Friday, 4 September 2009

ஏன் இந்த கொடுமை எங்கள் தமிழ் இனத்துக்கு...இனியாவது தமிழர் நாம் ஒன்றிணைந்து ஈழத்தை பெறுவோம் என்று உறுதி கொள்வோமா ???


விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல.அது தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விடுதலை இயக்கம்.தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம்.

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான்.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்...

எத்தனை உறவுகள் நாளுக்கு நாள் செத்து மடிகிறார்கள் படு காயத்திற்குள்ளாகிறார்கள் இருந்தும் சர்வதேசம் வேடிக்கை பார்த்து தங்களுடைய சுய நன்மைக்காக எங்களுடைய மக்களின் அவலங்களை வேடிக்கையாக்கி விமர்சிக்கிறது.

இப்படியான பேரவலம் ஏற்படும்போது ஜனநாயக நாடாக யார் தங்களை முத்திரை குத்துகிறார்களோ அவர்களெல்லாம் முன்வரவேண்டும் மக்களின் அவலங்களை போக்கவேண்டும். ஆனால் இதற்கு மாறாக இந்தப் பேரவலத்தை அரசியல் ஆக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.
ஜனநாயக நாடாக முத்திரை குத்திய பல நாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று தங்களுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டது

ஏன் இந்த கொடுமை எங்கள் தமிழ் இனத்துக்கு...இனியாவது தமிழர் நாம் ஒன்றிணைந்து
ஈழத்தை பெறுவோம் என்று உறுதி கொள்வோமா ???

நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA