Tuesday 11 August 2009

ஆசியாவிலும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீதான பகைமை உணர்வு அதிகரிக்கிறதா?


சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்வதற்கு, பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாடாளுமன்ற வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.
அதன், 2008 க்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் :

அடுத்த ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் 'கவலைக்குரிய நாடுகளின்' பட்டியலில் சிரிலங்காவையும், சேர்த்துக்கொள்ள்ள வேண்டும் என்ற எமது முடிவினை, அந்த நாட்டில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நியாயப்படுத்தி வருகின்றன.

மே 27 ஆம் திகதி, ஐ.நா பாதுகாப்பு சபையில் வருத்தமளிக்க கூடிய வாக்களிப்பு இடம்பெற்ற போது ஆதரவாக பிரித்தானியா இருக்காமல், அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க, பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, அந்நாட்டு அரசை ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானியா தனது உதவி வழங்கும் வல்லமையை ஒரு நெம்புகோலாக பயன்படுத்த வேண்டும்.

சிறிலங்கா விவகாரம் குறித்து தனது கவனத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும், உரிமையும் அனைத்துலக சமூகத்திற்கு உண்டு.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீதான பகைமை உணர்வு ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகரித்து வருகின்றது. இதற்கு சான்றாகவே அண்மையில், சூடான் நீதிமன்றத்திற்கு ஒத்துழைக்க முடியாது என மறுத்துள்ளதும், சிறிலங்காவில் அனைத்துலக தலையீட்டை ஐ.நா பாதுகாப்பு சபை நிராகரித்திருந்ததும் ஆகும்.

இப்போக்கு தொடர்ந்து வருமானால், மேற்குலக நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளும் இடையில், தெளிவான பிளவை அதிகரிக்க செய்கிறது.

எனவே, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக அடிப்படைகளுக்கும், அனைத்துலக நாடுகளின் ஆதரவை அதிகரிக்க, பிரித்தானியா முயற்சிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை இலக்கு வைத்துள்ள இலங்கை அரசு


விடுதலைப்புலிகளை உள்நாட்டில் அழித்துவிட்ட இலங்கையரசு தற்போது வெளிநாடுகளில் செயற்பட்டு வரும் விடுதலைப்புலிகளையும் பிணமாக்கும் அல்லது கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பது விடுதலைப்புலிகளின் புதிய தலைவரான கே.பி. கைது செய்யப்பட்ட முறை மூலம் தெளிவாகியுள்ளது.

கே.பி.யை கைது செய்வது எமது நோக்கமல்ல சுட்டுக்கொல்வதே திட்டம். அதற்காகவே மூன்று நாடுகளுக்கு இலங்கையிலிருந்து விசேட புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக ராய்ட்டர் செய்திச்சேவைக்கு தகவல் வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளதன் மூலம் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் பிரமுகர்கள் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளையும் அதன் தலைமைத்துவத்தையும் நந்திக் கடலோரத்தில் வைத்து அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையரசு கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதனை மலேசியாவில் வைத்து கைது செய்ததன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பையும் தகர்த்துள்ளது.

கடந்த மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததுடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த போதும் புலிகளின் மிகப் பலம் வாய்ந்த சர்வதேச வலையமைப்பு இலங்கையரசுக்கு சவாலாக திகழ்ந்ததுடன் புலிகளை மீண்டும் அணி சேர்த்தல், நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதனால் இலங்கையரசிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்தது.

இவ்வாறான நிலையிலேயே விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல் தலைவரும் பின்னர் பிரபாகரனால் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டவரும் பிரபாகரனின் மறைவையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவராக நியமனம் பெற்றவருமான கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனை யாரும் எதிர்பாராத விதமாக மலேசியாவில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளது இலங்கையரசு.

கே.பி.யின் கைது குறித்து அறிவித்துள்ள இலங்கையரசு அவர் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், எவ்வாறு, யாரால் கைது செய்யப்பட்டார் என்பன போன்ற விபரங்களை வெளியிட மறுத்துள்ளதன் மூலம் இக் கைதின் பின்னணியில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகள் இருப்பது புலனாகியுள்ளது.

தாய்லாந்தில் பாங்கொக் நகரில் வைத்த கே.பி. கைது செய்யப்பட்டதாக இலங்கையரசு செய்திகளை முதலில் கசியவிட்டது. ஆனால், அதனை உடனடியாகவே தாய்லாந்து அரசு மறுத்துவிட்டது. அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்த தென்கிழக்காசிய நாடொன்றில் வைத்த கே.பி. கைது செய்யப்பட்டதாக இலங்கையரசு கூறியது.

ஆனால், கே.பி.கடந்த புதன்கிழமை மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் இருக்கும் டியூன் ஹாட்டலில் வைத்தே கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் சார்பு இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனின் சகோதரரையும் நடேசனின் மகனையும் சந்திப்பதற்காக அந்தக் ஹோட்டலுக்கு சென்று அவர்களுடன் அறையொன்றில் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு அறைக்கு வெளிய வந்த நேரத்திலேயே கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

தம்முடன் உரையாடிக் கொண்டிருந்தபோது கே.பி.யின் செல்போனுக்கு வந்த அழைப்பொன்றையடுத்து தனிமையில் உரையாடுவதற்காக ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததையடுத்து நடேசனின் சகோதரரும் நடேசனின் மகனும் வெளிய வந்து தேடியபோதே அவர் கடத்தப்பட்டமை தெரிய வந்ததாகவும் புலிகள் சார்பு இணையத்தளங்கள் கூறுகின்றன.

அத்துடன், மலேசிய புலனாய்வுத்துறையின் உதவியுடனோ அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடனோதான் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கே.பி. கடத்தப்பட்டு பின்னர் பாங்கொக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்த இணையத்தளங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தமது நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்வதால் தமக்கு சிக்கல்கள் வந்துவிடக்கூடாதென மலேசிய அரசு விடுத்த வேண்டுகோளினாலேயே இக்கைது சம்பவத்துடன் மலேசிய புலனாய்வுத்துறை, பாதுகாப்புத்துறையினருக்கு இருக்கும் தொடர்பை மறைத்து அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் நோக்குடன் கே.பி.யை தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்ததாக முதலில் இலங்கையரசு அறிவித்திருந்தது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை உடனடியாகவே மறுதலித்த தாய்லாந்தின் பிரதமர் சப்சிட் வெஜ்யஜிவா கே.பி. தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லையென்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் வேறு ஒருநாட்டில் வைத்த கைது செய்யப்பட்டிருப்பதாக தம்மால் உறுதியாக கூறமுடியுமெனவும் தெரிவித்தார். இதையடுத்த பாங்கொக் என்பதை மாற்றி தென்கிழக்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்ததாக பின்னர் இலங்கையரசு அறிவித்தது.

கே.பி.யை சுட்டுக் கொல்வதே திட்டம்

இதேவேளை, கே.பி.யை கைதுசெய்வது தமது திட்டமல்லவெனவும் அவரை சுட்டுக்கொல்வதே தமது? நாக்கமாக இருந்ததெனவும் ஆனால் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் இலங்கை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடவிரும்பாத மூன்று அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அந்த செய்தியில் அந்த மூன்று அதிகாரிகளும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு,

"நந்திக் கடலோரத்தில் பிரபாகரனின் உடலுக்கருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியில் காணப்பட்ட இன்னொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே நாம் கே.பி.யின் நடமாட்டத்தை அறிந்து கொண்டோம். ஆசிய நாடொன்றில் அவர் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு இலங்கையிலிருந்து மூன்று விசேட புலனாய்வுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். கே.பி.யை கைது செய்வது எமது நோக்கமல்ல. அவரை சுட்டுக்கொல்வதே திட்டம். ஆனால், இறுதி நேரத்தில் அவரைக் கொல்லும் திட்டம் மாற்றப்பட்டு கைது செய்யுமாறு மேலிடம் உத்தரவிட்டது.

ஏனெனில், அவரை சுட்டுக்கொல்ல போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற அங்கிருந்த சூழ்நிலை இடமளிக்கவில்லை. அங்கு எமது ஆட்களுக்கு ஒத்துழைப்பாக செயற்பட்ட உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் அந்தத் திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. அதனாலேயே இறுதி நேரத்தில் கைதுசெய்ய வேண்டி ஏற்பட்டது.

அத்துடன், நாங்கள் இப்போது வெளிநாடுகளில் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்துவரும் "காஸ்ரா' போன்ற விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் ஏனைய தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் தேடி வருகின்றோம். அவர்களும் விரைவில் அகப்படுவார்கள்'.

ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி பார்த்தால் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள், முக்கியஸ்தர்களின் உயிர்களுக்கு எவ்வேளையிலும் ஆபத்து நேரலாம். அவர்களை கைது செய்யவோ அல்லது சுட்டுக் கொல்லவோ? தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

புலிகளை முடிக்க வேண்டுமானால் முதலில் மூவரின் கதைகளை முடிக்க வேண்டும். ஒருவர் பிரபாகரன், இன்னொருவர் பொட்டம்மான், அடுத்தவர் கே.பி. இந்த கே.பி. என்பவரே மற்றைய இருவரையும் விட மோசமானவரென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசகரும் பயங்கரவாத தடுப்பு நிபுணருமான பேராசிரியர் ரொகான் குணரட்ன அடிக்கடி கூறிவந்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அந்தளவுக்கு சர்வதேச மட்டத்தில் பலமும் செல்வாக்கும் மிக்கவராக கே.பி. திகழ்ந்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உட்பட ஆசிய நாடுகளுடனான கே.பி.யின் தொடர்பு நிலை மிகவும் பலம் வாய்ந்தது. அரசியல் உயர்மட்டங்களுடன் கே.பி.க்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.

விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை இழந்த பின்னர் 30.01.2009 அன்று விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளராக பிரபாகரனால் கே.பி.நியமிக்கப்பட்டார். கே.பி. என்றால் குமரன் பத்மநாதன் என்ற பெயரே அறியப்பட்டதாக இருந்த நிலையில் செல்வராஜா பத்மநாதன் என்ற பெயர் அறிவிக்கப்பட்டமை யாரோ புதியவர் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்திய போதும் அது பின்னர் கே.பி.தான் என்பது உறுதியானது.

இதன் பின்னர் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வுகள் கே.பி.யை சர்வதேச மட்டத்தில் பரபரப்புடையவராக்கியது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை காப்பாற்றுவதற்காக கே.பி. பெரும் பிரயத்தனப்பட்டார். இறுதியில் தமது ஆயுதங்களை மௌனமாக்குவதாக பிரபாகரன் கே.பி. மூலம சர்வதேசத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் அறிவித்தார்.

அதன் பின்னர் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மைகளை அறிந்த ஒருவராக கே.பி.யே இருந்தார். கடந்த மே 18 ல் நந்திக் கடலோரத்தில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்களிடைய ஏற்பட்ட குழப்பங்களை, வாதப்பிரதிவாதங்களை கே.பி. பெரும் பிரயத்தனங்களின் மத்தியில் தீர்த்து வைக்க வேண்டியேற்பட்டது. இதன்போது பிரபாகரனைக் காட்டிக்கொடுத்தவரென்ற துரோகப் பட்டம் கூட கே.பி.க்கு கிடைத்தது.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களான விடுதலைப்புலிகளின் மதிப்புக்குரிய பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள்கூட? கே.பி.யை துரோகியென குற்றம் சாட்டினர். புலம்பெயர் தமிழர்கள் கே.பி.க்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டுபட்டு நின்றனர். இதனால் பிரபாகரனின் மறைவுக்கு கூட சர்வதேச மட்டத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வைக் கூட நடத்த முடியாத நிலை? கே.பி.க்கு ஏற்பட்டது.

இறுதியில் தான் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை நிரூபித்த கே.பி. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்கினார். முதலில் விடுதலைப்புலிகள், ஆதரவாளர்களை ஒன்றுசேர்க்கும் பணியில் ஈடுபட்ட கே.பி. அதில் வெற்றியும் கண்டார். சர்வதச நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழர் நலன்சார் அமைப்புகளையும் ஒன்று சேர்த்தார்.

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அறிவிப்பை கே.பி. வெளியிட்டார். இந்த அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் உடைந்து போயிருந்த தமிழர்களை மீண்டும் ஒன்று சேர்க்க உதவியது. இதையடுத்து நாடுகடந்த அரசை நிறுவும் பணிக்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இதையடுத்த விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக அனைவராலும் க.பி. ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளை இலங்கையில் அடியோடு கருவறுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகவிருந்த இலங்கையரசு சர்வதேச மட்டத்திலும் புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒடுக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தது.

கே.பி.யையும் அவரின் செயற்பாடுகளையும் முடக்க வேண்டுமென்பதில் தீவிர அக்கறை காட்டிய இலங்கையரசு கே.பி.யை விரைவில் பிடிப்போம் என்று அடிக்கடி சூளுரைத்தும் வந்தது. ஐந்து பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்டர்போலுக்குத் தண்ணி காட்டி வந்த கே.பி.யை இலங்கையரசினால் நெருங்கக்கூட முடியாதென்ற கருத்தே பலமாகவிருந்தது.

நூற்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருந்த கே.பி. பல்வேறு அடையாளங்களுடன் லெபனான், தாய்லாந்து, மலேசியா, மியன்மார், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, கொங்ஹொங், கம்போடியா, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கியிருந்துள்ளார்.

பல நாடுகளில் தங்கியிருந்தாலும் கே.பி.க்கு வெளியாருடன் தொடர்பு கொள்ளவேண்டிய தேவைகள் இருக்கவில்லை. அதேபோல் எதிராளிகளும் இருக்கவில்லை. ஆனால், விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்ட அழிவையடுத்து அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது வெளியில் நடமாட வேண்டிய தேவை கே.பி.க்கு ஏற்பட்டது.

இந்த நிலையே இலங்கை புலனாய்வுத்துறையின் கழுகுக் கண்களில் கே.பி.யை காட்டிக் கொடுத்தது. அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைமையின் அழிவின் பின்னர் கே.பி.யுடன் முரண்பட்டு நிற்கும் எதிராளிக் கோஷ்டிகளின் ஒத்துழைப்பும் இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்திருக்கலாமென புலிகள் சார்பு இணையத்தளங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் புலிகளையும் அதன் தலைமையையும் முற்றாக அழித்தது போல் சர்வதேச மட்டத்திலும் புலிகளின் வலையமைப்பை அழிப்போம் என இலங்கையரசு சூளுரைத்திருந்தது. தற்போது கே.பி. கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகளை இலங்கையரசு சிதறடித்துள்ளது. இனி சர்வதேச மட்டத்தில் கூட புலிகளால் செயற்படமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் அழிக்கப்பட்டாலும் அதன் சர்வதேசக் கட்டமைப்பு தொடர்ந்தும் ஆபத்தானதாகவே விளங்கியது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பிரமுகர்களை "புலிகளின் எச்சங்கள், அல்லது மிச்சங்கள்' என்றழைக்கும் போக்கு தற்போது தென்பகுதி ஊடகங்களில் காணப்படுகின்றது. ஆனால், இவை நினைப்பதுபோல் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு பலவீனமானதாக இருக்கவில்லை. உறுதியானவையாகவே இதுவரை காணப்பட்டன. ஆனால், கே.பி.யின் கைதின்பின் அந்நிலை மாற்றமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களில் மூத்தவராகவும் திறமைசாலியாகவும் இருப்பவர் கே.பி. மட்டுமே. புலிகளின் அசுர வளர்ச்சிக்கு அவர்களின் சர்வதேச கட்டமைப்பே பிரதானமாக விளங்கியது. அந்த கட்டமைப்பை கே.பி.யே வழிநடத்தினார். பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் தலைவராக கே.பி. அறிவிக்கப்பட்டு இவரது தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற நோக்கில் விடுதலைப்புலிகள் இயக்கம் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ள வேளையிலேயே கே.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்ற போதும் இக் கைது நடவடிக்கையில் இன்டர்போலின் தொடர்பிருப்பதாகவும் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. கே.பி.யை "இன்டர் போலா'ல் கைது செய்யப்பட்டு அதன் பின்னரே இலங்கை புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கே.பி. தொடர்பாக இலங்கையின் சட்டம் தனது நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அதேவேளை, சர்வதேச விதிமுறைகள் பேணப்படும் என்றும் கே.பி. இந்தியாவில் தேடப்படும் ஒருவராக இருப்பதால் இந்தியா அவரை கேட்கும் பட்சத்தில் சர்வதேச உடன்படிக்கைகள், விதிகள் மற்றும் சாசனங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கே.பி. இன்டர்போலால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் நபர். இவரைப் பிடிக்க ஐந்து தடவைகள் இன்டர்போல் "ரெட் அலர்ட்' பிறப்பித்திருந்தது. அத்துடன் இந்தியாவின் சி.பி.ஐயும் இவரைத் தேடி வந்தது. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையுடன் இவருக்கு நேரடித் தொடர்புகள் இல்லாவிட்டாலும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் 5 நாட்கள் கழித்து மும்பை வழியாக இந்தியாவிலிருந்து கே.பி. தப்பிச் சென்றதாக சிபிஐ கூறுகிறது.

இன்டர் போல் ஒருவரை கைது செய்தால் எந்தநாட்டில் வைத்து அவரை கைது செய்கின்றனரோ அந்த நாட்டில் வைத்தே விசாரிப்பார்கள். அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி இன்டர்போல் தலைமையகம் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு சென்று விசாரிப்பார்கள். அல்லது கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகின்றாரோ அந்த அரசு முறைப்படி தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டால் சர்வதேச விதிகளுக்கமைவாக அவரை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமலும் விடலாம்.

2007ஆம் ஆண்டு கே.பி. பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரைத் தேடி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குழு தாய்லாந்து சென்று கே.பி.யை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியமை நினைவிருக்கலாம். ஆனால், அவ்வாறு யாரும் கைது செய்யப்படவில்லையென தாய்லாந்து காவல்துறை மறுத்திருந்தமையும் நினைவிருக்கலாம்.

ஆனால், தற்போது கே.பி. யாரால், எங்கு வைத்து, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்ற விடயத்தை இலங்கையரசு தெரிவிக்க மறுத்து வருகின்றது. இந்தக் கைது நடவடிக்கைக்கு இன்டர்போலின் நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் சட்டவிதிகளை மீறியே கே.பி. இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எங்கு வைத்து, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது முக்கியமல்ல. கே.பி. கைது செய்யப்பட்டுள்ளார் என்பதே முக்கியமென இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கையரசைப் பொறுத்தவரையில் கே.பி.யின் கைது புலிகளின் சர்வதேச கட்டமைப்பை உடைத்தெறிவதில் பெற்ற வெற்றியாகவேயுள்ளது.

கலைஞன்

புளியை கரைக்கும் பொட்டு அம்மான்- எமற்றப்பட்டாத இலங்கை ராணுவம்?


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்

கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் 'கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்' என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,

''பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், 'பொட்டு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.

அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 'பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்' என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை...'' என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ''ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், 'எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!' என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான 'ரா', இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, 'ரா'வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, 'ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்' என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், 'பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது' என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!'' என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே 'புலிகளின் பெரிய மூளை' என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

- இரா.சரவணன்-

நன்றி:விகடன்

தோற்றுப்போன மேற்குலகமும் தோற்றுவிக்கப்பட்ட சம்பவங்களும்


விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18 ஆம் திகதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18 ஆம் திகதியில் இருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.


போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபõன்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்த கருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்
களைப் புரிந்து கொள்ள முடிகின்றது.


அதாவது நாலாம் கட்ட ஈழப்போரானது இலங்கை அரசினால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. அகில உலகத்தினதும் ஆதரவுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இந்தப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கியிருந்தன. ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கூட்டணி, முன்னாள் சோவியத்யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் என்பன நேரடியான ஆதரவுகளை வழங்க மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகள் மறைமுகமான ஆதரவுகளை வழங்கியிருந்தன.


அகில உலகத்தின் இந்த போர் முனைப்புக்களை விடுதலைப்புலிகளும் அறிந்திருந்தனர். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது நாலாம் கட்ட ஈழப்போரில் இந்திய மத்திய அரசு கொண்டிருந்த தீவிரத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.


அந்தநிலையில்தான் வவுனியா வான்படைத் தளத்தின் மீதான வான்புலிகளின் தாக்குதல் மூலம் இந்தியாவின் பின்புலத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருந்தனர்.


இந்திய பின்புலம் வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமர்க்கள உத்திகளில் அதிக மாறுதல்களை அவதானிக்க முடிந்திருந்தது. அதாவது, விடுதலைப்புலிகள் தமது நிலங்களை தக்கவைப்பதற்கு அதிக
சிரத்தை எடுக்கவில்லை. மறுவளமாக நிலங் கள் குறுகிய போதும் அதிக இழப்புக்களை ஏற்படுத்தும் தாக்குதல்களிலேயே அவர்கள் அதிக அக்கறை செலுத்தியிருந்தனர்.


இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து அனைத்துலகத்தினதும், ஐ.நாடுகள் சபையினதும் ஆதரவுகளுடன் நடத்திய இந்தப் போரை முறியடிப்பதற்கு விடுதலைப்புலிகள் தனியாக ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. அதனை முறியடிப்பதற்கு தந்திரங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.


அனைத்துலக சமூகம் மீதான இராஜதந்திர அழுத்தங்களின் பெரும் பகுதியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். தந்திரமான உத்திகளை விடுதலைப்புலிகள் களத்தில் பயன்படுத்திக் கொண்டனர். அதனூடாகத்தான் இந்த போரின் இறுதிக்கட்டம் பயணிக்கத் தொடங்கியது.
ஆனால் விசுவமடுவை படையினர் கைப்பற்றும் வரையிலும் அதிகளவில் பொதுமக்களின் இழப்புகளின்றி நகர்ந்த இந்தப் போர் அதன் பின்னர் பாரிய மனிதப்பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், அனைத்துலகின் அழுத்தங்களுக்கும் எதிராக முப்பத்து மூன்று வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் எத்தகைய அவலங்களைச் சந்தித்திருந்தனர் என்பதை கடந்த ஐந்து மாதகாலப்பகுதியில் அனைத் துலக சமூகம் புரிந்து கொண்டது.
ஆனாலும் போரைத் தூண்டியதில் அவர்கள் காண்பித்த அக்கறைகளை மனிதப்பேரவலத்தை நிறுத்துவதில் காண்பிக்கவில்லை.


கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே 18 ஆம் திகதிவரையிலும் 7500 தொடக்கம் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்காலம் எனவும் ஐ.நாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும், 30,000 பேர் அங்கவீனமாகி இருப்பதாகவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் போர் மிகவும் பாரிய மனிதப்பேரவலங்க ளுடன் ஓய்வுக்கு வந்ததே தவிர அதனை நிறுத்துவதற்கு யாரும் முன்வரவில்லை.


பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. சனிக் கிழமை (16) தொடக்கம் திங்ட்கிழமை (18) வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் குறுகிய நேரத்தில் நடைபெற்றிருந்தன. பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான காயப்பட்ட மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பினுõடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன.


காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவ னிடமும், கட்டளைத் தளபதி கேணல் ரமேஸி டமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் திகதி இரவு வரையிலும் தொடர்ச்சி யாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல் களில் வெளியேறியிருந்தனர்.


ஆனால் இந்த அணுகுமுறைகளை அனைத்துலக சமூகமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் புறந்தள்ளியிருந்தன. மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும் இந்தியா அதனை தடுத்துவிட்டது.


தமிழக முதல்வர் கருணாநிதி, அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் காயமடைந்த மக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.


இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருந்தார் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார். அதாவது சரணடைபவர்களின் பாதுகாப்புகளை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என நம்பியார் தெரிவித்திருந்தார். அதற்கு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "த ரைம்ஸ்' இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவரின் தகவல் சாட்சியாக உள்ளது.


ஆனால் 18 ஆம் திகதி அதிகாலை அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் போன்றோர் உட்பட சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. அதற்கு ஆதரவாக இந்தியாவும், ஐ.நாவும் செயற்பட்டுள்ளதும் ஆதாரங்களு டன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் அனைத்துலகத்தின் ஆதரவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்க வில்லை.


ஆனால் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான சிறப்பு விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு ஜெனிவாவில் கூடியிருந்தது. ஆனால் அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அனைத்துலக சமூகம் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலகத்திற்கு எதிராகவும் ஆசிய நாடுகள் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை மேற்குலகத்தின் இந்துசமுத்திர பிராந்தியத்தின் மீதான கொள்கைகளுக்கு விழுந்த சாட்டை அடியாகும். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட போரானது தமிழ் மக்களை விட மேற்குலகத்திற்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் தற்போதைய நிலையின் சுருக்கமான முடிவு.


இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்ட தகவல் கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. விடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிர பாகரன் கடந்த 17 ஆம் திகதி வீர மர ணத்தை தழுவிக்கொண்டுள்ளதாக விடுதலைப் புலி களின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக் கைகளுக்கு பொறுப்பான பிரதிநிதி செல்வ ராஜா பத்மநாதன் பி.பி.சி செய்தி நிறுவனத் திற்கு தகவல் வழங்கியுள்ளார்.


ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவின் தலைவர் அறிவழகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளன.


இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். அறிவழ கன் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரி வின் இரண்டாம் நிலை தளபதிகளில் ஒரு வர். பத்மநாதன் கடந்த ஜனவரி மாதம் அனைத் துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறு ப்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் களில் ஒருவர்.


எனவே எந்த தகவல் சரியானது. எது தவறானது என்பது தொடர்பான குழப்பங்கள் எழுவது சகஜமே. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.


அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனர்.
பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருள்.


இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மை. ஒரு விடுதலைப்போரில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் தோற்றுவிக்கப்படுபவை. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்படுபவை.


வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல. 1989 களில் இந்திய இராணுவம் அவர் இறந்துவிட்டதாக தகவல்களை பரப்பியிருந்ததுடன் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது. ஆனால் 1990 களில் தான் அவர் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். அதனைப் போலவே 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது.


இலங்கைக் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருந்தனர். ஆனால் பிரபாகரன் மீண்டும்வெளிவந்தார்.


நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரை யில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சி நகரம் படை யினரால் கைப்பற்றப்பட்டதிலிருந்து ஆரம் பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை புரியாத புதிராகவே பலருக்கும் தோன் றியது.


மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தும் மேற்சட்டையை
யும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டு சென்றிருந்தனர்.


அதன் பின்னர் ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் குடும்ப புகைப்படங்களும் வேறு சில பொருட்களும் தவறவிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் மூலம் இராணுவமும் இலங்கை அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்திருந்தன. அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதினர்.


எனவே அவர்களின் முழுப் படைப் பலமும், கவனமும் அங்கு செறிவாகியிருந்தது. கடற்படையின் முழு வளங்களும், வான்படையின் வேவு அணிகளின் முழுப்பலமும் அங்கு தான் மையம் கொண்டிருந்தன. உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பின் அவர் தொடர்பான தகவல்களை யாரும் அவரைத் தேடி வருவோரின் கண்ணில் படுமாறு பின்னால் விட்டு சென்றிருப்பாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 122 மி.மீ பீரங்கிகளை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமõனது அல்ல.


இராணுவம் வீட்டின் கொல்லைப்புறத்திற்குள் நுழைந்த போது தான் புலிகளின் தலைவர் தப்பியோடியிருப்பார் என்ற வாதங்களும் பலவீனமானவை. எனவே சில சம்பவங்கள் அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கான காரணங்கள் என்ன?


மேலும் 18 ஆம் திகதி காலை இலங்கை நேரம் 8.00 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு மூன்றாம் நிலை பொறுப்பாளரினதும், போரளியினதும் குரல்கள் அனைத்துலகத்தை எட்டியிருந்தன. அவர்களின் குரல்களில் இருந்து அவர்கள் மரணத்தின் இறுதி மணித்துளிகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகியது.


இந்த உரையாடலில் பங்குபற்றியவர்களால் புலிகளுக்கு சில நூறு மீற்றர் தொலைவில் இராணுவத்தின் வெடியோசைகளை தொலைபேசியூடாக கேட்ட முடிந்தது.


எந்த வினாடியும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்படலாம் என்ற நிலை, அவர்களின் உறவுகளை பற்றி கேட்கவில்லை, எமது உறவுகளைப் பற்றி கேட்கவில்லை. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரு சில வினாடிகளில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தான். தலைவர் எங்கே?


பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பது தான் அது.


இன்று உலகெங்கும் ஒருங்கிணைந்து ஒரு குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியத்தின் ஆன்மாவை தமிழ்மக்கள் அணையவிட மாட் டார்கள், அதன் அழுத்தம் உலகின் நகர்வு களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி யிருந் ததையும் நாம் புறந்தள்ள முடியாது.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி - வீரகேசரி வாரவெளீயீடு

வன்முறை அரசியல்தான் வழியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் புதன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அனுசரணையுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஒரு போர்-சார் செயற்பாட்டாளர் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்பு இருந்தே, ஏற்கெனவே - அந்த இயக்கத்தின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்த ஒரு இராஜதந்திர - அரசியல் செயற்பாட்டாளர்.

அந்தப் பொறுப்பு நிலையில் அமர்த்தப்பட்ட பின்பு - அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்ச்சியான அரசியல்சார் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு - தொடர்பாடல்களைப் பேணி - போர் சாராத வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் முன்முனைவுகளில் ஈடுபட்டவர்.

2009 மே மாதத்துக்குப் பின்னான இலங்கைத் தீவின் தற்போதைய இராணுவ-அரசியல் சூழலில் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்னதாக இருந்தே –

இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான - அவர்களுக்கே உரித்தான - அரசியல் உரிமைகளை - மாறிவிட்ட புதிய உலகச் சூழலுக்கு ஏற்ப இயங்கி, தற்போதைய உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவாக நகர்ந்து வென்றெடுப்பதில் அவர் நம்பிக்கையும் விருப்பமும் கொண்டிருந்தார்.

அத்தகைய - வன்முறையற்ற - அரசியல் - இராஐதந்திர வழிகள் ஊடாக தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் வழிமுறைகள் பற்றிய திட்டங்களையே அவர் வகுத்தும் செயற்படுத்தியும் வந்தார்.

ஆயுதப் போராட்ட வடிவத்தையே தனது மைய மூலோபாயமாகக் கொண்டு கடந்த 38 வருடங்களாகப் போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் இயங்கு முறைமையையும் ஒர் அடிப்படையான மறுசீரமைப்புக்கு அண்மைக்காலமாக அவர் உள்ளாக்கி வந்தார்.

மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெருத்த சவால்களுக்கு முகம் கொடுத்து - வன்முறையற்ற போராட்ட முலோபாயம் நோக்கிய இந்தப் பாரிய கொள்கை மற்றும் செயன்முறை மாற்றத்தை - விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உள்ளேயே எழுந்த ஆழமான முரண்பாடுகளுக்கு மத்தியிலும் - அவர் கடும் சிரமங்களுடன் முன்னெடுத்தார்.

அந்த முன்முனைவினை எடுத்ததன் விளைவாக - கடும் போக்காளர்களின் எதிர்ப்பையும், 'துரோகி' என்ற பழிச்சொல்லையும் அவர் சம்பாதித்தார்.

60 ஆண்டுகாலப் பட்டறிவின் விளைவாக, ஜனநாயக வழிமுறைகள் பற்றிய எண்ணங்களையே தமது மனங்களில் இருந்து முற்றாக இழந்துவிட்டு, ஆயுதப் போராட்டத்தில் மட்டுமே தொடர்ந்தும் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தோரையும் சாந்தப்படுத்தி - இன்றைய உலக ஓட்டத்தைப் பக்குவமாகப் புரிய வைத்து -

ஆயுதங்களை அமைதிப்படுத்துவதாகப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு - சொல்லில் மட்டுமன்றி அதனைச் செயலிலும் காட்டிய வண்ணம் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையே அரசியல் வழிமுறை ஊடாக நகர்த்தும் ஒரு வழிகாட்டியாக திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் செயற்பட தொடங்கியிருந்தார்.

ஒரு பரந்த மனப்பான்மையுடன் - பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து - பல தரப்பட்டவர்களின் கருத்துக்களையும் ஒன்றிணைத்து - புதுமையான - நடைமுறைக்குச் சாத்தியமானதான ஒரு வழியில் பயணிக்க அவர் முனைந்தார். உலகிற்கு 'ஜனநாயகம்' பற்றிய போதனைகள் செய்யும் பெரிய நாடுகள் எல்லாம் இந்தப் பயணத்தில் தமிழ் மக்களோடு துணை இருக்கும் என்று அவர் நம்பினார்.

இவ்வாறாக - கடந்த இரண்டரை மாத காலத்தில் - தூக்கமற்ற இரவுகளும், ஓய்வற்ற பகல்களுமாக, உள்ளும் புறமும் என - தமிழ் மக்களுக்கான அரசியல் இராஜதந்திர முன்முனைவிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள்-ஒழுங்கமைப்புப் பணியிலும் என - இரு முனைகளில் அவர் அயராது போராடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், அதன் தலைமையை ஏற்றிருக்கும் தனக்கும் முன்னால் இருக்கும் உடனடிக் கடமையாக - உலகின் மனிதார்ந்த நியதிகளுக்கு மாறாக முட்கம்பிச் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் தவிக்கும் மூன்றரை இலட்சம் தமிழ் மக்களை மீட்டெடுப்பதையே அவர் வரித்துக்கொண்டிருந்தார்.

அந்த மக்களை அவர்களது சொந்த வீடுகளில் மீண்டும் குடியேற வைத்து, அவர்களது சாதாரண சமுக - பெருளாதார இயல்பு வாழ்வை அவர்களுக்கு மீள அளிப்பதையே அவர் தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டதுடன், அதற்குரிய கலந்துரையாடல்களிலும், ஒழுங்குகளிலுமேயே அண்மைய நாட்களில் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

அதன் அடுத்த கட்டமாக - இந்த உலக சமுதாயத்தின் துணையுடன், குறிப்பாக இந்தியாவின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் - இந்த உலகத்தோடு ஒத்துப் போகக்கூடிய வழிமுறைகள் ஊடாக - எமது மக்களின் நியாயமான அடிப்படை அரசியல் வாழ்வுரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இதுவரை காலமும் - 'பயங்கரவதிகள்' என்ற கீழ்த்தரமான ஒரு முத்திரையைக் குத்தி - அரசியல் விடுதலைக்கான எமது இனத்தின் போராட்டத்தை அழிவின் விளிம்பிற்கே தள்ளிவிட்ட இந்த உலக சமுதாயம், குறிப்பாக இந்தியா - இனிவரும் காலத்தில் - விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கும் இப்போதைய புதிய சூழலில் - தமிழ் மக்களின் நியாயமான அரசியல் வேட்கைகளைப் புரிந்துகொண்டு தமிழர்கள் எடுக்கும் அரசியல் முன்நகர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவரும், தமிழ் மக்களும் நம்பியிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் - சில பெரிய சக்திகளின் அனுசரணையுடன் சிறிலங்கா, மலேசியா மற்றும் தாய்லாந்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத்துறைகளினால் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் நிகழ்வானது தமிழ் மக்களைத் திகைப்புக்கும், கவலைக்கும், கடும் சினத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் - தனக்கு இடப்பட்டிருந்த பணியின் கரணமாக - அந்தப் பணியினதும், தனதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலைகளுக்குள் இருந்திருந்தாலும் -

தற்போது - தான் ஏற்றிருந்த புதிய பணியின் தன்மைக்கு ஏற்ப - ஜனநாயகப் பாதையில் பயணிக்க முனைந்த ஒர் அரசியலாளனாக - தான் தலைமை ஏற்றிருக்கும் ஒர் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கத்தையும் அதே ஜனநாயகப் பாதையில் மட்டுமே நகர்த்த அவர் முனைந்தார்.

மறைந்து வாழாமல், ஒளிந்து நடமாடாமல் - பகிரங்கமாக அரசியல் பணி ஆற்ற முனைந்த ஒரு மக்கள் சேவகனாக அவர் இப்போது இயங்க தொடங்கியிருந்தார்.

தனது உயிரும் உடலும் ஆபத்துக்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்திராத அளவுக்கு அவர் ஒன்றும் அப்பாவி அல்ல; அல்லது, அவர் அலட்சியப் போக்கோடு அலைந்து திரிபவரும் அல்ல.

ஆனாலும், மக்களுக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு போராளி அந்த மக்களில் இருந்து அந்நியப்பட்டு மறைந்து வாழ்வது முறையல்ல என்றே அவர் கருதினார்.

அதே வேளையில் - மலேசிய நாட்டின் நீதி ஒழுங்கு முறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவும் - அந்த நாட்டின் சட்ட வரைமுறைகளை மீறி விடக்கூடாது என்பதற்காகவும் - ஆயுதம் தாங்கிய மெய்க்காப்பாளர்களையோ, அல்லது ஆளணிப் பரிவாரங்களையோ தன்னுடன் கூட்டித் திரியாமல் - தனிமனிதனாக அவர் தனது பணிகளைச் செய்து வந்தார்.

இத்தகைய வேளையில் - எத்தகைய அனைத்துலகச் சட்ட நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்படாமல் - ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் ஊடாக முன்றாவது நாடு ஒன்றுக்கு - அந்த நாடுகளினதும், வேறு நாடுகளினதும் அரசுகளது பங்களிப்புடனேயே அவர் இவ்வாறு வஞ்சகமாகக் கடத்திச் செல்லப்பட்ட கீழ்த்தரமான நிகழ்வானது - மென்முறை அரசியலின் மீதும், வன்முறையற்ற அரசியல் வழிமுறைகள் மீது நம்பிக்கை வைப்போரின் மீதும் விழுந்த ஒர் உச்சந் தலை அடியே அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

உலக இயங்கு நிலையோடு ஒத்துப்போய் - வன்முறையற்ற வழியிலேயே இனி தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வகுத்துச் செயற்பட்ட திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களின் இந்தச் சட்டவிரோதமான கடத்தலானது -

வன்முயையற்ற அரசியல் வழிக்கு கடும் சிரமங்களின் மத்தியில் அவர் திருப்ப முயன்ற ஓர் ஆயுதப் போராட்ட இயக்கம் - இந்த அனைத்துலக சமுதாயம் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதுடன் - மீண்டும் வன்முறை அரசியல் மீதான நம்பிக்கையோடு மட்டுமே புத்தூக்கம் பெற்று - ஆயுதப் போராட்ட முலோபாயத்தை மீண்டும் அது கைக்கொள்ளவே வழிகோலும்.


இத்தகைய சூழ்நிலையில் - திரு செல்வராசா பத்மநாதன் அவர்களின் உடலுக்கும், உள்ளத்துக்கும், உயிருக்கும் எத்தகைய தீங்கும் நேர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முழுப் பொறுப்பையும் - உலக நாடுகள், குறிப்பாக இந்தியா ஏற்றுக்கொள்ளுவதோடு, அவர் மீதான விசாரணைகள் அனைத்துலக நீதி ஒழுங்குகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதையும் இந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகக் குறைந்தது - சிதைந்து போய் இருக்கும் தங்கள் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் செப்பனிட்டுச் செழுமைப்படுத்துவதற்காக எனினும் இந்த நாடுகள் அதனைச் செய்ய வேண்டும்.

சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டியா வழியில் தமிழீழத்தை மீட்டெடுப்போம்


சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழத்தை மீட்டெடுப்போம், என்பதே செல்வராசா பத்மநாதன் கேபி அண்ணரின் கனவு

]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கூட்டுச்சதியினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்துசமூத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடொன்றின் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பங்களிப்புடன் வெகுநாட்களாக திட்டமிடப்பட்டே இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகிறது.

கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலிருந்து மலேசியாவுக்கு சென்றிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் சகோதரர் மற்றும் நடேசனின் மகன் ஆகியோரை சந்திப்பதற்காக பத்மநாதன் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஜீத் இந்தியா என்ற இடத்தில் அமைந்துள்ள ரியூன் விடுதிக்கு சென்றிருந்துபோதே அவர் கடத்தப்பட்டார் என்று தெரியவருகிறது.

தன்னை சந்திக்க வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயம் - பிற்பகல் 2 மணியளவில் - அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசுவதற்காக அவர் எழுந்து விடுதியின் ஓடுங்கிய பாதை ஒன்றின் வழியாக வெளியே சென்றிருந்தார். வெளியே சென்ற பத்மநாதனை வெகுநேரமாக காணவில்லை. அதன்பின்னர், பத்மநாதனை சந்திக்க வந்தவர்கள் - அவருடன் மலேசியாவில் சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தவர்களை - தொடர்புகொண்டு விடயத்தினை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் பத்மநாதனை தொடர்புகொள்ளமுயற்சித்து, பின்னர் காவல்துறை வட்டாரங்களுடன் தொடர்புகொண்டபோதே அவர் கடத்தப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

புதன்கிழமை மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட பத்மநாதன் அவர்கள் தாய்லாந்திற்குகொண்டு செல்லப்பட்டு அங்கிருந்துதான் சிறிலங்காவுக்கு மறுநாள் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை மேலும் தெரிவிக்கையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் விமானத்தில் கைகளில் விலங்கிடப்பட்டபடி கொண்டுவரப்பட்ட பத்மநாதன், கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து முகம் மூடப்பட்ட நிலையில் கறுப்பு கண்ணாடிகளால் ஜன்னல்கள் உடைய காரில் குற்றப்புலனாய்வு பிரிவின் இரகசிய விசாரணை இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று தெரிவித்தன. பத்மநாதனுடன் மேலும் இருவர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடத்தலில் மலேசிய புலனாய்வுத்துறையின் பங்களிப்பை மறைப்பதற்காகவே தாய்லாந்தில்வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. பத்மநாதன் அவர்கள் தாய்லாந்து பெண் ஒருவரையே திருமணம் செய்தவராதலால் தாம் அறிவிக்கும் செய்தியை நம்பவைப்பது சுலபம் என்று அரச தரப்பில் திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், பத்மநாதன் அவர்களை தமது நாட்டு அதிகாரிகள் எவரும் கைதுசெய்யவில்லை என்று தாய்லாந்து அரசு அடியோடு மறுத்திருக்கிறது.

கடத்தல் சந்தேகங்கள்

சர்வதேச ரீதியில் தேடப்படும் நபர் என்று பலதரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டுவந்தபோதும் தனது பாதுகாப்பு விடயத்தில் இதுவரை காலமும் மிகவும் நிதானமாக இருந்துவந்த பத்மநாதன் எவ்வாறு இவ்வளவு இலகுவாக கடத்தப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

அதேவேளை, சந்திப்பு இடம்பெற்ற கோலாலம்பூர் ஜலால் ரொன்கு அப்துல் ரகுமான் வீதியில் அமைந்துள்ள மஜீத் இந்தியா என்படுவது சன நெருக்கடி மிக்க ஒரு சந்தை. சகல தரப்பட்ட மக்களும் எந்நேரமும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இடம். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தெரிந்திருந்தும் பத்மநாதன் அவர்கள் அவ்வாறான ஒரு இடத்தை சந்திப்புக்காக ஏன் தெரிவு செய்தார் என்று தெரியவில்லை என்றும் - வழமையாக வெளியே செல்லும்போது இரண்டொருவரை தனது பாதுகாப்பு துணைக்கு அழைத்துச்செல்லும் பத்மநாதன் அன்றைய தினம் தனியாகவே சென்றிருந்தார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பத்மநாதன் அவர்களின் பணி

பத்மநாதன் அவர்களின் பெயர் யாவராலும் அறியப்படிருந்தபோதும் அவர் மக்கள் முன்தோன்றிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. அண்மையில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட செவ்வி ஊடாகவே பத்மாநாதனை பெரும்பாலானவர்களுக்கு தெரியவந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பன்னெடுங்காலமாக அந்த அமைப்பின் வெளிநாட்டு நடவடிக்கைகளை செவ்வனே செய்து புலம்பெயர்ந்துவாழும் மக்களையும் போராட்டத்தின் பங்காளிகளாக மாற்றிய பெரும்பணியை பத்மநாதன் அவர்கள் மேற்கொண்டுவந்தார். சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், தனக்கு தனது பணிகளிலிருந்து ஓய்வு தரும்படி தேசியத்தலைவரிடம் கேட்டு, தனது வேலைகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார். அதற்கு அவரது உடல்நிலையே பிரதான காரணமாக இருந்தது. தினமும் பல மருந்துகளை உட்கொள்ளவேண்டியநிலையில் அவரது உடல்நிலை மிகமோசமான நிலையிலிருந்தபோதும் அவர் தொடர்ந்தும் தாயகப்பணிகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிவந்தார்.

2006 ஆரம்பமாகி கடந்த வருட இறுதியில் தமிழர் தாயகத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள் சிறிலங்கா படைகள் வசம் வீழ்ந்தன. அதுவரை தாயகத்திலிருந்து இராஜதந்திர பணிகளையும் முன்னெடுத்துவந்த தேசிய தலைவர், கிளிநொச்சி படையினரின் வசம் வீழ்ந்த பின்னர், தனது கட்டளைகளை தொடர்ந்து எதிர்பாராமல் சரியான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வெளிவிவகாரப்பணிகளை மேற்கொள்ளவும் புலம்பெயர்ந்துவாழும் மக்களின் பணிகளை ஒருங்கமைக்கவும் தாயகத்துக்கு வெளியே ஒருவரை நியமிப்பதற்கு முடிவு செய்தார். அதற்கு பொருத்தமானவர் பத்மநாதன் என்பது தலைவரது மனதில் எப்போதுமே இருந்துவந்த யோசனையாதலால், அது குறித்து அதிகம் சிந்திக்காது பத்மநாதன் அவர்களுடன் தொடர்புகொண்டு விடயத்தை விளக்கி பொறுப்புக்களை ஏற்று பணிகளை ஆரம்பிக்கும்படி கூறினார்.

இதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் பத்மநாதன் அவர்கள் விடுதலைப்புலிகளின் இராஜதந்திர உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தாயகத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு போரை நிறுத்தவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஈற்றில், சிறிலங்கா அரசு விடாப்பிடியாக போரை நடத்தி இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில், பல்லாயிரக்கணக்கான போராளிகள் பாதுகாப்பாக சரணடையும் ஏற்பாட்டை மேற்கொள்ளும்படி வெளிநாடுகளின் ஊடாக சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள்களை விடுத்து, அக்காலப்பகுதியில் கண்ணிமைக்காத பணியில் ஈடுபட்டிருந்தார். போரில் சிக்கிய மக்களை பாதுகாப்பதற்கு பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார்.

போர் முடிவடைந்த பின்னர், புலம்பெயர்ந்து வாழும் மக்களின் சக்தியுடன் புறநிலை தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கி அதன் பலத்துடன் தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ளவேண்டும், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பாக விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற மனிதாபிமான பணிகளையும் -

ஜனநாயக வழிமுறையின் கீழ் தமிழ்மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுவர் என்று அறிவித்து அதற்குரிய சரியான கட்டுமானங்கள் மற்றும் அமைப்பு சார் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் பிரதான பொறுப்புக்களையும் மேற்கொண்டுவந்தார்.

இந்தமாதிரியான ஒரு நிலையில் - தமிழினம் சற்று நிம்மதியாக மூச்சுவிடுவதற்கு தலை நிமிர்த்தியுள்ள இந்த கணத்தில் - பத்மநாதன் அவர்களை சிறிலங்கா கூட்டுச்சதி வலை விரித்து பிடித்திருக்கிறது.

பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பாக புறநிலை தமிழீழ அரசு தொடர்பான வேலைத்திட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிவந்த ஒருவர் கருத்து கூறுகையில் -

"விடுதலைப்புலிகளின் அனைத்து கட்டுமானங்களும் போரின் கொடூரத்தால் சிதைக்கப்பட்ட இன்றைய நிலையில், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் என்ற ரீதியிலும் போராட்டத்தின் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர் என்ற வகையிலும் பாரெங்கும் பரந்துவாழும் தமிழர்களை மீண்டும் ஒரு குடையின கீழ் அணிதிரட்டி ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் உயிர்ப்பை தொடர்ந்தும் பேணிக்கொள்வதில் பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டவர் பத்மநாதன்.

"அண்மைக்காலமாக அனைத்து தரப்பிலும் பத்மநாதன் தொடர்பாக பிரமாண்டமான விம்பம் உருவாக்கப்பட்டு அவர் தொடர்பான பல விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், தாயகத்தில் உள்ள மக்களின் விடிவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற அயராது பாடுபடும் எளிய மனிதர்தான் பத்மநாதன். அவர் புதுவடிவத்திலான தமிழரின் தற்போதைய போராட்டத்தின் குறியீடு ஆவாரே தவிர,


சிறிலங்கா அரசின் இவ்வாறான கைதுகள் எல்லாம் எமது மக்களின் விடிவை நோக்கிய பயணத்தின் பாதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை"
- என்றார்.

ஈழப்போரின் உயிர்த்துடிப்பை உறுதி செய்த வரலாற்று தீர்ப்பு


.யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு சிறிலங்கா அரசு அவசர அவசரமாக நடத்திய தேர்தலில் பங்குகொண்ட மக்கள் தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி இன்னமும் துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்துள்ளார்கள். தமது உரிமைகளுக்கான பேரவாவையும் அதற்கு தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசின் ஊடாக சர்வதேச சமூகத்துக்கும் எடுத்து கூறியுள்ளனர்.

போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வைத்திருந்தபடி - அந்த மக்கள் அடுத்த நேர உணவுக்கு மன்றாடிக்கொண்டிருக்க - தான் நினைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து, தனது அதிகார ஆக்கிரமிப்பை நிலைநாட்ட முயன்ற சிங்கள அரசுக்கு தற்போது கிடைத்திருப்பது தோல்வியே ஆகும்.

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலை எடுத்து நோக்கினால், அங்கு 13 ஆசனங்களைப் பெற்று ஆளும் அரச கட்சியுடன் இணைந்த கூட்டணி வெற்றி பெற்றிருப்பினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 23 ஆசனங்களுக்கான இந்தப் போட்டியில் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற பெருவிருப்புடன் அரசு நடத்திய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

குடாநாட்டுக்கும் கொழும்புக்குமான ஏ-9 பாதையைத் திறந்தது. தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னர் என்று பார்த்து வவுனியா முகாமிலிருந்த மக்களில் ஒரு தொகுதியினரை விடுவித்தது. குடாநாட்டில் பாரிய களியாட்ட நிகழ்வுகளை நடத்தியது. அங்கு 16 பெரிய திரையரங்குகளை திறக்கப்போவதாக அறிவித்தது.

இவ்வாறாக சலுகைகளைக் கொடுத்து உரிமைகளை மறக்கசெய்து அந்த மாயையில் மக்கள் மயக்கமுற்றிருக்கும்வேளை பார்த்து தனது 'அரசியல் திருக்கூத்தை' அரங்கேற்றிவிடலாம் என்று அரசும் அதனுடன் இணைந்த துணைக்குழுவினரும் பெரும்திட்டம் தீட்டினர். அரசுத்தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவும் துணைக்குழு தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த சில மாதங்களாகவே கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு இந்த 'தேர்தல் வியாபாரத்தை'ச் செவ்வனே நடத்தி முடிக்கவேண்டும் என்று பெரும்பிரயத்தனம் செய்தனர்.

ஆனால், பெற்றுக்கொண்ட ஆசன எண்ணிக்கைகள் அவர்களுக்கு 'ஆறுதல்பரிசு' போன்றதே தவிர, தமிழ் மக்களின் எண்ணங்களில் என்றுமே ஜீவனாக உள்ள உரிமைபோராட்ட உணர்வை அழித்துவிடவேண்டும் என்ற அவர்களின் நீண்டகாலத்திட்டத்துக்குப் பலத்த பதிலடியே ஆகும். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள குடாநாட்டில் வெறும் 22 ஆயிரத்து 280 மக்களே வாக்களித்துள்ளனர். இவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 ஆயிரத்து 922 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள். இவற்றிலிருந்தே அரசின் 13 பெரும்பான்மை ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைவிட 2600 வாக்குகள் மத்திரம் அதிகமாகப்பெற்றே அரசு கூட்டணி இந்த வெற்றியை பெற்றிருக்கிறது. இருப்பினும் குடாநாட்டில் அதிகவிருப்பு வாக்குகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமேடியஸ் பெற்றுள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட ஆனந்த சங்கரி 424 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.

இதிலிருந்து வெளிப்படையாக புரிந்துகொள்ளக்கூடிய விடயம் என்னவெனில், குடாநாட்டில் வாக்களிக்க தகுதியான ஏனைய வாக்காளர்கள் வாக்களித்திருந்தால் தமிழத்தேசிய கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றிருக்கும் என்பதே ஆகும். ஏனெனில், வாக்களிக்க வருகைதராத மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்கு வந்தால் தமக்கு அரச படைகளாலும் துணைக்குழுவினராலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம். ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால் அவர்களால் தமக்கு அச்சுறுத்தல் என்ற முடிவுடன் வாக்காளர்கள் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம் என்பது சாத்தியமற்ற வாதம். இல்லாவிடில், குடாநாட்டை பொறுத்தவரை தேர்தல் எனப்படுவது மாற்றத்தை தீர்மானிக்கும் விடயம் அல்ல என்ற முடிவுடன் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம்.

இவ்வாறு வாக்காளர்களின் மனதில் எழுந்திருக்க கூடிய இரு முடிவுகளுமே அரசுக்கும் அதன் திட்டங்களுக்குமான எதிரானவையே ஆகும். தமிழ்த்தேசியத்துக்கான உறுதிமொழிக்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும் வாக்கு கேட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை தோற்கடித்து அந்த கட்சியின் கொள்கையை தேர்தல் ஊடாக அடையாளம் தெரியாமல் அழித்து ஒழித்து விடுவதன்மூலம், தமிழ்மக்கள் சிங்கள அரசின் கீழேயே வாழ விரும்புகிறார்கள் என்ற பிரசாரத்தை மேற்கொள்வதுதான் சிறிலங்கா அரசின் திட்டம். இந்த திட்டத்துக்கு குடாநாட்டு மக்கள் தக்க பதிலளித்துள்ளார்கள்.

வவுனியாவில் இதைவிட பெரிய வெற்றி என்று கூறுமளவுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 சதவீதமான வாக்களர்கள் வாக்களித்தே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. புளொட் 3 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும் மலிந்த வவுனியாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இவ்வாறு தெரிவு செய்வதற்கு மக்கள் இன்னமும் தெளிவுடனும் துணிவுடனும் இருக்கிறார்கள் என்றால் அது தமிழ்மக்களின் போராட்ட உணர்வின் உண்மையான வெளிப்பாடே ஆகும்.

இரு மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெற முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு என்னவகையான நிலைமை காணப்பட்டது என்பது யாவருக்கும் தெரிந்ததே.

போர் முடிவடைந்து தமிழரின்போராட்டம் இனி இல்லை என்ற அரசின் பிரசாரம் ஓங்கிய நிலையில் -


தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழரின் கொள்கைகள் செல்லுபடியாகாது என்ற கருத்துருவாக்கம் பரவலாக பரப்பிவிடப்பட்ட நிலையில் -

சிங்கள அரசிடம் தமிழ்மக்கள் தமது இலட்சியத்தை அடகுவைத்துவிட்டுத்தான் இனி பிழைக்கவேண்டும் என்ற பரப்புரை கொள்கையை விற்ற சில தமிழ்கட்சிகளாலேயே முன்மொழியப்பட்ட நிலையில்தான் -

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது இலட்சியத்தில் வழுவாது இந்த தேர்தல்களை எதிர்கொண்டது. மக்கள் அதற்கு சரியான ஆணையை வழங்கியிருக்கிறார்கள். மக்கள் வழங்கியிருப்பது தனியே ஆணை மாத்திரம் அல்ல.

தமிழர்களின் உரிமைப்போராட்டம் இன்னமும் உயிர்த்துடிப்புடன் உள்ளது என்பதை உறுதியாக கூறியிருக்கும் வரலாற்று தீர்ப்பு.

ஈழம், அவர்கள் அடிமைகள் என்றாலும், விடுதலைக்காகப் போராடும் அடிமைகள்


நான்காம் ஈழப்போர் ஒரு கசப்பான முடிவை அடைந்து விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். படையியல் நோக்கில் இதனை மிகப் பெரும் தோல்வியாகத் தான் கருத முடியும். ஈழ விடுதலைப் போரின் வருங்காலம் பற்றிய பல வினாக்களை இந்தத் தோல்வி எழுப்பியுள்ளது: மரபுவழிப் போர்முனையிலிருந்து கரந்தடிப் போர்முறைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமா? இப்போதைய நிலையில் அவ்வாறு திரும்பிச் செல்ல முடியுமா? தமிழீழ மக்களின் ஒரு பகுதியினர் சிறை முகாம்களில் அடைபட்டிருக்க, மற்றொரு பகுதியினர் கடும் அடக்குமுறைக்கு நடுவில் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் போன்ற சூழலில் உரிமையற்றுக் கிடக்க, மற்றுமொரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்று அயல்நாடுகளில் பிழைப்புத் தேடித் தங்கள் தாயக உறவுகளுக்காக போராடிப் போராடி களைத்துப் போயிருக்க... விடுதலைப் போராட்டம் எவ்வழியிலேனும் தொடர வழியுண்டா? எப்படியாவது தொடருமென்றாலும் வெற்றிக்கு வாய்ப்பு உண்டா?


இந்த வினாக்களோடு தலைமை பற்றிய மைய வினாவும் ஓங்கி நிற்கிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் உரிய விடைகளை யும் விளக்கங்களையும் வெட்டிக் கட்டிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கவில்லை நாம். நாமாக என்ன முயன்றாலும் உடனடியாக விடைகள் கிடைக்கப் போவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை உறுதியான விடைகளாக இருக்கப் போவதில்லை.


குழப்பங்கள் தெளிந்து ஒளிவிளக்கம் கிடைக்கும்வரை கைகட்டி இருக்க வேண்டும் என்பதன்று நம் கருத்து. அப்படி நாம் இருந்து விடுவோமானால் அதுவே நம் பகைவர்களுக்குச் செய்யும் பெருந் தொண்டாகி விடும்.


நாம் இப்போதும் செயல்பட வேண்டும். இப்போதே செயல்பட வேண்டும். செயல்படுவதற்கான தேவை மறைந்து விடவோ குறைந்துவிடவோ இல்லை. கொள்கை சாராத குருட்டுச் செயல்பாட்டில் நாம் எந்நிலையிலும் நம்பிக்கை வைக்கக் கூடாது. தமிழீழ மக்களைப் பொறுத்த அளவில் நம் அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தால்கூட தயங்காமல் மாற்றிக் கொள்ளலாம். அப்படியொரு தேவை எழுந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை என்பதே நம் விடை.

வெற்றி பெறவாய்ப்புள்ளதா? என்று விசாரித்தறிந்து எவரும் விடுதலைப் போர் தொடுப்பதில்லை. விடுதலை தேவை என்றால், அதற்காகப் போரிடுவதும் தேவை என்றால், விடுதலைப் போர் தொடங்குவதற்கு இந்தக் காரணங்களே போதும். களத் தோல்விகள் எவ்வளவு பெரியவை என்றாலும் விடுதலைக் குறிக்கோளை தேவையற்றதாக்கி விடுவதில்லை.

தமிழீழ விடுதலை - சிங்கள அரசிடமிருந்து விடுபட்ட தமிழீழத் தனியரசு - ஒரு வரலாற்றுத் தேவை என்ற அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? தமிழர்கள் உரிமையோடு வாழத்தான் தனியரசு கேட்டார்கள் முதலில். அவர்கள் உயிரோடு வாழ்வதற்கே தனியரசு தேவை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது தமிழீழத் திற்கான தேவை வளர்ந்துதான் உள்ளது.

இனப்படுகொலை செய்யும் அரசிடம் இரந்து கேட்டுச் சில சலுகைகளைப் பெறலாம் எனக் கருதுவோர் தமிழீழ விடுதலைக் கொள்கையைக் கைகழுவப் பார்ப்பார்கள், அதற்கு இப்போதைய நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இது தமிழர்களுக்கு எவ்வித விடிவும் தராது. தமிழீழ மக்களும், அவர்களின் நலனில் அக்கறைகொண்ட அனைவரும் தமிழீழ விடுதலைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

அதேபோல் உடனடிக் கடமைகளையும் மறந்து விடக் கூடாது. தமிழீழ மக்கள் மீது பாரிய இன அழிப்பை நிகழ்த்தியுள்ள மகிந்த இராசபட்சே, கோத்தபய இராசபட்சே, சரத் பொன்கோ கும்பல் அதன் குற்றங்களை மறைக்க அனைத்து வகை மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரம் அப்பாவிப் பொது மக்களை சிங்கள இராணுவத்தினர் இரக்கமின்றிப் படுகொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆயுதங்களில் வெள்ளைக் கொடி யோடு சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்களையும் மற்றவர்களையும் படுகொலை செய்த போர்க் குற்றமும் அம்பலமாகி விட்டது. இனக்கொலை, போர்க் குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகப் பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களைப் பாதுகாக் கும் கேடயமாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத் தில் சீனத்துடனும், பாகிஸ்தானு டனும் சேர்ந்து இந்தியா தான் சிங்கள அரசின் மீது துரும்பும் விழாமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்ல, தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் வகை யில் சிங்கள அரசு கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும் சேர்ந்து நிறைவேற்றி கொடுத்துள்ளது.

போரை நடத்துவதற்கு மட்டுமல்லாமல், போரின் விளைவுகளை மறைப்பதற் கும், இனக் கொலை குற்ற வாளிகளைக் காப்பதற்கும் இந்திய அரசுதான் சிங்கள அரசுக்கு உதவி வருகிறது. இல்லை இல்லை, வழிகாட்டி வருகிறது. இந்தியா வின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இராச பட்சே வெளிப்படையாக அறிவித்திருப்பதும், சிங்களத் தரப்பின் ஒரு குழுவும், இந்தியா தரப்பின் எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் உள்ளிட்ட ஒரு குழுவும் தொடர்ச்சியாக ஒருங் கிணைந்து செயல்பட்ட விதத்தை கோத்தபய இராசபட்சே எடுத்துக்காட்டியிருப்பதும் இந்தியா வின் பங்கைத் தெளிவாகக் காட்டுகின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் 20,000 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று அமைதிப்படைத் தளபதி அசோக் மேத்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அரசு சார்பில் யாரும் இதை மறுக்க வில்லை.

தமிழீழ மக்களுக்கு எதிரான இனக்கொலைப் போரில் இந்தியாவின் முனைப்பான பங்கை இனி யும் மறைக்க முடியாது. ஆகவே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றங்களுக்காக மகிந்த இராசபட்சே வகை யறாவைக் கூண்டிலேற்றினால் போதாது, மன் மோகன்சிங் வகையறாவையும் கூண்டிலேற்ற வேண்டும்.

தமிழர்களின் அவலநிலையைப் பயன்படுத்தி இலங்கைத் தீவை முழுச் சிங்கள நாடாக மாற்றும் முயற்சியில் மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வுக்கென்று உலகெங்கும் பணம் திரட்டித் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதுதான் அதன் நோக் கம். இதனை சிங்களப் பேரினவாதிகள் அவ்வள வாக மறைக்கவும் இல்லை. தமிழர்களைத் தமிழ்ப் பகுதிகளில் மீளக் குடியேற்றவா இவ்வளவு பெரிய போரை நடத்தி இவ்வளவு பெரும் இழப்புகளைச் சந்தித்தோம்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு உதவுவதன் பேரால் சிங்கள அரசுக்கு நிதி கொடுப்பதும் மற்றவர் களைக் கொடுக்கச் சொல்வதும் சிங்களப் பேரின வாதத்தை வலுப்படுத்தப் பயன்படுமே தவிர தமிழர்களுக்கு உதவாது. தமிழர் மறுவாழ்வுக் காக யார் உதவ நினைத்தாலும் மகிந்த அரசின் வழியாக உதவ முடியாது.

ஐ.நா. உதவி நிறுவனங்களும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் நேரடியாகப் பொறுப்பேற்று தமிழர் மறு வாழ்வுக்கு உதவ வேண்டும். இதற்கு ஒத்துக் கொள்ளும்படி சிங்கள அரசை நெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்திடல் வேண்டும்.

போரில் பலியான, காயமுற்ற, வீடிழந்த, பல் வேறு வகையிலும் வாழ்விழந்த ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சிங்கள அரசு கணக்குப் பொறுப்பு (அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) உடையதாகும். ஒவ்வோர் இழப்புக்கும் அது கணக்கு தருவதோடு உரிய இழப்பீடும் தந்தாக வேண்டும்.

நான்காம் ஈழப் போரில் நடந்தவை குறித்தெல் லாம் புலனாய்வு செய்து விசாரணை நடத்து வதற்குப் பன்னாட்டு அளவிலான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நாம் ஐ.நா.விடமும் பன்னாட்டு சமுதாயத்திடமும் எழுப்புவோம். இந்தக் கோரிக்கைகளுக்காக தமிழ்த் தேசிய அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சனநாயக ஆற்றல்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும். இதற்கான ஒரு தொடக்க முயற்சியை தமிழர் ஒருங்கிணைப்பு வாயிலாக பெரியார் திரா விடர் கழகம், தமிழ்த்தேசம் பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பை மேலும் விரிவாக்கி, மேலும் செரிவாக்கி வளர்த்துச் செல்வோம்.

இறுதியாக ஒன்று. கடந்த ஆறேழு மாத காலத்தில் தமிழர்களாகிய நாம் இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி என்னென்னவோ செய்தோம். எப்படியெல்லாமோ போராடினோம். தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர் களும் போராடினார்கள். நம் முயற்சி தோற்று விட்டது. நம் போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆம், இறுதி வரை நம்மால் போரை நிறுத்த முடியவில்லை. பகைவன் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பிறகுதான் ஓய்ந்தான். இந்தத் தோல்வி தமிழ் மனத்தில் ஏற்படுத்தியுள்ள காயம் ஆழமானது. நூறாண்டு ஆனாலும் ஆறாத வடு இது. ஆறுதலில்லாத இந்த வேதனை என்றாவது மாறுமா, தெரியாது.


நம் கையறு நிலையை எண்ணி வருந்தினால் போதாது. இறுதியாகப் பார்த்தால் இது நம் இனத்தின் கையறு நிலை என்று தெரியவரும். தமிழ்நாட்டுக்கென்று அயலுறவுத் துறைஅமைச்சர் இருந்திருந்தால் நாம் இந்தியாவின் பிரணாப் முகர்ஜியை ""அய்யா, தயவுசெய்து கொழும்பு செல்லுங்க'' என்று கேட்டிருப்போமா?


நமக்கென்று செல்வ வளம் இருந்திருந்தால், ஈழத் தமிழர் துயர்தணிப்புக்கு உதவுங்கள் என்று தில்லியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்குமா?


தமிழ்நாட்டுக்கென்று ஐ.நா.வில் பேராளர் இருந்திருந்தால் நாமே உலக அரங்கில் சிங்களத்தைக் கூண்டில் நிறுத்தியிருக்க மாட்டோமா?

சுருங்கச் சொல்லின் தமிழ்த்தேசம் இறை யாண்மை அற்றிருப்பதால்தான் நம்மால் நாம் விரும்பியபடி தமிழீழ மக்களைக் காக்க முடியாது போயிற்று. நான்காம் ஈழப் போரும் அதன் முடிவும்


தமிழர்களாகிய நாம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அடிமைகளாய் இருப்பதைப் புரிய வைத்து விட்டது.

அவர்கள் அடிமைகள் என்றாலும், விடுதலைக் காகப் போராடும் அடிமைகள்,

நாம் ????

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA