Monday 14 September 2009

தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவுக்கு பிரித்தானியா விஸா வழங்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் விஸாவுக்கு விண்ணப்பித்ததால் தான் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது பிரித்தானியத் தூதரகம்.

ஆனால் அவருக்கு விஸா நிராகரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ரோகித போகொல்லாகம. எது எவ்வாறாயினும், இது சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பது உண்மை. இலங்கை அரசாங்கத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மைக் காலமாக இராஜதந்திர உறவுகள் சீராக இருக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற விவகாரத்திலும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விவகாரத்திலும், மனித உமைகளைப் பேண வேண்டும் என்பதிலும் பிரித்தானியா அடிக்கடி ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வந்தது.

உதவி கேட்டுக் கைநீட்டுவதையும் உபதேசம் செய்தால் உதறித் தள்ளுவதையும் வழக்கமாகக் கொண்ட இலங்கை அரசுக்கு இது பிடிக்கவில்லை.

அதுமட்டுமன்றி, பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கே.பியின் பேட்டி ஒளிபரப்பானது, இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காட்சி ஒளிபரப்பானது, வவுனியா தடுப்பு முகாம் அவலங்கள் படம் பிடிக்கப்பட்டமை என்பன பிரித்தானியா மீது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசின் செயற்பாடுகள் மீது பிரித்தானியாவுக்கு இருந்து வந்த வெறுப்பு சட்டமா அதிபர் மொகான் பீஸ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா போன்றோருக்கு விஸா வழங்க மறுக்கும் அளவுக்கு விரிவடைந்தது.

இந்த நிலையில் பிரித்தானிய விஸாவைப் பெறாத ஒரு தமிழ்ப் பெண்ணை தூதரக அதிகாகள் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாரதூரமான தொரு குற்றம் போலவே இலங்கை அரசு அணுகியிருந்தது.

இதுபற்றி பிரித்தானியத் தூதரகத்திடம் கண்டனம் தெரிவித்ததுடன் விளக்கம் கோரியது வெளிவிவகார அமைச்சு.

இதன் தொடர்ச்சியாகவே பாலித கோஹனவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்திருக்கிறது.

இந்த விடயத்தில் எந்த அரசியல் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்தப்படவில்லை என்று பிரித்தானியா தெரிவித்திருந்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. இலங்கை அரசுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைக் காலத்தில் இலங்கை அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சர்வதேச சமூகம் மதிப்புடன் நடத்தவில்லை.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விஸா வழங்க கனடா மறுத்திருந்தது. ஆளும் கட்சி எம்.பியான அர்ஜுன ரணதுங்கவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்தது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜப்பானில் சாதாரண பயணி போல நடத்தப்பட்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டார்.

இப்படியான சம்பவங்கள் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபுறத்தில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த அரசு என்று பெருமைப்படும் அரசாங்கம் உலகமே தமக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்தது. ஆனால் அதற்கு மாறான உபசரிப்புகள் கிடைப்பதால் அரசாங்கம் திக்குமுக்காடத் தொடங்கியிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கு ஆதரவு கொடுத்த சில நாடுகள் இப்போது அதற்குத் துணைவரத் தயாராக இல்லை.காரணம் இலங்கை அரசின் போக்கில் அந்த நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன.

மனித உமை விவகாரங்களில் இலங்கை அரசு சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தத் தவறி விட்டது.

இதன்காரணமாக சர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலித கோஹனவுக்கு விஸா மறுக்கப்பட்ட விவகாரம் சாதாரணமானதொன்றல்ல.

வெளிவிவகார அமைச்சருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சின் செயலாளர்.

பொதுவான இராஜதந்திர நடைமுறைகளின்படி அவருக்கு விஸா வழங்குவதற்கு எந்த விசாரணைகளும் தேவைப்படாது.

பனிப்போர் காலத்தில் துருவங்களாக இயங்கிய நாடுகளும், இந்தியா - பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளுக்கே இப்படியான சிக்கல்களை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு இது புதியதொரு அனுபவம். இலங்கையின் வெளிவிவகார செயலாளருக்கு விஸா மறுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இது கையாளப்பட்டிருக்கலாம்.

சனல் 4 விவகாரத்தில் பிரித்தானியாவுடன் இலங்கை அரசாங்கம் முட்டி மோத முனைந்தது, யுனிசெப் பிரதிநிதியை வெளியேற்றும் உத்தரவு போன்றன இலங்கைக்கு புதிய சிக்கல்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதஉமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சயான தீர்வைக் காண முயற்சிப்பதுமே சர்வதேச அரங்கில் இலங்கை அரசைக் காப்பாற்றும் என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்ற போக்கில் உறுதியாக இருக்கிறது அரசு.

எந்தவொரு வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று கூறிக் கொண்டு சர்வதேசத்துடன் மோதுவது இலங்கை அரசுக்கு இராஜதந்திர ரீதியில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

அத்துடன் சர்வதேச நிதியுதவிகளை இழக்கின்ற நிலையும் ஏற்படலாம்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தகச் சலுகை நீடிப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கூட தடைப்படும் ஆபத்தை உருவாக்கலாம்.

அரசாங்கத்தின் போக்கில் மாற்றங்கள் தென்படாத வரையில் சர்வதேசத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

பிடிவாதப் போக்குடன் இருக்கும் அரசு வரட்டுக் கௌரவத்துக்காக சர்வதேசத்துடன் மோதத் துணிவது சாதாரண மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA