Tuesday 18 August 2009

வைகோ, ராமதாஸ் கைதாவார்களா?


தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படு வோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து 20ந் தேதி சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடனம் வெளியிட உள்ள பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.



இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.


அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேற்று கூட அமைந்தகரையில் நடத்திய பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் முழுவதும் புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும், பேனர்களையும் வைத்திருந்தது. ஆனால் திடீரென அவற்றை போலீசார் அப்புறப்படுத் தினார்கள்.


இந்த நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


"தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி களில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை மய்ப்ஹஜ்ச்ன்ப் ஆஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் (டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய்) ஆஸ்ரீற் 1967படி தண்டனைக்குரிய குற்றங்களாகும்.


எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்து பவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 20ந் தேதி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பிரகடன வெளியீட்டு பொதுக்கூட்டம் அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளி யிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆவர். எனவே இந்த பொதுக்கூட்டத்திலும் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படங்களுடன் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அவர்கள் மீது தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை காரணம் காட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பற்றி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறும் போது, "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும், 20ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்' என்று தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA