பிரசுர விநியோகம் என்று புத்துணர்வுடன் கடந்த பத்து மாதங்கள் போராடிய எமது மக்களின் உணர்வுகளும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்ததோடு மெளனமாகி அழுகின்றது.

ஏன் இந்த சோர்வு?

எதனால் இந்த பின்னடைவு?

தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அரணாகக் கொண்டே வாழ்ந்தனர். தாம் வீட்டுக்குள் இருக்கும் போது அவர்கள் மட்டும் போராட வேண்டும் என்று எண்ணினார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு எந்த தமிழனும் வீதியை மறிக்க நினைக்கவில்லை. 24 மணிநேரமும் போராட முனையவில்லை. காரணம் “அவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள்” என்ற அலட்சிய நோக்கு.

இன்னும் சொல்ல போனால் நாம் பணம் கொடுதால் போதும் மற்றவை எல்லாம் முடியும் என்று எமது விடுதலைப்போரை வியாபாரமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர். இன்று விடுதலைப்புலிகள் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர்களும் சோர்வடைந்துள்ளமை இவர்களின் மூல சக்தி எது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமது தமிழீழ விடுதலைக்கான போரை அரசியல் வழிமுறையூடாக தாம் தொடர உறுதிபூண்டுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இன்றுதான் போராட்டத்தை அறிந்தவர்கள் போல, விமர்சனம் என்ற பெயரில் முரணான கருத்துக்களை முன்வைப்பதும். பின்பு அக் கருத்துக்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிவுபடுத்துவதும். அதிகரித்து வருகின்றது.

குறிப்பிட்ட சிலரோ தாமே போராட்டத்தை கட்டி காப்பவர்கள் போல தம்மை முன்னைய காலத்தில் அடையாளப்படுத்திய போதும், இன்று போராட்டத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி, இன்னும் சிலரோ தாம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டுள்ள கட்டமைப்புக்குள் இல்லை என்பதால் அந்த கட்டமைப்புக்கள் நேர விரையம் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டனர். அத்துடன் மீண்டும் மக்கள் எழுச்சி கொள்வதுவும் அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதுவும் தேவையற்ற செயற்பாடு என்றும் க்ர்ர்ற முற்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று பலரின் வாயில் உச்சரிக்கப்படுவது முகாமில் இருக்கும் போராளிகளை, மக்களை மீட்க வேண்டும் என்பதே! ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தொடர்ந்தும் தற்காலிகமான தீர்வுகளை நோக்கி பயணிப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ எமது மக்கள் மாத்திரமே!

கூடாரங்களுக்குள் மக்கள் இருப்பது வேதனையே! சித்திரவதைக் கூடங்களுக்குள் போரளிகள் வதைபடுவது ஏற்க முடியாதது தான்.ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாம் ஒரு தற்காலிக தீர்வாக மக்களை , போராளிகளை வெளியேற்றி விட்டால் மட்டும் போதுமா?

நாளைக்கு மீண்டும் இந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த பிரச்சினையை இவ் வகையில் தீர்கலாம் என்று நினைப்பவர்கள் முன்வைத்துள்ளனர். யாரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. ஆள் ஆளுக்கு ஒரு ஆய்வு கட்டுரை! ஆளாளுக்கு ஒரு செயற்பாட்டு வடிவம். போதாக்குறைக்கு வீராப்புக்கள் வேறு.

இன்று ஏற்பட்டுள்ள ஓர் சோர்வு நிலையில் பிரித்தானியத்தமிழர் பேரவை ஆரம்பித்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முயற்சி நிச்சயம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும்

எனவே எல்லைகள் கடந்தும் விஸ்வரூபம் எடுக்கும் சிக்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு எமது தேச விடுதலைக்கான பணியை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான வழிநடத்தலினூடாக பயணிப்பதே எம் இனத்தின் விடுதலைக்கு நாம் செய்யும் கைமாறாகும். எனவே நாம் இந்த விடுதலைப்போருக்கும் எம் மக்களின் அமைதியாக வாழ்வுக்கும் கொடுத்த விலை கொஞ்சமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பேரினவாதத்தின் இன்னொரு கரம்!


அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை.
1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்த முதன்மையான அதிகாரங்களில் சுகாதார நிர்வாகமும் ஒன்று.

அதன்படி - மாகாண சுகாதார அமைச்சுக்கள் - மத்திய அரச சுகாதார அமைச்சின் அனுமதியோ உத்தரவோ இல்லாமலேயே - சுகாதாரம் தொடர்பான வேலைத் திட்டங்களைத் தத்தமது மாகாணத்திற்குள் செயற்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் வன்னிப் போர்க்களப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கில் வெளியேறிய தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் செட்டிக்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு முகாம்களை (Detention Camps) சிறிலங்கா அரசு 'நிவாரணக் கிராமம்' (Relive Villages) என்றும், அரசு சாரா நிறுவனங்கள் 'நிவாரண வலயம்' (Relive Zones) என்றும் பெயரிட்டு வைத்துள்ளன. ஆனால் - உண்மையில் இவை எல்லாம் 'தடுப்பு வதைபுரி முகாம்கள்' (Nazi style Concentration Camps) என்பது நாம் அறிந்ததே.

அதன்படி - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வவுனியா மாவட்ட சுகாதாரச் சேவையின் கீழ் - செட்டிக்குளம் தடுப்பு முகாம்களது சுகாதாரச் செயற்திட்டங்களும், செட்டிக்குளம் அரச மருத்துவமனையின் பணிகளும் இதுவரை காலமும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த நிலையில் - செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளை அங்கு இருந்தே நேரடியாக இயக்குவதற்கான இணைப்புச் செயலகம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் செட்டிக்குளம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டதுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட திறமை மிக்க தமிழ் மருத்துவர் ஒருவர் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சும், வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து - முற்றுமுழுதாகத் தமிழ் மருத்துவர்களது தலைமையில் - தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கான சுகாதார மற்றும் மருத்துவ சேவையினை மிகச் சிறப்பாக வழங்கி வந்தன.

ஒவ்வொரு உயர்மட்ட சுகாதார நிர்வாகக் கலந்துரையாடல்களிலும் அந்த மக்களது சுகாதார மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தெளிவான புள்ளி விபரங்களுடன் முன்வைத்துத் தீர்வுகாண முற்பட்டன.

இது சிறிலங்கா அரச நிர்வாக இயந்திரத்துக்குச் சங்கடத்தினை விளைவித்தது.

நேரடியாக சுகாதாரத்துறையினருடன் முரண்படுவது அனைத்துலக மட்டத்திலான சிக்கல்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரச வட்டாராம் - தந்திரோபாயமாக - பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத்துறை மூலம் தமிழ் மருத்துவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது.

இந்த வேளையில் - அண்மையில் - எதிர்பாராத விதமாக - அந்த தமிழ் மருத்துவ இணைப்பாளர் வீதி விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்து விட்டார்.

அதனை அடுத்து, அவரது இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு - மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படாமலேயே - சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவசர அவசரமாக நியமித்துவிட்டது சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சு.

இது ஒன்றும் இயல்பாக நடந்துவிட்ட ஒரு சாதாரண நிர்வாகச் சம்பவம் அல்ல. மிகவும் நுணுக்கமாக - அரவம் எதுவும் இன்றி - அரங்கேற்றப்படும் ஒரு பாரிய பேரினவாதத் திட்டம்.

தமிழ் இனத்தை வேரறுக்கும் மாறாத தனது இலட்சியத்தை அடைய, சிங்களப் பேரினவாதம் மாற்றி மாற்றிச் செயற்படுத்தும் பேரினவாத வடிவங்களில் ஒன்றுதான் - இப்போது இந்த மருத்துவச் சுகாதாரத்துறை.

அந்தத் தமிழ் மருத்துவ இணைப்பாளரைப் படுகாயப்படுத்திய அந்த வீதி விபத்துக் கூட சந்தேகத்துக்கு இடமான விதத்திலேயே நடந்தேறியதாக வவுனியா மாவட்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதன்பின்பு - சிங்களவர் ஒருவர் செட்டிக்குளம் பகுதிக்கான மருத்துவ சுகாதார இணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்பு - சிறிது சிறிதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஓரங்கட்டப்பட்டு, சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சும் சிங்கள ஆதிக்கமும் செட்டிக்குளம் பகுதியில் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கின.

அதிலும் குறிப்பாக - இணைப்பாளராகச் சிங்கள மருத்துவரை நியமித்தவுடன், ஒவ்வொரு தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாகச் செயற்பட்ட தமிழ் மருத்துவர்களது பரிந்துரைகள் எவையுமே செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டன.

உதாரணமாக - அதுவரை காலமும் மருத்துவ மரபின் பிரகாரம் - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு மருத்துவர் கருதினால் எதுவித தடையுமின்றி நோயாளர் காவு வாகனம் (Ambulance) மூலம் குறித்த நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வசதி இருந்து வந்தது.

ஆனால் இப்போது - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு தமிழ் மருத்துவர் கருதினால் கூட (அவர் சிறப்பு மருத்துவ நிபுணராக இருப்பினும் கூட) மேற்-பரிந்துரை ஒரு சிங்கள மருத்துவரால் அல்லது இராணுவ மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்பின்னர் - அந்தச் சிங்கள இணைப்பாளரின் அனுமதி கிடைக்காத நிலையில் - குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட தமிழ் நோயாளர்கள் தடுப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகச் செத்து விழத் தொடங்கினர்.

இதனால் - தமது கண் முன்னாலேயே சொந்தங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் எதுவும் செய்ய வகையில்லாத தமது கையாலாகாத நிலையால் மனம் வெதும்பிய தமிழ் மருத்துவர்கள் ஒவ்வொருவராக செட்டிக்குளம் பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினர்.



தற்போது - செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏழு தடுப்பு முகாம்களில் எதிலுமே பொறுப்பு மருத்துவர்களாகத் தமிழர்கள் இல்லை. எல்லாவற்றிலுமே சிங்களவர்களே பொறுப்பாக உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த செட்டிகுளம் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் (Medical Officer for Health அல்லது Divisional director of Health Services) அதிகாரங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிங்கள் மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.

சிறிலங்காவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு நடைமுறையாக - நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை (Preventive and Curative) செட்டிக்குளம் பிரதேச சுகாதார அதிகாரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இதன் பின்னால் இன்னொரு பாரிய சதி நடவடிக்கை ஒளிந்திருக்கிறது.

சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிகளில் சிசு மரணங்கள் (Infant Deaths), கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது (Maternal Deaths) இறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுவதும் அடங்குகின்றது.

அந்த அறிக்கையானது அதிகாரபூர்வப் புள்ளி விபரங்களில் வெளியானால் அரசுக்குச் சிக்கல்களை உருவாக்கும். இதனாலேயே தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்கள மருத்துவர்களிடம் முடக்கப்பட்டது.

விளைவாக - கடந்த ஐந்து மாத காலத்தில் - செட்டிக்குளம் பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மட்டும் இறந்து போன 20 வரையான பிரசவத் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களது இறப்புக்கள் தொடர்பான கள விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை (Field Investigation Report) முழுமைப்படுத்தப்படவில்லை.

இது - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு வெற்றியடைந்திருப்பதையே காட்டுகிறது.

மேலும் - தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்களவர்களிடம் முடக்கப்பட்டதால் - தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைள் (Maternal and Child Health Activities) முற்றாகச் சீர்குலைந்து போயின.



கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது மரணங்களும் (Maternal Deaths) சிசு மரணங்களுமாகும் (Maternal Deaths) ஒரு நாட்டின், அல்லது ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் சுகாதார நிலவரத்தின் குறிகாட்டிகள் (Health Indicators) எனக் கருதப்படுபவை.

ஒரு நாட்டில், அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் தாய்மார்களது இறப்புக்களோ (Maternal Deaths) அல்லது சிசுமரணங்களோ (Infant Deaths) அல்லது இரண்டுமே கூட - அடிக்கடி நிகழ்கின்றது எனின் அந்தச் சமூகம் சுகாதாரத்தில் படுவீழ்ச்சி கண்டதாகவே (Poor Health Status) அர்த்தம்.

மேலும் - வன்னிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே கட்டுப்பாட்டில் இருந்த கொடிய தொற்று நோயான சின்னமுத்து (Measles) செட்டிக்குளம் பகுதி ஏழு தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக - தமிழ் மருத்துவர்களைத் துரத்தி விட்டுச் சிங்களவர்களை அந்த இடங்களுக்கு நியமித்துச் சுகாதாரச் சீர்கேடுகளை முடிமறைத்து, அவை பற்றிய புள்ளி விபரங்கள் வெளியே செல்வதைத் தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு.

இதே வேளையில் - வெளிநாட்டு அரசுகளும் சரி, அரசு சாரா நிறுவனங்களும் சரி "இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் நேரடியாகத் தான் உதவுவோம்" எனக் கூறி மருத்துவ உபகரணங்களாகவும், மருந்துகளாகவும் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஊடாகத் தமது உதவிகளைக் குவிக்க தொடங்கின.

இவ்வாறாக வந்து குவிந்த மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தென்னிலங்கை மருத்துவமனை ஒன்றின் மருத்துவ அதிகாரி ஒருவர் "செட்டிக்குளம் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூடக் கிடையாது" என்று சொன்னார்.



இதனால் - கொழும்பில் இரகசிய ஆலோசனைகள் அவசர அவசரமாக நடந்தன. "எப்படி இந்த மருத்துவ உபகரங்களைத் தென்னிலங்கைக்குக் கடத்துவது" என்பது பற்றித் தான் அந்த ஆலோசனைகள் நடந்தன.

தற்போதைய சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சொத்து.

செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் - செட்டிக்குளம் மருத்துவமனையிலும், தடுப்பு முகாம்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் இந்தக் கருவிகள் அங்கு பயனற்றவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எண்ணினால் - அந்த உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைகளுக்கோ அல்லது முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ அனுப்பலாம். வடக்குக்கு வெளியே வேறு எங்கும் கொண்டுசெல்ல முடியாது.

இதுதான் சிறிலங்கா அரச மட்டத்தினருக்குப் பிடிக்கவில்லை.

"பல கோடி ரூபாய்கள் பெறுமதியான - மிகத் தரமான அவ்வளவு உபகரணங்களையும், ஏனைய மருத்துவ உதவிகளையும் தெற்கிற்கு எப்படி எடுத்துச் செல்வது?"

வேகமாகச் சிந்தித்த மத்திய சுகாதார அமைச்சு - செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகரான தமிழ் மருத்துவரை எப்படித் "தூக்குவது" என்பது பற்றியும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரத்தை செட்டிக்குளத்தில் எப்படி இல்லாது செய்வது என்பது பற்றியும் சிந்தித்து திட்டமிடத் தொடங்கியது.

இறுதியாக - குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்த மத்திய சுகாதார அமைச்சு - அவசர அவசரமாக - அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலமாக செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களும் (தடுப்பு முகாம்கள்), ஆதார மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாகப் பிரகடனப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.



இந்த முயற்சிக்கு உடந்தையாக - முன்னாள் தரைப்படை அதிகாரியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயின் உத்தரவுக்கு இணங்க மாகாண சுகாதார அமைச்சும், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் எந்தவித எதிர்ப்பும் காட்ட முடியாது அமைதியாக இருப்பது அனைத்து தமிழ் மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பான முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இந்த முறைகேடான நடவடிக்கை தொடர்பில் உண்மை நிலையினை வெளி உலகுக்கு தெரிவித்து இந்த முறைகேட்டினை முறியடிக்க உதவுமாறு வவுனியா தமிழ் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் வேண்டுகின்றன.

இந்த விடயத்தைப் பெரிதாக்கி - உரிய முறையில் சிறிலங்கா அரசு மீது - இலங்கைத் தீவுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களைப் போட்டு தமிழ் இனத்துக்கு உதவுமாறு -

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகளாவிய ரீதியில் இயங்கும், தமிழர் மருத்துவ அமைப்புக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்படும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரிடம் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறலாம்: சர்வதேச புலனாய்வு இணையத்தளம் எதிர்வுகூறல்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறலாம் என்று "Strategy Page" என்கிற பிரபல சர்வதேச புலனாய்வு இணையத்தளம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இவை தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர்.

ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.

எனினும் இலங்கை இராணுவம் இவர்களைப் பிடிப்பதற்கு வலை விரித்துள்ளது

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா.வின் செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு: சர்வதேச சட்டங்களை இலங்கை மதிக்க வேண்டும் என்கிறார் பான் கீ மூன்


நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கையின் முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பான் கீ மூனுக்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.

இச்சந்திப்பினையடுத்து ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூனும் நோர்வேயின் பிரமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க்கும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினை நடாத்தினர்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை குறித்து பான் கீ மூன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை விவகாரம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஐ.நா. பணியாற்றி வருகின்றது. நோர்வேயும் இதில் பங்காற்றி வருகின்றது. சர்வதேச சட்டங்களை இலங்கை மீறக்கூடாது. மனித உரிமை நியமனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். தொலைபேசியில் நான் பல தடவை அவருடன் பேசியுள்ளேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அரசியல் ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்தச் சந்திப்பை நடத்திய ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நோர்வேயின் வடதுருவப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA