Saturday 12 September 2009

பாலிற்கு பாலகன் வேண்டி அழுதிட! பாற்கடல் ஈவார்களா தமிழ் நாட்டு தமிழர்கள்?

அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் நீண்டகாலமாக தமது ஆட்சியினை இழந்த நிலயில் இருக்கின்றது அதவது 1964 ம் ஆண்டிற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியினால் முழுமையான ஆட்சியினை தமிழ் நாட்டில் ஏற்படுத்த முடியவில்லை அதே வேளை இந்த கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை தவிர ஆட்சியில் இருந்த அனைத்து தமிழக தலைவர்களாலும் ஈழத்தமிழர்களிற்கு எதனையும் ஆக்கபூர்வமாக செய்யமுடியவில்லை என்பது துயரம் நிறைந்த வரலாறு.

எனினும் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தமிழ் நாட்டில் ஆழும் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும்தனித்தும் சில அமைச்சு பதவிகளை தமிழ் நாடு தலைவர்களுக்கு வழங்கி தமது கொள்கைகளை நிறைவேற்றவும் தவறவில்லை. தற்போதய சூழலில் வட இந்தியாவில் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியா தனது பொருளாதார, பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை தென் இந்தியாவிலேயே பன்முகப்படுத்தி வருவதால் தென் இந்தியாவில், மத்திய அரசினை ஆழும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கணிசமாக இருக்கவேண்டும் என்பது திண்ணம். இந்த அடிப்படையிலேயே கங்கிரஸ் கட்சி தமது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் காங்கிரஸ் கட்சியினை வலுப்படுத்தும் நோக்கில் தமது திட்டங்களை பலப்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

தவிர தற்போது இருக்கும் கூட்டணிகளோடு நீண்டகாலம் இருந்தால் அவர்களை பலப்படுத்துவதே தவிர தாம் தலை தூக்க முடியாது என்பது இன்னொரு காரணம்.எனவே தான் புதிய கூட்டணிக்கான தனது தேடுதல்களை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. புதிய செல்வாக்கான நடிகர்களை உள்வாங்குவது,வளர்ந்துவரும் கட்சிகளை வளைத்து போடுவது என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திரு ராகுல் காந்தியின் தமிழக வருகை



மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக திரு ராகுல் காந்தியின் தமிழக வருகையும் அமைந்திருக்கலாம். திரு ராகுல் காந்தியின் வருகையின் போது மிகப்பெரும் பாதுகாப்பிற்கு மத்தியிலும் சட்ட கல்லூரி மாணவர்கள்,மதுரை பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் தமது கடும் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். இதில் துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது. ராகுலின் முதல்வரவிலேயே ஒரு தமிழ் யுவதி பலியாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகய எதிர்ப்புக்கள், மற்றும் மிகப்பெரும் பாதுகாப்புக்கள் ஆகியவற்றிக்கு காரணம் முக்கியமாக ஈழ தமிழர் பிரச்சினையே. வரலாற்று ரீதியாக காங்கிரஸ் கட்சி தமிழீழ தமிழர்களிற்குசெய்ததெல்லாம் வரலாற்று துரோகமும், அனர்த்தங்களும், பளிவாங்கல்களும், அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடுகளுமே தவிர வேரெந்த நல்வினை செயற்பாடுகளையும் செய்யவில்லை. எடுத்துகாட்டாக காலம் சென்ற ராஜிவ் காந்தியின் செயற்பாடுகளையும், தற்போது திருமதி சோனியா வின் செயற்பாடுகளையும் குறிப்பிடலாம்.

காங்கிரஸ் இன் தமிழ் நாட்டு அரசியலிலும் சரி, ஏன் மத்திய அரசாட்சியிலும் சரி தமிழீழ தமிழர்களின் செல்வாக்கு பெரும் தலையிடி அல்லது கனமான ஆதிக்கத்தினை செலுத்திவருகின்றது என்பது யாவரும் அறிந்ததே குறிப்பாக தென் இந்திய பாதுகாப்பு மற்றும் போகோள அரசியலில் தமிழீழ தமிழர்களின் செல்வாக்கு விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டதாக கூறினாலும் கூட தணிய போவதில்லை என்பதே காலம் சுட்டி நிற்கின்றது.

காங்கிரஸ் இன் திட்டப்படி விடுதலைப்புலிகள் அளிக்கப்பட்டால் தமக்கு சாதகமான எதனையும் செய்வதுடன் தமிழ் நாட்டு அரசியலிலும் கணிசமான செல்வாக்கினை செலுத்தமுடியும் என்பதன் திட்டத்தில் தான் ஈன இரக்கம் இன்றி தமிழீழ தமிழர்களை சிறிலங்கா அரசு கொன்று குவிக்கும் போது இந்திய அரசும் அதற்கு சேர்ந்து உதவி செய்தது.

தமிழீழ தமிழர்களிற்கு வரலாற்று காணாத ஈனத்தனத்தை செய்த காங்கிரஸ் இன் சூழ்ச்சி திட்டங்களை தமிழீழ தமிழர்கள் மட்டும் அல்ல தமிழ் நாட்டு தமிழர்களும் இலகுவில் மறக்க மாட்டார்கள் ஆனால் தமிழக தலைவர்களின் தன்னலம் கொண்ட அரசியல் செயற்பாடுகளும் சட்டங்களும் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் என்பது உண்மை. எனவே தான் காங்கிரஸ் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் முகமாக தனது பளய கள்ளை புதிய மொந்தையில் கொடுத்து தமிழீழ தமிழர்களினதும் தமிழ் நாட்டு தமிழர்களதும் உணர்வுகளை வெறுப்புக்களை மாற்ற ”ராகுல்” என்ற புதிய மொந்தையினை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

"ராகுல்" என்ற புதிய மொந்தை

ராகுலின் வரவும் அவரின் வாக்குறுதிகள், பத்திரிகை பேட்டிகள் மூலம் தெரிவது என்னவெனில் காங்கிரஸ் கட்சி ராகுல் இனை வைத்து தென் இந்திய அரங்கில் இருக்கும் காங்கிரஸ் தொடர்பான வெறுப்புக்களை போக்கி ஓர் புதிய சூழலை உருவாக்குவதே ஆகும். என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் ராகுலின் அறியாதனமோ அல்லது அரசியல் கற்று கொண்ட முறையோ அன்றி அவ்வாறுதான் கதைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலோ தெரியவில்லை. எல்லா காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு ஆழும் கட்சி தலைவர்கள் வழமையாக சொல்லும் கருத்தினையே அவரும் சொல்லி இருக்கின்றார். அதாவது காங்கிரஸ் கட்சியானது தமிழக, தமிழீழ மக்களின் உணர்வுகளை மதிக்காது எவ்வாறு செய்யவேண்டிய அநியாயங்கள் அனைத்தையும் செய்து கொண்டு அதனை பூசி மெழுகி மூடி மறைத்து நியாயப்படுத்த முனைந்தனரோ அதே போலதான் ராகுல் அவர்களும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தமிழ் நாட்டு சுற்றுலாவினை முடித்துகொண்ட பின் செவ்வி ஒன்றில் "தாம் இலங்கை தமிழர்களிற்கு எதுவானாலும் செய்யவோம்" என்றும் தமது கட்சி தமிழர்களை காப்பாற்ற தனாலான அனைத்தினையும் செய்தது என்றும். தமிழர்களிற்கு எதிராக நாம் எதனையும் செய்யவில்லை என்றும் அவ்வாறான கருத்தெல்லாம் பொய் என்றும் கூறியுள்ளார். தவிர தமிழ் நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களிற்கு உள்ளாவது தொடர்பில் தான் நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.
இதே சிறிலங்கா கடற்படைதான் ராகுல் அவர்களின் தந்தைக்கு பிடரியில் அடித்து மானபங்கப்படுத்தியது மட்டுமன்றி கொலைசெய்யவும் முயற்சி செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அது தவிர ஈழத்தமிழர் பிரச்சினைய்ல் மீழ முடியாத சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டது. இதற்கு இந்திய அரசு எந்தவித பதில் நடவடிக்கையும் இன்றி மாறாக தமிழீழ தமிழர்களையே தண்டித்தமையும் வரலாறு. எனவே ராகுல் புதிதாக என்ன செய்யபோகின்றார் என்பது வேறு விடயம்

ஆனால் ராகுல் அவர்களின் கருத்து தமிழர் தரப்பினை பொறுத்தவரை முழு பூசணிக்காயினை சோற்றில் புதைத்தது போன்ற இந்த வகையான அணுகுமுறைகள் தமிழர்கள் மனதில் மேலும் வேதனை தரும் என்பதில் ஐயமில்லை தவிர இவ்வாறான நயவஞ்சக பேச்சினை கண்டு தமிழர்கள் யாரும் எமாந்து விடப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் யாவரும் இல்லாத சூழலில் தாம் செய்த அனியாங்களை தட்டி கேட்கவோ அல்லது நியாத்தினை மக்களுக்கு ஆணித்தரமாக சொல்லி தமிழீழ தமிழர்களி உறுதியோடு வழி நடத்தும் தலைமையினை களத்தில் இருந்து அகற்றிய பின்பு தாம் எதனையும் செய்து செத்த செத்துக்கொண்டிருக்கின்ற தமிழர்கள் மீது இனி சவாரி செய்யலாம் என காங்கிரஸ் தலைமையும் ஏன் ராகுல் அவர்களும் ,போதாக்குறைக்கு அரசியல் சாணக்கியம் என்று கொலைஞர்களின் காலில் விழப்போகும் வீழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழீழ, தமிழக தலைவர்கள் , புலம் பெயர் தமிழர்களில் சிலர் ஆகிய யாராக இருந்தாலும் சரி அவர்கள் நினைவில் வைக்கவேண்டியது தமிழ் ஈழ, தமிழக மக்களின் உணர்வுகள் தற்காலிகமாக சுவாலை விட்டு எரியவில்லை என்பதே அத்துடன் விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்காபடவில்லை என்பதே.

எனவே ராகுல் காந்தி புதிதாக வந்து எதனை சொன்னாலும் அவை அனைத்தும் தமிழீழ மக்களின் கசப்பினை போக்கி அவர்களின் கனவினை நனவாக்கும் விடயமாக இருந்தால் தமிழகமும் தமிழீழ தமிழர்களும் சிலவேளை இரங்கலாம். தவிர மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்தால் தமிழகம் அதற்கான பதிலடியை கொடுக்கவேண்டும். கொடுக்குமா?
- ராகுல் அவர்களின் தமிழ் நாட்டு சுற்றுபயணம்

நன்றி : ஈழநாதம்
TNC

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA