Thursday 13 August 2009

உலகமே எதிர்த்தாலும் உரிமைக்குரல் ஓயாது...

ஈழ விடுதலைப்போராட்டத்தின் இருப்பினை அடியோடு அழித்துவிடவேண்டும் என்பதில் வெறித்தனமாகச் செயற்படும் சக்திகளின் சதியால் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயலாளர் நாயகம் பத்மநாதன் அவர்கள் அண்மையில் கைதாகிக் கடத்தப்பட்டிருப்பதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பும் விடிவுக்கான போராட்டமும் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.

"சிறிலங்காவில் புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு உயிர்ப்பளிக்கும் செயற்பாடு உலகின் எந்த மூலையில் நடைபெற்றாலும் அதைத் தேடிச்சென்று நசுக்கும் வல்லமையுடன் சிறிலங்கா அரசு உள்ளது" - என்று பத்மநாதன் அவர்களின் கைதின் பின்னர் பேசிய சிறிலங்கா அரசின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்குப் பயங்கரவாத முலாம் பூசியது மட்டுமல்லாமல், அந்தப் போராட்ட உணர்வுடன் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் செயற்பாடுகளுக்கும் சிறிலங்கா அரசு சவால் விடுத்திருக்கிறது.
தனது நாட்டில் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடு வீடாகச் சென்று அப்பாவித் தமிழ்மக்களை வெள்ளைவானில் கடத்திச் செல்வது போல வெளிநாடுகளிலும் வந்து தமது கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சக்தி தமக்கு இருப்பதாக மார் தட்டியிருக்கிறது சிங்களதேசம். இதன்மூலம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் என்ற மாபெரும் சக்தியை மிரட்டி அடிபணியவைக்க முயற்சி செய்திருக்கிறது.

தற்போது சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்?

அதேவேளை, இந்த எதிர்நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக தாயகத்தில் உள்ள மக்களின் விடிவுக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார்கள்?


இன்றைய நிலையில் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்வாழ்வு எனப்படுவது சிங்களப் படைகளின் கைகளின் அகப்பட்ட சீரழிவாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்குரிய உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதி செய்துகொள்ளும் பணியைப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மால் இயன்றளவு செய்துவருகிறார்கள். இந்தப்பணி தனிப்பட்ட ரீதியிலும் கட்டமைப்புகள் ஊடாகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப்பணியின் தொடர்ச்சி அவசரமானதும் அத்தியாவசியமானதும்கூட.

இதற்கு அப்பால், தமிழ் மக்களின் அரசியல்வேலைத்திட்டங்கள் சமாந்தரமாக மேற்கொள்ளப்படுவதும் இன்றைய வரலாற்றுத்தேவையாக உள்ளது. பத்மநாதன் அவர்களின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான பூர்வாங்கவேலைத்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்திருக்கிறார்.


தமிழினத்தின் குறியீடுகளாக முன்னின்று பணிபுரிபவர்களைக் கைது செய்து அடைத்துவைப்பதாலோ அவர்களைக் கொன்றொழித்துவிடுவதாலோ பன்னெடுங்காலமாக தமிழ்மக்களின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் விடுதலைத்தீயை அணைத்துவிடமுடியாது.

சுதந்திரத்திற்கான தாகத்துடனும் ஏக்கத்துடனும் உள்ள ஓரினத்தின் உணர்வை எந்த அடக்குமுறையாலும் அழித்துவிடமுடியாது என்ற கருத்தினை உருத்திரகுமாரன் அவர்கள் மீளவும் உறுதியாகக் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்துவாழும் மக்களின் இந்தக் கருத்தோட்டத்துக்கு வலுச்சேர்த்தாற்போல் - பத்மநாதன் அவர்களின் கைதுக்குப் பின்னர் இடம்பெற்ற - வடக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழர்சேனையை அழித்து அவர்களின் ஆயுதப்போராட்டத்தை அடியோடு ஒழித்து சலுகைகளை அள்ளிவீசிவிட்டால் அல்லது அடக்குமுறையைப் பிரயோகித்தால் தமிழ்மக்கள் உரிமைகளை மறந்துவிடுவார்கள் என்று சிறிலங்கா அரசு போட்ட கணக்கு பொய்த்துப்போயிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் அடிப்படைக்கோட்பாடுகளைத் தாங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்து வடக்கு மக்கள் தமது தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள்.

தமி்ழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கையில் -

"தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது இல்லை. தனித்துவமான வகையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்குச் சகல அதிகாரங்களுடனுமான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.

"காணி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கைத்தொழில்கள் அனைத்தும் உள்ளடங்கிய ஆட்சி எமது மக்களின் கைகளில் இருக்க வேண்டும். இவற்றை நிர்வகிப்பதற்கான நிதியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டுவதற்கு அனுமதி இருக்க வேண்டும்.

"இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டம் இதுவே ஆகும்" - என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆகவே, இனிவரும் காலப்பகுதியில் தாயகத்தில் ஏற்படக்கூடிய வலுவான தமிழர்களின் அரசியல் தளத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள், கட்டமைப்பு ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டும். அதற்கான முயற்சி தற்போது மிகப்பெரியளவில் வெற்றியைக் கண்டிருக்கிறது.
புலம்பெயர்ந்துவாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ்அமைப்புக்களும் அந்தந்த நாடுகளில் ஒரு குடையில் திரண்டிருக்கின்றன. செயற்பாட்டு ரீதியில் தமக்கிடையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் கொள்கைரீதியில் தாம் ஒன்றிணைந்த சக்தியே என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அவை ஒருகோட்டில் நின்று பணிபுரியத் தயாராகியிருக்கின்றன.

இந்த ஒரு பலமான தளம் இனிவரும் காலத்தில் தாயகத்தில் அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரசக்தியாகச் செயற்படும் அதேவேளையில், அதன் ஏனைய கட்டமைப்புகள் ஊடாக அங்குள்ள மக்களுக்குப் பணிபுரியும் ஓர் அரசாகவும் செயற்படப்போகிறது. இதன்செயற்பாடுகள் பலதுறைகளிடமும் ஆலோசனைகளைப் பெற்று இயங்கும் அரசின் செயற்பாடுகளாக அமையப்போகின்றன. தேசியத்தலைவரின் வழிகாட்டுதலுடன் கட்டமைப்பு ரீதியில் அனைத்துத் துறைகளிலும் தமிழர்தாயகம் வளர்ச்சிபெற்று தமிழீழத் தனியரசாக எவ்வாறு கௌரவத்தோடு நிமிர்ந்துநின்றதோ, அந்தக் கட்டமைப்புக்களை மீண்டும் உருவாக்கவேண்டிய பொறுப்பும் நாடு கடந்த தமிழீழ அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்துக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கு பாரெங்கும் பரந்துவாழும் தமிழ்உறவுகளின் ஓருமைப்பாடு மிகவும் அத்தியாவசியமானது. இன்றையநிலையில் அது கட்டாயக் கடமையாகிறது. இதன்தேவை அனைத்துமட்டத்திலும் உணரப்பட்டு அது செவ்வனே செயற்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அதன் தொடர்ச்சிதான் சிங்களதேசத்தின் எதிர்நடவடிக்கைகளுக்குப் பதிலடிகொடுக்கக்கூடிய பலமாக இருக்கும்.

ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரெண்டு அரசுகள் கடத்தி செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்கு?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.
அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது).
இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.
செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.
மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு. அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்தி‌ச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?
செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.
அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.
விடுதலை போராட்டத்தை அழிப்பதே நோக்கம்
ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
“பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.
சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.
செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.

புலிகளின் மௌனம் எதுவரை ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்று புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளர் கே.பி.யை மீட்பதற்குரிய இராஜதந்திர முயற்ச்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இராணுவ ரீதியில் தமது எதிர்ப்பினை புலிகள் காண்பிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தாக்குதல்கள் அரசியல் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீதாகவோ அல்லது சாதாரண பொதுமக்கள் மீதானதாகவோ இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளுக்கு சார்பான சில வெளி நாடுகளின் தீவிர அழுத்தங்கள் காரணமாகவே இந்த உறங்கு நிலை உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்பட்டு வந்துள்ளதாகவும் எனினும் கே.பியின் கைதினை அடுத்து அந்த நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்புவதற்கு எத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் ஜனநாயக போராட்டதையும் அழிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்ச்சிகள் சில உலக நாடுகளை விசனமடையச் செய்துள்ளதாகவும் அதன் காரணமாக விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட அவை ஊக்கப்படுத்துவதாகவும் தெரியந்துள்ளது.

இந்த நிலையில் புலிகளின் மரபு சார் போராட்ட வலு மட்டுமே தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களின் ஏனைய போராட்ட வடிவங்கள் முன்னரைவிட பலமானதாக மாறியுள்ளதாகவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

கே.பியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே புலிகளின் வெளிநாட்டு பிரிவுகள் முன்னெடுத்து வரும் நிலையில் அவை பலனளிக்க தவறினால் வன்னி படை நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிவாங்கும் வகையில் பலத்த அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை புலிகள் தெற்கில் நடத்தக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் தாக்குதல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதை பாதுகாப்பு விவாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எது எப்படி இருப்பினும் புலிகளின் மௌனம் எப்போது கலையும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

இலங்கை தமிழர் பிரச்சினை- அமெரிக்கா ஆலோசனை

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னை, இனிமேல் செய்ய வேண்டிய புனரமைப்பு திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.


இலங்கை தமிழர்கள் சார்பாக 16 பேர் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை செயலர் ராபர்ட் பிளாக் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதர் சார்ஜ் மோரும் இதில் கலந்து கொண்டார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து இம்மாதிரியான கூட்டம் ஒன்றை அமெரிக்க அரசு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை.

ராஜபக்சேவை கொல்லவந்த மனித வெடிகுண்டு!

இலங்கையின் தெற்கு மாகாண கவுன்சிலர் டேன்னி ஹிதித்தேதியாகே கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணன் என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.


இவர் அதிபர் ராஜபக்சேயின் சொந்த ஊரான அங்குனாகோலபெலீசாவில் மனித குண்டாக செயல்பட்டு ராஜபக்சேவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து, லட்சுமணனை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இலங்கை அரசு கோர்ட்டில் விசேஷ மனுதாக்கல் செய்துள்ளது.


இதை ஏற்ற மாஜிஸ்திரேட்டு வருகிற 17-ந்தேதி லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர் செய்யும்படியும், அதன் பின் அவரை போலீஸ் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.


இது குறித்து மூத்த வக்கீல் திலீபா பெய்ரிஸ் கோர்ட்டில், `ராஜபக்சேயை கொல்வதற்காக அதிபரின் ஊரில் உள்ள ஒருவர் உதவியுடன் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லட்சுமணன் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களும், தமிழ்த்தேசியமும் நகமும் சதையும் போன்றது- செல்வம் அடைக்கலநாதன்


தமிழினத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கமுடியாது. தமிழர்களும், தமிழ்தேசியமும் நகமும் சதையும் போன்றது என்பதை சிங்கள தேசமும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நடந்துமுடிந்த யாழ் மற்றும் வவுனியா மாநகராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு:

நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணா நிலையினையும், உறுதித் தன்மையினையும், நேர்மை அரசியலையும், உரிமை செயற்பாட்டினையும் மதித்து பற்றுறுதியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது நன்றிகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவம் செய்யும் வன்னி மாவட்டத்தின் இதயமாய் திகழும் வவுனியா நகரசபையின் முழு அதிகாரத்தையும் ஆளுமையையும் முன்னெடுக்கும் உன்னத பணிக்காக எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவு வழங்கிய வவுனியா நகரசபை மக்களுக்கு பிரத்தியேகமான நன்றியறிதலை உரிமையுடன் கூறுவதில் உளமார மகிழ்ச்சி அடைகிறேன்.

வன்னி நிலப்பரப்பில் இடம்பெற்ற பாரிய பேரவலத்தின் கோரத்தாண்டவம், கொலைவெறி அராஜகம் இடம்பெயர்வு என்ற பெயரில் 3 இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் படும் வதைக்கொடூரம் எல்லாவற்றையும் மூடிமறைத்து தமிழ்மக்கள் இலங்கை அரசின் கொள்கைகளை ஏற்றுள்ளனர்; தமிழர்கள் மகிந்த சிந்தனையை மதிக்கின்றனர் என்பதை உலகத்திற்குக் காட்டும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்களை அரசு திட்டமிட்டு நடாத்தியது.

யாழ்ப்பாணம் மாநகரசபை தமிழ் மக்களும் வவுனியா நகரசபை தமிழ் மக்களும் அரசின் கபட நாடகத்தின் முகமூடியை இந்தத் தேர்தல் மூலம் கிழித்தெறிந்து விட்டனர்.

தமிழினத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கமுடியாது. தமிழர்களும், தமிழ்தேசியமும் நகமும் சதையும் போன்றது என்பதை சிங்கள தேசமும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ். மாநகரசபை தேர்தலில் முழுமையாக மக்கள் வாக்களித்திருப்பின் அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கும் என்பதனை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து இட்ம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் எமது இஸ்லாமிய மக்களின் வாக்குகளால் வெற்றிலைக்கட்சி மண்கவ்வுவதில் இருந்து தப்பித்து விட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இனிமேல் வடக்கு கிழக்கில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றே தீருவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அரசிற்கு ஆலவட்டம் பிடித்து 'ஆகா ஓகோ' போட்டவர்களுக்கு இந்தத் தேர்தல் படிப்பினையாக இருக்கட்டும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் அரசியற் செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒற்றுமையுடன் எமக்கு உறுதுணை வழங்கும்படியும் வேண்டுகின்றேன் என அதில் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே. பி.யை அழைத்து சென்றார்!


விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ரிய+ன் விடுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் விடுதியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்மநாதன், மலேசிய தலைநகர் கோலாம்பூரிலுள்ள ரியூன் விடுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவரது

செல்லிடப் பேசிக்கு வந்த அழைப்பிற்கு பதிலபிப்தற்காக வெளியே வந்த போது கடத்தப்பட்டதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக விடுதி அதிகாரிகள் உள்ளக விசாரணையை நடத்தியுள்ளனர்.

இதன்போது சீ.சீ.ரி.வி. வீடியோ கமெராக்களில் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லையென விடுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்மநாதன் விடுதிக்கு வந்துசென்றதாகவோ அங்கு கைதுசெய்பய்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் விடுதியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதியின் சீ.சீ.ரி.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் பதியப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கோலாலம்பூரிலுள்ள ஏனைய விடுதிகளுடன் ஒப்பிடுகையில், தமது விடுதியில் அதிகளவான கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், விடுதிக்கு வாகனத் தரிப்பிடம் இல்லாததால் கே.பி. விடுதியின் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைதுசெய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கே.பி. என்றவொரு நபர் தமது விடுதியில் தங்கியிருந்தாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரியும் தங்களிடம் விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஊடகங்களில் தமது விடுதியின் பெயர் வெளியானமையால், தாம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கே.பி. தமது விடுதியில் தங்கியிருந்திருந்தாலும், அவரது சொந்தப் பெயரை பயன்படுத்தியிருக்க மாட்டாரென்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அதனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் இனங்காண முடியவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கைதுசெய்யப்பட்டாரா அல்லது தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சந்தேகங்கள் வலுத்துவருகின்றன.

எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை தனியாக வந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

கே.பி. தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் வரையில், இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள்கூட கே.பி.யின் விடயம் குறித்து அறிந்திருக்கவில்லையெனவும் அந்தளவிற்கு இந்த விடயத்தில் இரகசியம் பேணப்பட்டுள்ளதாகவும் அந்த இரகசியத் தகவல் மேலும் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய, கே.பி. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA