Saturday 29 August 2009

வேலி பாய்ந்து போன சேவல்..!


இஞ்சருங்கோ.. எங்கட வீட்டுச் சேவல் அடுத்த வளவுக்க போய் அவையின்ர பேட்டோட கலைபடுகுது.. ஒருக்கா சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்திக் கொண்டு வாங்கோப்பா. அங்க போய் பழகிட்டு என்றால் பிறகு அங்கையே தங்கிடும் அப்பா. இந்த முறை எங்கட புள்ளிக் கோழிக்கு அடை வைக்கலாம் என்றிருக்கிறன்.

ஓமடியப்பா.. நானும் கவனிச்சனான். அவர் இப்ப கொஞ்ச நாளா அங்கதான் அதிகம் மிணக்கடுறார். உந்த ஊரல்லாம் திரிஞ்சு சாவகச்சேரி சந்தையில வேண்டி வந்த வெள்ளைடையன் சேவல் என்று வளர்த்தா.. அவர் எனக்கு உச்சிக் கொண்டு திரியுறார். ஆக மிஞ்சிப் போனா காலை முறிச்சு கறிச் சட்டிக்க போட வேண்டியதுதான்.

இல்லையப்பா.. அது நல்ல சாதிச் சேவல். எங்கட கோழிக்கு விட்டு அந்த முட்டையில அடை வைச்சா நல்ல குஞ்சுகள் வருமப்பா. சும்மா கறி சட்டி என்று விசர்க்கதை கதையாமல் சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்தி விடுற வேலைச் செய்யுங்கோப்பா.

சரியடியப்பா. கொஞ்சம் பொறு. உவன் தம்பியின்ர கடிதம் வந்திருக்குப் போல வாச்சிட்டுப் போறன்.

என்ன தம்பின்ர கடிதமா. எப்பைங்க வந்தது. தபால்காரன் மணி அடிச்ச சத்தம் கேட்கல்லையே.

நான் றோட்டுக் கூட்டிக் கொண்டு நிண்டனான். அதுதான் அவன் தபால்காரப் பொடியன் கையில தந்திட்டுப் போட்டான்.

அப்படியே.. எங்க பிரிச்சுப் பெலத்தாப் படியுங்கோ கேட்பம். என்ர பிள்ளையின்ர கடிதம் கண்டு 6 மாசமாச்சு. பீ ஆர் (P.R) கிடைச்சிட்டு அம்மா என்று அப்ப எழுதினதுக்குப் பிறகு ஒரு கடிதமும் போடல்ல என்ர பிள்ளை.

சரி சரி உந்த புராணத்தை விட்டிட்டு கடிதத்தை வாசிக்கிறன் கேள்...

சரி வாசியுங்கோப்பா.. பெலத்தா.

"அன்புள்ள அம்மா அப்பாவிற்கு..

நான் இங்கு நலம். உங்கள் நலனிற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நான் இம்முறை எழுதும் விடயம் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். இருந்தாலும் எழுத வேண்டும் என்ற கட்டாய நிலையில் எழுதுகின்றேன்."

என்னவாம் அப்பா. தம்பி இப்படி எழுதி இருக்கிறான். ஏதேனும் பிரச்சனையோ என்ர பிள்ளைக்கு. கெதியா மிச்சத்தையும் வாசிங்கோப்பா.. கை கால் எல்லாம் பதறுது.

உன்ர அவசரத்துக்கு.. என்னால வாசிக்க ஏலாதடியப்பா. கண்ணு பூஞ்சு கட்டி கிடக்குது. இந்தா மிச்சத்தையும் வாசிக்கிறன் கேள்.

"அம்மா.. நான் சொல்லப் போகும் விடயம் உங்களை தான் அதிகம் பாதிக்கலாம். அதனால் தையிரியமா மனசை வைச்சுக் கொள்ளுங்கோ.

நான் ஊரில் இருந்த போது கோணேசர் மாமாவின் மகள் மஞ்சுளாவை காதலித்தேன் என்ற விடயம் அரசல் புரசலாக உங்களுக்கு தெரிய வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். கோணேசர் மாமா உங்கள் ஒன்றுவிட்ட தம்பி என்பதால் நிச்சயம் உங்கட காதுக்கும் அந்தச் செய்தி வந்திருக்கும். இருந்தாலும் இப்ப சொல்லுறன்.. நானும் அவரின்ர மகளும் காதலிச்சது உண்மை. அவளைக் கலியாணம் செய்வன் என்று சொன்னதும் உண்மை. ஆனால்.. இப்ப இங்க கனடாவில என்னோட இரவு விடுதியில் வேலை செய்யுற ரோஸ் மேரியைக் காதலிக்கிறன். அவளையே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எனது நிலை இப்போ இருக்கிறது.

அவளை ஓர் நாள் இரவு விடுதியில் சந்தித்ததில் இருந்து நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது அவள் கர்ப்பமாக வேறு இருக்கிறாள். அதனால் திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள். இதற்கு மேலும் என்னால் அவளிற்கு சமாதானம் சொல்ல முடியாத நிலை எனக்கு இங்கு. அதனாலேயே இந்த முடிவை எடுத்துவிட்டு இக்கடிதத்தை சிரத்தையோடு எழுதுகிறேன்.

ரோஸ் மேரி ஒரு வெள்ளைக்காரப் பெட்டை. அவளின் பெற்றோர் பற்றி அவளுக்கு தெரியாது. அவள் பெற்றோரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு இரவு விடுதியில் வேலை செய்து வந்தவள். அங்கே போன இடத்தில் எனக்கும் அவளுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு விட்டது. அதன் பின் அந்த விடுதியை விட்டுவிட்டு என்னோடு நான் வேலை செய்யும் விடுதியில் வேலை செய்து வருகிறாள்.

இந்த விடயத்தை கோணேசர் மாமாவிற்கும் மஞ்சுளாவிற்கும் எப்படியாவது சொல்லிவிடுங்கள்.

வேறு புதினம் இல்லை. கலியாணம் முடிந்த கையோடு படங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த விடயத்தை கோணேசர் மாமா வீட்டுக்குத் தவிர வேறு எவருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படிக்கு,
அன்பு மகன் முகுந்தன்."

என்னப்பா.. இது. இப்ப கோணேசருக்கு என்ன பதில் சொல்லுறது. அவர் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நியூசிலண்ட் என்று அவள் மஞ்சுளாவுக்கு பேசி வந்த கலியாணங்களையும் இவனை நம்பி வேண்டாம் என்று போட்டு பெட்டையை காக்க வைச்சிருக்கிறார். அவளும் இவனையே நினைச்சுக் கொண்டு இருக்கிறாள். என்னப்பா செய்யுறது இப்ப.

என்னைக் கேட்டால் நான் என்னத்தையடிப்பா சொல்ல. உன்ரை பிள்ளை இப்படிச் செய்வான் என்று யார் கண்டது.

ஆமா அவன் காசு அனுப்பேக்க உங்கட பிள்ளை எண்டுங்கோ.. இப்ப பிரச்சனைக்க மாட்டிவிட்ட உடன என்ர பிள்ளை எண்டுங்கோ.

இஞ்ச பார்.. சரசு.. இந்த விசயத்தை கோணேசற்ர காதுக்கு போட சரியான ஆள் எங்கட சோமண்ணை தான். அவரட்ட போய் பேசிப் பாக்கிறனே.

அவன் தம்பி சொல்லுறான் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என்று. நீங்க.. சோமண்ணைக்கு சொல்லுவம் என்றீங்கள்.

இல்ல சரசு.. அவன் தம்பின்ர கதையை விடு. அவனுக்கு இங்கத்தை நிலைமை தெரியாது. ஏற்கனவே கோணேசரும் வந்து சம்பந்தமும் பேசி முடிச்சிட்டுப் போயிட்டார். நாங்களும் சரி என்று சொல்லிப் போட்டம். இவன் முகுந்தன் வெள்ளைக்காரியோட போவான் என்று நாங்கள் என்ன சாத்திரமே பார்க்கிறது. இப்படியான நிலையில.. நாங்கள் நேர போய் கதைச்சா ஏமாத்திப் போட்டினம்.. தங்கட குமர் வாழ்வை பாழாக்கிப் போட்டினம் என்று கோணேசரும் மனுசியும் சும்மா இருக்குங்களே. அதுதான் சொல்லுறன் சோமண்ணையை அனுப்பி விசயத்தைச் சொல்லுவம்.. பக்குவமா என்று சொல்லுறன்.

நீங்க சொல்லுறது தாங்க சரி. அப்படியே செய்வம். நானும் வரட்டே.. சோமண்ணை வீட்ட.

நீயும் வந்தா நல்லம்.. தானே.

பொறுங்கோ.. உந்தச் சீலையை ஒரு சுத்து சுத்திட்டு ஓடிவாறான். உவன் தம்பி இப்படிச் செய்வான் என்று நான் கனவிலும் நினைக்கல்லங்க.

அதை விடடியப்பா. நடந்தது நடந்து முடிஞ்சுது. இப்ப ஆக வேண்டியதைப் பாப்பம். அதுசரி உந்தச் சேவலை என்ன செய்யுறது..

பெத்து வளர்த்ததே படி தாண்டிப் போட்டுது.. சேவலாம் சேவல். அது படுக்கைக்காவது மாமரத்துக்கு வரும். பேசாமல் இருங்கோ. விசரக் கிளப்பா. நான் இந்தா சீலையை சுத்திட்டு வந்திடுறன்.

சரியடியப்பா.. கெதியா வந்து சேர். நான் உந்தப் பின் கதவுகளைப் பூட்டிப் போட்டு வாறன்.

நானும் இந்தா ஓடி வந்திடுறன். நீங்கள் போய் பூட்டிக் கொண்டு வாங்கப்பா.

உலகின் அரச பயங்கரவாத நாடுகளின் பட்டியல்.

ஈழத்தில் சிறீலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை.

1. சிறீலங்கா: படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இன அழிப்பு, ஜனநாயக மறுப்பு போன்ற அரச பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்ட வகையில் செய்தல். இராணுவ பிரசன்னத்தோடு தேர்தல்களை நடத்தி ஜனநாயகம் என்று காட்டுதல்.
ஈராக்கில் அமெரிக்காவின் நாசகார நோக்கிலான மனித இன அழிப்பு.

2. அமெரிக்கா: படுகொலைகள், இன அழிப்புக்கு ஆயுதங்களை வழங்கல், போரில் மனித உரிமைகள் மீறப்படுதலைப் பரப்புதல். இராணுவ பொறிகளை பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் பரப்புதல். ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவப் பிரசன்னத்தோடு தேர்தல்களைத் திணித்தல். அரச பயங்கரவாத நாடுகளுக்கு நிதி மற்றும் இராணுவ உதவி வழங்கி ஊக்குவித்தல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.


3. பிரிட்டன்: அமெரிக்காவோடு இணைந்து இராணுவத்தைப் பயன்படுத்தி.. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுதல். இராணுவ தளபாடங்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கான யுக்திகளை பகிர்ந்து கொள்ளுதல்.

4. இந்தியா: அரச பயங்கரவாதிகளின் படுகொலைகளுக்கு, இன அழிப்புகளுக்கு ஆயுத மற்றும் ஆளணி, இராணுவப் பயிற்சி, நிதி உதவிகள் மற்றும் இராஜதந்திர உதவிகள் வழங்குதல். மனித உரிமைகள் மீறல். இராணுவ பிரச்சனத்தோடு தேர்தல்களை திணித்து ஜனநாயகம் என்று காட்டுதல்.

5. பாகிஸ்தான்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி, தளபாட, தொழில்நுட்ப மற்றும் இராஜதந்திர உதவி வழங்குதல்.

6. சீனா: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவ தளபாட மற்றும் பயிற்சிகள் வழங்குதல். ஜனநாயக மறுப்பு, மனித உரிமைகளை மீறுதல். இராஜதந்திர உதவிகள் வழங்குதல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.

7. ரஸ்சியா: அரச பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு இராணுவ தளபாட விநியோகம் மற்றும் வீரர்களை.. படுகொலை யுக்திகளை.. நவீன தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளுதல். இராஜதந்திர உதவிகள் வழங்குதல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.

8. இஸ்ரேல்: வெளிப்படையாகவும்.. இராஜதந்திர ரீதியிலும்..இராணுவ ரீதியிலும் பிற வழிகளிலும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்.

9. செக் குடியரசு: அரச பயங்கரவாத நாடுகளுக்கு பெருமளவில் ஆயுத விற்பனை செய்தல்.

10. உக்ரைன்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு பெருமளவில் ஆயுத விற்பனை செய்தல்.

11. மியாண்மார்: அரச பயங்கவாதத்தை ஊக்குவித்தல். மனித உரிமைகள் மீறல். ஜனநாயக மறுப்பு.

12. ஈரான்: அரச பயங்கரவாதத்தை ஆயுத மற்றும் நிதி வழங்கல் மூலம் ஊக்குவித்தல். மனித உரிமை மீறல்கள்.

13. லிபியா: அரச பயங்கரவாதத்தை ஆயுத மற்றும் நிதி வழங்கல் மூலம் ஊக்குவித்தல்.

14. அவுஸ்திரேலியா: அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிடல், நிதி உதவி மற்றும் இராணுவ உதவி அளித்தல்.

15. வியட்நாம்: அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இராணுவ மற்றும் இராஜதந்திர உதவியளித்தல்.

16. ஜப்பான்: அரச பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இராஜதந்திர மற்றும் நிதி உதவி வழங்கல்.

17. தென்கொரியா: அரச பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இராஜதந்திர மற்றும் நிதி உதவி வழங்கல்.

18. வட கொரியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்.

19. வங்காள தேசம்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல்.

20. மலேசியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கவாதத்திற்கு துணை போதல்.

21. இந்தோனிசியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு துணை போதல்.

22. மாலைதீவு: அரச பயங்கரவாத நாடுகளுக்கு வளப் பயன்பாட்டை அளித்தல்.

இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்


ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார். இதனால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.

இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜீன் 18ல் ஊர்வலம் நடத்தினோம். அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

இதனால் இன்று (29ம் தேதி) தூத்துக்குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுகூட்டம் நடத்தி வருகிறோம்.

உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை.

கடந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை கையில் எடுத்த அரசியல் கட்சிகள் தோல்வி கண்டன என்பது தவறான கருத்தாகும். நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற இருக்கிறோம் என்றார் சீமான்.

தமிழர் முகாம்கள் குறித்த ஐ.நா. அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் பான் கீ மூன், விஜய் நம்பியார்: ஜெகத் கஸ்பார் குற்றச்சாட்டு


இலங்கையில் பருவமழை தொடங்குவதற்கு முன் முகாம் மக்களை அங்கிருந்து வெளியேற்றாவிடில், 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, பான் கீ மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கஸ்பார் கூறுகையில்,

இலங்கையில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முகாம்களில் சிறைப்பட்டுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, ராஜபக்சேவின் தூதர்கள் போல செயல்படும் பான் கி மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார்.


இலங்கையில் செப்டம்பர் மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்கு முன்பாக அங்கு மழைக் காலத்தை தாங்கும் கட்டுமான வசதிகளோ, மருத்துவ ஏற்பாடுகளோ இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 3.5 லட்சம் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

இல்லாவிட்டால் மழைக்காலத்தில் அந்த முகாம்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறைக்கும் பான் கீ மூன், விஜய் நம்பியார்...

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் தூதுவர்கள் போல செயல்படும் ஐ.நா. பொதுச்செயலர் பான்-கீ-மூன், அவரது செயலர் விஜய் நம்பியார் ஆகியோர் அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு முகாம்களில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி அனைத்து அரசியல் கட்சியினருடன் சென்று வலியுறுத்த வேண்டும்.

இந்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள், தமிழ் அமைப்புகள் ஒரு கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று "நாம் அமைப்பு" கேட்டுக்கொள்கிறது. ஏற்கனவே இதுகுறித்து பிரதமருக்கு அக்கறையுடன் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நிராயுதபாணிகளான தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தலையில் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ பட ஆவணங்கள் உண்மையானவைதான் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருதரப்பினர் மீதான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் திறந்தவெளி முகாம்களின் நிலையை நேரில் கண்டு வருவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று "நாம் அமைப்பு" சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார் கஸ்பார்.

திறந்தவெளிச் சிறைச்சாலை தமிழர்கள் நிலை பற்றி இந்திய அரசுக்கு வலியுறுத்துவீர்களா?கலைஞர் பதில்

முதல்வர் கருணாநிதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கை பிரச்சனை இதொடபான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் போய்ச் சேர்ந்து விட்டதா? போய்ச் சேர்ந்து விட்டது.



போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று இலட்சம் தமிழர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாடிநிற்கின்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா?


நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிடிந மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவிற்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர், மற்றும் வெளி உறவுத் துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன்.

உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாடிநவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.



டெல்லியிலே ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் போர் நடைபெற்ற போது, இந்திய அரசு மறைமுகமாக கெலிகாப்டர் உட்பட பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அனுப்பியதாக எழுதியிருக்கிறதே?


ஆயுதங்களோ, போருக்குத் தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பல முறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தெற்கில் இருந்து ஒரு எச்சரிக்கைக் குரல் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கையினை தாமதிக்கக் கூடாது


இலங்கையில் சிறுபான்மையினர் என்று ஒரு தரப்பினர் இல்லை என்றும்,மகிந்த குறிப்பிட்டிருந்தார். அதே போன்று அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை முன்வைக்கப்போவதாக அவர் யுத்த வெற்றி விழாக்கள் பலவற்றில் குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தத்துடன் பல விடயங்களை சேர்த்து ஒரு தீர்வு திட்டத்தினை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். சேர்க்கப்படும் புதிய விடயங்கள் என்று அவர் குறிப்பிடுவது மாகாண சபைகளுக்கான அதிக அதிகாரங்களாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

இதனை அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் பலரும் எதிர்க்கின்றனர். ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க 13வது திருத்தத்தினை வன்மையாக எதிர்க்கின்றார். விமல் வீரவன்சவும் இதனை கடுமையாக எதிர்க்கின்றார். எனினும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சிலர் எதிர்க்கின்றார்கள் என்பதற்காக இந்த திட்டத்தினை கைவிடப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அனைத்துக்கட்சிகள் கூட்ட யோசனையைப் பெற்று அதிகப்பட்ச அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேக்கரவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்வகட்சி கூட்டத்தினை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், அதன் யோசனைகளை குப்பைத் தொட்டியில் இட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அன்றைய சூழலில் இருந்த பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்க்க உள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராயவே சர்வ கட்சி மாநாடுகள் நடத்தப்பட்டதாகவும், யுத்தத்தினால் பயங்கரவாதப் பிரச்சினை தோற்கடிக்கப்பட்டு நாடு ஒன்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேறு அரசியல் தீர்வுகள் தேவையில்லை என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

எனினும் பயங்கரவாதம் என்பது வேறு. தேசியப் பிரச்சினை என்பது வேறு. பயங்கரவாதம் என்பது தேசியப் பிரச்சினையின் உச்ச சந்தர்ப்பமாகும். இந்த விடயத்தினை தெளிவாக விளங்கிக் கொள்ள நாம் தவறி விடுவோமாயின் அது முழு நாட்டினதும் துரதிருஷ்டமாகும்.

யுத்த வெற்றியின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆராயும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அரசாங்கத்தின் அரசியற் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் அகதிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வடக்கு கிழக்கினை அபிவிருத்தி செய்ய வேண்டும், அங்கு மக்களைக் குடியமர்த்த வேண்டும், கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாரே ஒழிய ஒரு மணித்தியாலம் நடைப்பெற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. இது மறதியினால் நடந்த விடயமா? அல்லது பிரச்சினையின் தீவிரம் பற்றிய அறியாமையினால் நிகழ்ந்ததா?

இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று பலர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடும் சிங்களவர்கள் வரலாற்று உண்மைகளை மறந்து விட்டு அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழ் மக்கள் தமது இனத்தின் இருப்பினை பேணும் முயற்சிகளில் சுதந்திரத்திற்கு முன்னரேயே ஈடுபட்டனர். டொனமூர் ஆணைக்குழு முன் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் கருத்திற்கொள்ளாததினால் 1931ல் நடைப்பெற்ற தேர்தலை புறக்கணிக்க யாழ் இளைஞர் அமைப்பு தீர்மானித்தது. இது முக்கிய ஒரு விடயமாகும். தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை 1948ல் பறிக்கப்பட்ட போது வடக்கில் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ள தொடங்கினர். 1956ல் சிங்கள மொழி அரச கரும மொழியானது. இதனால் தமிழ் மக்கள் வெறுப்படைந்தனர். இலங்கையர்கள் என்று சிந்திப்பதனை விட தமிழர்கள் என்று சிந்திக்க அவர்கள் தலைப்பட்டனர்.

இந்நாட்டு தமிழ் மக்களுக்கு தனி அடையாளங்கள் உண்டு, அவர்கள் தமிழர்களாக இருந்து கொண்டு இலங்கையர்களாகவும் இருக்கின்றனர் என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தினை யுத்த நடவடிக்கையினால் தோற்கடித்த பின்னர் இனத்தின் எதிர்காலம் குறித்து நேர்மையாக சிந்திப்பவர்கள் எனின் நாம் அவ்வாறே சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கருதியதனாலேயே பயங்கரவாதம் ஆரம்பமானது. அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்க வழியில்லை என்று இளைஞர்கள் கருதியதனாலேயே இப்பிரச்சினை ஆரம்பமானது.

உரிய தருணத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் அதற்கான நட்டஈட்டினை நாம் செலுத்த நேரிடும் என்று என்.எம்.பெரேரா தனது இறுதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் முடிவுற்றதுடன் தமிழ் மக்கள் பிரச்சினையும் முடிந்தது என்று கருதுவோமாயின் அது பெரும் முட்டாள்தனமாகும். வடக்கு கிழக்கினை அபிவிருத்தி செய்து அங்கு அவர்களை மீளக் குடியமர்த்துவதன் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று கருதுவதும் பெரும் பிழையாகும்.

தமிழ் மக்கள் தமது நோக்கத்தினை எய்த பயன்படுத்திய ஒரு வழிமுறையே பயங்கரவாதமாகும். அது மோசமானது என்பது உண்மையே. எனினும் தமிழ் மக்களின் பிரச்சினையை அந்த நோக்கத்திலேயே பார்ப்பது தவறாகும்.

40களில் கடும் போக்காளராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தினை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிந்ததன் ஊடாக தமிழ் மக்களை திருப்திப்படுத்த முடியும் என்று 1948ல் சிங்களவர்கள் சிந்தித்தனர் என்று கருத முடியும். தற்பொழுதைய அரசாங்கத்திடமும் அவ்வாறான திட்டம் உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் புத்திசீவிகளின் குரல்களை செவிமடுப்பதன் ஊடாகவே தமிழ் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் எழுத்தாளர்களின் விடயங்களை வாசித்தறிய வேண்டும். தமிழ் மக்கள் எப்படி பயங்கரவாதத்தினை நோக்கி தள்ளப்பட்டனர் என்பதனை அந்த படைப்புகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும். எமது அரசியல்வாதிகள் இந்த விடயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். உரிய தருணத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவோமாயின் அதற்கான நட்டஈட்டினை பிற்காலத்தில் வழங்க நேரிடும்.

தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் பணிப்பாளர்
சிறிநிமல் லக்துசிங்க
தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்

http://ontario.omninews.ca/index.php?language=1 Please vote "Yes"

"Should there be an international inquiry into alleged war crimes during the Sri Lankan war?"

There is an OMNI 2 TV poll. Please Take action
Should there be an international inquiry into the alleged war crime committed during the Sri Lankan war?

Dial 416 260 4005
Press 1 to vote YES

Click on the Video in the same weblink for OMNI South Asian News for coverage on execution video.

புலிகள் வன்னியில் இப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அங்கே கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடந்திருக்கின்றன ‐ GTBC.Fm ற்க


வவுனியா இடைத்தங்கல் முகாம் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து சொல்லத் தேவையில்லை. வெளிநாட்டுத் தொடர்பில்லாத, மற்றும் வெளி உதவியில்லாத மக்கள் பெரும் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் முகாமிற்கு வருவதில்லை. ஒரு அக்கா முக்கியஸ்த்தரின் மனைவி என்ற வகையில் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவரது இரண்டு பிள்ளைகளை ஒரு அம்மா தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார். அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில்.

நான் மே 16 ஆம் திகதி வந்தேன் வரும் வழிகளில் 500ற்கு மேற்பட்ட சடலங்களைக் கண்டு வந்தேன். நந்திக் கடலினூடாக வந்தவர்கள் கூறினார்கள் நடந்து வந்த போது பெருமளவிலான சடலங்கள் கால்களில் மிதிபட்டதாக. நான் நினைக்கிறேன் குறைந்தது 35000 ற்கு மேற்பட்ட மக்கள் அங்கே கொல்லப்பட்டு இருப்பார்கள்.

புலிகள் வன்னியில் இப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அங்கே கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்கிறார் GTBC.FM விழுதுகள் நிகழ்ச்சிக்கு செவ்வி தந்த முகாமில் வாழும் ஒருவர். கேட்டுப் பாருங்கள்.

எம் முன்னே விடபட்டுள்ள கடமைகள் என்ன ???????

என் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய உலகதமிழ் மககளே .நாம் போராடிக்கொண்டு இருபது ஈழ தமிழ் இனத்துக்காக மட்டும் அல்ல .உலக தமிழ் இனத்துக்காக .உ லகிட்கே வரையறை சொல்லிகொடுத்த ஒரு இனம். இன்று தனக்கு என்று ஒரு நாடு இல்லை .தனக்கு என்று ஒரு உரிமையும் இல்லாமல் .தவித்துக்கொண்டு நிதமும் வேதனைகளை தாங்கி கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறது .அதிலும் தமிழீழ மண் இன்றுவரை இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது . எத்தனை அழிவுகளை சந்தித்தாலும் எந்த தீய சக்திக்கும் அடிபணியாது . தமிழீழம் என்ற எமது தாய் சுதந்திர காற்றினை சுவாசிக்கும் வரை ஓயாது .எம் அண்ணன் வழியில் தொடர்து போராடுவோம்.இந்த உலகநாடுகள் இதுவரைகும் சாட்சிகள் இல்லை என்று சாட்டு சொல்லிக்கொண்டு மறைமுகமாக சிங்கள இராணுவ இயந்திரத்துக்கு சகலவிதமான ஆதரவையும் கொடுத்து எம்மை அழித்து.ஆனால் இன்று மெல்ல மெல்ல எமது தாயகத்தின் வீரம் செறிந்த போரடதினாலும் .புலத்தில் வீரம் செறிந்த அறவழி போரடதினாலும் உலகம் சற்று எம்மை எட்டி பார்க்க துவகியுள்ளது.எம்மை அழிதுகொண்டு இருக்கும் அரகர்களுக்கு முடிவுகட்ட இன்று இறைவனும் தயாராகிக்கொண்டு இருக்கிறான் . எமது அழிவுக்கான ஆதாரங்கள் நிறையவே வந்துகொண்டு இருகின்றன .இன்னும் வரும் .அவற்றினை சரியான முறையில் கையாளவேண்டிய வரலாற்று பொறுப் ஒவொரு உலகதமிழ்னுகும் இருக்கிறது . இன்று சிங்கள அரக்கனை மட்டும் அல்லாமல் முழு உலகத்தையுமே அதிரவைதிருகிறது அந்த காணொளி காட்சி . அனைவரின் மனட்சாட்சியையும் ஒருமுறை உலுப்பி இருக்கிறது என்பது உண்மையே . அத்துடன் நின்றுவிடாது எம் முன்னே விடபட்டுள்ள கடமைகள் காணபடுகின்றன . அது என்ன ? உதாரணமாக அந்த காணொளியை தரவிறக்கம் செய்து உங்களது கையடக்க தொலைபேசி உடாகவும் ,உங்களது வலையமைபுகள் உடாகவும் உங்கள் அனைத்து நண்பர்கள் உறவினர்களுக்கு அனுபவேண்டும். அதுமடுட்ம் அல்லாமல் உலகம் புராகவும் நடைபெரும் எமது எழுச்சி போராடத்தின் போது மிகபெரிய திரைகளில் காட்சி ஆக்க படவேண்டும். அதுமடுட்ம் அல்லாமல் எமது இன அழிவுகளை சித்தரிக்கும் படங்களை கொண்ட ஆடைகள் வடிவமைகப்ட்டு அணியபடவேண்டும். அத்துடன் உங்களுடைய தனிபட்ட இன் அழிவு சம்பந்தமான கருத்துகளையும் ,படங்களையும் இணைத்து உலக உடகங்களுக்கு அனுப்புதல் வேண்டும். இனிவரபோகும் போராடம் முறிலும் வேறுபட்டவடிவத்திலையே வீறுகொண்டு எழும்ப போகிறது .எமது விடிவுக்கான காலம் நெருகிக்கொண்டே இருக்கிறது . தமிழீழம் மலரும் அது காலத்தின் கட்டாயம் .தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் = ஜாம்பவான்=

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது – இந்திய அதிகாரிகள் விசாரணை


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது.

மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆயினும் அதற்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், இதை அறிவித்த முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் , அந்த அறிவிப்பு பலதரப்பிலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

அதே சமயம், தமிழகத்திலுள்ள , ஈழஆதரவு அரசியல்வாதிகளாலும், ஆதரவாளர்களாலும், பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் எனும் செய்தி தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருவதும், இது விடயத்தில் சுலபமான முடிவுக்கு இந்தியா வரமுடியாதுள்ளதெனவும் கூறப்படுகிறது.

தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? முடிவு விஜயின் கையில்.


தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. அதனை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். ஏனெனில் விஜயை நாம் எங்களில் ஒருவராகவே இதுவரை கருதி வருகிறோம்.



ஆனால் இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது விஜய் அவர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தமிழர்கள் அனைவரின் மனதையும் மிகவும் வேதனைப் படுத்தியுள்ளது இச்செய்தி உண்மையானால் விஜய் தனது தமிழ் உணர்வுள்ள தன்மானமுள்ள ரசிகர்கள் அனைவரையும் இழக்க வேண்டியேற்படும்.

இதுவரை விஜய் அவர்களை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் போற்றியவர்களாலேயே தூற்றப்படுவார்.

"தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் தூற்றப்படக்கூடாது தமிழர்களுக்கு எதிரானவர்கள் போற்றப்படக்கூடாது"

விஜய் எந்தப் பட்டியலில் இணையப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? விஜய் அவர்களே முடிவு உங்களின் கையில்.




அன்பான சகோதரர்களே ஒவ்வொருவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

இவர்தான் கடற்புலிகள் தலைவர் சூசையா..?


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலிகள் பெயரில் உலாவும் காட்டு விலங்கு ஒன்றைத் தவிர புலிகள் என்கிற அடையாளத்தையே சுத்தமாக துடைத்து எறிந்துவிட்ட திருப்தியில் இருக்கிறது சிங்கள பேரினவாத அரசு.

கடைசி கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் லிஸ்ட்டில் கடல் புலிகளின் தலைவர் சூசையின் பெயர் இடம் பெற்றாலும், அவருடைய புகைப்படத்தை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சிங்கள அரசு, சமீபத்தில் அதனுடைய ஒரு வெப்சைட்டில் இவர்தான் சூசை என்று வெளியிட்டிருக்கிறது.


இந்தப் புகைப்படம் உண்மையா.. பொய்யா.. என்பது தெரியவில்லை..

சிங்கள அரசு அமைத்திருக்கும் மரண முகாம்களின் நிலைமையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு அடுத்தக் கட்ட வேலையை பார்க்கிறேன் என்று ஒரு நிமிடம் என்னை குற்றவாளியாக்குகிறது என் மனது.

அந்த வெட்ட வெளியில் நிற்கக்கூட முடியாத அந்த கூரைக்குள் எத்தனை குடும்பங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் ஒரு வேளை சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது.. ஆனாலும் நம் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மட்டும் முழு திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் என்று..

தப்பித் தவறி அந்த முகாம்களை அமைக்காமல் மக்களை அப்படியே விட்டு வைத்திருந்தால், அவர்களில் பாதிப் பேர் தமிழகம் தப்பி வந்திருப்பார்கள். பின்பு வந்தவர்களைத் தங்க வைத்து சோறு போட்டு பார்த்துக்கணுமே.. தொல்லை வேலையாச்சே என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆடட்டும்.. ஆடும்வரை ஆடட்டும்..!!!

தமிழ் இனத் தலைவர்கள் (மன்னிக்கவும்) தமிழ் ஈனத் தலைவர்கள் பார்க்க வேண்டிய படங்கள்

தவறான நோக்கத்தில் படம் இணைக்கப்படவில்லை . போரில் கொல்லப்படால் முறையாக போர் வீரர்களின் உடல்களை கைப்பற்றி உரியர்கவளிடம் ஒப்படைக்க வேண்டும் . ஆனால் சிங்கள வன்முறையாளர்களால் போர் விதிகள் நிறைய கடைபிடிக்கப்படவில்லை . பிணங்கள் கூட எப்படி நடத்தப்படுகிறது என்பதனை புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இணைத்தோம். தவறிரிந்தால் மன்னிக்கவும் . யார் மனதையும் புண்படுத்த இல்லை.



சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தல்

பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட, சிறிலங்கா அரச படைகளின் படுகொலை தொடர்பான காணொலி தொடர்பாக சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வேக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, 'சனல் - 4' வெளிக்கொணர்ந்த காணொலி காட்சி தொடர்பான செய்தியையும் படங்களையும் நோர்வேஜிய ஊடகங்களும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த காணொலி காட்சி உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடாத்தப்படவில்லை.

இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச இயந்திரத்தின் அலகுகள்; இயங்கியமைக்கான திடமான பல ஆதாரங்கள் உள்ளன என எரிக் சொல்ஹெய்ம் 'ஆப்தன்போஸ்தன்' நாளேட்டுக்கு தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.

இவ்வாறான புறச்சூழல்கள் ஐ.நா.வினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை கடினமாக்கும் காரணிகளாக உள்ளன. அத்துடன், ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் இதற்கான பெருத்த ஆதரவு ஏதும் நிலவவில்லை.

ஆனபோதும் இந்தக் காணொலி போன்ற ஆதாரங்கள் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'ஆப்தன்போஸ்தன்' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசும் பதவிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயக நியமங்களையும் புறந்தள்ளி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அரசுக்கு எதிரானவர்கள் 'வெள்ளை வான்' மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளைவான் கடத்தலுக்கு அதிகம் ஆளாகுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, 'சனல் - 4' ஊடாக காணொலியை வெளிக்கொணர்ந்த 'ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு' (Journalists for Democracy in Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மகிந்த அரசின் போரினால் தமிழ் மக்கள் பாரிய மனித அவலங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என 'ஆப்தன்போஸ்தன்' நாளேட்டின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் கடும் நெருக்கடிகளையும் பின்னடைவு களையும் சந்தித்து தாற்காலிகமாக ஒரு தேக்க நிலைக்கு வந்துள்ளது. போராளி அமைப்பின் முக்கிய தலைவர்கள், படைத் தளபதிகள் கொல்லப்பட் டுள்ளனர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக் கிறாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படாத தகவலாக, அனுமானங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சிங்கள இனவெறித் தாக்குதலால் உறைவிடத்தையும் உடைமைகளையும் விட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாய்த் திரியும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்கள் அன்றாடம் உண்ண உணவின்றி, பட்ட கொடுங் காயங்களுக்கு மருந்தின்றி, அடுத்த வேளை இருப்பே கேள்விக் குறியாய், எதிர் காலம் என்பதே நம்பிக்கை யற்றதாய் அவதிகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாகித் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு கொடு மைகளும் பக்கத்தில் கூப் பிடு தூரத்தில் உள்ள தாய்த் தமிழகத்தின் ஆறரைக் கோடி மக்களின், அவர்களின் கண்பார்வையின் முன்னே அவர்களை வெறும் பார்வையாளர்களாக, சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருக் கிறதே என்பதுதான் மிகப்பெரும் சோகம்.

உலகில் எத்தனையோ இனங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தேசிய இனங்கள் எல்லாம் கூட தங் களுக்கென்று இறையாண்மை மிக்க சுதந்திர நாடுகளைப் பெற்று ஐ.நா. அவையில் இடம் பெற்று உலக அரங்கில் கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன.

ஆனால்

உலகெங்கும் விரவி வாழும் 10 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நாடு இல்லை.

இறையாண்மை மிக்க ஒரு தேசமில்லை.

இருந்திருந்தால் ஈழத் தமிழர்கள் இப்படி ஒரு அவலத்தைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது.

தங்களுக் கென்று சுதந்திரமாக ஒரு நாடு அமை யும் வாய்ப்பையும் இப்படி அநியாய மாக இழக்க வேண்டி இருந்திருக்காது.


உலகெங்கும் உரிமைகளுக்காகப் போராடிய தேசிய இனங்களுக்கெல் லாம் அவர்களது போராட்டங்களுக்கு ஒரு பின்புலம் இருந்தது. உதவுவதற்கு என்று சில நாடுகள் இருந்தன.

போரில் காயம் பட்டால் மருத்துவம் பார்த்துக் கொள்ள, இளைப்பாற, புகல் அடைய அவை துணை புரிந்தன.

ஆனால் இப் படி எந்தப் பின்புலனும் இன்றி, உதவுவதற்கும் யாரும் இன்றி, சுற்றிலும் எதிரிகள் சூழ, எதிரிகளுக்கு மத்தியில் நின்று போராடி வந்தனர் விடுதலைப் புலிகள்.

தாய்த் தமிழ்நாடு அண்டையில் இருந்தாலும், அது இந்திய தேசியச் சிறைக்குள் சிக்கி, போராடும் தங்கள் சொந்தங்களுக்கு, அல்லல் படும் மக் களுக்கு நேரடியாக ஏதும் செய்ய முடி யாத வகையில் அதன் கரங்கள் கட்டப் பட்டிருந்தன. தமிழ் மக்களின் ஆன்மா ஒடுக்கப்பட்டிருந்தது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஈழப் போராளிகளின், ஈழ மக் களின் இவ்வளவு இன்னல்களுக்கும், இழப்புகளுக்கும் அவர்கள் அனுப வித்த கொடுமைகளுக்கும் தாய்த் தமிழகமும் ஒரு காரணமில்லையா.... சிங்கள இனவெறி அரசு எதிரி தாக்கு கிறான்.

அந்த தாக்குதலுக்கு தமிழின விரோத தில்லி அரசு உதவுகிறது. அதற்கு தமிழினத் துரோக தமிழக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். இதை யார் தட்டிக் கேட்பது?

தமிழகம் இறையாண்மை மிக்க தனித் தேசமாயிருந்தால், தமிழகத்திற் கென்று ஒரு தனி ராணுவம் இருந்திருந் தால், போராடும் புலிகளுக்கு தமிழீழ மக்களுக்கு ஆதரவாக நாம் சிங்கள அரசோடு போருக்குப் போயிருக் கலாம்.

அந்தப் புறநிலை இருப்பு, இறையாண்மை நமக்கு இல்லை. நாம் நேரடியாக சிங்கள அரசோடு போருக்கு போக முடியாது சரி.

நம்மை ஆளும், நம்மை கட்டிப் போட்டிருக்கும், முடக்கி வைத்தி ருக்கும் தில்லி அரசை யாவது தட்டிக் கேட்டு, சிங்கள அரசுக் கான அதன் உதவியைத் தடுத்தி நிறுத்தி யிருக்கலாம் இல்லையா.

அதை நாம் உரியவாறு, உரிய முனைப்போடு, முழு தீவிரத்தோடு முடியுமா, முடியாதா....

இரண் டிலொன்றைப் பார்த்து விடுவது என்கிற உக்கிரத் தோடு செய்தோமா?

அப்படிச் செய் திருந்தால் ஈழத் தமிழ் மக் களுக்கு இப்படிப்பட்ட பேரழிவு நேர்ந்திருக்குமா, நியாயமாய்த் தமி ழகமே இதில் ஒன்றுபட்டுக் கொந்தளித் திருக்க வேண்டும். ஆனால் அப்படி முழுமையாய்க் கொந்தளிக்க விடாமல், தமிழக ஆளும் கட்சியும், ஆட்சியாளர் களும், பல்வேறு வகைகளில் இதை அடக்கியும், ஒடுக்கியும், திசை திருப்பியும் தணித்தும் தன் தன்னலவாத அரசி யலைப் பாதுகாத்துக் கொள்ள தமிழினத் துக்கு துரோகம் புரிந்தார்கள். சரி,

அது போகட்டும் என்று இருக்கிற இதர கட்சிகள், அமைப்புகளாவது நாம் நமக்குள் ஒன்றுபட்டு தீவிரமாகக் களம் இறங்கினோமா? இல்லையே.

1983 தொடங்கி, இந்த 2009 வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள் முதலான வற்றைப் பட்டியலிட்டுப் பாருங்கள். அவற்றால் நாம் கண்ட பலன் என்ன? இழப்பைத் தள்ளிப் போட அவை பயன்பட்டனவே தவிர, இழப்பைத் தடுத்து நிறுத்த அவை பயன்பட வில்லை என்பதுதானே ...இதிலிருந்து நாம் பாடம் கற்றோமா?

அது போகட்டும், கடந்த செப் டம்பர் மாதம் முதல் இதோ இந்த மே வரை கிட்டதட்ட ஒன்பது மாதங்கள், தமிழகமே பொங்கி எழுந்து போராடி யதே, தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராடாத மக்கள் பிரிவே இல்லை என்னும் அளவுக்கு, அப்படி யாரும் போராடாது இருந்திருந்தால் அது ஒரு சமூகக் குற்றம், களங்கம் ஆகிவிடும் என்பதுபோல அனைத்துப் பிரிவு மக்களும் போராடினார்கள்.

இப்படிப் போராடும் மக்களை ஒருங் கிணைக்க, வழி நடத்த,போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நம்மிடம் நம்பிக்கையூட்டும் ஒரு அமைப்பு உண்டா, தலைமை உண்டா....

எல்லாரும் என்ன செய்தோம். வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், மனித சங்கிலி, சம்பிரதாய மறியல், காலை கைது, மாலை விடுவிப்பு என ஏதோ கொந்தளிக்கும் மக்களுக்கு பராக்கு காட்டுவது போல் இதுபோன்ற போராட்டங்களையே நடத்திக் கொண்டிருந்தோம்.

நாம் பாட்டுக்கு நாம் போராட, தில்லிக்காரன் பாட்டுக்கு அவன் எப்போதும் போல சிங்கள அரசுக்கு உதவிக் கொண்டிருந்தான்.

பல படைக் கலன்கள் தமிழ்நாட்டு வழியாகவே போயின.

சரி, போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன, முன்வைக்கும் கோரிக் கையில் ஒரு சிறு துளியாவது முன் நகர வெற்றி பெறத்தானே.. அப்படி எதுவும் இல்லாமல் நம்முடைய போராட் டத்தைத் துளியும் மதிக்காமல், துச்ச மாகக் கருதி தில்லிக் காரன் பாட்டுக்கு சிங்கள அரசுக்கு உதவினான். உதவு கிறான் என்றால் என்ன பொருள்?

தில்லிக்காரன் நம்மை மதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, நம்முடைய போராட்டத்துக்குப் பலனுமில்லை என்பதுதானே....


நம்முடைய போராட்டங்கள் இப்படிப் பலனற்றுப் போகிறதே என்று நாம் போராட்ட முறைகளை மாற்றினோமா?
எந்த வகையிலாவது தில் லிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று யோசித்தோமா.


அதில் முனைப்பு காட்டினோமா. இல் லையே. ஈழ ஆதரவுப் போராட்டம் ஏதோ பத்தோடு பதினொன்றாக அதுவும் ஒன்று என்பது போல ‘யார் வீட்டு எழவோ, பாயப் போட்டு அழுவு’ என்பது போல ஒப்புக்கு மாரடித்தோம். இதுதானே நடந்தது.

தமிழக மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். மற்ற கட்சிகளை விடுங்கள். ஈழ ஆதரவுக் கட்சிகள். இந்தக் கட்சிகள் இதுவரை நடத்தி வந்த போராட்டங்களைத் தாண்டி வேறு எந்த வகைப் போராட்டத்தையுமே நடத்தி யிருக்க முடியாதா.

நாம் முனைந்திருந் தால் ஒரு வாரம் தமிழகத்தை நிலை குலையச் செய்து அசைவற்று நிற்கச் செய்திருக்க முடியாதா...

அப்படிச் செய்திருந்தால் தில்லி நிலைமையில் அதன் அணுகு முறையில் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா.

அப்படித் தமிழகத்தைப் பொங்கி எழ வைத்திருந்தால் மன்மோகன் சிங்கோ, சோனியாவோ இப்படிச் சாதாரணமாக தமிழகம் வந்து போவதைப் பற்றி நினைத்துப் பார்த்திருப்பார்களா...

இப்போது வந்தது போல வந்துதான் போயிருக்க முடியுமா.... ஆனால் நாம் எதுவுமே செய்யவில்லையே.

இந்தச் செயலற்ற நிலையைப் பார்த்து வயிறு எரிந்து எரிந்துதான் உள்ளம் குமுறிக் குமுறித்தான் தமிழ் நாட்டிலும் வெளியிலுமாக 17 இளை ஞர்கள் தீக்குளித்தனர்.

அப்போது கூட நாம் இரங்கவில்லையே. பதை பதைக்கவில்லையே. உயிரை உர மாக்கித் தந்த இளைஞர்களுக்கு -

ஈழப் போராளிகளுக்கும் ஈழப் போரில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும் இரங்கல் தெரிவித்தது போலவே இவர்களுக்கும் -

இரங்கல் உரை நிகழ்த்திவிட்டு வந் தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்தோம்.

அந்த இளைஞர்கள் நம் மிடம் இதைத்தான் எதிர்பார்த்தார்களா.

இதற்குத்தான் அவர்கள் தீக் குளித்தார்களா.

அவர்களுக்கெல்லாம் இறப்புக்குப் பின்னும் ஆன்மா என்று ஒன்று நிலவி, அது ஈழத்தில் நடை பெற்ற கொடுமைகளையெல்லாம் கேள்விப்பட்டால் என்ன பாடுபடும்?

இதற்காகவா நாம் தீக்குளித்தோம். இவ்வளவுதானா நம் தலைவர்கள் என்று துடிக்காது....

தலைமைப் பொறுப்பில் உள்ள வர்கள் தம் இனத்துக்கு தம் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிக்க வேண்டும். அவர்களைக் காக்க, அவர்களை இத்துயரத்திலிருந்து மீட்க முயலவேண்டும். முன் கூட்டியே உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு அவர்களுக்கு நேரவிருக்கும் துயரைத் தடுக்க வேண்டும். அதை விட்டு தம் மக்களுக்கு எல்லாக் கொடுமையும் நேரவிட்டு,நேர்ந்த கொடுமைகளை அலங்கார வார்த்தைகளால் வருணித்து வீர வசனம் பேசிக் கொண்டிருக்கவா தலைவர்கள்?

இதனால் என்ன பலன்?

அது எந்தப் பல னையும் தராது. தரவில்லை. ஆனால் ஈழச் சிக்கலில் நம்மில் பெரும்பாலா னவர்கள் இதைத்தான் செய்தோம்.

ஆட்சியாளர்கள் ஈழக் கொடு மையைப் பார்த்து கவலையளிக்கிறது, வருத்தம் தருகிறது, ஏற்க முடியாது என்று தமிழக மக்களுக்கு கண் துடைப்பு அறிக்கைகள் விட்டு அவர்களது உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்க முயன்றது போன்று, நாமும், ‘கண்டிக்கிறோம்’ ‘தடுத்து நிறுத்து’ ‘உதவி செய்யாதே’ ‘திரும்பப் பெறு’ என்று அறிக்கைகள் விட்டுக் கொண் டிருந்தோம்.

தமிழகத் தலை வர்கள் நினைத்திருந்தால் இதை எப்போதோ தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அநியாயமாகச் செத்து மடிந்த ஆயிர மாயிரம் அப்பாவித் தமிழர் களைக் காப்பாற்றியிருக்க முடியும். போராளி கள் பலர் பலியாகாமல் காத்திருக்க முடியும்.

ஆனால் எதுவுமே இல்லாமல் நாமெல் லாம் இருந்து கொண்டே இவ்வளவு பேரைச் சாகவிட்டோமே, போராளிகள் பலரை பலியாக விட் டோமே என்கிற ஆத்திரம்தான் எப்படி நினைத்தாலும் சமாதானம் செய்து கொள்ள முடியாத, ஆற்றமாட்டாத அடங்கமாட்டாத பொருமலாக மனதை அவதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

சரி, நடந்தது நடந்தது. இனிமேல் நினைத்துப் பார்த்து மீளவா வந்து விடப் போகிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வதானாலும், குறைந்தபட்சம் இந்த அனுபவத்தை ஒரு பாடமாக வேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து பாடம் கற்று அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நாம் நம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கீழ்கண்டுள்ள கருத்துகளை நம் தலைவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. தற்போது தமிழக உரிமை களுக்கு குரல் கொடுக்கிற தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கிற வலுமிக்க ஒரு கட்சி, அமைப்பு என்பது தமிழ்நாட்டில் இல்லை. ஆகவே அப் படிப்பட்ட ஒரு வலுமிக்க அமைப்பை நாம் உருவாக்கியாக வேண்டும். இது உடனடியாக ஒரு அமைப்பாக சாத்தியப் படாது என்பதால் தற்போது அதிமுக அணியில் உள்ள கட்சிகளே இப்படிப் பட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்க லாம்.

2. இப்படி உருவாக்கப்படும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தமிழக உரிமைகளும், தமிழக மக்கள் நலனும் முதன்மைப் பொருளாக இருக்கவேண்டும். தற் போது எந்தக் கட்சிக்கும் இது முதன் மைப் பொருளாக இல்லை. தங்களு டைய நாற்காலி அரசியலுக்கு, பதவி வேட்டைக்கு தமிழக உரிமை, தமிழர் நலன் என்பது ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளும் பொருளாக இருக்கிறதேயன்றி உரிமைப் பொரு ளாக இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

3. இதற்கு இந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக கட்சி நடத்துகிறோம் என் பதைத் தங்களுக்குத் தாங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ் வொரு கட்சியும் தொடங்கும்போது கொள்கை, கோட்பாடு எனத் தொடங் கினாலும், போகப்போக பதவி வேட்டை, நாற்காலி மோகம் எனத் திரிந்து விடுவதால் பின் அதுவே முதன் மைப் பொருளாகி கட்சி நடவடிக்கை கள் அதை நோக்கியதாக இருந்து விடுகின்றன. இதைத் தலைவர்கள் உணர்ந்து இப்போக்கினை மாற்றுவது குறித்து கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. அரசியல் கட்சிகள் இயக்கங் களின் வரலாறு அதன் பதவிகளால் தீர்மானிக்கப் படுவதில்லை. மாறாக அதன் கொள்கை, கோட்பாடுகள், அது சார்ந்த அதன்போராட்டங்கள் செயல் பாடுகள், அர்ப்பணிப்பு தியாகம் ஆகிய வற்றாலே தீர்மானிக்கப்படுகிறது என்பதை வாய்ப்பு நேரும் போதெல் லாம் நினைவூட்டி வலியுறுத்தி வரு கிறோம். இதில் இத்தலைவர்கள் தாங்கள் கொள்கை வழி நடக்கிறோம் என்றால் இதன்படி நடக்கட்டும். இல்லை நாங்கள் நாற்காலி அரசியல் தான் நடத்துகிறோம் என்றால் தாராள மாக நடத்திக் கொள்ளட்டும். நாம் யாரும் அதில் குறுக்கிட்டு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கப் போவ தில்லை. கொள்கை வழி நிற்பதாகச் சொல்பவர்களுக்கே இந்தப் பரிந்துரை.

5. இப்படியெல்லாம் பரிந்துரைப் பதை வைத்து சிலபேர், இந்தத் தேர்தல் கட்சிகளின் மூலமே தமிழ்த் தேசப் புரட்சி வந்து விடும். தமிழக நலன்கள் பாதுகாக்கப்பட்டு விடும் என்று நம்பு கிறீர்களா என்று கேட்கிறார்கள். நாம் அப்படி நம்பவுமில்லை. சொல்லவு மில்லை. இந்தத் தேர்தல் அரசியலில் நின்றே இதற்குக் குரல் கொடுக்கலாமே. இது அவர்களது தேர்தல் அரசியலுக்கும் கூட கை கொடுப்பதாக இருக்குமே என்கிற பொருளில்தான் சொல்கிறோம்.

காட்டாக, தமிழகத்தைப் பாதிக் கும் பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு கூட்டமைப்பு உருவாகி அது தொடர்ந்து குரல் கொடுத்து, தொடர்ந்து போராடி வந்தால் தமிழக மக்களின் கவனம் இக்கூட்டமைப்பு பால் திரும்பும், தமிழக மக்கள் இதற்கு ஆதரவு தரு வார்கள். தங்களை இதில் அணி சேர்த்துக் கொள்வார்கள். இப்படி ஆகும்போது ஆளும் கட்சிகள் இதைக் கண்டு அஞ்சும். தங்கள் வாக்கு வங்கி எங்கே பறிபோய் விடுமோ என்கிற அச்சத்திலாவது தமிழக உரிமைகளை மீட்க எதையாவது செய்யும்.

அதாவது தேர்தல் களத்தில் வெறும் நாற்காலிப் போட்டிகளி லேயே இக்கட்சிகள் செயல்படும் நிலை மாறி, தமிழக உரிமைகள் பற்றி, தமிழக மக்கள் நலன் பற்றிப் பேசாமல் கட்சி நடத்த முடியாது என்கிற நிலை ஏற் படும். தமிழக உரிமைகள் காப்பதில் நான்தான் வீரன், நான்தான் சாதனை யாளன் என்கிற போட்டி ஏற்படும்.

இப்படிப்பட்ட போட்டி சார்ந்த நட வடிக்கைகள், பிரச்சாரங்களில் தமிழக மக்கள்பால் இதுசார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படும். இந்த விழிப்புணர்ச்சியின் வழி அடுத்து வரும் தலைமுறை இது பற்றிய ஞானம் பெறும். இத்தேர்தல் அரசியலின் அனுபவத்தை வைத்து, அது தமிழக உரிமைகள் மீட்க, தமிழக நலன் காக்க புதிய போராட்ட உத்தி களை வகுக்கும்.புதிய எழுச்சியை உரு வாக்கி புதிய இலக்குகளை அடையும் என்கிற அந்தப் பொருளிலேயே நாம் இதை வலியுறுத்துகிறோம்.

ஆகவே, தமிழக நலன்காக்கும் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு நிலைத்த கட் டமைப்பை உருவாக்குவது பற்றித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இப் படிப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஏற் கெனவே இருந்திருந்தால் ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த தருணத்தில் அது ஈழத்துக்காக தீவிரமாக குரல் கொடுத் திருக்கும். முழு மூச்சோடு களம் இறங் கிப் போராடியிருக்கும். இப்படிப் போராடியிருந்தால் பல்லாயிரக் கணக் கில் அப்பாவி மக்கள் அநியாயமாக இப்படி கொல்லப்பட நேர்ந் திருக்காது.

ஈழ விடுதலைப் போராட்டமும் இப் படிப்பட்ட பின்னடைவைச் சந்தித் திருக்க நேர்ந்திருக்காது.இத்துடன் தமிழகத்தில உள்ள போலிப் போராளி களும் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டுப் போய் உண்மைப் போராளி களை மக்கள் அடையாளம் கண்டிருப் பார்கள். அவர்கள் பின்னால் அணி திரண்டிருப்பார்கள். அது தேர்தல் அரசி யலுக்கும், வாக்கு வங்கிகளைப் பெறு வதற்கும்கூட பெரிதும் பயனுள்ளதாய் இருந் திருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பை நழுவவிட்டனர் நம் தலை வர்கள். இது அவர்களது சொந்த கட்சிக் கும் இழப்பு. தமிழகத்துக்கும் இழப்பு. தமிழீழத்துக்கும் இழப்பு என்பதைத் தமிழர்களும் தமிழகத் தலைவர்களும் உணரவேண்டும். இந்த அனுபவத்தி லிருந்து பாடம் கற்று தமிழக உரிமை மீட்பு, தமிழக நலக் காப்பு சிக்கல் களுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு முதன்மை தந்து, அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும். அதன்வழி தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் வரலாறு படைக்க வேண்டும்.
இளப்பத்தில் தமிழினம் - எக்காளத்தில் தில்லி

உலகில் தமிழ் இனத்தைப் போல அனாதையான வேறொரு இனம் இருந்திருக்குமா என்பது தெரியவில்லை. உலகின் எத்தனையோ தேசிய இனங்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் வேறு எந்த இனமும் சந்தித்திராத இழப்புகளையும், கொடுமை களையும் ஈழமக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதற்கு வெளிக் காரணங்கள் பல இருந்தாலும், உள் காரணம் தமிழர்களுக்கு தமிழ் இனத் துக்கு என்று அதற்காகக் குரல் கொடுக்க, அதன் உரிமைகளுக்காகப் போராட என்று ஒரு உரிய தலைமை இல்லை. அமைப்பு இல்லை.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்க வழிவந்த தன்னலவாத கட்சிகள். பார்ப்பன எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று முழங்கி வளச்சியுற்ற இந்த இயக்கத்தின் வழிவந்த தன்னலவாதக் கட்சிகள். மக்களைத் தன் விசுவாசத்திற்குரிய வாக்கு வங்கிகளாக வைத்திருக்க எந்த அளவுக்கு அறிவு தேவையோ, உணர்வு மட்டம் தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே வைத்து, தலைவர் மீதான பய பக்தியோடு மக்களைப் பதப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதனால் தமிழன் இன உணர்விழந்து கட்சி உணர்வுக்கும் சாதி உணர்வுக்கும் ஆட்பட்டுக் கிடக்கிறான்.

கட்சிக்கு ஒன்று என்றால், சாதிக்கு ஒன்று என்றால் கிளர்ந்தெழுகிற தமிழன்,

இனத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், கிளர்ந்தெழ மறுக்கிறான்.


கருணாநிதி நள்ளிரவில் கைது என்றால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்றால் பேருந்து பயணிகளோடு எரிகிறது.

ஆனால் பல்லாயிரக் கணக்கில் தமிழினம் மடிகிறது என்றால், இங்கு கருப்புக் கொடி ஊர்வலம், கண்ணீர் அஞ்சலி, மனித சங்கிலி மட்டுமே நடக்கிறது. அதைத் தாண்டி தமிழனுக்கு உணர்வு கிளர்ந்தெழ வில்லை என்பதல்ல. கிளர்ந்தால் தலைமை என்ன சொல்லுமோ, செய்யுமோ என்று தயக்கம். தலைவர்களும் மக்களிடம் அதற்குமேல் எதுவும் கோரவில்லை. இப்படியிருந்தால் தமிழன், தமிழினம் எப்படி உருப்படும்?

பீகாரி ஒருவன் மராட்டியத்தில் கொலையுண்டால் பீகாரில் அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கிறார்கள். சீக்கிய மதகுரு ஒருவர் வியன்னாவில் படுகொலை என்றால், பஞ்சாப் பற்றி எரிகிறது. ஊரடங்கு உத்தரவு, துணை ராணுவம் என்று படைகள் குவிகின்றன. தமிழனைத் தவிர வேறு எவன் தொடப்பட்டாலும், அந்த இனம் துள்ளி எழுகிறது என்றால் அங்கெல்லாம் திராவிட இயக்க வழி வந்த தன்னலவாதக் கட்சிகள் இல்லை.

ஆனால் திராவிட இயக்கம் தோன்றிய தமிழகத்திலோ தமிழன் எங்கு செத்தால் என்ன, எப்படி செத்தால் என்ன, எவ்வளவு பேர் செத்தால் என்ன, என்று எதையும் கண்டுகொள்ளாது அமைதி காக்கும், மௌன ஊர்வலம் நடத்தும். இதனால்தான் தமிழனை எவனும் இளப்பமாகப் பார்க்கின்றனர். ஆளாளுக்கு கை வைக்கிறான்.

அவன் ஆதிக்கத் தமிழனா, அதிகாரத் தமிழனா, சாமானியத் தமிழனா என்கிற பாகுபாடில்லை. எந்த தகுதியில் இருந்தால் என்ன, தமிழன் என்றால் கேட்பாரில்லை, போட்டு சாத்தலாம் என்பதுதான் நிலை.

ப. சிதம்பரத்துக்கு நேர்ந்த செருப்பு வீச்சைப் பாருங்கள். முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்ட தமிழகப் பொறியாளருக்கு கேரள வனத்துறையினர் அடி, உதை என்கிற செய்தியைப் பாருங்கள் எங்கிருந்து வருகிறது கேரளக்காரனுக்கு இந்த துணிச்சல்.

தமிழன் அனாதை, தமிழனைத் தாக்கினால் எவரும் வரமாட்டான், கேட்க மாட்டான் என்கிற துணிவுதானே...?

இதே துணிவுதான் இலங்கை அரசுக்கும் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த அந்நாடு தமிழக மீனவர்களையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. கடந்த வாரம் கூட சிங்கள கப்பற்படைதன்னுடைய போர்க்கப்பலைதமிழக மீனவர்களது படகுகள் மீது மோதி மீனவக்ளின் படகுகளை உடைத்தும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிமுதல் செய்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது

தமிழக மீனவர்களுக்கு யார் பாது காப்புஅவர்கள் இந்தியக் குடிமக்களாஇல்லையா அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக தில்லி அரசுகளின் கடமைதானே இந்த அரசுகளுக்கு கட்டையில் கொஞ்சமாவது சூடு கொரணைஇருக்கிறதா இல்லையா?

ஒரு சுண்டைக் காய் நாடு இவ்வளவு ஆட்டம் ஆடுகிறான் இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு வக்கில்லை ஏன்கடலோரப் பகுதியில் இந்தியக் கப்பற்படையை நிறுத்தி தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தரக் கூடாதா.

அத்து மீறும் சிங்களக் கடற்படையினரைத் தாக்கி கைது செய்து சிறைப்பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாதாஇந்தியக் கப்பற்படைக் கருவிகளில் அப்படையினர் வாங்கும் ஊதியத்தில்தமிழனின் வரிப்பணமும் தானே இருக்கிறது ஆனால் அந்தக் கப்பற்படை தமிழனைக் காப்பாற்றாதா?

தமிழகக் கட்சிகள் காப்பாற்றக் கோரக்கூடாதா?

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் மீனவர்களின் கைகள் மீன் மட்டும் பிடித்துக் கொண்டடிருக்காது என்று சவடால் அடித்த வெத்து வேட்டு வசன வியாபாரி என்ன செய்கிறார் வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதி அதைப் பத்திரிகைகளுக்குத் தந்து தன் கடமை முடிந்து விட்டதாக பிரச்சனையிலிருந்து கழட்டிக் கொள்கிறார்.

இது என்ன நாடா இல்லை காடா?

காட்டில்கூட சில இயற்கை நியதிகள் மரபுகள் உண்டு. ஆனால் இங்கு எதுவுமேயில்லை. இப்படி ஏதுமற்ற அனாதையாக அல்லவாகிடக்கிறான் தமிழன். இவனை யார் காப்பாற்றுவது. இதுதான் இன்றைய தமிழனின் நிலை. இந்த இழி நிலையை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். இதை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
பாடம் கற்போம் பழி தீர்ப்போம்

தில்லி அரசின் உதவி இல்லையென்றால், தமிழீழப் போராளிகளுக்கு இந்த அளவுக்கு இழப்பும் பின்னடைவும் ஏற்பட்டிருக்காது.

சிங்கள இனவெறி அரசுக்கு ராடார் தந்து உதவியது, படைப் பயிற்சிகள் தந்தது, நவீன அதிநுட்பக் கருவிகளை சிங்கள ராணுவத்துடன் நேரடியாகவே களத்தில் நின்று இயக்கிக் காட்டியது,

செயற்கைக் கோள் மூலம்போராளிகளின் இருப்பிடங்கள், பதுங்கு குழிகள், பயிற்சி முகாம்கள் முதலானவற்றை அடையாளம் காட்டியது,

வெளிநாடுகளிலிருந்து போராளிகள் வாங்கிய போராயுதங்கள் கொண்ட கப்பலை வழி மறித்து மூழ்கடித்தது இப்படி எண்ணற்ற உதவிகளைச் செய்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போனது தில்லி அரசு.

ஆனால் இந்த தில்லி அரசுக்குத் தான் துணை போயின திமுக வும் விசிகவும். இப்படித்துணை போகாது எதிர்த்து நின்றகட்சிகளும் தம் எதிர்ப்பில் உறுதியாக தீவிரமாக இல்லை. இந்த இளப்பமெல்லாம் நன்கு தெரிந்துதான் தமிழக மக்களது குரலுக்கு கிஞ்சித்தும் செவி சாய்க்காமல் தன் போக்குக்கு தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அது பாட்டுக்கு சிங்கள அரசுக்கு உதவிக் கொண்டிருந்தது தில்லி.

நாம் மட்டும் உக்கிரத்தோடு போராடியிருந்தோமானால், எப்போதோ போர் நிறுத்தம் கொண்டு வந்து, இறந்துபோன,

அப்பாவி மக்கள் பலரைக்காப்பாற்றியிருக்கலாம். போராளிகளுக்கும் இந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது. போராளித் தலைவர்கள், தளபதிகள் களத்தில் உயிர்ப் பலியாகி இருக்க மாட்டார்கள்.

அதோடு மட்டுமல்ல, ஈழ ஆதரவுக் கட்சிகள் இந்தப் பிரச்சினையை முழு மூச்சோடு எடுத்துப் போராடியிருந்தால், தமிழக மக்களின் கவனம், அனுதாபம், அக்கறை எல்லாம் அவர்களை நோக்கித் திரும்பியிருக்கும். காங். - திமுக, விசிக கூட்டணி தனிமைப்பட தமிழக மக்களின் பெரும்பான்மை ஆதரவும் இவர்களுக்கே கிட்டியிருக்கும். தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 5 இடங்களைக் கூட வென்றிருக்க முடியாது. அதிமுக கூட்டணி ஈழ ஆதரவுக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால்

அந்த வாய்ப்பை அநியாயமாகக் கோட்டை விட்டார்கள் என்பதுடன், இதனால் ஈழ மக்களும் பல்லாயிரக் கணக்கில் மாண்டார்கள். போராளிகளுக்கும் இழப்பு. இவர்களுக்கும் இழப்பு. இந்த இழப்பிலிருந்து இனியாவது இவர்கள் பாடம் கற்கவேண்டும். இதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்று போராட வேண்டும்.

இதன்வழி தமிழக மக்களுக்குத் தீங்கிழைத்த தமிழக மக்களைக் கொன்று குவித்த தில்லி அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

காலம் வரும்வரை காத்திருந்து அதைப் பழி தீர்க்க வேண்டும்.

-பரிமுதல்வன்-

புலியைப்பற்றிய கிலியில் இலங்கை அரசும், எலியைக்கண்டு ஏமாறும் அதன் ஏவலாளிகளும்... ஆய்வு

இலங்கையின் பாசிச அரசைப் பொறுத்த வரையில் உண்மையையும் தர்மத்தையும் யார் சொன்னாலும் அவர்கள் புலிகள் என நாமம் சூட்டிவிடுவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தரைப்புலி, கடற்புலி, வான்புலி, உளவுப்புலி எனப் பலபிரிவுகளைக் கொண்டிருந்தாலும், இன்று மேலும் சில புலிக்கூட்டங்கள் இலங்கை அரசினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
அவையாவன, வெள்ளைப்புலி, சிங்களப்புலி, இலங்கையின் இராணுவப்புலி என மேலும் பல பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அப்படி இனங்காணப்பட்டவர்களால் வெளிக்கொண்டு வரப்படும் உண்மைகளும், அவற்றிற்கான சாட்சியங்களும் சர்வதேசத்தின் முன் கொண்டுவரப்படும் இன்றைய காலகட்டத்தில் ராஜபக்சவும், அவரது சகாக்களும் கிலி பிடித்தவர்களாக உள்ளனர்

அண்மையில் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பி வெளிநாட்டில் அரசியல் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ள உதவி ஜெனரல் தரத்திலான இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தமிழின அழிப்பிற்கான காட்சிப்படத் தகவல் சாட்சியங்கள் மேலும் வெளிவர உள்ளது. அதன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் அவரால் வெளிக்கொண்டுவரப்பட உள்ளது.

இதற்கான தகவல்களை தற்போது இலங்கையின் இராணுவ அணியைச் சேர்ந்த முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மூலமே மின்அஞ்சல் மற்றும் எம்.எஸ்.என் மூலம் வெளிநாடுகளுக்கு வெகு இலகுவாக அனுப்பப்படுகின்றது. இத்தகைய சரியான சாட்சியங்கள் யாவும் மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்யப்படுவதுடன், வெகுவிரைவில் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ச அன் பிறதேஸ் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்.

அதன் அடிப்படையிலேயேதான் அவர்களின் அண்மைக்கால வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்கள் யாவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சுற்றுலாவினை மேற்கொள்ளும் எந்த நாட்டிலும் திடீரென கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படலாம். அதற்கான அனைத்து சட்டநடவடிக்கைகளும் தயார்நிலையில் உள்ளது.

அத்துடன், வவுனியாவில் உள்ள மின்சார முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகளும்கூட ஒளிப்படக்காட்சியாக வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அத்துடன் அகதி முகாம்களில் உள்ள மக்களைக் கொன்றொழிக்கும் இன அழிப்பிற்கான நடவடிக்கைக்காவே அவர்களை மீள்குடியேற்றம் செய்வதைக் காலதாமதமாக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கைஅரசு, என்னும் குற்றச்சாட்டும் மேற்படி சர்வதேச நீதிமன்றக் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் முக்கிய உறுப்பினர்களில் இராணுவத்தில் கடைமையாற்றுபவர்கள் மட்டுமல்ல, இராணுவத்தில் சேவையாற்றியதன் மூலம் அங்கவீனர்களாகி, அவர்களுக்கான நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில் அரசினால் எமாற்றப்பட்ட விரக்தியில் உள்ளவர்களும் இதில் உள்ளடக்கமாம்.

அதுமட்டுமல்லாது, போர்முனையில் இறந்துபோய் அடையாளம் காணப்படாது அந்த இடத்திலேயே எரித்துச் சாம்பராக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு எந்த நட்டஈடும் கொடுக்கப்படாது, அந்த இராணுவ வீரர்கள் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்று அரசு பொய்ப்பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றது.

அதனை சரியாகக் கண்ட சாட்சியங்களும்கூட இராணுவ மேலதிகாரிகளினால் அரசின் கட்டளைப்படி அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்றும் இந்த சாட்சியங்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் மிக்க சிங்கள இளைர்கள் அரசினால் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதுடன், அவர்களின் சாவுக்கான தடயங்களையும் அரசு முற்றாக அழித்து விடுகின்றது.

இதனையெல்லாம் சரியான முறையில் கண்ட சாட்சியங்கள், வேதனையும், விரக்தியும் கொண்ட நிலையில் இலங்கை அரசின் இன்றைய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கான தடையங்களை வெளியுலகிற்குக் காட்டுகின்ற செயற்பாட்டையும், அதற்கான சாட்சியங்களாகவும் செயற்பட உள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தில் சேவையாற்றியதன் மூலம் அங்கவீனர்களாகி வாழ்க்கையில் விரக்தியும், ராஜபக்ச அரசின்மீது வெறுப்பும் கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கான இராணுவத்தினரை சமன்செய்து சரிக்கட்டும் வகையில் அரசு ஒன்றிரண்டு அங்கவீனமான இராணுவத்தினருக்கு அரசில் பங்கேற்க வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் அவர்களின் நட்டஈடு - கொடுப்பனவுகள், எரிக்கப்பட்டு மறைக்கப்பட்ட இராணுவத்தினரின் தகவல்கள் யாவற்றையும் மூடிமறைத்து சமாளித்துவிடலாம் என கற்பனைசெய்து கொண்டிருக்கின்றது.

இதுவே அவர்களின் எதிர்காலம் இருள்மயமாகும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பதனையும், அவர்கள் சிறிதும் எதிர்பாராதவிதமாக அமையப்போகின்றது என்பதனையும் அறியமாட்டார்கள்.

யுத்தத்தினை முன்னெடுத்த இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவிற்கு சிங்கள மக்களிடையே பெருகிவந்த செல்வாக்கினைக் குறைத்து, அவரது அரசியல் பிரவேசத்தையும், எதிர்கால பிரதம மந்திரிப் பதவிக்கான கனவையும் தகர்த்தெறியும் பொருட்டு ராஜபக்ச அன் பிரதேர்ஸ் செயற்பாடு அமைந்திருந்தது. அந்த வகையில்….

யுத்தமுனையில் திறம்பட சேவையாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளும், சரத்பொன்சேகாவின் நம்பிக்கைக்கும், நட்பிற்கும் பாத்திரமானவர்களை பதவி உயர்வு என்ற பெயரில் இராணுவத்தை விட்டு வெளியேற்றி அவர்களை கடல்கடந்த சேவைக்கு (வெளிநாட்டத் தூதுவர்களாக) அனுப்பி வைத்தமை,
இராணுத் தளபதி சேவையிலிருந்து இளைப்பாறியதுடன் அரசியலில் தீவிரமாக செயற்படப் போவதாகக் கூறிக்கொண்டு, எதிர்கால ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரிக் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த சரத் பொன்சேகாவின் கனவைக் கலைத்து, அவரை எதிர்காலத்தில் இராணுவ அமைச்சின் செயலாளராக (பல்லுப்பிடுங்கிய பாம்பாக) ஆக்கப்போவதாக திட்டமிட்டிருப்பது,
ராஜபக்ச அன் பிறதேர்ஸ் அனுமதி இன்றி சரத் பொன்செகாவின் அறிக்கைகளோ அன்றி அவரது புகைப்படமோ பத்திரிகை, தொலைக்காட்சி என்பவற்றில் வெளிவரக்கூடாது என தகவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை
சரத்பொன்சேகாவிற்கான பாதுகாப்பினை முன்னரைவிடக் குறைத்துக் கொண்டுள்ளமை.
இத்தகைய செயற்பாடுகளையெல்லாம் மக்கள் செல்வாக்கினையும், பௌத்த மகாசங்க பீடாதிபதிகளின் தனிப்பட்ட செல்வாக்கினையும் பெற்ற சரத் பொன்சேகாவை ஓரம்கட்டி, எதிர்காலத்தில் ஒழித்துக்கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற நிலையில் வைத்தக்கொண்டு இன்று அங்கவீனமான இராணுவத்தினருக்கு அரசாங்கத்தில் பங்களிப்பதாகப் பசப்பு வார்த்தை கூறுகின்றார்கள்.


யாருக்கு யார்? ஏங்டிகெங்கு ஆப்பு என்று யார் தான் அறிவாரோ?

அகத்தியன் -

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA